வாழைப்பூ
மூலம் ஒரு இறைச்செய்தி:
கொஞ்சம்
ஆங்கிலம் நிறைய தமிழில் என
கலந்துகட்டி தந்துள்ளேன், படித்து இன்புறக!!
"Set aside your regular routine long enough to make
time to get in touch with your soul today. Rather than running errands and
doing chores, turn your day into a magical one by reveling in your creative
imagination. Make use of the Moon's return to your dreamy sign by escaping from
the everyday world and indulging in your fantasies or spiritual pursuits. You
can
always take care of unfinished business later in the week
when you're in a more practical frame of mind"
*****************************************************************************
Ah, it was a routine Astro-feed I get from Tarot.com every
other day, yet, that's yet another Ashareeri kind of word, that we tend to get
from any corner around us, be it we consider it as a circumstantial
co-incidence or co-occurrence, I would consider it so timely that I find it
significant to share and start this write-up for the day.
Since the time I woke up this morning (a bit late though,
being a Sunday), or perhaps due to the medicinal impact that I had overnight to
arrest my sinusitis symptom of cold and its side effects, when I woke up and
was in the middle of my routine tea of the morning, a piece of Banana flower
(Vazhai Poo) was on the dining table; I realized it's time to give my little
hands to my spouse in her daily routines at the kitchen.
There was a mild music that was going on in the background,
a certain Sai Bajan CD was on play, and it was almost suiting my mental frame
right in the morning. Listening to the musical impact that the Sai songs were adding
pleasure out of pleasure with so much devinity that came with it; not sure if
it was Pankaj Udhas, Anoop Jalota, Anu Radha Podwal or Hariharan who was
singing as it was a mixed album of Sai Bajans and Keerthans contained in a
single CD that my spouse chose to play in the morning (as always).
Today I felt it was giving me enough solace and a peaceful
mind (coupled with a soothing music to the ears rather to the mind I would say
humbly!!).
In that background, I started doing the tough ordeal of peeling
of the vazhai poo to prepare it for the lunch she was intending to make. In the
process, these thoughts came up to my mind, one would consider this again as
yet another circumstantial co-occurrence, nothing special to attach this with
spiritualism etc.
Going by the traditional or conventional wisdom that a
typical Indian mindset would call it as such, I saw a divine touch associated
with, whereby I saw a blend of spiritualistic message at every moment of my
peeling off the banana flower at every stage of unfurling its petals (madals as
we know in Tamil), when removing the main ingredient of a banana flower, not
sure what they would call it or name it - I am talking about
the set of 12 or 14 pieces of Magarantham or the premature flower particle
that's hidden inside. (I believe or think I better continue in Tamil to explain
further, as I find it very odd to convey this in English as I find it hard to
find suitable words to explain what's going on in my mind here).
தமிழ்
ஆர்வலர்களுக்காக இனி தமிழிலேயே பகர்கிறேன்
அல்லது எண்ண ஓட்டததைப் பகிர்கிறேன்.
இன்று
காலை உறக்கம் முடிந்து எழுந்ததிலிருந்தே மனதுக்கு ஒரு மாதிரி நிம்மதியான
எண்ண ஓட்டம் இருந்தது. பல
சமயம் ஆர்ப்பரிக்கும் மனம் இருக்கும். ஒருவேளை
வார விடுமுறை நாளாகியதால் (ஞாயிறு) முன்னிரவில் மாளாத் தொந்தரவாயிருந்த தும்மலுடன்
கூடிய தணிந்த சூழலில்
இருந்த
ஜலதோஷத்திற்காக உட்கொண்ட குளிகையின் மகத்துவமோ என்னமோ காலையில் சற்று
வழக்கத்திற்கு மாறாக நீண்ட நேரம்
கண்ணயர்ந்தேன்.
காலையில்
தேனீர் தயார் செய்து அடுத்து
என்ன செய்யலாம் என அவதானிக்கையில் இல்லக்
கிழாள் சாப்பாட்டு மேசையில் வாழைப்பூ வைத்திருந்தது கண்ணில் பட்டது.
