Showing posts with label Pithu. Show all posts
Showing posts with label Pithu. Show all posts

Sunday, July 19, 2015

ஒரு கதையின் காதை!!

Since 16th June 2015 from my Facebook wall:

ஒரு கதையின் காதை!!

இந்தக் கதைப்பாட்டுக்கு அல்லது பாடல்வழி கதைக்கு சூத்திரம் (Inspiration Indeed) வழங்கியவர் அன்பர் ஷங்கர் ராஜரத்தினம் (அவர்தம் மைன்ட் வாய்ஸ்: இன்னா சிவா, இப்பிடிக் கோத்து விட்டுட்டீங்களே, ஞாயமாரே?)

கதை கதையாம் காரணமாம், காரணத்தில் தோரணமாம், தோரணத்தில் ஊர்வலமாம், ஊர்வலத்தில் நாரணனாம், நாரணனின் மோகத்திலே நாயகனும் கிரிவலமாம்!! கிரிவலத்தில் நாயகன் தொலைந்தானாம் !!

தொலைந்தவனை கண்டெடுத்தவள் நாயகியாம்!! நாயகியின் நாயகன் இவனல்ல, ஆனால் இவன் மனதில் அவள்தான் நாயகியாம், நாயகியின் நாயகன் பின்னாளில் ஊடல் கொண்டானாம், கொண்டவனின் ஊடல் பேணா நாயகியோ நம் நாயகனின் தேறுதல் வார்த்தையில் மையலானாளாம், மையல் கொண்டபின் ஊடல் மறந்தாளாம், மறந்தவள் மறந்தவளாய் (தன்) நாயகனை மறந்தேதான் போனாளாம், போனவள் ஒரு நாளில் தன் தனயனைத்தான் கண்டாளாம், கண்டவள் கேட்டாள் பெற்றவன் கூற்றை நோக்கியதன் இடர் நிலை;

இடர் நிலை பொறாமல் கொற்றவனின் கருணை வேண்டி தன்னுயிர் ஈந்தாமலே ஈருயிர் ஓருடலாய் கொண்ட நாயகனைத் தேடிப்போனாளாம், போனவளை அவன் முகம் காணாமல் பகர்ந்தானாம் 'எங்கு வந்தாய்'? வந்தவளின் வாக்கினால் முகம் வாடி மாமனின் முகம் காண ஏகினானாம், கொண்டவளுடன்; கொண்டவளின் ஐயன் கூற்றை நாடி நிற்க கையறு நிலைகொண்டானாம், இடையில் நம் நாயகனும் அவ்விடம் வந்துசேர்ந்தானாம். 

சேர்ந்தவனின் கருத்தறிந்து பெற்றவனின் கூற்றை நிறுத்த நாயகி சிகிச்சை கொண்டாளாம், கொண்டவளின் நிலையறிந்து அவளைக் கொண்டவன் மனமிரங்கி ஊடல் போய் கூடல் காணா தேடலில் கலங்கினான், இலங்கை வேந்தன் போலத்தான். 

(கதையின் தேடல், தேடலின் கதை இன்னமும் தொடரும்)

Namma Chennai !! நம்ம சென்னை!!

Since June 2, 2015, from my Facebook wall:

Disclaimer: This is no religious or political post.

Walk down memory lane in Chennai.

I was just analyzing Chennai's landscape, specially South Chennai.

I just my journey from Tambaram towards Guindy by road or rail, alight at Guindy and exit by foot towards Raj Bhavan.

On my left is the SPIC tower, on my right is the new palatial ITC Chola Hotel, wow, what a vivid infrastructure, with all modern Swargapuri inside with the vast rooms for guests from every nook and corner of the world; convention halls and what not on earth?

Just look past the Guindy Industrial Estate on the left as well (a little away on the road is the St. Anthony (or whatever name) Church. What a place it was 30 years ago popularly known as Chinnamalai.

Courtesy the new Metro Rail Network and the on-going works, Guindy's landscape has really changed.

I don't fail to notice the new Ashok Leyland Tower, once it was an empty ground for a long time, before that what was there, at least, I have no clue. I know that place as an empty ground, I am not sure if the Facit Asia (Typewriter Company), by chance, Did I dream vividly having seen Facit Asia in that place? God knows. But I equally remember visiting on a consulting / auditing assignment trip to their Hosur Plant during 80s.

I take right with a target to cover entire route upto Adyar Bridge, if possible, the Lattice Bridge Road (if time permits), not sure, at this minute, as that's the territorial jurisdiction ofJayaraman Raghunathan . I better play down here, with due respect to the local veteran who has lived past several decades, where I have always been a visitor far far away at Avvai Nagar, Ganesh Nagar ad Rajaji Nagar (Thiruvanmiyur).

When I turn right at Sardar Patel Road, I don't miss Alexander Square, once a popular landmark, that has been overtaken by Ashok Leyland Tower opposite and the new ITC Chola, so literally speaking, Alexander gave way to Chola & Leyland.

I see the TNPL tower and the even more palatial Raj Bhavan. (I just casually overlooked the Velachery junction leading upto Tharamani on the far far right towards Southern corridor).

Due to the one way from Guindy towards Adyar taking you all the way upto Chinnnamalai and turn towards Raj Bhavan junction, you also tend to ignore the silent residential colony namely Srinagar Colony (what a quiet area to live in amidst an almost industrial belt), a posh locality deep within Guindy / Saidapet / Chinnamalai segment.

Just walk past Raj Bhavan (no-entry to common man though), what a green and lavish gardens out there, taken over by British Raj during our colonial past, only to be converted to Memorials, Children's Park and a vast IITM on the right and equally vast Anna University on the left. Having such two great institutions in the academic arena, our very own University of Madras had its little share too.

Then comes the illustrious memorials of some of the great souls who gave their life in our freedom fight, viz. Mahatma Gandhi, Chakravarthi Rajaji and our very own Kamaraj (does he have one memorial, or, is it L B Shastri, forgot really, I am too old to memorized my route, only to have passed that segment, just as recent as 2012 on a daily drive towards my workplace on OMR).

The doyen of modern day IT veterans for sure must have had their taste of Computing and Programming at our very own Tamil Nadu's pride Ramco is out there on your right. Opposite the Kendri Vidyalaya campus.

You just walk a bit and take a break and take a little bite of snacks and hot filter coffee @ Hot Chips and get ready to continue your journey.

Once a wide-looking Madhya Kailash Temple is now having a shrimph look rather shrink look paving way to Rajiv Gandhi Road (OMR) allowing commuters a free ride towards Raj Bhavan.

Here comes the Parakkum Rail (Kasturba Nagar and Indira Nagar Stations), on the OMR stretch, and Gandhi Nagar a bit further on the left.

If you have time, go deep interior towards Gandhi Nagar (behind the bus-terminal @ Adyar), where you would find several evangelical educational academies and premier (?) institutions in St. Michael Academy, and a few more.

Here comes JR's zone, lesser said is better to save my .... worth.

I don't recall any old landmarks there except the Adyar Gandhi Nagar Terminal on the left, couple of restaurants on the LB Road junction, some Koronet (Kerala restaurant if I remember right) and the A2B headquarters a bit further.

Oof, how can I miss the educational institutions within Adyar / Gandhi Nagar predominantly run by Karaikudi Chettiyar family or group of academic interests, it is their territory (Rani Meyyammai School chain).

I guess Sri Vidhya Mandir and Kendriya Vidyalaya somehow found their place, as against popular veterans and evangelical counterparts over there.

Don't forget the Kotturpuram bridge and the hutments, leading to Adyar and Thiru Mayilai in a way, you will find Shri Shirdi Sai Mandir if you drive past through the gullies and by-lanes of Kottupuram.

If you walk past, the infamous Aavin junction leading you towards Besant Nagar and Avvai Home region and the vast Sastri Nagar and Thiruvanmiyur on the other side of the spectrum.

I just think in a different dimension here. our first PM Jawaharlal Nehru was stopped at Guindy who once had his statue as a popular landmark when you enter the city from Airport, only to be forgotten and be sidelined near the Hindustan Engineering College old headquarters.

Nehru's kith and kin found their place predominantly once popularly known in his political Guru's name (Gandhi Nagar Kasturba Nagar area). Raj Bhavan is just a silent spectator giving room for its inmates every five or six years with their penultimate innings in life (sort of retirement benefit for popular veterans out there in New Delhi).

Somehow accommodating Shri Padmanabha, the big-brother, and the Madhya Kailash, Lord Kabaleeswar and Goddess Karpagambal are giving a sir-casting smile distancing themselves from these political or Geo-political takeover only to be supported by the academicians and Evangelical pastors.
The most commonly linking lifeline here is Sardar Patel Road.

Once not-so-popular industrial houses were there on that OMR stretch (how can we forget Rane Madras, Dynora factory and the the vast industrial factory near Thoraipakkam Karappakkam area (forgot that Anglo Name). This has lately been conquered by Information Technology giants (Ascendas Tharamani), all the way from Madhya Kailash upto Kelambakkam

Whenever passing through that OMR stretch, I used to wonder what happened to that factory (it was a PSU entity, it has faced the same fate as IIT Bangalore, Hindustan Photo-films, Ooty

Chennai is a typical example of New Delhi within Chennai in this Guindy-Adyar-Thiruvanmiyur region. The power-center is just far away on the Marina Beach corridor all the way upto Parry's corner on the distant far

South Chennai also resembles Kanyakumari-Trivandrum-Tuticorin segment to some extent.

