கருத்துச் சுதந்திரம் ஒரு பார்வை
நேற்று ஒரு நெடும்பதிவு இந்திய தேசத்தின் இறையாண்மை, தேசாபிமானம், நேஷனலிஸம் இதையெல்லாம் வைத்து ஒரு பதிவை ஃபேஸ்புக்கில் பகிர்ந்தேன். நண்பர்கள் தத்தம் கருத்துக்களையும் கமென்ட்ஸில் பகிர்ந்து கொண்டார்கள்.
அப்பதிவை தொகுக்க சுமார் 4 நாட்களாக தீர யோசித்து பதிவின் வீர்யம் காரணமாக சர்வ ஜாக்கிரதையாய்த்தான் என் பதிவை, எண்ண ஓட்டத்தை, கண்ணியமான சொல்லாடல்களுடன் ஃபேஸ்புக்கில் பகிர்ந்தேன்.
ஆனாலும், சில பல பிரத்தியேகக் காரணங்களுக்காக அப் பதிவை ஃபேஸ்புக்கிலிருந்து நீக்கி விட நேர்ந்தது. யாருடைய எதிர்ப்பும் இல்லை. இருந்தாலும் ஒரு பாதுகாப்பு உணர்வுடன் 'என் முதுகு எனக்கு முக்கியம்' என்கிற அடிப்படைப் புரிதல் அது மிகையாய் உணர்ந்தேன்.
I have removed the interesting inputs from Kannan Ramaswamy ji in both my original post and your shared post of mine, as it has got sensitive content, I realized a bit late
My other friends too are alerting me to remove my total post...........I am undecided.நான் இருக்கும் இடம் வேறு, வேறு ரூபத்தில் தேவையில்லாத ஆணியை திருக வேண்டிவரும் என்று பட்சி சொல்லுது. அதனால், என் பதிவை 'வொன்லி மீ' லெவலுக்கு டௌன்க்ரேட் பண்ணிடலாம் என தோணுது.
பதிவை எழுதும்போது / தொகுக்கும்போது நானும் ஒவ்வொரு முறையும் சர்வ ஜாக்கிரதையாகத்தான் என் 'சொல்லாடல்களை' கையாளுவேன். இம்முறையும் 99.99% எந்த வித சங்கேத குறியீடுகள் இல்லாமல் தொகுத்துள்ளேன். இருப்பினும் அந்த 0.0001% ஒட்டுமொத்த பதிவின் நோக்கத்தையே அர்த்தமில்லாததாக ஆக்கிவிடும் என்று தோன்றுகிறது. காலக்கட்டாயம் என் பதிவை 'ஒன்லி மீ' செய்ய வேண்டியதாகி விடும் போல் இருக்கு. என்னத்தை சொல்ல?சொல்ல?
நம்ம நாடு, நம்ம புண்ணிய பூமி, கர்ம பூமி, நம் நாட்டின் இறையாண்மையைப் பற்றி தேசப் பற்றுடன் நாம் பதிவிடும் உரிமை, கருத்துரிமை கூட நமக்கில்லை என்கிற சூழலில் நாடு இருக்கிறது. எதாவது ப்ராது வந்தால், சட்ட ரீதியில் நாம் நம்மை காத்துக் கொள்ளலாம், ஆனால், அதற்கான நேர விரயம், பொருளாதார செலவினங்கள் அது இது என நம்மை அலைக்கழிப்பார்களே, அந்த வெட்டி வேலை ஏன் என்றுதான் நம்மில் பலரும் 'வேறு வழியின்றி வாளாவிருக்க வேண்டியிருக்கு'. என்ன கொடுமை சரவணன் இது?
No comments:
Post a Comment