சரி, அவர்தம் சமையலில் இன்று உதவிய வண்ணம்
இருக்கட்டுமே என்று வாழைப்பூவை அரிவதில்
மனம் சென்றது. இரண்டு தினங்களூக்கு முன்
அதை வாங்கும்போதே கேட்டேன், மனையாளிடம் 'வாழைப்பு நன்றாக உள்ளது, வாங்கலாமா'
என்று.
பொதுவாக
வாழைப்பூ, அவரை, கொத்தவரைக்காய், வாழைத்தண்டு,
கீரை வகைகள் வாங்குமுன் ஒருமுறைக்கு
இருமுறை கேட்டு விடுவது உசிதமானது.
இவற்றை சமையலுக்காக தயார் செய்வதில் சிறிது
நேரம் பிடிக்கும், ரொம்பவுமே வேலை வாங்கும், பொறுமை
வேண்டும். பலருக்கு
துரித
கதியில் சமைத்து விட்டு அடுத்த வேலையைப்
பார்க்கும் ஆவலில் இந்த மாதிரி
பிச்சுப்புடுங்கல் வாங்கும் வஸ்துக்களை வாங்கும்போது உஷாராய் இருத்தல் உசிதம். பெரும்பாலும், நாம்தான் அவற்றை ஆய்வது, உரிப்பது
களைவது என அந்த வேலைகளைச்
செய்ய வேண்டியிருக்கும். அதையும் மனதில் வைக்க வேண்டும்.
வாழைப்பூவை
அரிக்க (உரிக்க அல்லது ஆய்தல்)
துவங்கும்போது பின்னணியில் சாய் ராம் தொடர்பான
பஜனைப்பாடல்களின் தொகுப்பு ஒலி நாடாவில் ஓடிக்கொண்டிருந்தது.
அனுப்
ஜலோதாவோ, பங்கஜ் உதாஸோ, அனுராதா
பட்வலோ ஹரிஹரனோ யார் பாடுவது எனத்
தெரியலை, அது ஒரு பல
குரல்களில் வந்த சாய் பஜன்களின்
தொகுப்பு.
இந்தத்
தெய்வீக இசைப் பின்னணியில் வாழைப்பூ
உரிக்கும் சம்பவம் அரங்கேறும் தறுவாயில் என்னுள்ளே எழுந்த எண்ண ஓட்டத்தின்
தொகுப்புதான் இது.
பொதுவாக
பலர் கூறிக் கேட்டுள்ளோம், வாழை
மரத்தின் தெய்வீகமும் அதில் பொருந்தியுள்ள தெய்வீகத்
தன்மையும், வாழை மரத்தின் ஒவ்வொரு
அங்கமும் மனிதனுக்கு அன்றாட வாழ்வில் எப்படியெல்லாம்
உபயோகமாய் உள்ளது, ஒவ்வொரு பகுதியும் நமக்கு என்னென்ன நல்ல
விஷயங்களைத் தன்னுள்ளே கொண்டுள்ளன என்பதை பல பெரியோர்களின்
வாக்கில் கேட்டிருப்போம்.
நான் அந்தப் பார்வையில் அல்லது
கோணத்தில் இதை இன்று காணவில்லை.
என் பார்வை வேறு, குறைந்த
பட்சம் இன்று.
வாழைப்பழம்
பொதுவாக எல்லா சுப நிகழ்வுகளிலும்
பயன்படுத்தப்படுகிறது.
வாழைப்பூவும்
வாழைத்தண்டும் சமையலில் மருந்துப்பொருட்களில் சிலவமயம் பயன்படுகிறது.
வாழை இலையில் சாப்பிடுவதன் நோக்கம் அதன் பலன் நாம்
அனைவரும் அறிவோம்.
வாழை மரம் பொதுவாக சுப
நிகழ்ச்சிகளில் வாயிற் தோரணம் அமைக்கவும்
வரவேற்பின் அம்சமாகவும் பங்கேற்கிறது.
