Saturday, November 15, 2014

Why Facebook is called 'Facebook'?

An English version of this article would shortly be released for the benefit of those who cannot read Tamil Text.

முக நூல்!!

முக நூல் _ .'.பேஸ் புக் என்பதற்கான சரியான மொழிபெயர்ப்பு
(முகப் புத்தகம்  என்றும் சொல்லப்படுகிறது).

பேஸ்புக் என்று குறிப்படப்படுகிறது சரியாகத் தமிழ் எழுத்துருவில் சொல்வதானால் .'.பேஸ்புக் என்றுதான் அனைத்து சந்தர்ப்பங்களிலும் சொல்லப்பட வேண்டும்.

தமிழ் உயிரெழுத்துக்கோவையின் கடைசிப்பதம் .'. (அக்கன்னா) அனைத்துத் தரப்பிலும் அனைத்துப் பதங்களிலும் பிரயோகப்படுத்துவது நடைமுறையில் சாத்தியமில்லை என்கிற யதார்த்தத்தை மனதில் வைத்து இத் தொகுப்பில் பேஸ்புக் என்றே ஜனரஞ்சக ரீதியில் குறிப்பிடுகிறேன். இலக்கண ரீதியான இந்தப் பிழை பொறுத்தருள்வீர்!!

பேஸ்புக் என தமிழில் எழுதியதை பின் ஆங்கில சமப் பயன்பாட்டில் பார்த்தால் Pacebook or BaseBook   என அழைக்கப்பட்டால்  இதன் ப்ரயோகம், பயன்பாடு மற்றும் அர்த்தம் மாறிவிடும். ஒரு மொழியைக் கையாள்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் இப்படியெல்லாம் நம்மை அலைக்கழிக்கிறது.
===================================================================
எடுத்துக்கொண்ட விஷயத்திற்கு வருகிறேன்.

எனது தமையனார் இன்று தன்னுடைய ஒரு சந்தேகத்தை பகிர்ந்தார். அதை என் பாணியில் மேலே சிந்தித்ததின் விளைவு இந்தக் கட்டுரைத் தொகுப்பு.

அவர் கூறிய அடிப்படைக் கருத்து இத் தொகுப்பின் இறுதியில் (ஆங்கிலத்தில் அப்படியே தந்துள்ளேன்).
===============================================================

பேஸ்புக்கிற்கு அந்தப் பெயர் சரியானதா?

மார்க் ஜுக்கர்பெய்க் வைத்த அதன் ஆங்கிலப் பெயரையே அலசுவோம்.

What the sources in web say about this topic?
Watch The Social Network. It will explain.
But basically he started with Face Mash where pictures of hot people in Harvard were compared, then moved on to a website where people had a picture and some info about them so you can keep in touch etc. like in a sort of Yearbook type thing I guess.
Was originally called The Face Book (cos like a year book, it is like a book of faces, but not just yearly, so specifically face book instead of year book)
Then Justin Timberlake (playing the owner of Napster lol =P) told him to drop the "The" so it sounds better as just Facebook.
=)

Source(s):

The Social Network (movie about the creation of Facebook)
பேஸ்புக்கின் குணாதிசயங்கள், அதில் ஆரம்ப காலத்தில் இருந்து அது தன்னகத்தே கொண்ட வழிமுறைகள், பயன்பாடுகள், செயல்முறைகள் காலப்போக்கில் கிட்டத்தட்ட பத்தாண்டுகளில் இந்த அளவுக்கு நடைமுறை சாத்தியக்கூறுகளுடன் வளர்ந்துவந்துள்ளது. அதில் தொழில் நுட்ப ரீதியான அனுகூலங்கள், வளர்ச்சிகள் மற்றும் பயனீட்டாளரின் வசதி குறித்து மேன்மேலும் பேஸ்புக் நிர்வாகம் மற்றும் தொழில் நுட்பவியலாளர்கள் தொடர்ந்து கொணர்ந்துள்ள முன்னேற்றங்கள், மாற்றங்கள் இத்தனையையும் நாம் இன்று அனுபவிக்கிறோம்.