செல்வமே!! செல்வமே!!

From my Facebook wall since 28th May 2015:

ஒரு சாமியாரிடம் ஜோஸ்யமோ குறியோ எதிர்காலம் குறித்த ஆரூடமோ கேட்கச் சென்ற பெண்ணுடன் ஒரு உரையாடல் (கற்பனைதானுங்கோவ்!!):

[பொழுது போகாமல் ஏதோ ஒரு சேனல் என்று மாற்றி மாற்றிப் பார்த்துக்கொண்டிருந்தபோது ஒரு சேனலில் வந்த காட்சியினை அடுத்து தோன்றிய கற்பனை. இதில் வரும் பெயர்கள் கொண்ட நபர்கள் தங்களைச் சொல்வதாகவோ தங்கள் பெயர்களை கிண்டல் நையாண்டி செய்வதாகவோ எடுத்துக்கொள்ள வேண்டாம், நேர்மையான டிஸ்கி!!]
========================================================
பெண்: சாமி, என்னை ஆசீர்வதிக்கணும்

சாமியார்: ஆயுஷ்மான் பவ!! தீர்க்க சுமங்கலி பவ!!

பெண்: சாமி, எனக்கு என்ன கேட்கறது எப்படிச் சொல்றதுன்னே தெரியலை

சாமியார்: சொல்லுங்கம்மா, என்ன கேட்கணும்? தயங்காம கேளுங்க. இங்க வந்திருக்கறவங்கள்ளாம் ஏதேதோ பிரச்சினை அது இது என்றுதான் வந்திருக்கிறார்கள். ஏதாவது தனியாக கேட்கணும்னா இவர்களை யெல்லாம் அனுப்பிவிட்டு உங்களை அப்புறமா பார்க்கிறேன். ஒரு ரெண்டு மணி நேரம் காத்திருந்தால் போதும். 

பெண்: அதுக்கில்லை சாமி, உங்களைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன். ரொம்ப நாளா வந்து ஆசீர்வாதம் வாங்கணும்னுதான், இது வரை சமயம் வாய்க்கலை, இன்றுதான் நேரம் கிட்டியது. 

சாமியார்: சரி, சங்கோஜப்படாம கேளுங்கோ. 

பெண்: அது வந்து, ரொம்ப நாளா எங்க குடும்பத்துல லட்சுமி கடாட்சமே இல்லை, மாற்றி மாற்றி ஏதாவது பிரச்சினை, கையிலே காசே தங்க மாட்டேன் என்கிறது. நீங்கதான் ஒரு நல்லாசி சொல்லணும். 

சாமியார் (கண்மூடி தியானம் செய்து சோழி உருட்டிப் பார்த்து சில நொடிகள் கழித்து): ஈஸ்வரோ ரக்ஷது!! நீங்கள் ரொம்பக் குழம்பியிருக்கீங்கம்மா, அப்படி ஒன்றும் பிரச்சினை இருக்கற மாதிரி எனக்குத் தெரியலையே. சொல்லப்போனா.............

பெண் (இடை மறித்து): மன்னிக்கணும் சாமி. பொருளாதாரப் பிரச்சினை கடன் மேல் கடன் எங்களை ரொம்பவே வாட்டுது, என்ன பண்றதுன்னே தெரியலை. 

சாமியார்: புரிகிறது அம்மணி. இருந்தாலும் நான் என்ன சொல்ல வர்ரேன்னா................

பெ: இல்லை சாமி, எங்கள் கஷ்டம் சொல்லி மாளாது, நீங்க எங்க வீட்டுக்கு வந்து ஒரு முறை பாதம் வைத்து ஆசிகள் கூறினால் எல்லாம் சரியாயிடும்னு தோணறது. 

சா: அது சரிம்மா, நான் அங்க வர்றது இருக்கட்டும், நீங்க இங்க இப்ப என்னை வந்து ஏதோ கேட்கணும், நான் ஏதோ சொல்வேன்னுதானே காத்திருக்கிறீங்க. என்னைப் பேசவே விடாம நீங்களே பேசறேளே?

பெ: இல்லை, இல்லை, சாமி, மன்னிச்சுக்கோங்க, எனக்கு இருந்த டென்ஷன்ல என்ன கேக்கறது பேசறதுன்னே தெரியலை. 

சா: சரி, புரியறது. சிறிது நான் பேச அவகாசம் கொடுங்கோ. கூடவே நான் கேட்கற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கோ போதும். நான் கேட்கக் கேட்க நீங்க பதில் சொல்லச் சொல்ல உங்களுக்கே புரியும், பிரச்சினை எது, தீர்வு எது என்று. 

பெண்: சரி சாமி, சொல்லுங்க. 

சா: (மறுபடியும் தியானித்து): எனக்கு நல்லாத் தெரியது, உங்கள் குடும்பத்தில் செல்வத்துக்கு குறைச்சலே இல்லை, இன்னும் சொல்லப்போனா துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி என்று அனைத்தும் ஒருங்கே ஒற்றுமையா ஒரு இடத்துல இருக்கான்னா அது ஒங்க வீட்டுல உங்க குடும்பத்துலன்னு பரிபூரணமாச் சொல்வேன். 

பெண்: என்ன சாமி சொல்றீங்க, அப்ப நான் பொய் சொல்றேனா?

சா: இல்லைம்மா. உங்கள் வீட்டில் மொத்தம் எத்தனை பேர், யார் யார் என்ன பண்றாங்க, அவர்கள் பெயர் கூட சொல்லுங்க. நிதானமா சிறிது யோசித்து, பொறுமையாச் சொல்லுங்க. (உதவியாளரிடம் அவருக்கு, அதாவது அந்தப் பெண்ணிற்கு , சிறிது தண்ணிர் கொடுக்கும்படி கண் ஜாடையாய் குறிப்பால் உணர்த்துகிறார்).


பெண் (சிறிது ஆசுவாசித்து,தண்ணீர் அருந்தியபின்) ): சாமி, எங்கள் குடும்பத்தில் என்னையும் சேர்த்து 14 பேர் இருக்கோம் சாமி. என் மாமியார், மாமனார், மைத்துனர் நாத்தனார், என் குழந்தைகள் ரெண்டு பேர் எல்லாரும் இருக்கிறோம்.

சா: அவர்கள் பெயர், என்ன தொழில் செய்கிறார்கள் என்று வரிசையாகச் சொல்லுங்க.

பெண்: சொல்கிறேன்

1) செல்வ நாயகம், என் மாமனார், ஓய்வு பெற்ற நீதிபதி
2) செல்வாம்பிகை, என் மாமியார், ஓய்வு பெற்ற குடும்ப நல அதிகாரி
3) செல்வம், என் கணவர், விவசாயம் (முழு நேரம்), மூத்தவர்
4) செல்வ கணபதி, எம்.எல்.ஏ (முதல் மைத்துனர்)
5) செல்வ நாயகி, ஐ.ஏ.ஸ். அதிகாரி, டெபுடி கலெக்டர் (முதல் மைத்துனி)
6) செல்வ ரங்கம், குழந்தைகள் நல டாக்டர் (ரெண்டாம் மைத்துனர்)
7) செல்வேந்திரன், விஏஓ & கவுன்சிலர் (மூன்றாம் மைத்துனர், விவசாயத்தில் என் கணவருக்கு உதவியாயும் இருக்கிறார்)
8) ரெங்க நாயகி, ஆடிட்டர் (ரெண்டாம் மைத்துனி)
9) செல்வ துர்கா, சீஃப் வெடரினரி ஸ்பெஷலிஸ்ட் (மூன்றாம் மைத்துனி)
10) அன்புச் செல்வன், ஐ.பி.எஸ் (கடைசி மைத்துனர்)
11) அன்புச் செல்வி, அட்வகேட் (கடைசி மைத்துனி)
12) திருநிறைச்செல்வன், என் மகன் (10 வது படிக்கிறான்)
13) திருநிறைச் செல்வி, என் மகள் (8 வது படிக்கிறாள்)

சாமியார் (சற்றே வியப்புடன், கூடவே அந்த அவையில் கூடியிருந்தவர்களும் வியப்புடன் நோக்குகிறார்கள்): என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா. நான் தான் சொன்னேனேம்மா, உங்கள் குடும்பத்தில் முப்பெரும் தேவியரும் ஆட்சி செய்கிறார்கள், ஒரு குறையும் இருக்க முடியாதே? அது சரிம்மா, உன் பேர் என்னம்மா, நீ வேலைக்குப் போறியா? நீ என்னம்மா படிச்சுருக்க?

பெண்: என் பேர் செல்வி. நான் இந்த ஊர் பஞ்சாயத்து ப்ரெசிடென்ட்டுங்க. 

சாமியார்: மூர்ச்சையாகிறார். 

மெக்காலே மக்காலே முக்காலே ஷோக்காலே!!

As shared on my Facebook wall since 26th May 2015:

இந்திய வரலாற்றின் சாராம்சம், அன்று முதல் இன்று வரை. 

