Saturday, May 10, 2025

India-Pak standoff (Operation Sindhoor) May 2025 additional thoughts and view points

பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை தொடரும் - ஜெய் ஷங்கர் ஜி. எல்லா நாட்டிலும் ராணுவம் இருக்கும். ஆனால் பாகிஸ்தானில் ராணுவமே பயங்கரவாதிகளாக இருக்கிறது. ஆக... பயங்கரவாதிகள் மீது எடுக்கப்படும் ஆயுத நடவடிக்கைகள் பாகிஸ்தான் மீது நடத்தியதாகவே அர்த்தம். முதல் நாள் இந்தியா நடத்திய தீவிரவாத முகாம்கள் மீதான தாக்குதலில் ஐந்து முக்கிய தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களுக்கு பாகிஸ்தான் அரசு தேசிய கொடி போர்த்தி அரசு மரியாதையோடு அடக்கம் செய்தது. அந்த அளவிற்கு தீவிரவாதகளை ஆதரிக்கும் நாடு பாகிஸ்தான் . சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் பாகிஸ்தான் வேறு தீவிரவாதம் வேறு கிடையாது. பாகிஸ்தான் ராணுவம் வேறு, தீவிரவாதிகள் வேறு கிடையாது. எல்லாம் ஒன்றே. இதுவரை நடந்தது அதிகாரபூர்வ நடவடிக்கை. இனி கொடுக்கப் போகும் அடி ஊமை அடியாக இருக்கும். பாகிஸ்தான் வாய் விட்டு அழ கூட முடியாது. சீராட்டி பாராட்டி வளர்த்த தீவிரவாதிகள் தூக்கப்படுவார்கள். பாகிஸ்தான் வேடிக்கை மட்டுமே பார்த்து கொண்டிருக்க முடியும். பாகிஸ்தானால் மெல்லவும் முடியாமல் சொல்லவும் முடியாத வகையில் சத்தம் இல்லா ஒரு யுத்தம் தொடரும் என்பது மட்டும் நிச்சயம். ஆனால் பாகிஸ்தான் திருப்பி தாக்கவும் முடியாது, பாகிஸ்தான் பொது மக்களுக்கும் எந்த தொந்தரவும் இருக்காது... சத்தம் இல்லா யுத்தம் ஒன்றிற்கு தயாராகி கொண்டிருக்கிறது பாரதம் என்பது தான் உண்மை... நல்லினி (11-5-2025 12.25 am IST approx.) ***************************** பஹல்காம் தாக்குதல் சம்பவம் நடந்து போர் பதற்ற சூழல் உருவாகிய இரண்டு நாட்களில் துருக்கி ராணுவ விமானம் ஒன்று பாகிஸ்தானில் தரை இறங்கியது நியாபகம் இருக்கும் என நினைக்கிறேன். துருக்கி பாகிஸ்தானுக்கு ஆயுதம் கொண்டு வந்து இறக்கியுள்ளது என்று செய்தி கசிந்த போது துருக்கி அதை அவசர அவசரமாக மறுத்தது. எங்கள் விமானம் எரிபொருள் நிரப்பவே பாகிஸ்தானில் தரை இறங்கியது என காரணமும் சொன்னது. உண்மையை எத்தனை நாள்தான் மறைக்க முடியும், ஒரு நாள் வெளியே வந்துதானே தீரும். பாகிஸ்தான் நேற்று முன் தினம் இரவு நம் நாட்டின் மீது ஏவிய ஐநூறுக்கும் மேற்பட்ட ட்ரோன்களை நமது இந்திய ராணுவம் வெகு லாவகமாக வான்வெளியிலேயே சுட்டு வீழ்த்தியது. அப்படி சுட்டு வீழ்த்தபட்ட ட்ரோன்களில் பெரும்பாலானவை வெடி குண்டுகளை தாங்கி வராமல் வெறும் ஸ்பை கேமேரக்களை மட்டுமே சுமந்து வேவு பார்க்க