Tuesday, September 13, 2011

உடை உடை எல்லாம் உடை!!

Referring to below blog post by Uthaya Suriyan, I had responded as under:

This post is partly an extract from that blog, and the rest my own further thoughts that I felt as a continuum here (blogged instead here).
http://pusuriyan.wordpress.com/2011/07/29/%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%81/#comment-281


  1. 1) அடப் போங்க சார், ச்சும்மா பொழுதுபோகாமல் இரு வேலைகளுக்கு இடையே வேறு என்ன செய்யலாம் என்று தற்செயலாக உங்கள் பதிவுகளை வேறு வேறு தலைப்புகளில் வலையுலா செய்துகொண்டிருந்ததில் இந்தப் பதிவும் என் கண்ணில் பட்டது. என்னை சற்றே என் பாணியில் கதைக்கத் தூண்டிவிட்டுள்ளீர்கள்.
    கலாசாரம், நாகரீகம், பண்பாடு இத்யாதிகளை மீறி யோசித்ததில்:
    ஒரு ஊரின் அல்லது பிரதேசத்தின் உடை மற்றுமொரு பிரதேசத்தில், ஏன் வேறு நாட்டில் கூட வெவ்வேறு பார்வைகளில் பார்க்கப்படுகிறது.
    13 14 அவகைகளுக்குள் பெண்கள் (சிறுமிகள் எனலாமா?) மிடி அல்லது குட்டைப்பாவாடை என்று போடுவார்கள். நம் ஊரில் அது சாதாரணம், குற்றமாகக் கருதப்படாது, பொதுவாக எந்த ஊரிலும். சிங்கப்பூரில் சிறுமி, குமரி, வாலைக்குமரி, பணிக்குப்போகும் பெண்கள், முதிர்கன்னிகள் என்று வயது பிராயம் வித்தியாசமில்லாமல் அணிவது சகஜமானது (இலங்கை அல்லது சீன மரபு வழியாக இருக்கலாம்.
  2. 2) நமக்கு அருவருப்பாகத் தெரிவது பிறதேசத்தவருக்கு அப்படித் தோன்றவேண்டும் என்று கட்டாயமில்லை. சிங்கையில் சிலர் அணிந்துவரும் உடைகளைக் கண்டால் நமக்கு வாயல்ல, கண்ணல்ல, முழு அங்கமுமே கூசும், அதுவும் உள்ளாடை என்று ஒன்று உள்ளது என்று இந்தப் பெண்களுக்கெல்லாம் தெரியாதா ? இல்லை, ஏன் இந்த கள்ளாடைப் பட்டவட்டமான பரிவர்த்தனம் என்று கேட்கத் தோன்றும், எம்.ஆர்.டி அல்லது பேருந்தில் செல்லும்போது பலவமயம் நான் எனக்குள் கேட்டிருக்கிறேன். இவர்களுக்கெல்லாம் கூச்சம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பார்களோ என்று தோன்றும். கூடவே நம்மூர் பெண்களின் குணாதிசயத்தை ஒப்பீடு செய்யும் மனது. என்னதான் நம் பெண்கள் பெருவாரியாக முழுவதும் தன்மையாக, பண்புடன் ஆடை அணிந்துவந்திருந்தாலும், எதிரே ஓர் ஆள் வருகிறார் என்றதும் (அவரது வயது வித்தியாசம் பாராமல்) நம் பெண்கள் முதலில் செய்வது முந்தானையை அல்லது தலைப்பை அல்லது துப்பட்டாவை கொஞ்சம் சரிசெய்வார்களே, இதெல்லாம் காலங்காலமாக நமது இரத்தத்தில் ஊறியது. நீங்கள் கேட்கலாம், தற்காலப் பெண்கள் இதுமாதிரி இருக்கிறார்களா என்று.
  3. 3) நாகரிக உலகில் உடை என்பதில் நகரம், கிராமம், சிற்றூர், பேரூர், மா’ நகரம், நாடு கடந்த வித்தியாசமில்லாமல் தேச எல்லைகளுக்குட்படாத இந்தக்காலத்துப் பெண்கள் துணிவிஷயத்தில் துணிந்துசெய்யத் துவங்கியுள்ளதை நான் இப்படிப் பார்க்கிறேன்.
    இதை ஒரு ந‌வீன‌ உடை ஆத்திச்சூடி என‌லாமே, (அவ்வை ம‌ன்னிப்பாராக‌!!).
    1.கலாசாரம் என்பதெல்லாம் உடை
    2.பண்பாடு, கட்டுப்பாடு, எல்லாம் உடை
    3.சமூகக் கோட்பாடுகளை உடை
    4.சமயக் கோட்பாடுகளை உடை
    5.நாகரிகமாக அணிவதே உடை(அது அனாகரிகமாக இருப்பின், காண்பவர் குற்றம்)
    6.அம்மா அத்தை சித்தி பெரியம்மா சின்னம்மா, பாட்டி, முப்பாட்டி அணியாததெல்லாம் உடைத்தெறிந்து உடை விஷயத்தில் எதையும் உடை
    7.உடை உடை எல்லாவற்றையும் உடை
    8.உடை உடை எதுவேண்டுமானாலும் துணியாக (கைக்குட்டை கூட உடைதான்) அணியத் தயங்காமல் உடுத்து, உன் உடை
    9. உடைதனில் துன்பம் உடைத்தாயின் உன் தாயின் நினைவில் மாற்றான் கருத்தை உடை
    10. மரபை உடை
    11. உடை விஷயத்தில் எந்த மண்ணாங்கட்டி என்ன சொன்னாலும் அந்த மண்ணாங்கட்டிகளை உடை உடை என்று உடை
    12. தடையில்லை எமக்கு எது உடை என்பதில், இடையில் உடையென்று ஒன்று இல்லாதிருப்பினும் காண்பவன் கருத்தினை உடை, முடிந்தால் அவன் முதுகெலும்பை உடை
    13. லாஸ்ட் பட் நாட் தி லீஸ்ட்: இது நம் உடம்பு (மெய்). மெய் மெய் இது பொய் பொய் என ஆன்றோர் என்னதான் சொன்னாலும் மெய்யைப் பேணுவதில் எத்தனைப் பொய்கள் வேண்டுமானாலும் செய், அதில் இடையில் உடை என்பதே இல்லாமல் இடையிடையே உடை இருப்பினும் இல்லாவிடினும் உடை என்பதில் எதையும் உடை