1. இந்த நாட்டில் சமூக ஒருங்கிணைப்புடன் கூடிய மக்கள் கூட்டம் இருக்கிறது, அந்த ஒருங்கிணைப்பை ஒற்றுமையை உடை, அதற்கு எந்த வித சாம தான பேத தண்ட உபாயங்களையும் கடைக்கொள்; சாதி மத இன மொழி வேற்றுமையை பயன்படுத்தி இவர்கள் ஒற்றுமையை உடை. எந்தச் சூழலிலும் இவர்களுக்குள் இருக்கும் 'வேற்றுமையில் ஒற்றுமை' எனும் சங்கிலியை அறு. 

2. மஞ்சள், வேம்பு, விதை நெல், மூலிகை வைத்தியம், சித்த வைத்தியம், ஏராளமான இயற்கை நிலம் மற்றும் வளம்; ஏரி, கிணறு, ஆறுகள், நதிகள், குளம் குட்டை என்று ஏகத்துக்கும் கூடிய நீராதாரம் கொண்ட வற்றாத ஜீவ நதிகள் எல்லாத் திசைகளிலும் இருக்கிறது. அதுவும் சுத்தமான குடி நீர். அந்த இயற்கை தந்த கொடையையும் வளத்தையும் நீர் ஆதாரத்தையும் உடை, அந்த அடிப்படைக் கட்டமைப்பை உடை. 

3. சாமானியன் அதிகம் படிக்காவிட்டாலும் ஓரளவுக்கு படித்தவர்கள் குறைவு; இவர்களின் கல்வி வளர்ச்சி எப்படியோ, ஆனால் ஒரு சில கூட்டத்தினரின் அறிவையும் அறிவுசார் மூலதனத்தையும் நம்பி இவர்கள் சமூக அமைப்பு இருக்கிறது. அந்த அறிவுசார் ஆதாரத்தை எந்த வித மூளைச் சலவை செய்தும் அழி. அவர்களை முதலில் நம் வழிக்குக் கொண்டு வரணும், இந்தப் படிப்பறிவில்லாத ஆனால் உழைக்கும் வர்க்கத்தை வேறு வழிகளில் சமாளிக்கலாம். அது கால ஓட்டத்தில் சமாளிக்க வேண்டிய கைக்கொள்ள வேண்டிய அணுகுமுறை. 

4. மூலிகை வைத்தியம், ஆயுர்வேதம், சித்த வைத்தியம் என்று இவர்களின் மருத்துவ சிகிச்சைகள் வித்தியாசமாய் இருக்கிறது, அவை எப்படி இவர்களுக்கு எங்கிருந்து அந்த ஆதாரம் வந்தது, அதன் மூலத்தை உடை, அந்த அடிப்படை ஆதாரத்தை அழி. 

5. படிப்பறிவு இல்லாவிட்டாலும், வேறு சில அறிவு சார் மேதமை கொண்ட உருவ வழிபாடுகளும் கோயில்களும் அவை சார்ந்த இயற்கை வளமும் இவர்களை அந்த வழிபாடு மற்றும் மத நம்பிக்கைகளில் இவர்கள் ஒரு தேர்ந்தெடுத்த வல்லமையைக் கொண்டிருக்கிறார்கள், அந்த வலிமையையும் நம்பிக்கையையும் உடை, அந்த மத ஒற்றுமையைக் குலை. 

6. அரசியல் நிர்வாகம் ராஜாங்கம் நீதி பரிபாலனம் என்று இவர்களின் ஆட்சிமுறையே சரியில்லையே, ஒரு விதத்தில் இவர்களின் இந்த ஒற்றுமைதான் நமக்கு எதிரி, அதனால் இவர்களின் ஒற்றுமையை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டால்?  அரசியல் ரீதியாக ஆட்சியாளர்கள் தமக்குள் பிராந்திய ரீதியில் பிரிந்துள்ளனர், அந்தப் பிளவை பயன்படுத்தி இவர்களை இந்தத் தேசத்தின் மாட்சிமையை நம் கைக்குள் கொண்டு வரணும், அதற்கு மேற்சொன்ன நல்ல விஷயங்களை, இல்லை இல்லை, நமக்கு ஒத்து வராத கெட்ட விஷயங்களை தூக்கியெறியணும். அதற்கு அடுத்தக்கட்ட நடைமுறைகளை செய்யணும் என்று சுமார் 350 ஆண்டுகள் முன்பு 'வர்த்தக ரீதியில் உள் நுழைந்த வந்தேறிகள்' செய்த சதி இன்று 
1) அடிமைபடுத்துதல்
2) அரசியல் ரீதியாய் நாடு பிடித்தல்
3) வர்த்தக ரீதியில் கப்பம் கட்ட வைத்தல்
4) நிர்வாக ரீதியில் இவர்களில் அறிவுசார் திறமைசாலிகளை நம் கட்டுக்குள் வைத்துக்கொண்டு இவர்கள் கையாலேயே இவர்கள் கண்ணைக் குத்த வைத்தல்
5) எந்த இயற்கை வளம் நீர் ஆதாரம் என்று இவர்கள் ஸ்டிராங்காய் இருக்கிறார்களோ அந்த வளத்தையும் ஆதாரத்தையும் பாழ் செய் ( நவீனம் என்கிற கோணத்தில்)
6) விதை நெல் என்று ஒன்றுதானே இவர்களை வெளியாரிடம் கையேந்தாத நிலையை வைத்துள்ளது, அதை முதலில் உடை (எரியறதைப் பிடுங்கினால் அடுத்தது என்ன?)
7) இன மத சாதி மோதல்களை உண்டாக்கு
8) மதப் பற்றையும் மொழிப் பற்றையும் இவர்களை இவர்களாகவே கைவிடும் எண்ணத்தை உண்டாக்கு, அதை மேன்மேலும் பெரிதாக்கு, இவர்கள் மத இன ஒற்றுமை தானாகவே அழியும்
9) இன்னும் என்னென்னவோ உத்திகள் கையாண்டு இந்த மண்ணை காலம் காலத்திற்கும் எந்த விதத்திலாவது நம் கைக்குள்ளேயே வைத்திருக்கணும். எங்கே அடிச்சா அங்க வலிக்குமோ அங்க அடிச்சா எங்கே வேண்டுமானாலும் வலிக்கட்டுமே? இந்தப் பாலிசிதான் அவர்களின் தாரக மந்திரம். 


இதுதான் நமது இந்திய வரலாற்றின் சாராம்சம், அன்று முதல் இன்று வரை. 

இதை நான் சொன்னால், என்னை மாதிரிப் பலர் சொல்லியுள்ளார்கள், தத்தம் பாணியில் பலவேறு தருணங்களில். 

என்னலே, நீ மக்காலே என்கிறீயளா?  எல்லாம் அந்த மெக்காலே செய்த முக்காலே மூணு வீசம் ஷோக்காலே வந்த உபாயம்!! நம்மையெல்லாம் மேக்காலே நோக்க வைச்சு வடக்காலே இடக்காலே கீழ்க்காலே போக விடாமல் செய்து தெக்காலே நிற்க வைத்த சாதுர்யம், சாமர்த்தியம், சல்லியத்தனம் வேறு யாருக்கு வரும் மக்களே? 

ஒரு தலைப்புச் செய்தியும் சில குழப்பங்களூம்

ஒரு தலைப்புச் செய்தியும் சில குழப்பங்களூம் (டைரக்டர் விசு மன்னிப்பாராக!!)


Since Feb 10, 2015 via Facebook wall:

இந்தியா டுடே தமிழ்ப் பதிப்பு (04.02.2015) செய்தித் தலைப்பு:

ஜெயா ஜேட்லி சந்திப்பு

//லாகிரி வஸ்துக்கள் ஏதும் இல்லாமல் புகையிரதப் பாவனைகள் இல்லா ஆளரவமற்ற தனிமைச் சூழலில், கனிமொழி மெய்மொழி பேசும் பாவையர் அருகில் இல்லாமலேயே இந்த மாதிரி போதை வஸ்துக்கள் ஏதுமில்லா ஏகாந்தத்தில் தற்செயலாய் யோசிச்சதன் பலன்//:

ஜெயா ஜேட்லி சந்திப்பு, அவர் யாரை சந்தித்தார்?  அவர்தான் ஜார்ஜ் பெர்னான்டஸ் தலைமையில் இருந்த ஏதோ ஒரு ஜனதா தளம் கட்சியில் துணைத்தலவராய் இருந்தாரே, 10 அல்லது 15 வருஷம் முன்போ என்னவோ அவரைப் பற்றி தினசரி தினசரிகளில் தகவல் ஏதாவது வரும். அவர் கூட ஏதோ ஒரு அமைச்சரவையில் மத்தியில் அமைச்சராகக்கூட இருந்ததாக நினைவு.

அந்த ஜெயா யாரைச் சந்தித்தார்? சந்தித்த நபர் யார்?

ஓ, இது வேற ஜெயான்னா நம்ம அமிதாப்பச்சன் மனைவியா? ஜெயா பச்சனா? இல்லையா? ஜெயா பச்சன் இல்லைன்னா தங்கர் பச்சனா? தங்கர்னா நம்ம பொன்னர் சங்கர் கதையில தங்கர்னு யாராவது வந்தாங்களா?