வந்தவை என்கின்றன ராணுவ செய்திகள். முன்னூறுக்கும் மேற்பட்ட ட்ரோன்கள் துருக்கி தயாரிப்பு. ஆக அந்த துருக்கி விமானம் பாகிஸ்தானிற்கு ஆயுதம்தான் கொண்டு வந்தது என்பது தெளிவாக தெரிந்து விட்டது. இனி மறைக்க ஏதுமில்லை. எனவே ஒன்று தெளிவாகிறது, இப்போது நம்மை எதிர்ப்பது பாகிஸ்தான் மட்டுமல்ல, அதை ஒரு கூட்டம் இயக்கி கொண்டிருக்கிறது. கடன் வாங்கி காலம் தள்ளும் பாகிஸ்தானுக்கு நம்முடன் நேரடியாக மோதும் பலமும் கிடையாது, தைரியமும் இல்லை. ஏற்கனவே சொன்னது போல பாரதம் தனது டிப்ளமேட்டிக் பாலிசியால் உலக நாடுகளின் ஆதரவை பெற்று வேகமாக வளர்ந்து வருவது சில நாடுகளுக்கு பிடிக்கவில்லை. எந்த இரண்டு நாடுகளுக்கு இடையில் சண்டையோ குழப்பமோ வந்தால் இரண்டு நாடுகளும் இந்தியாவின் பேச்சை கேட்கும் அளவிற்கு நம் பாரதம் மதிப்பு மிக்க இடத்தில் நிற்கிறது. இன்றைய காலகட்டத்தில் இரண்டு நாடுகள் சண்டையிட்டு கொள்ளும் போது அதில் சமாதானம் செய்யும் தகுதி கொண்ட ஒரே நாடாக நம் பாரதமும் அதன் சக்தி மிக்க தலைவர் மோடிஜியுமே முன் நிற்கிறார்கள். ஏனென்றால் பாரதம் மட்டுமே இது வரையிலும் எந்த நாட்டுடனும் தேவை இல்லாமல் அத்து மீறி வம்பு செய்ததில்லை, வலிய சென்று தாக்குதலும் நடத்தியதும் இல்லை. நாட்டாமை செய்யும் தகுதி கொண்டதாக கருத்தப்படும் நாடுகள் அனைத்தும் ஏதாவது ஒரு நாட்டுடன் தேவை இல்லாமல் உரசி கொண்டுதான் இருக்கிறது. எனவே அவர்கள் பஞ்சாயத்து பேச சென்றால் நீ யோக்கியமா என்ற எதிர் கேள்வி எளும். ஆனால் பாரதம் அப்படி இல்லை. பாரதத்தின் ஸ்திரமான அரசு, வேகமான வளர்ச்சியை பொறுக்க மாட்டாமலும், எப்போதும் கூலாக இருக்கும் பாரதத்தை சீண்டி எல்லா நாடுகளையும் போல போர் சூழலுக்குள் தள்ளும் ஏற்பாடுதான் இது. எந்தெந்த வழிகளில் எல்லாமோ சீண்டி பார்த்தார்கள். ராணுவ வீரர்கள் மீது மோதினால் கதைக்கு ஆகாது என்று அவர்கள் எடுத்த ஆயுதம் தான் பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தியது. மோடியிடம் போய் சொல் என்று சொல்லியதன் மூலம் வலிந்து போருக்கு அழைப்பு விடுத்தார்கள். இப்போதும் கூட நாம் தற்காப்பு நடவடிக்கையாக பதிலடி தான் கொடுத்து கொண்டிருக்கிறோமே தவிர அனாவசியமாக தாக்குதல் நடத்தவில்லை. இன்னும் பொது மக்கள் மீது சின்ன துரும்பு கூட விழவில்லை, ஆனால் ஒப்பாரி வைக்கிறது பாகிஸ்தான். ட்ரோன் தாக்குதலை நடத்தும் அதேசமயம் பயணிகள் விமானத்தை வானில் பறக்க விட்டு அதற்கு பின்னால் ஒழிந்து கொண்டு ட்ரோன் தாக்குதல் நடத்தும் கேவலமான யுக்தியையும் செய்து கொண்டிருக்கிறது பாகிஸ்தான். தாக்குதல் நடக்கும் போது என்ன வந்தாலும் சுட்டு வீழ்த்த வேண்டும் என்பது