Saturday, August 20, 2011

Hello PM, my response to Thuglak

Courtesy Thuglak article 'Hello Prime Minister' by Sathya issue dated 21.08.2011

Here is the main Article from Thuglak:  Reason to post main article here is, reader might not get what I posted as my response, so target without source becomes meaningless, na !!

ஹலோ, பிரைம் மினிஸ்டர்...? – சத்யா 
சிகிச்சைக்காக வெளிநாட்டுக்குச் சென்றிருந்தாலும், நமது நாட்டில் என்ன நடக்கிறது என்பது குறித்தே சோனியா பெரிதும் கவலைப்பட்டுக் கொண்டிருப்பார் என்பதில் சந்தேகமில்லை. சோனியாவுக்கு சரியான தகவல்களை வழங்க, பிரதமரை விட நம்பிக்கையானவர் வேறு யார் இருக்க முடியும்? அவர்களின் தொலைபேசி உரையாடலை ஒட்டுக் கேட்டுத்தான் தெரிந்து கொள்ள வேண்டுமா என்ன? நாட்டு நடப்பு குறித்து சோனியா பிரதமருக்கு ஃபோன் செய்தால், பிரதமர் அளிக்கும் பதில்கள் கிட்டத்தட்ட இப்படித்தான் இருக்கும் – என்பது நமது கணிப்பு.




சோனியா : ஹலோ, பிரதமரா?

பிரதமர் : யெஸ் மேடம்! ராகுல்தான் இன்னும் பிரதமராகச் சம்மதிக்கலையே. அப்ப நான்தானே பிரதமர்?

சோனியா : ராகுல் உங்களை மாதிரி இல்லை. தன் விஷயத்திலே தானே முடிவெடுக்கணும்னு ஒரு பிடிவாதம். அதிருக்கட்டும். நீங்க எப்படி இருக்கீங்க?

பிரதமர் : மௌனமாத்தான் இருக்கேன். அதாவது, என் வேலையை நான் கரெக்டா செஞ்சுகிட்டிருக்கேன்.

சோனியா : ரொம்ப சந்தோஷம். அங்கே எல்லாம் எப்படிப் போயிட்டிருக்குது? எல்லாரும் உங்களுக்கு ஒத்துழைப்பு தராங்களா? 
பிரதமர் : எல்லாரும் நல்ல ஒத்துழைப்பு தராங்க மேடம். முன்னேயெல்லாம் எந்தப் பிரச்சனை வந்தாலும் ‘எனக்கு எதுவும் தெரியாது’ன்னு நானே வாயைத் திறந்து சொல்ல வேண்டியிருந்தது. இப்ப அந்தக் கஷ்டம் இல்லை. எனக்குப் பதிலா மத்தவங்களே ‘பிரதமருக்கு ஒண்ணும் தெரியாது’ன்னு எனக்கு ஆதரவாப் பேசிடறாங்க. ‘பிரதமருக்கும் பிரதமர் அலுவலகத்தின் பணிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’ன்னு இன்னும் ரெண்டு நாளிலே பிரதமர் ஆஃபீஸ்லேர்ந்தே அறிக்கை வந்தாலும் ஆச்சரியப்படறதுக்கில்லை.

சோனியா : வெரிகுட். இப்படி ஒரு ‘டீம் ஸ்பிரிட்’டைத்தான் நான் எதிர்பார்க்கறேன். இந்தியாவிலே இப்ப என்ன விசேஷம்?

பிரதமர் : விசேஷமா ஒண்ணும் இல்லைங்க. அதே பழைய பிரச்சனைகள்தான். அதே பழைய மோதல்கள்தான். புது ஊழல் எதுவும் வெளியே வரலை. போன தடவை மாதிரியே, இந்தத் தடவையும் பார்லிமென்ட்டை தினமும் நாலு வேளை ஒத்தி வெச்சுடறாங்க. நாடு அதே ரூட்லேதான் போயிட்டிருக்குது.