பொன்னரா? பொன்னாரா? பொன்னார்னா பிஜேபி கன்யாகுமரியில கூட எம்பி தேர்தல்ல நின்னாரே, அவரா?

பொன்னரும் இல்லை, பொன்னாரும் இல்லை, பொன்முடியாரா? இல்லை பொன்முத்து ஐயாவா?  அவிங்களும் இல்லையா? பொன்முடி இல்லைன்னா முடிகொண்டானா? முடிகொண்டான் இன்னும் இருக்காரா? அவர் பேச்செல்லாம் சூப்பரா இருக்குமே? அவர் பேசினா தீப்பொறி பறக்குமே?

தீப்பொறின்னதும் ஞாபகம் வருது, தீப்பொறி ஆறுமுகமா? தீப்பொறியும் இல்லன்னா வேற எந்த ஆறுமுகம், நம்ம சிக்ஸ் முகம் சிக்ஸ்பேக் சிக்ஸ்முகமா? இந்த ஆறு படத்துல வடிவேலு கூட ஆறு தானே தேடறீங்கன்னு ஏதோ ஒரு நதிக்கரைக்கு போய் இந்த ஆறா, இல்லை எங்கிட்டோ நம்பர் ஆறு எழுதியிருக்குமே, அந்த ஆறைக் காட்டுவாரே, அதுவா? அதுவும் இல்லையா?

என்னங்க நீங்க, ஜெயாவும் இல்லேன்றிங்க, வேற யாரும் இல்லேங்கறீங்க? ஜெட்லின்னா நம்ம புரூஸ்லி மாதிரி சைனீஸ் படத்துலல்லாம் வருவாரே அந்த ஜெட்லியா? இல்லே, நம்ம நடிகர் ஜெட்லியா? அவரும் இல்லையா?

ஜெட்லி இல்லை அட்லியா? யாரு புதுசா ஒரு சின்னப் பையன் டைரக்டரா வந்தாரே அவரா? அவர்கூட ஒரு டிவி பொண்ணை ஜோடி நம்பர் ஒன்ல வந்த பொண்ணை கட்டினார்னு சொல்றாய்ங்களே, அவுங்களா?

என்னது அருண் ஜெட்லியா? அருண் ஷோரி தெரியும் அருண் பூரி தெரியும், அருண் சுப்ரமணியம் தெரியும், அருண் நேரு தெரியும், யாருங்க ஜெட்லி?

அருண் நேரு இல்லேன்னா, கமலா நேருவா, ஜவஹர்லால் நேருவா? மோதிலால் நேருவா? நேருன்னா நம்ம கே.என். நேருவா? இல்லன்னா கே.என். பாலகிருஷ்ணனா, அவரு ஒண்ணும் மத்தவா அளவுக்கு ப்ரபலம் இல்லையே, துக்ளக்லயும் விகடன்லயும் வாசகர் கடிதம் எழுதறவர் அவரையா சொல்றீய?

கே. என்.பாலகிருஷ்ணன் இல்லேன்னா சோ. பாலகிருஷ்ணனா, அவர்தான் போய்ட்டாரே? அப்ப சோ வா, அதாங்க நம்ம சோ. ராமசாமி, எடிட்டர் ஸார் அவரா? அவரும் இல்லையா, அப்ப பெரியார் ராமசாமியா? இல்லை டிராபிக் ராமசாமியா?

ஜேன்னு சொல்றிங்க, பழைய ரைட்டர் சிந்தனையாளர் தத்துவ ஞானி இருந்தாரா ஜே.கே. (ஜிட்டுன்னு சொல்வாய்ங்க) அவரா? ஜே.கே.ன்னதும் நினைவுக்கு வர்றது ஜெயகாந்தன் (ஜெ.கா.) அவரா இல்லை எழுத்தாளர் ஜெயமோகனா, இல்லை தினமணியிலயும் முக நூல்லயும் நெறையா எழுதுவாரே அந்த ஜெயாரா? அதாங்க ஜெயராமன் ரகுநாதன் அவரா?

ஓ, ஜெயான்னா நீங்க சொல்றது ஜெயமாலாவா, ஜெயசுதாவா, ஜெயகீதாவா, ஜெயமாலினியா, ஜெயபாரதியா, அதாங்க கன்னட நடிகை, தமிழ்ல கட சில படங்கள்ல நடிச்சிருக்காரே அந்த ஜெயாபாரதியா? இல்லை மாடிப்படி மாதுவோட ப்ரெண்டா லவரா வருவாரே நம்ம இருகோடுகள் ஜெயா அவங்களா?  அவங்களும் இல்லையா? இல்லை நம்ம ஜெயந்தியா? ஜெயந்தின்னா திருவான்மியூர் தியாகராஜா தியேட்டர் (எஸ் டூ) எதிர்ல இருக்கற ஜெயந்தியையா சொல்றீங்க?

ஜெயந்தி இல்லேன்னா, சாந்தி, கமலா, புவனேஸ்வரி, பத்மனாபா, அபிராமி, மஹாராணி, தேவி, தேவிபாலா, தேவிகலா, தேவிப்ரியா, இல்லன்னா ப்ரிய தர்சனி, திவ்ய தர்சனி, தேவதர்சனி, தேவயானி, இல்லேன்னா வேற யாரா இருக்கும்?

என்னங்க நீங்க, இவிங்களூம் இல்லைங்கறீங்க, அவிங்களும் இல்லைங்கறீங்க, பின்னே யாரைத்தான் சொல்றீங்க நீங்க? தியாகராஜனா? நம்ம மம்மட்டியான் தியாகராஜனா? இல்லை அவர் பையன் ப்ரசாந்தா?

இல்லே நம்ம பாரமவுண்ட் ஏர்வேஸ் தியாகராஜன், அவரை சொல்றீயளா? இல்லே தியாகுவா, கதையெல்லாம் கூட ஆனந்த விகடன்லயோ ஜீவியிலியவோ ஒரு காலத்துல எழுதினாரே அவரா?

இல்லே நடிகர் தியாகுவா? அவரும் இல்லையா? நடிகர் தியாகு இல்லைன்னா கராத்தே தியாகராஜனா? மேயர் எலக்சன்ல கூட ஒருவாட்டி நின்னாருல்ல? மேயர்ன்ன உடனே நினைவுக்கு வருது, நம்ம மா. சுப்ரமணியனா? இல்லை மேயர் சைதை துரைசாமியா? மேயர் ஸ்டாலினா?

ஸ்டாலின்னதும் நம்ம ரஷ்ய அதிபர் ஸ்டாலினையா சொல்றீய?

அவரும் இல்லையா? ரஷ்யால‌ யாரும் ஜெயா ஜெட்லின்னு யாரும் நான் கேள்விப்பட்டதில்லையே? ஒரே சிக்கலாயில்ல போயிக்கிட்டிருக்கு?

யாரோ ரெண்டு பேரு சந்திச்சுக்கிட்டாங்களாம், பேசினாங்களாம், அதை ந்யீஸ்ல வேற ஹைலைட்டா போட்டுட்டாங்க. ஆனா யாருன்னு சரியா ஒண்ணும் வெளங்கலியே? நாம இன்னும் நெறையா நியூஸ் படிக்கணும்போல இருக்கு, எங்கிட்டு டைம் இருக்கு?

ஒரு காலத்துல தி வீக், அவுட்லுக், இந்தியா டுடே (ஆங்கிலம், தமிழ்), பிசினஸ் டுடே, பிசினஸ் வீக், பிசினஸ் வேர்ல்ட், ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ், இந்தியன் எக்ஸ்பிரஸ்னு ரெகுலரா படிப்போம், இப்போ எங்கிட்டு நேரம் இருக்கு? நம்ம நேரம்தான் டையத்துக்கு மீல்ஸ், டைம் பாஸ்னு போயிக்கிட்டிருக்கே? இனிமே எங்கண பேப்பர் படிச்சு வெளங்கி பொது அறிவை தெளிவாக்கிக்கறது?

அடக்கடவுளே!!

கிராமி அவார்டும் இந்தியன் தாத்தாவும்!! (1)

As shared in my Facebook wall since 10th Feb 2015

2035 December 27one fine morning at Koneri Raja Puram (near Kumbakonam) a small village inThanjavur  District.

காட்சி 1 டிசம்பர்27, 2035

தாத்தா:இத்தனை வயசுல என்னை ஏன்டாஅலைக்கழிக்கறேள்? என்னால முடியலேடா. 

பேரன்: இல்லே தாத்தா, எவ்ரிதிங் வில் பி ஆல் ரைட். அம்மா ஈஸ் தேர், ஐ ஆம் தேர், வி வில் டேக் கேர் ஆப் யூ. டோன்ட் ஒர்ரி தாத்தா

(மனசுக்குள்: இந்த தாத்தாவுக்கு எப்படிபுரிய வைக்கறதுன்னே தெரியலையே.  அவருக்கும்காதும் கேட்க மாட்டேங்கறது, கண்ணும்சரியாத் தெரியறதில்ல)

தாத்தா:உங்களுக்கே தெரியும்டா கண்ணா, என்னால இவ்ளோல்லாம்ட்ராவல் பண்ண முடியுமா? இங்கேருந்துமெட்ராசுக்கு போணும், அதுவும் ராத்திரிமெயில்ல, அப்பறம் அங்கேருந்து என்னவோசொன்னியே விசாவா, பாஸ்போர்ட்டா, என்னதுஅது? அங்கேருந்து ந்யூ யார்க் சிக்காகோஎன்னவோ சொன்னாய்? எந்த ஊரு அது?

