Sunday, January 31, 2021

இரான் ஒரு மாற்றுப் பார்வை

 ஒரு பாயின்ட் தோன்றியது. சூழலை அவதானித்து ஈரானின் செயல்பாடுகளை அலசுங்கள். 


இரான் ஒரு ஷியா பிரிவு பெரும்பான்மை கொண்ட நாடு, சன்னி பிரிவு மக்கள் ஓரளவு இருக்கலாம். 


சவுதி அரேபியா, யு.ஏ.இ (எமிரேட்ஸ்), பெரும்பான்மை சன்னி, மிகச் சிறிதளவே ஷியா பிரிவு சார்ந்தோரோ இரானை ஆதரிப்போரோ இருக்கக்கூடும்.

ஓமான் சற்று வித்தியாசமானது. முக்கால் பங்கு மக்கல் இபாதி சமூகம், எஞ்சியவை சன்னி/ஷியாக்கள். 


கத்தார் சன்னி

பஹ்ரைன் சன்னி  (பெருவாரியாக ஷியா மக்கள், ஆனால் அரசாளும் குடும்பம் சன்னி), 

குவைத் சன்னி (60%) ,ஷியா (40%)

 சிரியா ஆளும் ஜனாதிபதி குடும்பம் ஷியா, ஆனால் பெரும்பான்மை மக்கள் சன்னி (என நினைவு), 

ஈராக் இஸ்லாம்/கிறிஸ்தவர்கள் கலந்த சமூகம், ஷியாவா சன்னியா நினைவில்லை. கிண்டினால் கிடைக்கலாம். ஈரான்/ஈராக் பரம்பரையாய் பகைமை பாராட்டிக்கொள்ளும் நாடுகள் என்பதால் இராக் சன்னியாக இருக்க சான்ஸ் இருக்கு. 


லிபியாவும் பெரும்பான்மை இஸ்லாம். லெபனான், எகிப்து, துருக்கி இன்னும் இதர கலப்பினச் சமூகம் கொண்ட நாடுகள். 


இஸ்ரேல் மட்டும் யூதர்களின் இராஜ்ஜியம். பரம வைரி இரான், பரம வைரி சன்னி பிரிவில் உள்ள இதர அரேபிய நாடுகள்.  கூட்டிக் கழிச்சுப் பார்த்தால் ஷியா பிரிவில் இரானும் சிரியாவும் மட்டுமே, இதில் சிரியா மக்களில் சன்னி அதிகம், அதனால் நேச்சுரலாக சவுதிக்கு சிரிய மண்ணை ஆக்கிரமிக்க ஆர்வம் இருக்கும் சாத்தியமுண்டு. 


சுற்றி இருப்பவன் அனைவரும் அனேகமாய் எதிரி, துருக்கி மட்டும் ஓரளவு நட்பு பாராட்டும் நாடு. ஆக, நேச்சுர்லாய் இரான்/சிரியா அரச குடும்பங்களுக்கிடையே நட்பு நீடிக்கிறது. 


இஸ்ரேல் அணுஆராய்ச்சி, இதர வளர்ச்சி சார்ந்த விஞ்ஞான பூர்வ கண்டுபிடிப்புகள் என அசத்தும் நாடு, அமெரிக்கா இஸ்ரேலின் ஒரு முகம், இங்கிலாந்து இதர பிரான்ஸ், ஜெர்மனி இதெல்லாம் பெரும்பாலும் அமெரிக்கச் சார்பு கொண்ட நாடுகள். ஆஸ்திரேலியா, நியூஜிலாந்தும் அதே அதே. இத்தாலி, ஸ்பெயின் இதெல்லாம் பெரும்பாலும் அமெரிக்க சார்புடையவையே. வரலாற்று ரீதியாக வேறு மாதிரி இருந்திருந்தாலும் பிரிட்டிஷ் அரச குலம் ஒருவிதத்தில் எதிரியாய் இருந்தாலும், வேறு வழியில்லை. இதனாலேயே ஐரோப்பியக் கூட்டமைப்பில் பிரிட்டன் ஒட்ட முடியாமல், வெட்ட முடியாமல் திணறுகிறது புரிந்து கொள்ளக் கூடியதே. 


ரஷ்யா, இந்தியா, சீனா, கொரியா, ஜப்பான் வேறு மாதிரியான கலாச்சாரப் பின்னணி கொண்டவை. தத்தம் பிரத்தியேக பிராந்திய ஆளூமை கொண்டவையும் கூட. 


இந்தப் பின்னணியில் இரானின் சுயச்சார்புத் தன்மை, மேக் இன் இரான், ஆத்ம நிர்பர் போன்ற கோட்பாடுகள் எல்லாத் துறையிலும் இஸ்ரேலுக்கு இரான் எவ் விதத்திலும் பின் தங்கியதல்ல. அணு ஆராய்ச்சி, ஆயுத உற்பத்தி போன்ற விஷயங்களில் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, சீனா, கொரியா, ஜப்பானுக்கு இருக்கக்கூடிய சகல உரிமைகளும் இரானுக்கும் இருக்க வேண்டும் என்பது பொது நியதிதானே? சுற்றி இருக்கும் அரேபிய பரம்பரை எதிரிகள், இந்தப் பக்கம் யூதர்களின் எதிர்ப்பு இதையெல்லாம் அனுசரித்தால், ஐ. நா. சபையின் சர்வதேச வர்த்தகத் தடை, சுமார் 25 ஆண்டுகள் இருந்தது (1989_2014), அதற்கும் முன் 1981_88 இராக்_இரான் யுத்தம் வேறு கூட்டிக் கழித்துப் பார்த்தால் 35 ஆண்டுகள் வெளியுலகத்துடன் குறுகிய வர்த்தகத் தொடர்பு, பண்டமாற்று முறையில் மட்டுமே வர்த்தகம் அனுமதி, துருக்கி/ஜெர்மனி மட்டுமே சாதகமான நாடுகள். ஒரு புதிய தளவாடம், அல்லது தொழில் நுட்ப உதவி வேண்டுமெனில் ஜெர்மனி மட்டுமே உதவும். மறைமுகமாய் சீனா பாகிஸ்தான் வழி உதவி இருக்கக்கூடும். 


