Sunday, September 25, 2011

இலவசமாம் இலவசம்!!


அன்று: இலவசம் இல்லையேல் ஓட்டு இல்லை, ஓட்டு இல்லையேல், உதய சூரியன் 'உதைய' சூரியனாகத் தகித்தது!!

இன்று: இலவசம் 'இலை'வசம் இல்லையேல் ஓட்டு இலைக்கு இல்லை. ஓட்டு இல்லையேல், இலை உதிர்ந்துவிடும்!!

சூரியன் குளிர்ந்தாலும் குளிராவிட்டாலும், அதன் அக்கினிக்கணைகளை சற்றே விலக்கிக் கொண்டாலும் (வான்மழைக்கு வழிவிட்டு); இலை உதிர்ந்தாலும் தளிர்த்தாலும் காய்ந்தாலும் பழுத்தாலும் வான்மழை மெய்த்தாலும் பொய்த்தாலும் தாமரை மட்டும் ஏன் இங்கே மலரவே மாட்டேன் என்கிறதே? ஓ, தாமரை மலர நிறையவே 'தண்ணீர்' வேண்டும், சூரியன் சற்றே கருணை காட்ட வேண்டும்; தாமரைக்கு மாற்றாக இங்கே அல்லி கூட இல்லை, இருந்தால் சந்திரனின் கருணைப்பார்வையில் அல்லி கூட சிலவமயம் மலர வாய்ப்புண்டு!!
ஆனால், தமிழகத்தின் கொடுமை, (ராமச்)சந்திரனின் கருணையால் 'அல்லி'ராஜ்யம் அல்லவா நடக்கிறது?

சரி, மாற்று வழியாக, மக்கள் தன் கையே தனக்குதவி என்று பலவிதக் 'கை'களைத் துணைக்கு அழைத்தால் ஒவ்வொரு கையிலும் பலவித விரல்கள் தனித்தனிக் கைகளாக அல்லவா வருகின்றன? அந்தப் பொய்க்கைகள் ஒருங்கிணைந்து ஒரே கையாக வரும் நாள் இனியும் இல்லை, இருப்பினும், கையூட்டு இல்லாமல் கையில்லை.

சூரியனும் இலையும் தாமரையும் கையும் சரியில்லை; ஆங்காங்கே அவ்வப்போது ஓடும் பம்பரங்களும் யானைகளும் சிறுத்தைகளும் நாடகத்தின் போக்கை முற்றாகத் திசைமாற்றவே உதவுகிறதேயன்றி, பொது வாழ்க்கையில் மனிதன் வாழ இவை போதாது, தேவையுமில்லை!!

No comments:

Post a Comment