சோனியா : பார்லிமென்ட் நடக்காததும் ஒரு வகையிலே நல்லதுதான். மகளிர் மசோதாவை நிறைவேற்ற முடியாதததுக்கு எதிர்க்கட்சிகள் தான் காரணம்னு சொல்லி தப்பிச்சுக்கலாம்.

பிரதமர் : பாராளுமன்றம் என்னைக்கு நடக்கணும், என்னைக்கு நடக்கக் கூடாதுன்னு பா.ஜ.க.தான் முடிவு செய்யும்னு சுஷ்மா ஸ்வராஜ் சொல்றாங்க.

சோனியா : அக்கிரமமா இருக்குதே. அப்ப நாம எதுக்கு இருக்கோம்? பார்லிமென்ட் நடக்கலாம்னு அவங்க முடிவெடுக்கும்போது, அவங்களுக்கு எதிரா ரகளை பண்ணி, சபையை முடக்க நம்மாலே முடியாதா?

பிரதமர் : நிச்சயமா முடியும். கந்தகார் சம்பவம்தான் தீவிரவாதம் வளர்ந்ததற்குக் காரணம்; மசூதி இடிப்புக்கு அத்வானி மறுபடியும் மன்னிப்பு கேட்கணும் – அது இதுன்னு கைவசம் நிறைய ஸ்டாக் இருக்குதே. இந்தக் கூட்டத் தொடரை இப்படியே ஓட்டிடலாம். 



சோனியா : ஓகே. விலைவாசிப் பிரச்சனை எப்படியிருக்குது? தொடர்ந்து கவலைபட்டுக்கிட்டு இருக்கீங்களா இல்லையா?

பிரதமர் : சமீப காலமா 2-ஜி ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல், ஆதர்ஷ் சொஸைட்டி ஊழல், லோக்பால் பிரச்சனைன்னு வந்துட்டதாலே, அதுங்களுக்கு முன்னுரிமை கொடுத்து கவலைப்பட வேண்டியிருக்குது. விலைவாசியை நினைச்சு கவலைப்பட நேரமே கிடைக்கலை.

சோனியா : அப்படிப் பொறுப்பில்லாம இருந்துடாதீங்க. ஒவ்வொரு பிரச்சனைக்கும் தனித்தனியா நேரம் ஒதுக்கி கவலைப்படறதுதான் முறை.

பிரதமர் : சரி மேடம். ‘விலைவாசி உயர்வு கவலை அளிக்கிறது. தீவிரவாதம் அச்சுறுத்துகிறது. ஊழல் அதிகரிப்பு பெரும் சவாலாக உள்ளது’ன்னு சுதந்திர தின உரையிலே பேசிடறேன். வருஷா வருஷம் அப்படிப் பேசித்தான் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்திட்டு வரேன்.

சோனியா : நல்ல ஐடியாதான். சரி. அமைச்சர்கள் எல்லாம் எப்படி இருக்காங்க?

பிரதமர் : அவங்கவங்க வேலையை அவங்கவங்க பார்த்துகிட்டிருக்காங்க. அடுத்த ஸி.ஏ.ஜி. அறிக்கை வரும்போதுதான் யார் யார் என்ன செஞ்சாங்கன்னு புரியும்.

சோனியா : ஸி.ஏ.ஜி.ன்னதும் ஞாபகத்துக்கு வருது. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியிலே ஷீலா தீட்சித் முறைகேடுகள் செஞ்சிருக்கிறதா ஸி.ஏ.ஜி. அறிக்கை வெளியிட்டிருக்குதாமே? 



