பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்!!
பிறப்பு, பிறப்பின் மூலம், பிறப்பினால் பயனைடைவோர், நற்குடியில்/கெட்ட குடியில் பிறந்ததினால் மட்டுமே ஒருவன் நல்லவனோ கெட்டவனோ ஆவதில்லை. சுற்றுச் சூழல், நடத்தை, ஒருவனை எப்படியெல்லாம் மாற்றும் என்பதற்கு நம் மாபெரும் இரு இதிகாசங்களிலேயே உதாரணம் உண்டு.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று துவங்கும் சொல் நினைவில் வருகிறது.
இராமாயணத்தில்:
மூன்று மனைவிகள் பட்டத்து இராணியாக, இதர அறுபதினாயிரம் பணிப்பெண்கள் அயோத்தியில் தசரதச் சக்கரவர்த்திக்கு. இக்ஷ்வாகு குலம், இரகுவம்சம் என பாரம்பரியம், ஆனால் மன்னனுக்கு வாரிசாய் மகவு இல்லை என்ற சோகம். அவருக்கு ஒரு புத்திரி உண்டு என்று ஒரு சில தியரிகளில் சொல்லப்படுவதுண்டு.
பலவித யாகங்கள், ஹோமங்கள், யக்ஞங்கள் செய்த பலன், மற்றும்,மகரிஷிகளின் அருள்பார்வை பட்டு 4 இளவசரர்கள் பிறக்கிறார்கள். இராமன், இலக்குவன், பரதன், சத்ருக்னன் என இளவசர்கள் பிறந்து, வளர்ந்து, உற்றா வயதில் நல்ல 'குருகுலம்' மூலம் வித்யாப்பிசாங்கள், கல்வி கேள்விகள் கற்று பின்னர் நடந்தது அனைத்தும் நமக்கு இராமாயணம் எனும் இதிகாசமாய்த் தெரியும்.
இராமனுக்கு உற்ற தூதனாய் வந்த அனுமன் கூட வாயுபகவானுக்கும் சுமேரு ராஜன் கேசரியின் பட்டத்து மகிஷி அஞ்சனைக்கும் பிறந்தவன். மாருதி, இராமன்/சீதைக்கு உற்ற தோழனாய் தூதுவனாய் திகழ்ந்தவன். தன் தபோவலிமை, சிவன்/விஷ்ணு இருவரின் அருட்பார்வையும் சூரியனின் குருபார்வையும் கிட்டிய பாக்கியசாலி.
வாலியின் புத்திரன் இளவரசன் அங்கதன். வாலி புத்திரனாய் இருந்தும் வாலியின் குணம் அமையப் பெறாமல் சுக்ரீவனின் வளர்ப்பில் ஸ்வீகரிப்பில் வளர்ந்த கிஷ்கிந்தா இளவரசன் நாடோர் போற்றும் நற்குணங்களுடன் வாழ்ந்தான்.
மகாபாரதத்தில் குந்திக்கு கர்ணன் அமைந்தது, அவன் தேரோட்டியின் மகனாய் வளர நேர்ந்தது, துரியோதனின் உற்ற நண்பனாய் கூடா நட்புக்கு இலக்கணமாய் வாழ்ந்தான் என்றாலும், அவனது தான தர்மம் எனும் கொடை மகாபாரதக் காப்பியத்தில் ஒரு உன்னத பாத்திரமாய் திகழ வைத்தது. ஆனாலும், க்ஷத்திர்ய குலத்தில் வளராத இழிவு அவனை நாளும் வாட்டியதே, துரியோதனனின் நட்பு கிட்டியபின்னரே அவனது சௌலப்யங்கள் பாரினில் பலருக்கும் புரிபட்டது? இல்லையேல், அவனது கதி?
இதுபோல பல குணாதிசயங்கள் கொண்ட கதாபாத்திரங்கள் நம் காவியங்களில் உண்டு. உலக வரலாற்றை உற்று நோக்கினால் இதுபோல பல கேரக்டர்கள் இருக்கலாம்.
ஆனால், அவனவன் பிறந்த குலத்தின் மாண்பு அவன் வாழும் நாளில் அவன் எப்படி வளர்கிறான், எப்படிப்பட்ட நட்பும் சுற்றமும் அவனுக்கு கிட்டுகிறது என்பதை வைத்தே அவன் வரலாற்றில் போற்றப்படுவதோ இழி பிறப்பாய் இகழப்படுவதோ நடக்கிறது.
இதிகாசங்களில் வரும் பாத்திரங்கள் படைப்பின் நோக்கம் கருதி ஒரு காவிய நாயகனாய் அவனை மாற்றுகிறது, பார் போற்றும் நற்பிறவி, இராமன், அனுமன் மட்டுமே தெய்வீக குணாதிசயங்கள் கொண்டவனாய் மதிக்கப்படுகின்றனர்?