அணு ஆயுதம் அழிவை கொடுக்கும் என்கிற கோணத்தில், அது தொடர்பான தொழில் நுட்பம், ஆராய்ச்சிக்கூடம் இதையெல்லாம் தவிர்த்துப் பார்த்தால் விவசாயம், மருத்துவம், இதர உள் நாட்டு உற்பத்தியில் இரான் இதர நாடுகளுக்கு சளைத்ததல்ல, இந்தியா போன்ற பிற நாடுகளுக்கு இருந்த வர்த்தகச் சூழல், தொடர்புகள் குறைவே. இந்தியா பெரும்பாலும் இரானுக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததில்லை, காரணம், எண்ணெய் வர்த்தகத்தில் இருக்கக்கூடிய பரஸ்பர புரிந்துணர்வும் அது தொடர்பான பரஸ்பர நிதி ஆதாரம், இதர பண்ட மாற்று வர்த்தகமும். 


இந்தப் பின்னணியில் இந்தியாவின் நிலை சீனா, பாகிஸ்தான் இதர எல்லைப் பகுதி பாதுகாப்பு முன்னெடுப்புக்கள், சுயச் சார்பு அப்படி இப்படி எனப் பார்த்தால் யாரையும் எதிரியாக்கிக் கொள்ள இந்தியாவுக்கு காரணமில்லை. பரஸ்பர நட்பும், கல்வி, மருத்துவம், விவசாயம், பொருளாதார நிதியாதாரங்களுக்கான இதர சமூகவியல் தொடர்புகளுக்கான அனைத்து கட்டமைப்புகளுக்கும் வளர்ச்சிக்கும் இந்தியாவின் நிலை இப்படி. 


மேற்சொன்ன சுயச் சார்பு என்பது இரானுக்கு இருக்கும்போது 'அழிவைத் தரும் அணு ஆயுதத் தயாரிப்பு' என்ற ஒரு விஷயம் தான் சர்வதேச அரசியலில் இரானுக்கான நெருடலான அம்சம். இல்லையேல், ஒரு தனி நாடாய் அம்மக்கள் வாழவும் அரசியலமைப்பும் இறையாண்மையும் அந்த நாட்டிற்கும் உரிமை உண்டுதானே? 


மாற்றுக் கோணத்தில் சீனா, பாக், இலங்கை, நேபாள் (ஓரளவு), பங்களாதேஷ் என சுற்று முற்றும் எல்லைத் தாவாக்களை வைத்துக் கொண்டு புலனாய்வு மற்றும் சதி ஆலோசனைகள் செய்ய இந்தியாவிற்கு இருக்கும் அனைத்து முன்னெடுப்புகளும் இரானுக்கும் உண்டுதானே, தன்னைக் காத்துக் கொள்ள? கொஞ்சம் அசந்தால் அமெரிக்க உதவியுடன் சவுதியோ, இஸ்ரேலோ அந்த மண்ணை கபளீகரம் செய்துவிடும் அல்லவா? 


அஜித் தோவல் போன்ற ஜாம்பவான்களின் புலனாய்வு, ஆலோசனை பாதுகாப்பு ஏரியாவில் தேவைப்படுகிறது அல்ல்லவா? அஜித் தோவல் மாதிரி ஆட்கள் செயல்பாடுகளை ஆதரிக்கும் நாம் (காரணம் நம் நாடு) இரான் அதையே தனக்காகச் செய்தால் ஏன் ஒப்புக் கொள்ள மறுக்கிறோம்? சர்வதேசப் பார்வையாளராக யோசித்தால் மீண்டும் சொல்கிறேன் அழிவு தரும் அணு ஆயுதத் தொழில் நுட்பம் மட்டுமே. அது அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜெர்மனி, ப்ரான்ஸிடம், இல்லையா?

Just sharing my thoughts, here and there I may have missed certain factors like who is Sunni, who is Shia etc. Overall, is there anything I miss in above thoughts? Is it a skewed view ?

If Mossad has every right to go offensive, if Ajith Doval, IB or RAW can go offensive to defend respective home soil in the name of defending sovereignity, why not Iran to do so for their soil? That's my point.

I know the difference for Iran/China when they go extraneously offensive - that's a strategy India doesn't do, I agree.

நேரில் டெஹ்ரான் போய் வந்ததால், அம் மக்களுடன் ஓரளவு 8 மாதம் பழகியபின் அவர்களின் அடிப்படைக் கட்டமைப்பு, பழகும் தன்மை, இந்தியர்களின் பால் அவர்களுக்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் எனக்கென்னவோ இரானை ஒரு எதிரியாய் பார்க்கத் தோன்றவில்லை.

13 years I spent + 6 months 10 years later having lived in KSA, I don't feel in the same token towards KSA< mind it. இதற்கு நம்மூர் பாஷையில் எட்டப்பன் முத்திரை குத்தப்படலாம். ஆனால், என் உழைப்பை கொடுத்தேன், ஊதியம் பெற்றேன், அதோட முடிந்தது.