பிரதமர் : ஆமாங்க. 2-ஜி ஊழல் புகாருக்கு ‘பா.ஜ.க. ஆட்சியிலேயே ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்தது’ன்னு பதில் சொன்னோம். கல்மாடியை நியமனம் பண்ணதே வாஜ்பாய் அரசுதான்னு பதில் சொல்லிட்டோம். ஸி.ஏ.ஜி. அறிக்கையில் ஷீலா தீட்சித் பெயர் எங்கும் குறிப்பிடப்படவில்லைன்னு பதில் சொல்லிட்டோம். ஏன்னா அறிக்கையிலே டெல்லி முதல்வர்னுதான் இருக்குது. இந்த ஆதர்ஷ் சொஸைட்டி ஊழலுக்குத்தான் என்ன பதில் சொல்றதுன்னு தெரியலை.

சோனியா : நல்லா விசாரிச்சுப் பாருங்க. பா.ஜ.க. ஆட்சியிலேதான் அந்த சொஸைட்டிக்கு ‘ஆதர்ஷ்’னு பேர் வெச்சாங்கன்னு தகவல் கிடைச்சா கூடப் போதும். அதை வெச்சு எதிர்க் கட்சிகளை அடக்கிடலாம். சரி. அதை விடுங்க. மாயாவதி லாலுவாலே பிரச்சனை ஒண்ணும் இல்லையே..?

பிரதமர் : எப்படிங்க பிரச்சனை வரும்? அவங்க அரசியல் நடவடிக்கைகளைத்தான் நம்ம ஸி.பி.ஐ. உன்னிப்பா கவனிச்சிட்டிருக்குதே. இன்னொரு நல்ல விஷயம்ங்க. ஜெகன்மோகன் சொத்துக் குவிப்பு சம்பந்தமா ஸி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்ய ஆந்திர ஹைகோர்ட் உத்திரவு போட்டிருக்குது. கூடிய சீக்கிரம் அவரையும் நம்ம கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துடலாம்.

சோனியா : இந்த சாதனைகளுக்கு என்ன காரணம்னா, 2ஜி விவகாரத்தை சுப்ரீம் கோர்ட் கண்காணிக்குது. ஆனா மத்த விவகாரங்கள் நம்ம கண்காணிப்புலே நடக்குது. கேட்க மறந்துட்டேன். 2ஜி வழக்கு எந்த அளவிலே இருக்குது?

பிரதமர் : அதை ஏன் கேக்கறீங்க? 2ஜி ஒதுக்கீடு பற்றி பிரதமருக்கும் சிதம்பரத்துக்கும் தெரியும்னு, ராசா சுப்ரீம் கோர்ட்லேயே சொல்லிட்டாரு.

சோனியா : அவ்வளவுதானே சொன்னாரு? வேறே ஒண்ணும் சொல்லிடலையே?

பிரதமர் : பயப்படறதுக்கு ஒண்ணும் இல்லைங்க. தி.மு.க. – காங்கிரஸ் உறவு தொடரும்னு சமீபத்திலே கூட தி.மு.க. தீர்மானம் நிறைவேற்றியிருக்குது. தி.மு.க.விலே இன்னும் நாலு பேரைக் கைது பண்ணாக் கூட கலைஞர் தரப்பிலேர்ந்து பிரச்சனை எதுவும் வராது. இருந்தாலும் 2-ஜி ஊழல், காமன்வெல்த் ஊழல்களால் நாட்டுக்கே கெட்ட பெயர்னு கபில் சிபல் கூட பேசியிருக்காரு... 



சோனியா : அப்படியா? கேக்கறதுக்கே ரொம்ப ஆறுதலா இருக்குது. நான் கூட நம்ம ரெண்டு பேராலேதான் நாட்டுக்கு கெட்ட பேரோன்னு நினைச்சுக்கிட்டிருந்தேன். ஆனா யோசிச்சுப் பார்த்தா, ஊழலை சுப்ரீம் கோர்ட் விரிவா அலசிப் பாக்கறதாலேதான் நாட்டுக்கு இவ்வளவு கெட்ட பேர்னு தோணுது.