மகாபாரதத்தில் திருதராஷ்டிரன், பாண்டுவுக்கு முந்தைய தலைமுறை அவர்களும் அதிதிக்கு பிறந்தவர்களாகத்தான் நமக்குச் சொல்லப்பட்டது.
சித்திராங்கதன், விசித்திர வீர்யன் எனும் இரு இளவரசர்கள் எப்படி பிறந்தார்கள்? இயற்கையாகவா? இருக்கலாம். பாண்டு, திருதராஷ்டிரன், விதுரன் கூட எப்படி பிறந்தார்கள்? அதிதி புத்திரர்கள் எனும் ரூட்தானே?
கலியுகத்தில் அதிதி புத்ரன் எனும் ரூட் சரியாக வெகுஜனங்களால் ஸ்வீகரிக்கப்படுகிறதா? அங்கீகரிக்கப்படுகிறதா?
விருந்தாளிக்குப் பொறந்தவன் என்றுதானே பெரும்பாலும் இகழ்ச்சியும் இதர சொல்லாடல்களும் ஒரு சிலரைக் குறிக்கிறது?
குடும்பங்களில் கணவன்/மனைவி பரஸ்பரம் புரிந்துணர்வுடன் அவரவர்க்கு இயற்கையாய் பிறந்த மகவோ, இல்லை, தத்தெடுத்த குழந்தைகளோ என்றால் ஓரளவு சமூகம் ஏற்றுக் கொள்கிறது.
அதே சரோகேட் ரூட்டில் பிறக்கும் பிள்ளைகள் அதே அளவுக்கு அங்கீகாரத்துடன் வாழ்கின்றனரா? இன்றைய 21ம் நூற்றாண்டில் விந்து தானத்தில் கூட (ஸ்பெர்ம் டொனேஷன்) குழந்தைகள் பிறக்கின்றன. தானம் தருபவனுக்குத் தெரியாது தன் விந்து தானத்தால் பிறக்கக்கூடிய குழந்தை யார், எவர், எங்கே வளர்கின்றனர் என்பது.
அதேபோல் தானம் பெற்றோருக்கும் தானம் கொடுத்தவனின் பூர்வாங்கம் சொல்லப்படுவதில்லை. ஆனால், அப்படிப்பட்ட தானத்தில் பிறந்த குழந்தைகளின் பெற்றோர் அதாவது வளர்ப்புப் பெற்றோர் நற்குடியில் பிறந்தவராகவோ இழிகுடியில் பிறந்தவராகவோ இருந்தாலும், அவர்களது செயல்பாடுகள், வாழ்வியல் நடைமுறைகள் முறையாக, சமூக ஒழுங்கிற்குள் இருந்தால் மட்டும் அந்தக் குழந்தைகள் சமூகம் ஒப்புக் கொள்ளூம் அளவுக்க்கு சரியாக வளரும் என்பதற்கு உத்திரவாதம் இல்லை. அங்கும் கூட அவரவர் வாழ்வியல் சூழல், பொருளாதாரப் பின்னணி, குழந்தை வளர்ப்பில் அந்தப் பெற்றோர் காட்டும் அக்கறை இத்யாதி சமூகக் காரணிகளே பிற்காலத்தில் அக் குழந்தைகள் சமூகத்தில் நல்லவனாகவோ கெட்டவனாகவோ மாறும் சூழல் இருக்கிறது.
அந்தண குலத்தில் பிறந்ததால் மட்டும் ஒருவன் அந்தணன் ஆகிவிட இயலாதே? அந்தணனுக்குரிய இயல்பும் வாழ்வியலையும் உணர்ந்து, வேத சாஸ்திரங்கள் கற்று ஆயகலைகளும் கற்று, நித்ய கர்மானுஷ்டங்களும் அனுஷ்டித்து பரிபூரண அந்தணனாய் ஒருவன் வாழ்வதென்பது அவ்வளவு சாதாரணமா, இக்கலியுகத்தில்?
நம் பார்வையில் ஒரு 3 தலைமுறையே அப்படிப்பட்ட பரிபூரண அந்தணர்கள் நாம் கண்டிருப்போமா? இனி காண்போமா?
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்” !!
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது அவ்வளவு உன்னதமான குறள் நெறி என்பது யோசிக்க வைக்கிறதல்லவா?
27 நட்சத்திர காயத்ரிகளில் புனர்வசுவுக்கு உண்டான காயத்ரி மந்திரம் இது.
ஓம் ப்ரஜாவ்ருத்யைச வித்மஹே அதிதிபுத்ராய த தீமஹி தன்னோ புனர்வஸு ப்ரசோதயாத் - 7 நட்சத்திர காயத்ரிகளில் புனர்வசுவுக்கு உண்டான காயத்ரி மந்திரம் இது. அதிதி புத்ராய என்றே இராமன் விளிக்கப்படுகிறான். (thoughts to continue)

No comments:
Post a Comment