நமது அன்றாட பயன்பாட்டில் பேஸ்புக்கில் 'இன்று என்ன புதிதாக வந்துள்ளது, யார் என்ன போஸ்ட் அப்டேட் செய்துள்ளார்கள் என்று நாமும் ஒருவிதத்தில் அடிமையாகிவிட்ட நிலைதான் இன்று. அந்த விஷயத்திற்குள் நாம் போக வேண்டாம்.

2004ல் துவங்கிய பொழுதில் இருந்த தேவைகள், எந்த நோக்கத்தில் இது ஆரம்பிக்கப்பட்டதோ அதற்கு மேலாக பன்முகப் பயன்பாட்டினை நல்கும் ஒரு சாதனமாக பேஸ்புக் வளர்ந்துள்ளது.

90களில் ஈமெயில் வளர்ச்சி கண்டு நம்மில் பலரும் யாஹு, ஹாட்மெயில் பின்னர் கூகுள் வழங்கிய ஜிமெயில் என்று பிரபலமாய் உள்ள இமெயில் சாதனங்களைப் பழகிவந்தோம்.

பின்னர் 2004ல் பேஸ்புக் வந்து விட்டாலும், கிட்டத்தட்ட பன்னாட்டு பயன்பாட்டு ரீதியில் வெகுஜனப் பயன்பாட்டில் பேஸ்புக் வந்தது 2009க்குப் பின்னர்தான் என்று எனது அனுமானம். சற்றேறக் குறைய இந்த பயன்பாட்டு வருடக் கணக்கு ஓரிரு ஆண்டுகள் முன்னே பின்னே இருக்கலாம்.

ஆரம்ப காலத்தில் மார்க் அவர்கள் வேறு ஏதோ பெயர் வைத்து பின்னர் பேஸ்புக் என்று இறுதிப் பயன்பாட்டிற்கு கொண்டு வ்ந்தபின் அன்றையத் தேவை என்று அவரும் அவர்தம் குழுவினர் அனுமானித்த விஷயங்களை ஒருங்கிணைத்து அவர் இறுதியாக பேஸ்புக் என்று பெயரிட்டார்.

கிட்டத்தட்ட ஒரு பத்தாண்டுகால வளர்ச்சியில் சமூக கலாசாரத் தேவைகள், விஞ்ஞான வளர்ச்சியில் நவீனத் தொழில் நுட்ப வளர்ச்சி வழங்கிய சாத்தியக்கூறுகள் அனுகூலங்கள் அவர்கள் பார்வையில் சமூகப் பயன்பாட்டிற்கு ஏதுவாகும் என்கிற கண்ணோட்டத்தில் பேஸ்புக்கில் அவர்கள் கொணர்ந்த மாற்றங்கள் நம்மில் ஒரு பயனீட்டாளர் என்கிற வகையில் உண்டாக்கிய தாக்கம் மிகப் பெரிது.

பொதுவாக நாம் ஒரு புத்தகம் அல்லது நூல் என்று எதனை சொல்கிறோம்?

ஒரு கதாசிரியரின் அல்லது எழுத்தாளரின் கருத்துருவாக்கம் முறையாகத் தொகுக்கப்பட்டு ஒரு புத்தக வடிவில் வரும். ஒரு பதிப்பாளர் (பப்ளிஷர்) கிடைத்தால் அந்தப் புத்தகம் சந்தைக்கு வரும்.

கதாசிரியர் தானாக முன்வந்து மாற்றங்கள், முன்னேற்றங்கள் செய்தால் மட்டுமே அப்புத்தகத்தின் மறுபதிப்புகள் அந்த மாற்றங்களை உள்ளடக்கி மறுபதிப்புக்களாக சந்தை நிலவரத்திற்கேற்றவாறு வெளிவரும்.

அப்படி மாற்றம் இல்லாத வரையில் கதாசிரியர் தரப்பிலிருந்து மாறுதல்கள் செய்யப்படாத வரையில் ஒரிஜினல் ஒரிஜினல்தான்.

பேஸ்புக் என்று நாம் அழைக்கும் சாதனம் அப்படித்தான் இயங்குகிறதா?