பிரதமர் : ஆமாங்க. நம்பிக்கை வாக்கெடுப்பிலே எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுத்த வழக்குலே கூட, டெல்லி போலீஸ் அரைகுறை விசாரணை நடத்தினதாக சுப்ரீம் கோர்ட் கண்டிச்சிருக்குது.

சோனியா : அப்படியா? யாரைக் கேட்டு டெல்லி போலீஸ் அந்த அரையளவு விசாரணையை நடத்தினாங்க? மொதல்லே அதை விசாரிங்க.

பிரதமர் : அப்புறம் ஒரு முக்கியமான விஷயம். அப்ஸல் குருவுக்கு மரண தண்டனையை உறுதிபடுத்தி, ஜனாதிபதிக்கு உள்துறை அமைச்சகம் பரிந்துரை அனுப்பியிருக்குது.

சோனியா : குற்றம் நடந்து இன்னும் பத்து வருஷம் கூட ஆகலையே. அதுக்குள்ளே என்ன அவசரம்? நம்ம மதச்சார்பின்மைக் கொள்கை மேலே யாருக்காவது சந்தேகம் வந்துட்டா என்ன பண்றது? சரி, பண வீக்கம் இப்ப எவ்வளவு உயர்ந்திருக்குது?

பிரதமர் : பண வீக்கம் 8.5 சதவிகிதம் அளவுக்கு உயர்ந்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாதுன்னு பிரணாப் முகர்ஜி கூட கோபமாப் பேசியிருக்காரு.

சோனியா : ஏத்துக்க முடியாதா? யாரை எச்சரிக்கிறார்? பா.ஜ.க.வையா? 



பிரதமர் : பா.ஜ.க.வை எச்சரிக்கலை. பண வீக்கத்தைத்தான் எச்சரிக்கிறார்னு நினைக்கிறேன். அப்புறம், இந்த அன்னா ஹஸாரே பிரச்சனைதாங்க பெரிய தலைவலியா இருக்குது. அவர் கோரிக்கைகளை ஏத்துக்கிட்டு, லோக்பால் அமைப்புக்கு அரசு பிரதிநிதிகளாக ராசா, கல்மாடி, க்வாட்ரோக்கி, சிபுசோரன், மதுகோடாவை நியமிச்சா அவரை அடக்க முடியுமான்னு ஒரு யோசனை இருக்குது.

சோனியா : நல்ல யோசனைதான். அதுக்கும் அவர் அடங்கலைன்னா இன்னொரு வழி இருக்குது. நானே அவருக்கு ஒரு லெட்டர் எழுதி அவரை வழிக்குக் கொண்டு வரேன்.

பிரதமர் : எப்படி?

சோனியா : ‘பா.ஜ.க.வும் ஆர்.எஸ்.எஸ்.ஸும் தூண்டி விட்டு, ரம்ஜான் மாதத்தில் உண்ணா விரதம் இருப்பது நியாயமா? சிறுபான்மையினர் வருத்தப்பட மாட்டாங்களா? ஜனவரி 26 குடியரசு தின விழா முடிஞ்சதும், 27-ஆம் தேதி நீங்க உண்ணாவிரதம் தொடங்கினா, நானும் உங்களோடு உண்ணாவிரதம் இருந்து ஊழலை ஒழிக்கத் தயார்’னு எழுதறேன். உடனே எனக்கு நன்றி தெரிவிச்சு உண்ணாவிரதத்தை ஒத்தி வெச்சுடுவார். 

My response to above with the original follows the original article here:




Readers’ response starts here (predominantly interesting responses including mine extracted here). 

Pun intended, no offense meant to anyone – a honest disclaimer.

Singai Sivas 
//பிரதமர் : யெஸ் மேடம்! ராகுல்தான் இன்னும் பிரதமராகச் சம்மதிக்கலையே. அப்ப நான்தானே பிரதமர்?  
 