பேரன்: ஆமாம், தாத்தா, சிகாகோ.

தாத்தாவின்மகள் வருகிறார். என்னடா, தாத்தாவை சரிப்பண்ணிட்டியா?ராத்திரி கிளம்பலாமா?

பேரன்: அம்மா, என்னால முடியலம்மா.  நாலு நாளா தாத்தாக்கிட்ட பேசிப்பேசி  இந்த பழைய மாதிரி இவாள்ளாம்  பேசறாளே, இந்தப் பாஷ எனக்கு  நல்லா தொத்திடுத்து,  No, No, தொத்திண்டுடுத்து.  என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம்  கிண்டல் பண்றாம்மா.

அம்மா: அதுக்கென்னடா இப்போ? தொத்திடுத்து அது  இதுன்னு அபிஷ்டு மாதிரி பேசிண்டு?  (அடடே, நானே இதெல்லாம் பேசி  கிட்டத்தட்ட 40 வருஷம் ஆச்சுடா, எனக்கும்  தொத்திண்டுடுத்தே!)

பேரன்: தட்ஸ் வாட் ஐஸேம்மா.  நீயே  சொல்றே 40 வருஷம் ஆச்சுன்னு. 4 நாள்ல இதை நான் பிக்கப் பண்ணிண்டுட்டேன். ஆனா, என் ப்ரெண்ட்ஸ் என்னை நக்கல் பண்றாம்மா.  தேயார் டீஸிங் மீ, வெரி மச் எம்பராஸிங்மா. 

அம்மா: அப்பிடில்லாம் ச்சொல்லக்கூடாதுட்டயா. ஒரு காலத்துல தாத்தா,அவரோட அப்பா, மாமா, தாத்தால்லாம்  இப்படித்தான் வீட்டுல வெளியில கோயில்லன்னு  பேசிப்பா. நாமல்லாம் 40 வருஷம் முன்னாடி அமெரிக்கா  போயிட்டோம். நோக்குத் தெரியாதுடா கண்ணா,உங்க தோப்பனார்............

பேரன்: தோப்பனாரா, அது யாரும்மா? புதுசா  இருக்கே, இங்கே வயல்ல ஐமீன் பேடி ஃபீல்ட்ல தலைல  வொயிட்டா எதையோ சுத்திண்டு வொர்க் பண்ணிண்டு  இருந்தாரே, நீ கூட நம்ம  வில்லேஜ் ஃபார்மிஸ்ட்னு சொன்னியே, அவராம்மா?

அம்மா: அடக் கடவுளே, தோப்பனார்னா  உங்க அப்பாடா, ஐ மீன், யுவர் டாட்.  உங்க  அப்பா 45  or 50 வருஷம் முன்னால எஞ்ஜினிரிங்  மெட்ராஸ் எம் ஐ டில  படிச்சுட்டு அவரோட ப்ரெண்ட் யாரோ  சொன்னாருன்னு அமெரிக்கால நாஸால இருக்கற   டிவிஷன்ல அவரை கூப்டதா  சொல்லி இங்கேருந்து அமெரிக்கா போயிட்டார்.  உங்க  அப்பா அந்தக் காலத்துல சரியான  ப்ரில்லியன்ட்டாம்டா.  நேக்கு  கல்யாணம் ஆன புதுசுல அதெல்லாம்  ஒரு எழவும் தெரியாது. நான்  பத்தாம் கிளாஸ் ஃபெயில், மேலே  படிக்கலே.

பேரன்: ஏம்மா, நீ படிக்கலேங்கறே,  எப்படி பிட்ஸ்பர்க்ல  நாலு ஸ்கூல்ல விசிட்டிங் ப்ரொபசரா  இருக்கே? ஒண்ணும் புரியலயே?

அம்மா: அந்தக் கதையெல்லாம் அப்பறமா  சாவகாசமா சொல்றேன், இப்போ தாத்தாவை கூட்டிண்டு  ஸ்டேஷனுக்கு வர வேலையைப் பாரு.

பேரன்: ஓக்கே, ஐ'ல்டேக் கேர்.   

(to be continued)

Friday, January 23, 2015

பராசக்தி ஸ்டைல் ‍= விசித்திர வழக்கு



[பராசக்தி திரைப்படத்தில் வரும் நீதிமன்றக் காட்சியில் சிவாஜி கணேசன் அவர்களின் வசன நடையில் இதைப் படித்து, மகிழ்ந்து, ஆருத்ரா தரிசனத்தன்று நம் வீடுகளில் சமைத்து அரனுக்குப் படைத்து நாமும் 'களி'ப்புறுவோமே அவ்வண்ணம் களிப்புற 'கூட்டு'ப் பிரார்த்தனை போல் பாதிக்கப்பட்டவர்கள் இந்த விசாரணை மடலை படித்து மகிழலாம். உளமாற மனத்தில் தோன்றும்  இனிப்புப் பொங்கலை உவகையுடன் அனுபவிக்கலாம். இதை அறிய எக்காலத்திலும் வக்காலத்து ஸ்டாம்ப் தேவையில்லை, வாய்தா, முன் ஜாமீன், பின் ஜாமீன் என்று அலையாய் அலைய வேண்டியதில்லை, ஜஸ்ட் என்சாய் மை டியர் மக்காஸ்!!]

இந்த நானிலத்தில் உள்ள நீதிமன்றங்கள் பல வித வழக்குகளைச் சந்தித்திருக்கலாம். . குற்றப்பத்திரிக்கை, வழக்கு, விசாரணை, வாய்தா, தீர்ப்பு பின்னர் அப்பீல் என்று பற்பல நடைமுறைகளுக்குப் பின் நியாயமான தீர்ப்புக்கள் வந்திருக்கலாம், சிலவகைத் தீர்ப்புக்கள் வாங்கப்பட்டிருக்கலாம், சில வகைத் தீர்ப்புக்களும் விசாரணைகளும் குற்றவாளியின் வீடு தேடிக்கூட வந்திருக்கலாம். இந்த நானிலம் இது மாதிரி பல விசித்திரங்களைக் கண்டதுண்டு.

சுதந்திரம் பெற்று கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் ஆகியும் இந்த வழக்கு மாதிரி ஒரு வழக்கு உலகில் எந்த நாட்டிலும் வந்திருக்காது, வரக்கூடாது, வரவேண்டும் என யாரும் ஆசைப்படவே தேவையில்லை.

எங்களை மாதிரி சிலரின் மீது இந்தச் சமூகம் ஒரு குற்றச்சாட்டை வைக்கிறது. இந்த இளைய சமூகம், ஏன் இளையர்கள் மட்டுமல்ல, நடுவயது அல்லது பணிக்கால ஓய்வு பெற்றவர்களும் கூட, ஆண் பெண், பெரியவர் சிறியவர் வித்தியாசமில்லாமல் அனைவரும் இணைய உலா, முக நூல் உலா, முக நூல் வாசம் என்று வாழ்க்கையைத் தொலைப்பதாய் ஒரு பெரிய குற்றச்சாட்டு இந்த நீதி மன்றத்தில் வந்திருக்கிறது.

