Sunday, July 19, 2015

ஒரு தலைப்புச் செய்தியும் சில குழப்பங்களூம்

ஒரு தலைப்புச் செய்தியும் சில குழப்பங்களூம் (டைரக்டர் விசு மன்னிப்பாராக!!)


Since Feb 10, 2015 via Facebook wall:

இந்தியா டுடே தமிழ்ப் பதிப்பு (04.02.2015) செய்தித் தலைப்பு:

ஜெயா ஜேட்லி சந்திப்பு

//லாகிரி வஸ்துக்கள் ஏதும் இல்லாமல் புகையிரதப் பாவனைகள் இல்லா ஆளரவமற்ற தனிமைச் சூழலில், கனிமொழி மெய்மொழி பேசும் பாவையர் அருகில் இல்லாமலேயே இந்த மாதிரி போதை வஸ்துக்கள் ஏதுமில்லா ஏகாந்தத்தில் தற்செயலாய் யோசிச்சதன் பலன்//:

ஜெயா ஜேட்லி சந்திப்பு, அவர் யாரை சந்தித்தார்?  அவர்தான் ஜார்ஜ் பெர்னான்டஸ் தலைமையில் இருந்த ஏதோ ஒரு ஜனதா தளம் கட்சியில் துணைத்தலவராய் இருந்தாரே, 10 அல்லது 15 வருஷம் முன்போ என்னவோ அவரைப் பற்றி தினசரி தினசரிகளில் தகவல் ஏதாவது வரும். அவர் கூட ஏதோ ஒரு அமைச்சரவையில் மத்தியில் அமைச்சராகக்கூட இருந்ததாக நினைவு.

அந்த ஜெயா யாரைச் சந்தித்தார்? சந்தித்த நபர் யார்?

ஓ, இது வேற ஜெயான்னா நம்ம அமிதாப்பச்சன் மனைவியா? ஜெயா பச்சனா? இல்லையா? ஜெயா பச்சன் இல்லைன்னா தங்கர் பச்சனா? தங்கர்னா நம்ம பொன்னர் சங்கர் கதையில தங்கர்னு யாராவது வந்தாங்களா?

பொன்னரா? பொன்னாரா? பொன்னார்னா பிஜேபி கன்யாகுமரியில கூட எம்பி தேர்தல்ல நின்னாரே, அவரா?

பொன்னரும் இல்லை, பொன்னாரும் இல்லை, பொன்முடியாரா? இல்லை பொன்முத்து ஐயாவா?  அவிங்களும் இல்லையா? பொன்முடி இல்லைன்னா முடிகொண்டானா? முடிகொண்டான் இன்னும் இருக்காரா? அவர் பேச்செல்லாம் சூப்பரா இருக்குமே? அவர் பேசினா தீப்பொறி பறக்குமே?

தீப்பொறின்னதும் ஞாபகம் வருது, தீப்பொறி ஆறுமுகமா? தீப்பொறியும் இல்லன்னா வேற எந்த ஆறுமுகம், நம்ம சிக்ஸ் முகம் சிக்ஸ்பேக் சிக்ஸ்முகமா? இந்த ஆறு படத்துல வடிவேலு கூட ஆறு தானே தேடறீங்கன்னு ஏதோ ஒரு நதிக்கரைக்கு போய் இந்த ஆறா, இல்லை எங்கிட்டோ நம்பர் ஆறு எழுதியிருக்குமே, அந்த ஆறைக் காட்டுவாரே, அதுவா? அதுவும் இல்லையா?

என்னங்க நீங்க, ஜெயாவும் இல்லேன்றிங்க, வேற யாரும் இல்லேங்கறீங்க? ஜெட்லின்னா நம்ம புரூஸ்லி மாதிரி சைனீஸ் படத்துலல்லாம் வருவாரே அந்த ஜெட்லியா? இல்லே, நம்ம நடிகர் ஜெட்லியா? அவரும் இல்லையா?

ஜெட்லி இல்லை அட்லியா? யாரு புதுசா ஒரு சின்னப் பையன் டைரக்டரா வந்தாரே அவரா? அவர்கூட ஒரு டிவி பொண்ணை ஜோடி நம்பர் ஒன்ல வந்த பொண்ணை கட்டினார்னு சொல்றாய்ங்களே, அவுங்களா?

என்னது அருண் ஜெட்லியா? அருண் ஷோரி தெரியும் அருண் பூரி தெரியும், அருண் சுப்ரமணியம் தெரியும், அருண் நேரு தெரியும், யாருங்க ஜெட்லி?

அருண் நேரு இல்லேன்னா, கமலா நேருவா, ஜவஹர்லால் நேருவா? மோதிலால் நேருவா? நேருன்னா நம்ம கே.என். நேருவா? இல்லன்னா கே.என். பாலகிருஷ்ணனா, அவரு ஒண்ணும் மத்தவா அளவுக்கு ப்ரபலம் இல்லையே, துக்ளக்லயும் விகடன்லயும் வாசகர் கடிதம் எழுதறவர் அவரையா சொல்றீய?