வாழையின்
அனைத்து அம்சங்களூம் ஒரு தியாகத் திருவுருவமாகவே
பொதுவாக அறியப்படுகிறது. அதனால்தான் சுப நிகழ்ச்சிகளில் குறிப்பாக
திருமண
வைபவங்களில் வாழையடி வாழையாய் வாழ்வாங்கு வாழ்வாய் என்று வாழ்த்துகிறார்கள்.
வேறு எந்தப் பழம் இல்லாவிட்டாலும்,
ஏழை பணக்காரன் வித்தியாசமில்லாமல் அனைவரும் வாழைப்பழம் வாங்கிப் பயன்படுத்துகிறோம் நமது எல்லா நிகழ்ச்சிகளிலும்.
முன்னோர்களூக்கு
திதி கொடுக்கும்போது அரிசி வாழைக்காய் கொடுப்பது
நாம் எல்லோரும் அறிந்ததே. ஏன் மற்ற எந்த
ஒரு காய்கறியும் இது மாதிரி சம்பவங்களில்
தராமல் வாழைக்காய் தருகிறோம் என யோசித்தால் அது
ஒரு வேறு விதமான மார்க்கத்தில்
இந்தப் பதிவின் பார்வையை மாற்றிவிடும்.
இந்த மட்டில் நான் வாழைப்பூவோடு என்
பார்வையை இன்றைய தினம் அவதானித்ததில்
என் பார்வையில் பின் வரும் கருத்தாக்கம்
தோன்றியது.
வாழைப்பூவை
ஒவ்வொரு மடல்களாக உரித்துக் கொண்டிருக்கும்போது ஒவ்வொரு மடல்களையும் அரணாக அமைத்து ஒரு
மகரந்தச் சேர்க்கை 10
அல்லது
12 தனிப்பட்ட மகரந்தங்களின் தொகுப்பாக ஒவ்வொரு மடலுக்குள்ளும் ஒரு மகரந்தத் தொகுப்பு
இருக்கும்.
பெரிதிலிருந்து
துவங்கி சிறிது சிறிதாக நாம்
வாழை மடலை உரித்துக்கொண்டே இருப்போம்,
இறுதிவரை உரித்து வாழைக்குருத்து கண்ணில் படும்வரை யாரும் பொறுமையாக வாழைப்பூவை
ஆய்வதில்லை.
ஒருகட்டத்தில்
கடைசி பத்து அல்லது இருபது
விழுக்காடு மீதம் இருக்கும்போது பொதுவாக
நாம் மிச்சத்தை உரிப்பதில்லை, சோம்பேறித்தனமா இல்லை அலுப்பா என்பது
வேறு விஷயம்.
வாழைப்பூ
உரிக்கும்போது அதில் நமக்கெல்லாம் ஒரு
இறைச் செய்தி இருப்பதாக எனக்குத்
தோன்றுகிறது.
ஒவ்வொரு
மடலாக உரிக்கும்போது நம் வாழ்வின் மகத்தான
வாழ்வியல் தத்துவம் தெரிந்தது.
நம் வாழ்க்கையில் நாம் பொருள் தேடியோ
நிம்மதி தேடியோ வேறு எதைத்
தேடியோ ஓடுகிறோம். நம்
ஓட்டத்தில் பற்பல தடை கற்கள்,
சங்கடங்கள்,
இடையூறுகள்,
சரீரத்தால் அல்லது மனதால் நாம்
காணும் வலிகள், வார்த்தைப் பிரயோகங்களில் நாம் காணும் ரணங்கள்
அதிகம். வாழ்வின் ஒவ்வொரு அடியிலும் முன்னேறப் பாதையில் நாம் நகரும் ஒவ்வொரு
தருணத்திலும் பூப்பாதைகளாய் ரோஜாப்பூக்களாய் இருக்கும் முட்களே
இருக்காது
என ஒருவன் நினைத்தால் அது
எந்த மட்டில் உண்மையில்லையோ அதுபோல வாழைப்பூவை அரியும்போது
அல்லது உரிக்கும்போது ஒவ்வொரு மகரந்தத் தொகுப்பிலும் கொண்டை போன்று தலைப்பகுதியுள்ள
ஒரு கள்ளன் ஒளிந்திருக்கிறான்.