ஒரு பயனாளி தன் கருத்தை அது உரை நடையோ, சிறு குறிப்போ, கட்டுரையோ, கவிதையோ அல்லது வேறு எந்த ஒரு தகவலாக இருக்கட்டும், முதலில் ஸ்டேடஸ் என்றும் நோட் என்றும் சில வகைகளில் தன் நிலைத்தகவலாக வெளியிடுகிறார். பெரும்பாலும் அவர் தன் கருத்தை மாற்றியமைக்க சந்தர்ப்பம் இல்லை என்று சொல்லவியலாது. அவரே பின்னர் உத்தேசித்து சிற்சில மாற்றங்கள் அந்த நிலைத்தகவலுக்கு கொணரலாம். அல்லது சக நண்பர்கள் வாசகர்களின் பின்னூட்டங்களைக் கண்டு தேவைப்பட்டால் தன் ஒரிஜினல் நிலைத்தகவலில் அல்லது பதிவில் மாற்றம் கொணரலாம். அதற்கு பேஸ்புக்கில் வசதியுண்டு, நாமறிவோம்.

கூடவே வீடியோப் பதிவுகள், ஆடியோப் பதிவுகள், புகைப்படப் பதிவுகள் என்று பலவகை உண்டு.  பின்னூட்டங்களின் சமூகக் கட்டுப்பாடுகள் நெறிமுறைகள் இத்யாதி காரணங்களால் இது மாதிரிப் பதிவுகள் சில சமயங்களில் பதிவிட்டவரால் ஒன்று பதிவு அறவே விலக்கிக்கொள்ளப் படலாம், சிறு மாற்றங்களுடன் வரலாம்.

இப்படி நாமெல்லாம் அறிந்த பேஸ்புக் தமிழாக்கத்தில் முக நூல் அல்லது முகப்புத்தகம் என்று அறியப்படுகிறது.

புத்தகம் என்ற அளவில் மேற்சொன்ன புத்தக இலக்கணங்களை மீறி மாற்றங்களுக்கு ஏதுவான ஒரு வடிவம் புத்தகம் என்று அறியப்படுவது எந்த விதத்தில் சரி?

பேஸ்புக்கில் ஒருவர் பதிவிடும் கருத்தானது அதன் மூலம் அவருக்கு ஒரு முகவரி தருகிறது. தொழில் முறை எழுத்தாளர்களை விட்டு அலசி ஆராய்ந்தால் தத்தம் சொந்த ப்ளாக் என்றுதான் முன்னர் சிறு குறு எழுத்தாளர்கள் தத்தம் கருத்துக்களை கவிதையாகவோ உரை நடையாகவோ கட்டுரையாகவோ சிந்தனைத் தொகுப்பாகவோ வெளியிடுவதற்கு பேஸ்புக் ஒரு அருமையான முழுமுதற்தளமாய் வெகுஜனப் பிரயோகத்திற்கும் வணிக முறை விளம்பரம் ஏதுமின்றி வெகுஜனப் பிரபலம், அதன் மூலம் வளரும் நட்பு வட்டம் என்று பேஸ்புக்கின் தாக்கம் சமூகத்தில் ஏற்படுத்தியுள்ள மாற்றம் ஞாலத்தின் சாலப் பெரிது!!

புத்தகம் என்கிற பெயரை விட்டால் வேறு எப்படி இதை அணுகலாம் அல்லது அழைக்கலாம்?

ஒருவரின் கருத்துக்கு வரிவடிவம் தர எத்தனையோ வழிமுறைகள் உண்டு. கருத்துருவாக்கம் வெளிப்பட ஒரு சாதனம் அவசியம் தேவை.

முன்னெல்லாம் வார மாத மாதாந்திர சஞ்சிகைகள், தினசரிப் பத்திரிகைகள், தனிப்பட்ட பதிப்பாளர்களின் பதிவேடுகள் என்று அந்த சாதனங்களின் வளர்ச்சியில் பேஸ்புக் என்பது இன்றைய காலத்தில் ஒரு உன்னதமான ஊடகம் என்பதில் மாற்றுக் கருத்துக்கு அவசியமில்லை.