இவர்கள் தரும் குற்றச்சாட்டின் சாராம்சம் இதுதான்:
1) பணிக் காலத்தில் முக நூல் வாசம் செய்பவர்கள் பணியைக் கவனிக்காமல் இணைய உலகிலேயே காலம் கழிக்கிறார்கள், பணி நிமித்தம் கருத்தொருமித்து தொழிலைக் கவனிப்பதில்லை
2) கல்லூரியிலோ பள்ளிப்பருவத்திலோ உள்ளவர்கள் வகுப்பறையில் ரகசியமாய் தங்கள் கைப்பேசியில் கிசுகிசு என்று தங்களுக்குள்ளேயே லைக் என்ன, கமென்ட் என்ன, ஷேரிங் என்ன என்று களிப்புறுவதாய் ஒரு குற்றச்சாட்டு.
3) படிப்பு அல்லது தொழில் நிமித்தம் பயணிக்கும் தருவாயில் கூட பேருந்துகளிலோ புகையிரத வண்டிகளிலோ சிற்றுந்து பேருந்து சீருந்து, முக்காலுந்து (ஆட்டோ) பகிர் ஆட்டோ என்று பல வித மார்க்கங்களில் பயணிக்கும்போதும் முக நூல் அல்லது ட்விட்டர் வாசம் என்று பலர் தங்கள் நேரத்தை விரயம் செய்வதாய் ஒரு குற்றச்சாட்டு.
4) அலுவலகப் பணிமுடிந்து அனுதினமும் கூடு திரும்பும் அதாவது வீடு திரும்பும் மக்கள் வீட்டிலும் இதையே ஒரு லாப் டாப்பிலோ ஸ்மார்ட் போனிலோ டெஸ்க் டாப்பிலோ இதே நிலையில் இந்தப் பிணி பிடித்து இவர்களை ஆட்டுவிக்கிறதாம், மனைவி/கணவன் அல்லது வீட்டிலுள்ள பெரியோர் / பிள்ளைகளுடன் பேசுவதில் கூட திராணியில்லாமல் அக்கறையில்லாமல் இருக்கிறார்களாம்.
5) பிள்ளைகள் வீட்டுப்பாடம் செய்யும்போது அவர்களுக்கு வரும் சந்தேகங்களைத் தீர்க்க உதவாமல் அனவரதமும் சதா சர்வ காலமும் முக நூல் டிவிட்டர் வாட்ஸப் என்று அதிலேயே உலவுவதால் பிள்ளைகளின் கல்விமேல் அக்கறையின்மை வருகிறதாம்.
6) கணவன் மனைவி ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதே வாட்ஸப்பில்தானாம்; பிள்ளை தகப்பனிடம் தனக்குத் தேவைப்படும் விஷயங்களை கோரிக்கை வைக்க முக நூலில் இன்பாக்ஸில் வந்துதான் அப்ளிகேஷன் போட வேண்டியிருக்கிறதாம்;
7) வேலைக்கு என்று போகாமல் இல்லத்தரசியாய் வாழும் குடும்பத்திற்காக தன்னையே தியாகச் செம்மலாய் அர்ப்பணிக்கும் அம்மணியும் முட்டாள் பெட்டியின் முன்னரோ இணையத்திலோ வாட்சப்பிலோ ட்விட்டரிலோ முக நூலிலோ லயித்துவிடுவதால் வீடு திரும்பும் கணவருக்கோ பிள்ளைகளுக்கோ செய்ய வேண்டிய உதவிகளை செய்ய இயலவில்லையாம்; வீட்டிலுள்ள முதியோர்களை மருத்துவ ரீதியாகவோ ஓய்விற்காகவோ அவர்களிடம் அனுசரணையாக மனைவியோ கணவனோ கவனிப்பதில்லையாம். அப்படி ஒரு முதியோர் சமூகம் வீடுகளில் இன்றைய தினம் இருக்கிறார்களே என்பதே அரிதாய் விட்டது, பற்பல முதியோர் இல்லங்களில் கூடும் கூட்டமும் அங்கு பலர் படும் முதுமை சார்ந்த தனிமை சார்ந்த மனக் குழுப்பங்கள் அதிகரிக்கின்றனவாம்.

இப்படி பலபேர் பற்பல குற்றச்சாட்டுக்களாய் அடுக்கிக்கொண்டே போகிறார்கள். நான் எனக்குத் தெரிந்ததை மேலே பட்டியலிட்டிருக்கிறேன். இங்கு கூடியுள்ள மற்ற நண்பர்களைக் கேட்டால் கதை கதையாய் சொல்வார்கள்.

இப்படி ஒரு வழக்கு வர என்ன காரணம்? இப்படி ஒரு இழி நிலை இங்கு வர இந்தச் சமூகம் என்ன பாவம் செய்தது?

தெரியாமல்தான் கேட்கிறேன். பாதிக்கப்பட்டவர்களின் சார்பாகவும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் சார்பாக சில கேள்விகளை நான் முன்வைக்கிறேன். இந்த நீதிமன்றம் இதற்கு தக்க காரணங்களை ஏனோ தானோ என்றில்லாமல் அவையடக்கத்துடன் சட்டத்தின் ஆட்சி நடக்கும் மாட்சிமை புரிந்து ஜன நாயக வழிமுறைக்குள் விளக்கம் தருமா இந்த நீதி மன்றம்? பாதிக்கப்பட்டவர்களுக்கு தக்க முறையில் நீதி வழங்க வேண்டும் இந்த நீதி மன்றம்.

ஏனய்யா, காலம் காலமாய் இந்தச் சமூகம் எப்படி வாழ்ந்து வந்தது?

உழுபவன் தன் நிலத்திலோ குத்தகைக்கு எடுத்த நிலத்திலோ அதிகாலை கதிரவன் உதித்தது முதல் உச்சிவரைக்கும் பின் சிறிது பசியாறி இளைப்பாறி கதிரவன் தலை சாயும் வேளை வரை உழைப்பு உழைப்பு என்றுதானே தன் பொழுதை ஓட்டினான் முற்காலத்தில்? வயல்வெளியில் மண்ணில் வேலை செய்பவனின் நிலை அது.

ஒரு தொழிலகத்திலோ தொழிற்சாலையிலோ பட்டறையிலோ அது சுய தொழிலாக இருக்கலாம், வேறு ஒரு முதலாளிக்கு பணிபுரிவனாக இருக்கலாம், அரசு சார்ந்த அல்லது சாராத நிறுவனமாக இருக்கலாம். ஒவ்வொரு தொழிலாளியும் காலை 7 அல்லது 8 மணிக்குப் போய் மாலை 6மணிக்கோ 9 மணிக்கோ தத்தம் பணி நிமித்தம் ஆவன செய்து முடித்து அவையடக்கத்துடன் வீடு திரும்பி பெண்டு பிள்ளைகளைக் கவனித்து அவர்தம் தேவைக்காக உழைத்தவர்கள் வாழ்ந்த பூமி இது.

உடல் உழைப்பு இல்லாமல் மூளையை உபயோகித்து தத்தம் வழியில் பணிபார்த்த மக்களைக் கொண்ட சமூகமும் இங்கு உண்டு. அவர்களும் தத்தம் பணிகளை செவ்வனே சிவனே என்று ஆற்றியிருக்கிறார்கள், ஆற்றி வந்திருக்கிறார்கள்.

உடல் உழைப்பும் இல்லை, மூளை உழைப்பும் இல்லை, அப்பன் ஆத்தா, முப்பாட்டன் சேர்த்து வைத்த சொத்து பத்து இருந்ததால் அவைகளை அனுபவிக்கும் பாத்தியதை, யோக்கியதை, பாக்கியம் பெற்றவர்களும் இங்கு உண்டு. அவர்கள் என்ன செய்தார்கள்?  தத்தம் விருப்பத்திற்கேற்ப கதை கட்டுரை எழுதுவது, பத்திரிகை வாசிப்பது, ஆலயம் தொழுவது, ஆலயத் திருப்பணி செய்வது, இவை எதுவுமே இல்லையெனில் வீடு வாசல்களில் மூதாதையர் கட்டிவைத்த திண்ணைகள் ஆயிரம் இருந்தன. அந்தத் திண்ணைகள் வேஸ்ட் ஆகாமல் காலாட்டிக்கொண்டே வெந்ததைத் தின்று விதிவழி வாழ்ந்த மூடர்களும் உண்டு, அப்படியே சீட்டாடுதல், சீட்டுக்கச்சேரி என்று காலம் காலமாய் அப்பன் தாத்தன் முப்பாட்டன் சேர்த்து வைத்திருந்த சொத்துக்களை அழித்த புண்ணியவான்கள் இங்கு பலர் உண்டு.

மேற்சொன்னவர்கள் எல்லாம் தத்தம் ஓய்வு நேரத்தை எப்படிச் செலவழித்தார்கள்?

வார விடுமுறை நாட்களிலோ தினசரி மாலை வேளைகளிலோ நேரம் மிச்சமிருந்தால் ஆலயம் சென்றார்கள், கடற்கரை ஆற்றங்கரை சென்றார்கள், பொருளாதார வசதியுள்ளவர்கள் பல ஊர் சுற்றிப்பார்த்தார்கள், இன்னும் வசதி பெற்றோர் விமானமோ கப்பலிலோ பற்பல உலக நாடுகள் சென்றார்கள், அப்படி ஊர் சுற்றி தத்தம் அனுபவங்களை தாங்கள் பெற்ற இன்பத்தை இந்த வையகத்திலுள்ள பிறர் அறியும் வண்ணம் 'இதயம் பேசுகிறது' மணியன் மாதிரியோ, மெரீனா என்கிற பரணிதரன் பாணியிலோ பயணக்கட்டுரைகளாகவோ ஆன்மீகச் சுற்றுலாவாகவோ பா.கே. என்று அந்துமணி பாணியிலோ எழுதி நமக்கெல்லாம் அந்த உலக அனுபவங்களை தந்தார்கள், சிலர் அந்தப் பாணியில் இன்றும் அப்படி இணையத்தில் தருகிறார்கள்.

இன்றைய சமூகத்தைப் பார்த்து மேலே சொன்ன குற்றச்சாட்டுகளை வைக்கும் பெரியோரே!! சமூகமே!!

இந்த முக நூல், வாட்சப், ட்விட்டர், லாப் டாப், டெஸ்க் டாப், ஸ்மார்ட் போன், போன், ப்ளாக்பெர்ரி என்று பற்பல சாதனங்கள் ஊடுமுறைகள் உபகரணங்கள் வேண்டும் என்று நாங்களா கேட்டோம்?

நாங்கள் பாட்டுக்கு அப்பன் தாத்தன் வழியில் எங்கள் வேலையைத் தானே பார்த்திருப்போம்?

எங்கள் ஆலயங்களில் இருக்கும் கூட்டம் அது சார்ந்த கேளிக்கைகள், வணிக வசதிகள், அது சார்ந்த தொழில் முறை நெறிமுறைகள், சமுதாயக் கோட்பாடுகள், பயிலரங்குகள் என்று நாங்கள் எங்கள் வழியில்தானய்யா எங்கள் பொழுதை ஓட்டி வந்தோம்?