4) சூரியன் சார், கடந்த பதிவுகளில் அவ்வையின் ஆத்திச்சூடியை ‘மிமிக்’ செய்ய முயன்றேன், ரசித்தீர்களா தெரியலை?
கூடவே, கொஞ்சம் அதீத உரிமை எடுத்துக்கொண்டு சற்றே வள்ளுவனையும் கொஞ்சம் அகத்தையும் கொஞ்சம் புறத்தையும் (அக நானூறு, புற நானூறு) சீண்டிப் பார்த்தேன், கற்பனைக்குதிரையை ஓட்டினேன், உடை தொடர்பாக, என் எண்ண ஏட்டில் வந்த விடைகள் இங்கே. உரிமை மீறலுக்கு வருந்துகிறேன் (தங்கள் வலைப்பதிவில் சற்றே மிகையாக என் வலைப்பதிவும் கூட்டணி பெற விஞ்சுகிறதோ என்று ஐயம் வரலாம், இதை இனி குறைத்துக்கொள்ள முயலுகிறேன்).
//எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு//
நம் நாகரிக யுவதிகள் இக்குறளைச் சற்றே புலம்பெயர்த்து தவறாகப் புரிந்து கொண்டார்களோ?
நாம் அணியும் உடை கண்ணுற்று யார் என்னென்ன சொல்கிறார்கள்? யார் ஆதரிக்கிறார்கள்? யார் குற்றப்பத்திரிகை வாசிக்கிறார்கள்? பாராட்டுக்கள் பலவிதமா? ஷொட்டுக்கள், திட்டுக்கள், குட்டுக்கள் எவை மிகுதியாக உள்ளன?
ஷொட்டுக்கள் டானிக் (குளிகை) மாதிரி, மிகையானாலும் அன்றிலும், அப்படியே விட்டுவிடலாம்.
குட்டுக்கள் மிகையானால் காண்பவனை எப்படிக் குதறலாம்?
திட்டுக்கள் மிகையானால் தீவிரமாக நடவடிக்கை தேவை. என்னென்ன செய்யலாம்?