சோனியா : ராகுல் உங்களை மாதிரி இல்லை. தன் விஷயத்திலே தானே முடிவெடுக்கணும்னு ஒரு பிடிவாதம். அதிருக்கட்டும்.//  
 
நம்ம உடான்ஸ்:  
 
இந்தத் தொலைபேசி உரையாடல் முடிந்தபின் மன்மோகன் சற்று நேரம் சுதந்திரம் கிடைத்த இடைவெளியில் தனக்குள் யோசிக்கிறார். 'அடடே, பிரதமர் பதவி பற்றியும் ராகுலைப் பற்றியும் கேட்டதற்கு மேடம் இப்படிச் சொல்லிவிட்டாரே, அவர் சொல்வது உண்மைதானோ? நமக்கு சொந்தமாக முடிவெடுக்கத் தெரியலையோ' அய்யஹோ என் செய்வேன், பரம்பொருளே' என்று கீழ்க்கண்டபடி சிலாகிக்கிறார்/புலம்புகிறார் (ஏதோ ஒரு திரைப்படத்தில் வரும் பழைய பாடல் நினைவுக்கு வந்து தொலைக்கிறது!).  
 
"
நம்ப முடியவில்லை..............வில்லை.............வில்லை.........  
அவளா சொன்னாள்? இருக்காது, அப்படி எதுவும் இருக்காது, இருக்கவும் கூடாது,  
நம்ப முடியவில்லை............வில்லை...........வில்லை............"
Yesterday, 08:17:36
– Like – Reply – Delete
http://js-kit.com/avatar/gxpA99f0jKlohF_DgthroT-24x24.png
Singai Sivas 
இந்த 'வில்லை'க்கு மாற்று கூட உண்டு. அப்படிப் புலம்பிக்கொண்டே வில்லையை (மாத்திரையை) தேடுகிறார், ஆறுதலும் உறக்கமும் வேண்டி, எப்பூடி!!!
Yesterday, 08:20:51
– Like – Reply – Delete
http://js-kit.com/avatar/gxpA99f0jKlohF_DgthroT-24x24.png
N.S.M. Shahul Hameed 
சிவாஜி படத்துல சோகப்பாட்டு வந்தாலும் சில படங்களில் திருப்புமுனை ஏற்பட்டு ஜாலியாகவும் கதாநாயகனுக்குப் பெருமையாகவும் முடியும்.  
 