ஒரு புத்தகத்திற்கான அத்துணை இலக்கணங்களையும் மீறிய ஒரு வடிவம் அல்லது சாதனம் பதிவிட்டவரின் பயனீட்டாளரின் கருத்துரிமைக்கும் கருத்துக்கள் பல பேருக்கு சென்று சேரும் வண்ணம் பற்பல வழிமுறைகளைத் தன்னகத்தே கொண்டு எழுத்தாளர் அல்லது ஒரு தனி நபருக்கு விலாசம் தரக்கூடிய ஒரு ஊடகம் ஒரு புத்தகம் என்று எப்படி அழைக்கப்பட முடியும்?

நாம் பதிவிடும் கருத்துக்கள் நிலைத்தகவல்கள் சில நாட்கள் அல்லது வாரங்கள் கழித்து நாம் திரும்பிப்பார்ப்பது அரிது. அப்படிப் பார்க்கும் நாளில் மாற்றங்கள் செயவதற்கு வாய்ப்பில்லை. வேண்டுமானால் நாம் வேறு ஒரு புதிய பதிவுதான் இடுவோம்.

பெயரளவில் பேஸ்புக் ஒரு புத்தகத்தின் இலக்கணங்களை மீறி இருக்கிறது, ஆனால் ஒரு புக் என்று அழைக்கப்படுவதற்கான சாத்தியங்கள் குறைவாகவே உள்ளது. இது மேற்சொன்ன காரணிகளால் முன்னுக்க்குப் பின் முரணானதாக உள்ளது.

ஆங்கிலத்தில் சொல்வதானால் Facebook as a social medium encompasses enormous avenues and routes that give ample avenue for the writer or Creator of a thought thus giving him a thread to expose himself or herself with a new face into society.   As such, an opportunity to express one's own self in varied variety of thoughts, creative abilities in the form of an art, a simple write-up or short story, a poem, a poetic or scholarly marvel can be giving the author a true new face in the Reader Community. Thus the reach of such marvelous ideas and thoughts by an author can go to any horizon beyond one's imagination.

In old days, when conventional mailing (postal mail) system was in place, few people across the globe had the habit of reaching to new people in the form of making friendship in the route known as 'Pen Friends'.   With the advent of technological advancements and improvements, several tools came up for the reader where electronic mediums came into place where we have seen emails, blogs, social media sites like Facebook, Orkut, Twitter, Whatsup etc.

ஒரு க்ரியேட்டருக்கு முகவரி தரும் சாதனம் ஒரு நூல் வழங்கும் வாய்ப்பைப் போல் நூற்றொடராக பல நூல்களின் தொகுப்பாக இணைப்புச் சாதனமாக இருப்பதால் தமிழில் முக நூல் என்று அழைக்கப்படுவது சாலச் சிறந்தது.

அதுபோல் ஆங்கிலத்தில் Facial Thread or Thread of Faces என்றால் நம் சிந்தனை வேறு கோணத்தில் வேறு பார்வையில் பற்பல ஹேஷ்யங்களில் செல்லும்.

ஆங்கிலப் பெயர் சரியாகக் குறிப்படப்பட சற்று யோசிக்கவேண்டும். அதுவரை தமிழ்ப்பெயர் முக நூல் என்றே இருக்கட்டும்.

(சிந்தனை வட்டம் தொடரும்)




My inspiration or source for this post was triggered by a suggestion from my brother Krishna Murthy by email today (15.11.2014). I managed to elaborate further in my own way.

Here is the extract of his email:

//Quote//

Sankar

I thought abt it last nite.
You may want to elaborate and write about it on FB in your own unique  style.
Facebook (Muga Nool, Muga Puthagam).

For a change, this BOOK is different from normal books.  While a normal book is a pre-printed one with no chance to add or delete and it just is a book with its contents as is ( as it is), on the other hand, FB is a book that allows one to read, write, add, delete, express opinions therein; however, in FB, once you browsed, read and closed and look at it later (say after few days), those old msgs/postings from everyone cannot be seen, like this so many different things when comparing a normal book with FB.
Why then, FB is named as FaceBOOK ?   Appropriately named in limited fashion, inappropriate in many other ways ?? !!

ksk (Krishna Murthy)

//Unquote//

No comments:

Post a Comment