குட்டுபவனை குர்பானி செய்து குயின்ஸ்லாந்துக்கு அனுப்பலாம்
திட்டுபவனை தீவிரவாதியாக்கி திகாருக்கு அனுப்பலாம். 


ஷொட்டுபவனில் ஒருவனைத் தேர்ந்தெடுத்து ஒரு வாரம் உடையில்லாமல் ஷெய்சல்ஸ் தீவில் உல்லாசமாக உற்சாக பானமேற்றி, அவனிஷ்டப்படி ஒய்யார நடை போட்டு உடைதனில் ஊழல் செய்யாமல் மெய்யாலுமே மெய்வழிச்சாலை நோக்கி அரங்கேற்றலாமே?


மெய்வழிச்சாலைக்குள் பயணமானால், பயணத்தை எந்த மொழியில் பேணிப்பேணி உல்லாசம் காணுவது? 


இருக்கவே இருக்கிறது நம் தாய்மொழி நற்றமிழ். 


சற்றே செந்தமிழில் உடை பற்றி தமிழை உடைக்காமல் உலா வரலாமா?
***********************************************************************************




எச்சரிக்கை: 
தமிழ் இலக்கணம், எதுகை, மோனை, பண், எண் சீர் விருத்தம், சந்திப்பிழை, சந்தப்பிழை, இன்னபிற சொற்குற்றம் பொருட்குற்றம் மன்னிக்கப்படுவதாக!! 


========================================================================



தேம‌துர‌த் த‌மிழோசை அலையோசையில் மெல்லிசையாய் ஆங்கொலிக்க‌
தூம‌துர‌க் குயிலோசை ப‌ண்ப‌லையில் இன்னிசையாய் ஈங்கொலிக்க‌

பள்ளு தமிழில் விண்ணதிர பல்லாங்கு நீ பாட‌
எள்ளு தமிழில் மண்ணதிர பொல்லாங்கு நான் புரிய‌

துள்ளு தமிழில் தித்திக்கும் தேன்பாகை நீ அளிக்க‌
தெள்ளு தமிழில் எத்திக்கும் தேனருவியில் நான் குளிக்க‌




பைந்தமிழாம் பைங்கிளி பண்பாட அருகிருக்க 
பூந்தமிழாம் பொன்னாடை எதற்கு ? பையப்பைய விலக்கு!!




செம்மொழியாம் தமிழ் இருக்க செவ்வாடை எதற்கு?
நற்றமிழாம் நாவிருக்க நாணலாடை எதற்கு?









கற்ற தமிழ் நினைவிருக்க கந்தலாடை நமக்கெதற்கு?
உற்ற தமிழ் ஒருங்கே கவி நடம்புரிய கூந்தலாடை உனக்கெதற்கு?





சந்தத் தமிழ் சிருங்காரமிட இடையிடையே
சந்தித் தமிழ் உடைச் சேதாரம் நமக்கெதற்கு?




செம்மொழியில் சேதாரமில்லாமல் ஞானப்பால் நான் ப‌ருக‌
மும்மொழியில் கோசார‌மில்லாம‌ல் ஏன‌ப்பால் நீ போகிறாய்?


இசைத்தமிழ் ஆங்கொலிக்க இன்னிசை பாய்ந்தோட‌
விசைத்தமிழ் எம் மெய்பாட உன்னிசை ஓய்ந்தோட 


பாச‌த்தமிழ் நம் உடனிருக்க கனனிப் பஞ்சாடை நமக்கெதற்கு?
நேசத்தமிழ் நம் நாவிருக்க கன்னித் துள்ளலாடை உனக்கெதற்கு?





உற்ற‌ த‌மிழ் ந‌ம்மிடையே நாவூற‌, நாண‌லாடை ந‌ம‌க்கெத‌ற்கு?
பெற்ற‌ த‌மிழ் உன்னிடையே பேயாட்ட‌மாட, 
பெண்ணே நீ பொன்னாடை வில‌க்கு. 