ராணுவ விதி. ட்ரோன்களை மட்டுமல்ல, எந்த விமானமாக இருந்தாலும் சுட்டு வீழ்த்த வேண்டும். அதுதான் முழுமையான பாதுகாப்பான தாக்குதல் நடவடிக்கை. ஆனால் பயணிகள் விமானத்தை பறக்க விட்டு அதன் மறைவில் ட்ரோன் தாக்குதல் நடத்தினால் பொது மக்கள் சாக கூடும் என நம் ராணுவம் அதை தவிர்க்க முற்படும் தளர்வில் ட்ரோன்களை வெற்றிகரமாக இலக்கை நோக்கி நகர்த்தும் ஈனத்தனமான நாடகத்தை அறங்கேற்றி கொண்டிருக்கிறது . இதில் இரண்டு லாபம். ட்ரோன் தாக்குதலை வெற்றிகறமாக்க முடியும். ஒரு வேளை பயணிகள் விமானம் தாக்குதலுக்கு உள்ளானால் அப்பாவி பொது மக்களை கொன்று விட்டது இந்தியா என உலக மனித உரிமைகள் அமைப்பில் நீலி கண்ணீர் வடித்து ஆதரவு திரட்டி கொள்ள முடியும். மொத்தத்தில் இந்தியாவிற்கு எதிரான நிலை கொண்ட நாடுகளின் முகமாக பாகிஸ்தான் இப்போது இயங்ககி கொண்டிருக்கிறது. இதையெல்லாம் அணு அணுவாக ஆராய்ந்து மிக மெதுவாகவும் நேர்த்தியாகவும், அதேசமயம் உறுதியாகவும் அடியெடுத்து வைத்து கொண்டிருக்கிறது நம் பாரதம். ஆக இது பாகிஸ்தானிற்கு மட்டும் புகட்டும் பாடமல்ல. இந்தியாவுடன் வாலாட்ட நினைக்கும் ஒவ்வொரு நாட்டிற்கும் விடுக்கப்படும் எச்சரிக்கை... தேசிய இலட்சினையில் மாற்றியமைக்கப்பட்ட கர்ஜிக்கும் சிங்கங்களின் அர்த்தத்தை ஒவ்வொரு இந்திய குடிமகனும் உணர்ந்து கொண்டிருக்கும் தருணம் இது... நல்லினி (10-5-2025 16.25 pm IST approx.) இந்தப் பதிவில் பொது நண்பர் திரு. மணியன் அவர்களின் பின்னூட்டம், அர்த்தச் செறிவுள்ளது. துருக்கி மற்றும் சீனா மட்டும் அல்ல... அமெரிக்கா மற்றும் ரஷ்யா உட்பட பல நாடுகளால் நமது வளர்ச்சியை தாங்கிக்கொள்ள இயலவில்லை. அமெரிக்காவின் ஒப்புதல் இல்லாமல் பஹல்பூர் தீவிரவாத தாக்குதலை பாகிஸ்தான் செய்யாது. IMF இன்று பாகிஸ்தானுக்கு அவசர நிதி வழங்கி உள்ளது. இது US ஒப்புதல் இல்லாமல் எப்படி நடக்கும்? ரஷ்யாவுக்கு தன் இராணுவ சாதனங்களை இந்தியாவிற்கு விற்க வேண்டும். இந்தியா இராணுவ சாதனங்களில் தன்னிறைவு அடைவது அவர்களுக்கு சிக்கல். சமீபத்திய கொழிஞ்சல் துறைமுகம் பயன்பாட்டிற்கு வந்தால், சிங்கப்பூர் மற்றும் இலங்கையின் வருமானம் பாதிக்கும். ரஷ்யாவிருந்து எண்ணெய் வாங்கினால், அரபு நாடுகளுக்கு பிரச்சனை.. எனவே வளர்ந்த அனைத்து நாடுகளும் அதிகாரப்பூர்வமாக இந்தியாவுடன் நல்லுறவை வளர்க்கும்.. மறைமுகமாக இந்தியாவிற்கு எதிராக செயல்படும். இது தான் உலக நாடுகளின் நிஜ முகம். திரு. மணியன் (from same post, almost same timezone as a follow up comment). ******************************************************

No comments:

Post a Comment