இந்தக்
கள்ளனை நீக்கினால்தான் வாழைப்பூ சமையலுக்கு உகந்ததாகிறது. சாதாரணமாக இந்தக் கள்ளன் என்பது
ஒரு குறுதண்டுபோன்ற அமைப்பில் இருக்கும், தலைப்பகுதி மொத்தமாய் தனியே இருக்கும். வாழைப்பூவின்
அந்த மகரந்தக் கோர்வையில் இதை இனம் கண்டு
கொள்வது
முற்றிய
மகரந்தங்களில் சுலபம், ஆனால் நாம் உள்ளே
மேன்மேளும் உட்பகுதியில் உரிக்கும்போது இந்தக் கள்ளனை அடையாளம்
காண்பது கடினம். உள்ளே உள்ளே என
பார்க்கையில் வாழைப்பூவின் அமைப்பினுள் நம் பார்வையை ஒருமித்து
நோக்கினால் சிறுகச் சிறுக ஒவ்வொரு மடலாக
உரிக்கும்போது மகரந்தக் கோர்வை சிறிதாய், குறுகலாய்
சின்னதாய் போய்க்கொண்டே இருப்பின் இந்தக் கள்ளனை அடையாளம்
கொள்வது மிகக் கடினமாகும். அங்குதான்
நாம் பொறுமையிழந்துவிடுகிறோம், மிச்சத்தை தூக்கி எறிந்து விடுகிறோம்.
நாம் வாழ்க்கையில் நல்லெண்ணங்களைக் கொண்டு நல்ல சத்ஸங்கம்,
நல்ல உறவுகள், நல்ல நட்புக்கள் நல்ல
சிந்தனைகளைக் கைக்கொண்டு வளரும்போது நம் பார்வை விசாலமாய்
ஆங்காங்கே முட்கள் இருப்பினும், நல்லன அள்ளி அல்லன
தள்ளி நம் வாழ்க்கையில் வெற்றி
எனும் பழத்தை
நாம் அனுபவிக்கும் காலம் உண்டு.
அந்த வெற்றி எனும் பழம்
அந்த அனுபூதியை இறைப் பிரசாதத்தை பெறும்வரையில்
நமக்குப் பொறுமை இருப்பதில்லை.
வாழைப்பூ
பொதுவாக துவர்ப்பு அல்லது உவர்ப்பு, ஆங்காங்கே
கசப்பு என்று அதன் ருசி
தனித்தனியாய் இருக்கும். ஒவ்வொரு மகரந்தத்தையும் உற்று நோக்கினால் கீழ்ப்பகுதியில்
தேன் சேரும் ஒரு மகரந்தப்பை
போன்ற அமைப்பு உண்டு. நாம் கள்ளனை
தனியே எடுக்க விழைந்து அதில்
கவனம் இருக்கும்போது தேன் சேரும் அந்த
மகரந்தைப்பை பெருவாரியாக உதிர்ந்துவிடும், குபபையோடு குப்பையாக இதை நாம் தள்ளிவிடக்
கூடாது. இது சாப்பாட்டில் சேர
வேண்டும்.
நாம் தள்ள வேண்டியது அந்தக்
'கள்ளன்' எனும் பகுதியை மட்டும்தான்.
பொறுமையுடன் ஆய்வதில் பொறுமையிழந்து ஷார்ட் கட் என்று
அனைத்து மகரந்தத் தொகுப்புக்களையும் நாம் ஒருங்கே கொணர்ந்து
கள்ளனின் தலைப் பகுதியை நீக்கும்
நோக்கில் தலைப்பகுதியை மட்டும் வெட்டும்போது நல்ல பகுதியும் குப்பையில்
தனியே போய்விடும். கள்ளனின் தலைப்பகுதி மட்டுமல்லாமல் தண்டுமாதிரி இருக்கும் அதன் முழு வடிவமுமே
நீக்கப்பட வேண்டும்.