கே. என்.பாலகிருஷ்ணன் இல்லேன்னா சோ. பாலகிருஷ்ணனா, அவர்தான் போய்ட்டாரே? அப்ப சோ வா, அதாங்க நம்ம சோ. ராமசாமி, எடிட்டர் ஸார் அவரா? அவரும் இல்லையா, அப்ப பெரியார் ராமசாமியா? இல்லை டிராபிக் ராமசாமியா?

ஜேன்னு சொல்றிங்க, பழைய ரைட்டர் சிந்தனையாளர் தத்துவ ஞானி இருந்தாரா ஜே.கே. (ஜிட்டுன்னு சொல்வாய்ங்க) அவரா? ஜே.கே.ன்னதும் நினைவுக்கு வர்றது ஜெயகாந்தன் (ஜெ.கா.) அவரா இல்லை எழுத்தாளர் ஜெயமோகனா, இல்லை தினமணியிலயும் முக நூல்லயும் நெறையா எழுதுவாரே அந்த ஜெயாரா? அதாங்க ஜெயராமன் ரகுநாதன் அவரா?

ஓ, ஜெயான்னா நீங்க சொல்றது ஜெயமாலாவா, ஜெயசுதாவா, ஜெயகீதாவா, ஜெயமாலினியா, ஜெயபாரதியா, அதாங்க கன்னட நடிகை, தமிழ்ல கட சில படங்கள்ல நடிச்சிருக்காரே அந்த ஜெயாபாரதியா? இல்லை மாடிப்படி மாதுவோட ப்ரெண்டா லவரா வருவாரே நம்ம இருகோடுகள் ஜெயா அவங்களா?  அவங்களும் இல்லையா? இல்லை நம்ம ஜெயந்தியா? ஜெயந்தின்னா திருவான்மியூர் தியாகராஜா தியேட்டர் (எஸ் டூ) எதிர்ல இருக்கற ஜெயந்தியையா சொல்றீங்க?

ஜெயந்தி இல்லேன்னா, சாந்தி, கமலா, புவனேஸ்வரி, பத்மனாபா, அபிராமி, மஹாராணி, தேவி, தேவிபாலா, தேவிகலா, தேவிப்ரியா, இல்லன்னா ப்ரிய தர்சனி, திவ்ய தர்சனி, தேவதர்சனி, தேவயானி, இல்லேன்னா வேற யாரா இருக்கும்?

என்னங்க நீங்க, இவிங்களூம் இல்லைங்கறீங்க, அவிங்களும் இல்லைங்கறீங்க, பின்னே யாரைத்தான் சொல்றீங்க நீங்க? தியாகராஜனா? நம்ம மம்மட்டியான் தியாகராஜனா? இல்லை அவர் பையன் ப்ரசாந்தா?

இல்லே நம்ம பாரமவுண்ட் ஏர்வேஸ் தியாகராஜன், அவரை சொல்றீயளா? இல்லே தியாகுவா, கதையெல்லாம் கூட ஆனந்த விகடன்லயோ ஜீவியிலியவோ ஒரு காலத்துல எழுதினாரே அவரா?

இல்லே நடிகர் தியாகுவா? அவரும் இல்லையா? நடிகர் தியாகு இல்லைன்னா கராத்தே தியாகராஜனா? மேயர் எலக்சன்ல கூட ஒருவாட்டி நின்னாருல்ல? மேயர்ன்ன உடனே நினைவுக்கு வருது, நம்ம மா. சுப்ரமணியனா? இல்லை மேயர் சைதை துரைசாமியா? மேயர் ஸ்டாலினா?

ஸ்டாலின்னதும் நம்ம ரஷ்ய அதிபர் ஸ்டாலினையா சொல்றீய?

அவரும் இல்லையா? ரஷ்யால‌ யாரும் ஜெயா ஜெட்லின்னு யாரும் நான் கேள்விப்பட்டதில்லையே? ஒரே சிக்கலாயில்ல போயிக்கிட்டிருக்கு?

யாரோ ரெண்டு பேரு சந்திச்சுக்கிட்டாங்களாம், பேசினாங்களாம், அதை ந்யீஸ்ல வேற ஹைலைட்டா போட்டுட்டாங்க. ஆனா யாருன்னு சரியா ஒண்ணும் வெளங்கலியே? நாம இன்னும் நெறையா நியூஸ் படிக்கணும்போல இருக்கு, எங்கிட்டு டைம் இருக்கு?

ஒரு காலத்துல தி வீக், அவுட்லுக், இந்தியா டுடே (ஆங்கிலம், தமிழ்), பிசினஸ் டுடே, பிசினஸ் வீக், பிசினஸ் வேர்ல்ட், ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ், இந்தியன் எக்ஸ்பிரஸ்னு ரெகுலரா படிப்போம், இப்போ எங்கிட்டு நேரம் இருக்கு? நம்ம நேரம்தான் டையத்துக்கு மீல்ஸ், டைம் பாஸ்னு போயிக்கிட்டிருக்கே? இனிமே எங்கண பேப்பர் படிச்சு வெளங்கி பொது அறிவை தெளிவாக்கிக்கறது?

அடக்கடவுளே!!

No comments:

Post a Comment