அந்த மாதிரு ஒரு திருப்பம், இருக்கும் உண்மைகளை நாட்டுக்கு எடுத்து  
 
"
பாரு பாரு நல்லா பாரு  
பயாஸ்கோப்பு படத்தை பாரு  
நல்லாவே நிமிர்ந்து பாரு - நம்ம  
நாட்டுப்பணம் போண கணக்கை  
சரியாக எண்ணிப்பாரு !" பாடிக்காட்டிவிட்டு ஒரு மாபெரும் வீரனைப்போல் பதவித்துண்டை தூக்கி எறிந்துவிட்டு சில காலம் திகாரில் தங்கவும் தயங்கமாட்டேன் என்று அறிவித்துவிட்டு வீடு நோக்கி பீடு நடை போட்டாரானால், யுக யுகத்திற்கும் அவர்தான் நவீனகால இந்தியாவின் கதா நாயகன்!.
Yesterday, 15:23:35
– Like – Reply
http://js-kit.com/avatar/gxpA99f0jKlohF_DgthroT-48x48.png
casbbalchandhar, Bangalore 
All observations made by the above friends are simply supurb
Yesterday, 20:06:03
– Like – Reply
http://js-kit.com/avatar/gxpA99f0jKlohF_DgthroT-48x48.png
Singai Sivas 
இக் கட்டுரை தொடர்பாக நம்ம (என்) உடான்ஸ் தொடர்கிறது. பெருவாரியான காட்சிகளை 'இன்செப்ஷன்' ஆங்கிலத் திரைப்படத்தில் வருவதுபோல் கனவுக்குள் கனவு, கனவுக்குள் கனவுக்குள் கனவு என்கிற ரீதியில் புரிந்துகொண்டு படித்தால் ஏதோ சொல்ல வருகிறேன் என்று புரியும். புரியாதவர்களுக்கு நான் வேறு எதுவும் சொல்லத் தோன்றவில்லை.  
காட்சி 1  
இந்த தொலைபேசி உரையாடலுக்குப் பின் சோனியா சற்றே யோசிக்கிறார். பாவம், இந்த சிங்ஜி, கிட்டத்தட்ட 8 வருடங்களாக நம்மிடம் வெகு விசுவாசமாக மறு பேச்சு, விவாதத்திற்குக்கூட எதிர்பேச்சு என்கிற லாவணி பாடாமல் 'தான் உண்டு, தன் வேலை உண்டு' என்று இருக்கிறார். நாம் வேறு இப்போது ஊரிலில்லை, நம் பாரம்பரிய சொத்தின் (இந்தியத் திரு நாடு) நிர்வாக அதிகாரி என்கிற முறையில் அவரிடம் நாம் இத்தனை கடுமை காட்டியிருக்க வேண்டியதில்லை.  
நம் இளவரசர் வேறு திருமணம் கூட செய்யாமல் நாட்டுப் பணியில் தன்னாலான கடமையைச் செய்து வருகிறார்; இளவரசர் அரியணை ஏகும் நாள் வெகு தூரத்திலில்லை, அரியணை அவருக்குத் தானாகவே கிடைக்க வேண்டும், நாமோ அல்லது இளவரசரோ ஏதோ சொல்ல அல்லது செய்யப் போக அது விபரீதமாகி, ஒரு அவசர கதியில் சிங்ஜி நிர்வாகப் பதவியை தூக்கியெறிந்து விட்டால், அதே அவசர கதியில் இளவரசர் அரியணை ஏறும் அவசியம் நேரிடும். பின், நாட்டு மக்கள் என்ன நினைப்பார்கள்? அவர்கள் நினைப்பது இருக்கட்டும், இந்த சிங்ஜி என்ன நினைப்பார் 'தன் விசுவாசத்தின் அளவையும் வீர்யத்தையும் ராணி புரிந்துகொள்ள மறுக்கிறாரே' என்று இளவரசர் அரியணை ஏறும் நேரத்திலோ பிறகோ சிங்ஜியும் அவர்தம் குடும்பத்தினரோ தவறாகப் புரிந்து கொண்டு நமக்கு ஏதோ சாபம் கொடுத்து விட்டால் என்ன செய்வது? உடனே சிங்ஜியை கொஞ்சம் ஆறுதல் படுத்த வேண்டும். இன்று நீண்ட நேரமாகிவிட்டதால் நாளை காலை முதல் வேலையாக சிங்ஜியிடம் பேச வேண்டும் (என்று சோனியா உறங்கச் செல்கிறார்).  
(தொடரும்)
Today, 09:45:13
– Like – Reply – Delete
http://js-kit.com/avatar/gxpA99f0jKlohF_DgthroT-48x48.png
Singai Sivas 
(தொடர்கிறது)  
 
காட்சி 2  
மன்மோகன் கவலையோடு வில்லைகளையும் சிறிது பாலையும் அருந்திவிட்டு உறங்கச் செல்கிறார் (இங்கேதான் டெலிபதி ஆம்னிபதி விசுவாசியோபதி முதலாளியோபதி வேலை செய்கிறது).அங்கே சோனியா உறங்கச் செல்கிறார், இங்கே சிங்கும்.  
 
இனி வருவது (மன்மோகனின் கனவு):  
சோனியா பாடுகிறார் (கற்பகம் திரைப்படத்தில் நாயகனை ஆறுதல் படுத்த நாயகி பாடுவதாக வரும் பாடல் தொனியில் அறிக).  
 
மன்மோகனே அழலாமா? கண்ணீரை விடலாமா?  
என்னடிமையாய் நீ இருக்க, உன் தலைவியாய் நானிருக்க‌  
ம்ன்மோகனா, மன்மோகனா ?  
 