இல‌ட்சிய‌ம் ந‌ம்மை இல‌க்கு நோக்கி ஈர்க்கும்போழ்து
உடை இல‌க்க‌ண‌ம் ந‌ம‌க்கெத‌ற்கு?


இல‌க்க‌ண‌த்த‌மிழ் எத்துணைதான் ப‌யின்றாலும் ச‌ற்றே
இல‌க்க‌ண‌ம் மீறுவ‌தில் உற்சாக‌ம் கொள்ளேன், க‌ண்ணே!!




பைந்தமிழில் பொழுதெல்லாம் பண்ணிசை நான் பாட 
பொன்னாடை நீ விலக்கினால் சேர்ந்திசையாகுமே கண்ணே!!




இயற்றமிழில் இழைந்தோடும் இன்னிசையில் 
உயற்றமிழில் நாம் பாடுவோமே பண்பாட்டின் பறையடி!!


பறையடிக்க மெய்யிடித்து மெய்வலிக்க மெய்யிழுத்து
கறையிடிக்க‌ பொய்க்காலில் பொய்வேஷம் போடுவோமே, 
மெய்யாலுமே மெய்வேஷம் அகற்றுவோமே!!


ஈன்றமிழில் அன்னை முலைப்பால் ஈகையிலே அவள் உடைவிலக்கி 
ஊன்றமிழில் அவள் மெய்வலிக்க நாம் தந்த சுமையை அவள் விலக்கினாளா?


ஈன்றமிழில் உந்தன் காமப்பால் ஊறையிலே உன் உடைவிலக்கி
ஊன்றமிழில் எந்தன் ஏமப்பால் நீ பருக நம் சுமையை யார் வில‌க்குவாரோ?



ஆதிமனிதன் ஆவலோடு ஆப்பிளை அருந்தினான், இங்கே
பாதிமனிதன் கூவலோடு உன் கன்னத்து ஆப்பிளை விருந்தோம்பினான்.

மீதிமனிதன் ஏவலோடு உன் மெய்வருத்தக் கூலி  எனக்கெதற்கு?
மீதிமனிதள் ஆவலோடு என் மெய்பருகக் கேலி உனக்கெதற்கு?

அருட்பாவை முன்னிருக்க மருட்பார்வையுடன் 
பொருட்பாவை என்னிலிருக்க மெய்ப்பாவை நீ பருகு!!

காமத்துப்பாலை நீ அருந்த மிச்ச சொச்சமுள்ள‌
காமத்துப்பாலை நான் அருந்த எச்சமிடாமல் ஏகடியம் யார் செய்வது?

விசைத்தமிழ் உந்தன் உள்ளீடே பாய்ந்தோட உன் செல்ல‌

வசைத்தமிழ் எந்தன் உள்நாவில் நடமிட, காண்போமே காதற் காவியம் !!



எண் சாண் உடம்பின் இணை சேர் பொருத்தம் முக்கியமா?
முன்பின் ஏன் இங்கே எண் சீர் விருத்தம், அவசியமா?


ஒரு ஊதாப்பூ மலரும் முன் கண் சிமிட்டுகிறது,
மறு ஊதாப்பூ மலர்ந்த பின் மெய் சிலிர்க்கிறது!!


ஒரு ஊதாப்பூ உதிரும்முன் உவகை கொள்கிறது,
மறு ஊதாப்பூ உதிர்ந்த பின் உலகை வெல்கிறது!!



ஒரு ஊதாப்பூ உலரும் முன் பேருண்மை காண்கிறது,
மறு ஊதாப்பூ உலர்ந்த பின் பேராண்மை உணர்கிறது!!








2 comments:

  1. இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். இது அனைவருக்கும் தேவையானது.நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம். சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.



    Please follow

    http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk (PART-1)

    (First 2 mins audio may not be clear... sorry for that)

    (PART-2) http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4

    http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo (PART-3)




    Online Books
    http://www.vallalyaar.com/?p=409


    Contact guru :
    Shiva Selvaraj,
    Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
    17/49p, “Thanga Jothi “,
    Kalaignar kudi-iruppu – Madhavapuram,
    Kanyakumari – 629702.
    Cell : 92451 53454

    ReplyDelete
  2. ஏமப்பால் என்பதன் பொருள் என்ன?

    ReplyDelete