இந்தக் காலனி ஆதிக்கம் பின்னர் வந்த தொழில் நுட்ப வளர்ச்சி, பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி என்று காலம் காலமாய் வந்த மாற்றங்களின் வளர்ச்சி அதன் பொருட்டு இந்தச் சமூகமும் நாடும் கண்டு வந்த மாற்றம், மாற்றம் செய்கிறோம் புரட்சி செய்கிறோம் என்கிற பெயரில் முன்னேறுகிறோம் என்கிற பம்மாத்தில் எங்களை இந்த இழி நிலைக்குத் தள்ளியவர் யார்? அந்தக் கூட்டம் ஒரு பக்கம் தன் பாங்க் பாலன்ஸை ஏற்றிக்கொண்டேதானே இருந்தது? இருக்கிறது? இனியும் மேன்மேலும் அப்படித்தானே அந்தக் கொள்ளைக்கூட்டம் தத்தம் வயிறு வளர்க்கும்?

நாங்களாய் விவசாயம் செய்தோம், அரிசி, கோதுமை, மஞ்சள், மிளகு, தென்னை வாழை, பச்சைக்காய் கறிகள், கனிகள், சுத்தமான குடி நீர், சுத்தமான காற்று, ஓய்வு நேரத்தில் கேட்க நல்ல நல்ல சங்கீதம், இயல், இசை, நாடகம் என்று கேளிக்கைகளுக்கா பஞ்சம் இந்த நாட்டில் இருந்தது? தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாய் இந்தக் கேளிக்கைச் சந்தையில் சினிமா என்று ஒன்று வந்தது, வெள்ளித் திரை என்றார்கள்,  பின்னர் சிலகாலம் கழிந்து சின்னத்திரை என்றார்கள், இப்படி இணையத் திரை என்று வந்துவிட்டது. இதில் தத்தம் வழியில் தொழில்பார்க்க பலருக்கும் வேலை வாய்ப்பும் வந்தது, அவரவர் வழியில் நியாயமாகவோ அநியாயமாகவோ நாலு காசு பார்த்து குடும்பத்தை பிள்ளை குட்டிகளைப் படிக்க வைத்து வளர்த்து ஆளாக்கி என்று பலர் இந்த நாட்டில் காலத்தை ஓட்டுகிறார்கள்.

இந்த மாதிரி மாற்றங்களையெல்லாம் நாங்களா கேட்டோம்?

தொழில் நுட்ப வளர்ச்சி என்கிற பெயரில் எங்களிடம் காலம் காலமாய் பாரம்பரியமாய் இருந்த பற்பல நல்ல விஷயங்களை எங்களிடமிருந்து எங்களை அறியாமலேயே எங்கள் முன்னோர்களை ஹிப்னாடிசம் செய்ததுபோல் பம்மாத்து வார்த்தைகளைப் பேசி பற்பல புது விஷயங்களை மாற்றம், புரட்சி என்று அவர்கள் தலையில் ஏற்றி இன்று எங்களை எங்கள் பாரம்பரியம் நோக்கியும் கலாச்சார ரீதியில் எங்களுக்கிருந்த ஏற்றமான, ஒழுக்கமான விஷயங்களையெல்லாம் எங்களிடமிருந்து அகற்றிவிட்ட கூட்டம் எங்கே போனது?

இன்று இதே தொழில் நுட்பப் புரட்சியில் எங்களை அறியாமலேயே ரெண்டு மூன்று தலைமுறையாய் நாங்கள் ஆட்பட்டுவிட்டோம், ஒருவிதமான கொத்தடிமையாய் இங்கு இதிலேயே நாங்களும் தள்ளப்பட்டுவிட்டோம். எந்தத் தொழில் நுட்பம் அன்று எங்கள் மூதாதையரிடம் எவற்றைப் பறித்ததோ எவற்றை எங்களிடமிருந்து திருடி அவற்றை இதே தொழில் நுட்பம் சார்ந்த மாற்றுச் சாதனங்கள் ஊடகங்களின் வழியே எங்களிடமே எங்கள் சொந்தச் சரக்கையே எங்கள் பாரம்பரியம் வழி வந்த நல்ல விஷயங்களையே எங்களுக்கே திரும்பவும் கட்டுச் சோற்றில் தரும் சாப்பாடுப் பொட்டலம் மாதிரி எங்கள் உடைமையாய் இருந்ததை எங்களுக்கு எங்கள் காசை விலையாக்கி எங்கள் உழைப்பை விலையாக்கி தரும் கயவர்கள் ஒரு புறம்.

இப்படி எல்லாம் இந்தச் சமூகம் எந்த எந்த நல்ல விஷயங்கள் சமூகக் கலாசார வேதகால நடைமுறைகள் என்னவெல்லாம் இங்கு இருந்தன, இந்திய நாகரிகத்தில் நாம் நம்மில் தன்னுள்ளே கொண்டிருந்தோம், என்று இதே தொழில் நுட்பம் வாயிலாய் வந்த ஊடகங்கள் மூலம்தானே நாங்கள் தெரிந்துகொண்டோம்? பற்பல வரலாற்று உண்மைகளை எங்களுக்கு இந்த பின் நவீன தொழில் நுட்ப வளர்ச்சிதானே காட்டிக்கொடுத்தது?

இப்படி இருக்க, இதே தொழில் நுட்ப வளர்ச்சி மூலம் வந்த இந்த இணையம், முக நூல், ட்விட்டர், வாட்ஸப், இனி என்னெவெல்லாம் வருமோ தெரியாது, அதற்கும் இந்தச் சமூகம் பழகிக்கொள்ளூம், தன்னுள்ளே ஜீரணித்துக்கொண்டு மேன்மேலும் இந்தச் சமூகம் வளரும், வளருவது போல் ஒரு மாயை தோன்றும், ஒரு மாய உலகில் மீண்டும் தள்ளப் படுவோம், நம் அடுத்த தலைமுறை நம்மிலும் மேலான நல்ல விஷயங்களை இந்த ஊடகம் அல்லது இணைய நாகரிகம் அல்லது இணையக் கலாச்சாரத்தின் வழி கற்றுக்கொள்ளும்.

எங்களிடம் மேலே குறிப்பிட்ட அல்லது பட்டியலிடப்படாத குற்றச்சாட்டுக்களை நீட்டும் வழக்காடு மன்றம் இன்னும் சில உளவியல் அல்லது மனவியல் சார்ந்த விஷயங்களை கண்டுணற வேண்டும்.

திரை கடலோடியும் திரவியம் தேடு என்று ஆன்றோர் வாக்கு உண்டு.

உள்ளூரில் விலை போகா சரக்கு வெளியூரில் விலை போகும் என்பார்கள்.

உள்ளூரில் உள் நாட்டில் விற்க முடியாத எங்கள் உழைப்பை தொழில் முறை வித்தைகளை வாழ்க்கையில் பற்பல படிகளில் நாங்கள் கற்ற வித்தைகளை தொழில் நுட்பங்களை வெளியுலகத்தில் காண்பித்தால்தான் நாங்கள் எங்களை நிலை நிறுத்திக்கொள்ள முடியும். எங்கள் குடும்பத்தையும் பிள்ளை குட்டிகளையும் படிக்க வைக்க முடியும், அவர்தம் மேற்படிப்பு என்னும் வளர்ச்சியில் பெற்றோர் என்கிற ரீதியில் நாங்கள் ஆற்ற வேண்டிய எங்கள் கடமையை நாங்கள் செய்ய முடியும்.

பணி நிமித்தம் பலர் குடும்பத்துடன் பல நாடுகளுக்கும் குடியேறி அங்கு நிரந்தரமாகக் குடியுரிமை பெற்றோ அல்லது தற்காலிக வாசம் செய்யும் அனுமதி பெற்றோ தத்தம் உழைப்பை பற்பல வழிகளில் பலர் பொருளீட்டி வருகிறார்கள்.

சிலர் தனியாய் பேச்சிலராகவோ திருமணமாகியும் தனியான பேச்சிலராகவோதான் தத்தம் வாழ்க்கையை ஓட்டுகிறார்கள்.

அவரவர் பழக்க வழக்கப்படி உண்ணும் உணவுகள் அவர்களுக்கு அங்கெல்லாம் கிடைக்காமல் போகலாம். சுத்தமான வெஜிடேரியன் என்று சொல்லிக் கொள்ளூம் அன்பர்கள் நல்ல உணவு வேண்டி வாடகைக் கார் எடுத்துக்கொண்டு 50 கி.மீ பயணம் செய்து நல்ல இந்திய உணவு கிடைக்குமா என்று தேடித் தேடி அலைந்தவர்கள் உண்டு.

இன்னும் சிலர் பணிக்காலம் தவிர்த்த பொழுதுபோக்கு விஷயங்களுக்கு வசதியில்லாமல் திரையரங்கம் என்கிற வசதிகள் இல்லாத வளைகுடா நாடுகளில் எப்படிப் பொழுது போக்குவதாம்?