சிங்ஜி சற்றே உறக்கம் கலைந்து 'என்ன நடக்கிறது' என்று ஆசுவாசித்து, பால்கனி வரை சற்று உலாத்தி விட்டு சிறிது தண்ணீர் அருந்திவிட்டு மீண்டும் உறங்கச் செல்கிறார் (அவர்தம் கனவு தொடர்கிறது).  
 
சோனியா பிரிதொரு பாடல் பாடுகிறார்:  
 
மயக்கமா, கலக்கமா,  
மனதிலே குழப்பமா,  
வாழ்க்கையில் நடுக்க‌மா?  
 
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்  
வாசல் தோறும் வேதனை இருக்கும்  
வந்த துன்பம் எது வந்தாலும்  
வாடி நின்றால் ஓடுவதில்லை  
வாடி நின்றால் ஓடுவதில்லை  
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்  
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்  
 
(
மயக்கமா)  
ஏழை மனதை மாளிகையாக்கி  
இரவும் பகலும் காவியம் பாடி  
நாளைப் பொழுதை இறைவனுக்களித்து  
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு  
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு  
உனக்கும் கீழே உள்ளவர் கோடி  
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு  
 
(
மயக்கமா) (மயக்கமும் கலக்கமும் தொடரும்)
Today, 09:56:09
– Like – Reply – Delete
http://js-kit.com/avatar/gxpA99f0jKlohF_DgthroT-48x48.png
Singai Sivas 
காட்சிகள் 2, 3, 4 என்று இவர்களின் வாழ்க்கையில் கால ஓட்டத்தில் ஏதேதோ நடந்து மன்மோகன் பதவியிழந்து பரிதவிக்கிறார். இளவரசர் அரியணைஇ ஏறி ஆட்சி பீடத்தில் அமருகிறார், நாட்டு மக்களுக்கு தன் நல்லாட்சியையோ பொல்லாட்சியையோ தர முயற்சிக்கிறார், நாம் அந்த 2ஜி, 3ஜி, காமன்வெல்த், ஆதர்ஷ் இன்ன பிற விளையாட்டுகளுக்குள் போகப்போவதில்லை, அது தற்போதைய ஆட்சியாளர்களின் பாடு, தலைவலி.  
 
நம் சிந்தனையெல்லாம் மன்மோகன் மற்றும் சோனியா பற்றியது.  
 
காட்சி 12:  
 
அப்போதுதான் ஒபாமாவின் கருத்தாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்திலிருந்து ஒரு தகவல் வருகிறது. அதாவது உலக வங்கியின் தலைவர் பதவிக்கு நிர்வாக அனுபவமும், பொருளாதார, நிதி மேலாண்மை தொடர்பான அனுபவமும், இந்தியா போன்ற ஒரு பெரும் நாட்டில் பல்வேறு பதவிகளை வகித்தவரும் பிரதமராக இருந்து அவர் ஆற்றிய சீரிய பணிகளைக் கண்டு அமெரிக்க அதிபர் உலக வங்கியின் தலைவர் பதவிக்கு மன்மோஹனே சரியான நபர் என்று கருதுவதாகவும் இன்ன பிற ஐ. நா. சபை அங்கத்தினர்களின் அனுமதியையும் அங்கீகாரத்தையும் தான் பார்த்துக்கொள்வதாகவும் மன்மோஹன் தயாரா என்று கேட்டுச் சொல்லுமாறு சோனியாவிடம் சொல்கிறார்கள். சோனியா ராகுலிடம் ஆலோசிக்கிறார். ராகுலும் 'பெரும் முட்டுக்கட்டை விலக நேரம் கனிந்துவிட்டது, பெரிசு ரொம்பவே நொந்துவிட்டார், அவரை நாம் இந்தப் பணியை ஏற்கச் சொல்வோம்' என்று அவரும் சம்மத்திவிடுகிறார். சோனியாவும் உடல் நிலை, ஓய்வு இத்யாதி காரணமாக அமெரிக்காவில் சில காலம் இருக்கலாம், என்று முடிவு செய்து இருவரும் அமெரிக்கா செல்கிறார்கள். செல்லும் வழியில் சுவிட்சர்லாந்தில் இறங்கி ஓரிரு நாட்கள் ஓய்வெடுக்க முடிவு செய்கிறார்கள்.  
 