வாழைப்பூவில்
உள்ள கள்ளனுக்கு நிகராக நாம் தள்ள
வேண்டிய அல்லது களைய வேண்டிய
குணாதிசயக் கள்ளன்கள் ஒன்றா இரண்டா? பொறாமை,
கோபம், துவேஷம், வன்மம், குதர்க்கம், விவேகமின்மை, பொறுமையின்மை, காய்தல் உவர்த்தல் அகற்றி என்று சொல்வார்களே
அதுபோல வீண் விவாதம், வாதப்
பிரதிவாதம் (அதீத வாதப் பிரதிவாதங்கள்
தன்முனைப்பை முன்னிறுத்தும்போது நம்மில் அது பலருக்கு முடக்குவாதத்தில்
கொண்டுபோய்விடும்) என பற்பல நெகடிவ்
சிந்தனைகள் நம்மை ஆட்கொள்கிறது. இவை
தள்ளப்பட வேண்டும்.
ஒவ்வொரு
மகரந்தத் கோர்வையையும் ஆயும்போது கள்ளனை மட்டும் தனியாகப்
பொறுமையாகக் களைய வேண்டும். இந்தக்
கள்ளனை உட்கொண்டால் ஜீரண மண்டலத்தில் பாதிப்பை
உண்டாக்கும், இன்ன பிற பின்
விளைவுகள் இருப்பதால்தான் இந்தக் கள்ளன் பகுதியை
நாம் நீக்குகிறோம்.
ஒருவழியாக
அனைத்து மகரந்தக் கோர்வைகளையும் ஆய்ந்தபின் நறுக்கி அதன் பின் சமையலில்
தேவைப்படி பயன்படுத்துகிறோம்.
முன்னர்
குறிப்பிட்டவாறு ஒவ்வொரு மடலையும் உரித்து நல்லன கொண்டு அல்லன
நீக்கி முழுவதுமாக வாழைப்பூவை நாம் அரிய வேண்டும்.
துவர்ப்பு,
உவர்ப்பு, கசப்பு கொண்ட பகுதிகளை
ஆய்ந்த பின் கடைசியில் இருக்கும்
வாழைக்குறுத்து நம் சிறுவயதில் அப்படியே
சாப்பிட்ட நினைவு வருகிறது. இந்தக்
குருத்துப் பகுதி சற்றே இனிப்பாக
இருக்கும். வாழைப்பூவின் தரம் சரியாக இருப்பின்
இது இனிப்பாக இருக்கும், இல்லையேல் இதுவும் துவர்ப்பாக இருந்து விடும். அது நமக்கு வாய்த்த
பூவின் மகிமை!!
இதில்
எங்கே இறைமை அல்லது இறைத்தத்துவம்
வந்தது எனக் கேள்வி வரும்.
முன்னரே
சொன்னதுபோல், நாம் வாழ்க்கையில் நல்லெண்ணங்களைக்
கொண்டு நல்ல சத்ஸங்கம், நல்ல
உறவுகள், நல்ல நட்புக்கள் நல்ல
சிந்தனைகளைக் கைக்கொண்டு வளரும்போது நம் பார்வை விசாலமாய்
ஆங்காங்கே முட்கள் இருப்பினும், நல்லன அள்ளி அல்லன
தள்ளி நம் வாழ்க்கையில் வெற்றி
எனும் பழத்தை நாம் அனுபவிக்கும்
காலம் உண்டு.
நம் வாழும் சூழல், நட்புக்களின்
தன்மை இவற்றின் பொருட்டு நம் குணாதிசயங்கள் மாறும்.
கெட்ட சகவாசத்தின் பாதிப்பால் நல்லன அள்ளும் வாய்ப்பு
பல நேரம் நாம் தொலைத்துவிடுகிறோம்.
எல்லாம்
முடிந்து வாழ்க்கையில் பற்பல சோதனைகள், வேதனைகள்
தாண்டி சுமார் 50 60 ஆண்டுகள் வயது நெருங்கும்போதுதான் வாழ்வின்
மகத்துவம் நமக்குப் புரியும்.