இந்த மாதிரி வசதிகள் இருக்கிறது என்கிற நாடுகளில் கூட, உதாரணம், தென் கிழக்காசிய நாடுகள் (சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ்), தூரக்கிழக்கு நாடுகள் (ஆஸ்திரேலேயா, நியூசிலாந்து, ஜப்பான்) என்று இந்த மாதிரி கேளிக்கைக்கோ சுற்றுலா செல்லவோ வசதி வாய்ப்பு பெற்றோர் எத்தனை பேர் இருக்கிறார்கள்? 100ல் 10 பேர் இருப்பார்களா? மீதி 90 பேர் பொழுது போக்க வழி என்ன?

அமைதியாய் யாரையும் இடையூறு செய்யாமல் 'என் வழி தனி வழி' என்று லாப் டாப் அல்லது டெஸ்க் டாப் அல்லது ஸ்மார்ட் போன் என்றுதான் இவர்கள் அதுவே கதி என்று இருக்க வேண்டியதுதான்.

ஓய்வு நேரத்தில் புத்தகம் படிக்கலாம் என்பீர்கள். நூலகம் சென்று படிக்கலாம் என்பீர்கள். நடைப் பயிற்சி அல்லது உடற்பெயற்சி செய்யலாம் என்பீர்கள். ஒரு சராசரி மனிதன் நடைப் பயிற்சி அல்லது உடற்பயிற்சிக்காக அதிக பட்சம் ஒரு நாள் 1 மணி நேரம் தருவதே பெரிய விஷயம் இந்த நாட்களில்.

காலையில் பணி நிமித்தம் 7 8 மணிக்கு போனால் திரும்பி வீடு வந்து, தத்தம் இரவு உணவு தானே சமைத்து உண்டு பிறகு உடற்பயற்சி சாப்பாட்டுக்கு முன்னரோ பின்னரோ செல்ல வேண்டும். தினசரி முடியாவிட்டாலும் வார விடுமுறை நாட்களிலாவது இந்த மாதிரி பயிற்சி செய்யலாம், ஒப்புக்கொள்கிறோம்.

ஆனால் மிச்சம் இருக்கும் நேரத்தை நாங்கள் எப்படி ஐயா செலவழிப்பது?

அவனவனுக்கு ஆயிரம் கவலைகள்? பெண்டாட்டி பிள்ளைகளூடன் சேர்ந்து இருப்பவர்களுக்கோ பிரிந்திருப்பவர்களுக்கோ (பணி நிமித்தம் நிர்ப்பந்தம் காரணமாய்) அவரவர் வாழ்க்கையில் கவலைகள், கோரிக்கைகள், கடன் நிவாரணத்திற்கு வழியில்லாமல் யாரையும் கேட்டு நிவாரணம் பெறும் நிலையில் அடுத்தவனுக்கு இந்த விஷயத்தில் உதவும் எண்ணம் இருந்தாலும், தன்னை நிவாரணம் செய்யவே வக்கில்லாமல் பலர் இருக்க அடுத்தவனுக்கு எவன் உதவ முடியும், ஓரளவுக்கு மேல்? அவனவனுக்கு ஆயிரம் ப்ரச்னைகள், உளவியல் மனவியல் காரணங்கள் உள்ளன.

அவன் தன் மனோ விசாரங்களை விகாரங்களை மறக்க ஒரு ஊடகமாய் இன்று வசதியாய் இருக்கும் ஒரே சாதனம் இந்த இணையம்தான், ஓய்வு நேரத்தில் யார் வீட்டுக்கும் போய் அடுத்தவர்களைத் தொந்தரவு செய்யாமல் அவனவன் தன் வழியில் பொழுதுபோக்க ஒரு வடிகாலாய் இன்று இருப்பது இந்த இணையம்தான்.

பொது அறிவை வளர்க்கவும் பொழுதுபோக்கவும் தொழில் சார்ந்த கல்வி வளர்ச்சிக்கும் இந்த இணையம் தான் உதவுகிறது.

அந்த மட்டில் இந்த லாப் டாப் எங்களை மாதிரி ஆட்களுக்கு ஒரு வரப் பிரசாதமாய் 'லாபம்' 'தாபம்' என்கிற மாதிரி லாப் டாப் என்று எங்களின் லப் டப் களை நிர்ணயிக்கும் ஒரு காரணியாய் சீராய் எங்கள் வாழ்க்கையை ஓட்ட ஒரு லாபகரமான டாப்பான சாதனமாய் பொழுது போக்கு அம்சமாய் இந்த லாப் டாப் ஸ்மார்ட்டாய் எங்களை எங்கள் அப்பன் தாத்தன் 'போன' வழியே எங்கள் காலத்தை ஓட்ட ஒரு மாற்றுச் சக்தியாய் எங்களுக்கு இருக்கிறது என்று கூறி இந்த விசாரணையில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாய் சமர்ப்பித்துக் கொள்கிறேன் (கொள்கிறோம்).

காலம் காலமாய் நாங்கள் வாழ்ந்து வந்த வழிமுறைகளை மாற்றி எங்களை மாற்றியவர்களை இந்த நீதிமன்றம் கேள்வி கேட்டிருக்கிறதா?

அப்படியெல்லாம் எங்கள் முன்னோரை மாற்றியதோடல்லாமல் எங்களையும் இந்தப் புதைகுழியில் தள்ளிக் கொத்தடிமையாய் எங்களை வைத்திருக்கும் ஒரு கூட்டம் இருக்கிறதே, அவர்களை நோக்கி எங்கள் கேள்விகளுக்கான விடைகளை இந்த நீதிமன்றம் கேட்டுப் பெறுமா?

எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நாங்கள் சந்திக்கும் பற்பல இடையூறுகள் சங்கடங்கள், வெளியில் சொல்ல முடியா ஏக்கங்கள் அதன் தாக்கங்களை இந்த நீதிமன்றம் கருத்துக் கேட்டிருக்கிறதா?

இப்படி ஒரு புதிய தலைமுறை உருவாகக் காரணமான சமூகத்தை இந்த நீதிமன்றம் என்ன செய்யப் போகிறது?  இந்த நீதிமன்றத்தில் இருப்பவர்கள் கூட இந்தச் சமூகத்தில் ஒருவர்தான், பாதிக்கப்பட்ட எங்களையும் சேர்த்து. இப்படியெல்லாம் இந்த நாட்டில் ஒரு மாற்றம், விரும்பத்தகாத நிகழ்வுகள் நிகழ நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒரு பார்வையாளராகவோ கையாலாகாத்தனத்துடன் ஆட்சியாளர்களை இந்த நீதிமன்றம் குற்றம் சாட்டுமா?

புதுப்புது யுக்திகள் சாதனங்கள் வருகின்றனவே, இவற்றை இந்தச் சமூகத்தில் செலுத்திய ஒரு பன்னாட்டு வர்த்தகக் கூட்டம் இங்கு கடை விரித்து எங்களை எங்கள் உடைமைகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ அடிமைப்படுத்தி வைத்துள்ளதே, அவர்களை இந்த நீதி மன்றம் விசாரணைக்கு உட்படுத்துமா?
இப்படி எத்தனையோ எத்தனையோ பதில் கேள்விகள் எங்களுக்கும் கேட்கத் தெரியும்.

அவற்றுக்கெல்லாம் விடைதருமா இந்த நீதிமன்றம்?

பொருளாதார வசதிகளுக்காக திரைகடலோடி திரவியம் தேட நாங்கள் நாடு நாடாய் ஊர் ஊராய் ஓடினோம்.

குடும்பத்தைப் பிரிந்து வாழ்பவர்கள் பலர் உண்டு, பல ஊர்களில் பல நாடுகளில். அவரவர்கள் ஒவ்வொருவருக்கும் மனதில் ஆயிரமாயிரம் ஏக்கங்கள், அறச் சீற்றங்கள், பிரிவின் தாக்கங்கள், உளவியல் மனவியல் ரீதியான உடல் உபாதைகள் பற்பல உண்டு. இவற்றையெல்லாம் இந்த நீதிமன்றம் கருத்தில் கொள்ளுமா?

நாங்கள் ஏன் ஊர் ஊராய் நாடு நாடாய் அலைந்தோம்? எங்களூக்காகவா? எங்கள் தலைமுறைக்குப் பின் அடுத்த தலைமுறை கொஞ்சமாவது தம் சொந்தக்காலில் நிற்க ஏதுவாய் அவர்களுக்கு தேவையான கல்வியை தர நாங்களை எங்களை மெழுகுவர்த்திபோல் ஆக்கிக்கொண்டு எங்களை வருத்திக்கொண்டு போராடிவருகிறோம்.

பற்பல குற்றச் சாட்டு கூறும் முன்னர், இந்த மாதிரி பற்பல கஷ்டங்களையும் இடையூறுகளையூம் இதே சமூகம் அனுபவிக்கும். அவர்கள் எப்படி தத்தம் பொழுதுபோக்கை கடைப்பிடிக்கிறார்கள். எல்லாருக்குமா வாய்க்கிறது, சங்கீதம், இயல், இசை நாடகம் என்று கண்டு கேட்டு மகிழ?

குற்றம் சாட்டுவது எளிது. குற்றம் சாட்டப்பட்டவன் சார்பில் அவன் இடத்தில் இருந்து  சிந்தித்துப் பாருங்கள். புரியும். பற்பல உண்மைகள் விளங்கும்.

(முடிந்தது)