 
இருவரும் இரவு உணவருந்திவிட்டு தத்தம் மருந்து மாத்திரைகளை அருந்திவிட்டு உறங்கச் செல்கிறார்கள்.  
(தொடரும்)
Today, 10:08:49
– Like – Reply – Delete
http://js-kit.com/avatar/gxpA99f0jKlohF_DgthroT-48x48.png
Singai Sivas 
காட்சி 13 (சிங்ஜி கனவில் அவரே பாடுகிறார், நாயகன் ‍ நாயகி டூயட் என்று நினைக்க வேண்டாம், ஒரு விதமான சேர்ந்திசையாக அறிக).  
 
(MMS)
மயக்கமென்ன இந்த மௌனம் என்ன  
மணி மாளிகைதான் கண்ணே (மணி மாளிகை = உலக வங்கி)  
 
 
(MMS)
அன்னத்தைத் தொட்ட கைகளினால் (அன்னம் = உலக வங்கிப்பதவி)  
மதுக் கிண்ணத்தை இனி நான் தொடமாட்டேன் (மதுக்கிண்ணம் = இந்திய அரசுப்பதவி எதுவும்)  
 
(SG)
க‌ன்ன‌த்தில் இருக்கும் கிண்ண‌த்தை எடுத்து  
ம‌து அருன்தாம‌ல் விட‌ மாட்டேன் (ம‌து = ஏராள‌மான‌ நிதி ஆதார‌ங்க‌ள்)  
 
(MMS)
உன்னையல்லால் ஒரு தலைவரை(தலைவியை) இனி நான் உள்ளத்தினாலும் தொட மாட்டேன்  
 
(SG)
உன் பதவி இருப்பது என்னிடமே அது உயிர் போனாலும் தர மாட்டேன்  
(மயக்கமென்ன) (தொடரும்)
Today, 10:23:20
– Like – Reply – Delete
http://js-kit.com/avatar/gxpA99f0jKlohF_DgthroT-48x48.png
Singai Sivas 
காட்சி 14 ‍ நியூ யார்க்கில் சிங்ஜி பதவியேற்றபின் இருவரும் மாலைச் சிற்றுண்டி உட்கொண்டுவிட்டு சற்றே காலாற நடக்கிறார்கள் (கடற்கரையோரமாக) நியூ யார்க்கில் கடற்கரை உண்டா இல்லையா என்கிற விவாதத்திற்குள் நாம் போகவேண்டாம், கனவுதானே, தமிழ்னாட்டில் ஏதோ ஒரு குக்கிராமத்தில் இருக்கும் ஜோடிகளே நொடிப்பொழுதில் சுவிட்சர்லாந்திலோ நியூஜிலாந்திலோ துருக்கியிலோ டூயட் பாடுவதை ஏற்றுக்கொண்ட தமிழ்கூறும் நல்லுலகில் நாமும் ஓர் அங்கம் என்கிற டிஸ்கிளைமரோடு இந்தக் கனவுப் பாடலோடு என் உடான்ஸ் நிறைவடைகிறது).  
 
 
Happy indru mudhal happy  
Happy indru mudhal happy  
koAdai mazhai megathai kandu  
aadum mayile vaa  
aadi varum thogai kaiyil  
moodum azhagey vaa  
thuNai engey idho ingey  
sugam engey ithO ingey  
ahahhahaaaaaaaaaa  
Happy indru mudhal happy  
Happy indru mudhal happy

No comments:

Post a Comment