பற்பல
கசப்பான அனுபவங்கள் நம்மை ஒருவித விரக்தி
நிலைக்குத் தள்ளிவிடும். எதிலும் பற்றில்லாமல் விரக்தி நிலையில் எதையோ தொலைத்த 'பாவம்'
நம்மில் பலருக்கு வாய்ப்பதுண்டு.
இறுதிவரை
பொறுமையாய் இருப்பின், வாழைப்பூவின் இறுதிக் குருத்துப்பகுதியில் காண நேர்ந்த இனிமை
நமக்கு வாய்க்க முதலில் இருந்தே நல்லெண்ணம் வேண்டி நற்சிந்தனை கொண்டு
வளரும் பாக்கியம் அனைவருக்கும் கிட்டாது, கிட்டுவதில்லை.
இவ்வளவு
ஏன், வாழைப்பூவே சாப்பிடப் பழக்கம் கொள்ளாமல் வாழைப்பழம் நேரடியாக சாப்பிட்டவர்கள் அதிகம், சராசரி வாழ்க்கையில்.
நம் இறைத்தேடலில் பக்தியோகம், கர்ம யோகம், ஞான
யோகம் என்று ஒவ்வொரு படியாக
நாம் முன்னேறினால் அந்த இறைச்சக்தியின் மகத்துவம்
நம் கண்ணுக்குப் புலப்படும்.
வாழைப்பூ
கர்ம யோகத்தினை நமக்கு உணர்த்துகிறது. அதன்
பின் சிலருக்கு உரிய தருணத்தில் இறை
அனுபூதி இருந்தால் இறை அனுபவம் என்கிற
இன்பம் கிட்டும்.
வாழைப்பழம்
மாதிரி பக்தி அல்லது கர்ம
யோக மார்க்கம் கொள்ளாமல் பல்லாயிரத்தில் ஒருவருக்கே வெகு சிலருக்கே நேரடியாக
ஞான மார்க்கம் சித்திக்கும், ஞானம் பிறக்கும்.
இப்படிச்
சொல்வதால் வாழைப்பூ ஏன் சாப்பிடணும், வாழைப்பழம்
மட்டுமே சாப்பிட்டால் போதுமே என்ற சிந்தனை
வேண்டாம். அது அனைவருக்கும் வாய்க்காது.
"தீதும்
நன்றும் பிறர் தர வாரா"
"தீயினாற்
சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற்
சுட்ட வடு"
என்கிற
வள்ளுவன் வாக்கு அல்லது முதுமொழிகளில்
கண்டவாறு நம் வாழ்வில் நல்லன
புரிந்துணர்ந்து அல்லன அகற்றி நற்சிந்தனை,
நல்லெண்ணம்
கொண்டு நம் வாழ்க்கைப் பாதையை
வகுத்துக்கொள்ளும் பாக்கியம் நமக்கும் கிட்ட இறைச் சக்தியை
வேண்டுவோம்!!
மறப்பதற்கு
முன் இதையும் சொல்லி விடுகிறேன். இதுவும்
முக்கியமானது.
வாழைப்பூ
அரியும்போது துவக்கத்தில் கைகளை சுத்தம் செய்தபின்
சிறிது நல்லெண்ணெய் கைகளில் குறிப்பாக விரல்களில் படுமாறு தடவிக்கொள்வது உத்தமம், அப்போதுதான் வாழைப்பூ அரியும்போது ஏற்படும் கறைகள் நம் கைகளில்
நீண்ட நேரம் தங்காது.
எனில்,
நல்லெண்ணெய்ப் ப்ரயோகம் இல்லையேல், ஓரிரு நாட்கள் அந்தக்
கறைகளோடு ஜீவிக்க வேண்டியிருக்கும். எப்படி நற்சிந்தனைகள் இல்லாமல்
நம் வாழ்வு செல்லும்போது மாறா
ரணங்களோடும் வசவுமொழிகளோடும் வலிகளோடும் ஜீவிக்க வேண்டியிருக்குமோ அதுமாதிரி.
வாழைப்பூ
மூலம் நான் கண்ட இறைச்செய்தி
முற்றும்.