Friday, May 6, 2022

கவிதைச் சோலையில் தென்னையும் பனையும் உலாவுதே!!

 

நன்றி நண்பர் திரு. மோகன் (திருச்சி) அவர்களின் ஃபேஸ்புக் பதிவு May 5, 2020 



அதில் ரசிக்கத்தக்க வகையில் நமது பின்னூட்டம் கமென்ட்ஸ் பகுதியில் தமிழில் புகுந்து விளையாடிய / களமாடிய தருணங்கள் அன்றேதான். இரு வருடங்கள் கழிந்தபின் மே 6, 2022ல் ஒரு ரெற்றோ பார்வையில் அப் பதிவைக் கண்ணுற நேர்ந்தது. பின்னாளைய 'ரெற்றோ நினைவுகளுக்காக' இங்கே சேமிக்கப்படுகிறது. 

First Mohan ji's original poetry!! 

என்ன மரமானாலும்
தென்னை மரமாக வேண்டும்
இந்த வரம் வேண்டும் இறைவா!
வழிதெரிய வேண்டியே வளைந்து
விழிபோகும் பாதைதனைத் தேடி
இந்த மரம் போகும் பாதை பாரீர்!
மண்ணிலே தன் விரல்களைப் பதித்து
விண்ணைத் தொடுவதுபோல் வளரும்
இந்த விந்தையைப் பார்க்க வேண்டும்!
ஓடும் வாய்க்கால் நீர் ஓடிக்கொண்டே
வாடும் மக்கள் தாகந்தணிக்க இளநீர்
இந்தத் தென்னை தந்துகொண்டே!
கரையெல்லாம் செண்பகப்பூ கண்ணுக்கழகு!
கரையெல்லாம் தென்னை மரம்
விண்ணுக்கழகு!
தென்னையப் பெத்தா இளநீரு
மட்டுமே அல்ல!
இருக்கும் வரை ஈந்து கொண்டே
இருக்கும் என்பதே!
கொடை மரமென்பதா
கோடை மரமென்பதா?
(தொடரும்...தென்னை போல!)
இரண்டாவது படம்!
பாக்கு மரம்.
என்று நினைக்கிறேன்.
நேற்று நான் கண்ட நிலவு!


Comments Segment, my own as well as his subsequent responses, back to back, be like as it was, captured here for a future reference. 



பாக்கிற்குள்ளே நிக்கிதய்யா வட்ட நிலா (மெய் நிகர் முழு நிலவே)
பாக்கிற்குள்ளே எகிறுதய்யா சுட்ட பலா(ன ஜிகாதிகள்)
பாகிற்குள்ளே உருகுதய்யா வட்ட நிலா (குலோப்ஜாமூன்)
பாங்காய் இங்கே ஊருதய்யா சுட்ட பதநீ
தேங்காய் அங்கே கிளறுதய்யா தொட்ட இளநீ
பங்காய் இங்கே உளறுதய்யா கெட்ட முதுநீ (முதிய இளசு)
எங்காய் எங்கே எடுத்து வையுமய்யா மா பலா வாழை
அடங்காய் நீவிர் வாழ்வாங்கு வாழிய வாழியவே.

Mohan ji:

 எட்டுக்கு எட்டு

அறுபத்து நாலுமாகும்.

கலைகளே அவை!

ஈரெட்டு பதினாறுமாம்!

பயன்தரும் பேறுகளோ?

எட்டியெட்டிப் பிடித்தாலும்

கையில் கிடைக்ககாக்

கனி மொழி தமிழ் அதனால்

கூடவே

ப.பி.பொ. உரை

துணைச் செருகலாக

அனுப்பவேண்டும்.

நல்ல வேளை!.

விழிப்பாக இருந்தேன்!

'து'க்குப் பிறகு

'ண'வுக்கு அருகில் இருக்கும்

'ட'விரலில் சிக்கியது.

விழிப்புடனிருந்து

திருத்தி விட்டேன்.

இருங்காய் அருங்காய்

அதுவே பழுத்ததனாலே!

பனங்காய் பாங்காய்

இருப்பதனாலே

பார்ப்பதற்கு அழகாய்!

My response:

 எங்காய் எங்கே எடுத்து வையுமய்யா மா பலா வாழை implies please reserve my share of முக்கனிகள் உம் தோட்டத்திலிருந்து. To cover this :

ஏங்காய் முக்கனிக்காய் எம்மனம் கூடி

உறங்காய் விழித்திருக்காய் உம்மருள் நாடி!!


பிள்ளைய பெத்தால் கண்ணீரு

தென்னைய பெத்தால் இளநீரு

பனைய வெச்சால் செந்நீரு


அதாவது, தென்னை மரம் இள நீராய் நமக்கு அருள்பாலிக்கும், காலம் காலமாய் (ஒருவிதத்தில் உடனடிப் பலன், சில ஆண்டுகள் கழித்து). பனையை வெச்சால் ஆழ்குழாய் போட அவசியமின்றி நீர்ச்சத்தை உள்வாங்கி நெய்வாசல், நெடுவாசல் மீத்தேன் உயிர்த்தேன் உறிஞ்ச வேண்டேல். காலாகாலத்திற்கும் நீரை உள் வாங்கி நிற்கும்.

Mohan ji 

 எழுதத் தூண்டும்
உம் எழுத்தாலே!
உயிர் மெய்தரும்
எழுத்தாலே!
காயாயிருப்பது
பழமாகும் இயற்கை!
காயாதிருப்பவன்
கனிந்து விடுவது
இறைவன் அருள்.
இயற்கை இறைவன்
இரண்டும் ஒன்றே தானே


Unrelated further though(ts) from me:


கலக்கலாய் ஒரு நற்கலாய்
துலக்கலாய் அது பிற்கலாய்
உல(க்)கலாய் எது ஈசற்கிலாய்
கலங்கலாய் இது பிதற்றலாய்
விளங்கலாய் புது அரற்றலாய்
சுரங்களாய் சுதி சேர்க்கலாய்
கலகலாய் என கலாய்க்கலாய்
விலகலாய் என விளிக்கலாய்
பலகலாய் என பொழுதுபோகலாய்
சிலகலாய் என உமைசேர்க்கலாய் !!