Since 6th June 2015 from my Facebook wall:
=> சரி, உணர்ந்தாயே, அது உன்னில் இருந்தது என்று உனக்கு எப்படி தெரிந்தது? யார் சொன்னது? யார் சொல்லிக் கொடுத்தது?
=> உன்னில் இருந்ததை உன் அகம் அறியாமல் உன்னிடமிருந்து பெற்று உன்னை நிர்மூலமாக்கியது யார்?
=> உன்னிடமிருந்து பெற்றதை உனக்கே ஒரு சந்தைப் பொருளாய் கொடுத்து உன்னை சந்தியில் நிறுத்தியது யார்?
=> உன்னைநீயே உணராமல் புறத்தே தள்ளி வைத்தது யார்? எது? அந்தசூட்சுமம் என்ன? அந்த மாயவித்தை என்ன?
=> அந்தமாயம்தான் வர்த்தகமா? வணிகமா? பன்னாட்டு வியாபாரமா?
=> அவனுக்குதேவையானது இங்கே இருந்ததை அவன்உணர்ந்தான்
=> இங்குள்ளதைஇவர்கள் பகிர்ந்துண்டதை, பகிர்ந்து அனுபவித்ததைக் கண்டான்
=> இவர்களில் உள்ள பற்பல வேற்றுமைகளைக் கண்டான் (இனம், மொழி, கலாச்சாரம், பண்பாடு,பழக்க வழக்கங்கள் இத்யாதி)
=> இந்த பல்வேறு வேற்றுமைகளை மீறிய ஒற்றுமையை தனி மனித ஒழுங்கை, சமூகத்தை,சமூகக் கட்டுப்பாட்டை கண்டான்
=> இவர்களின் பலம், பலவீனம், ஒற்றுமை, வேற்றுமை,ஒருங்கிணைப்பு இவற்றை உடைத்தால்தான் தன் வர்த்தகம் பேணிக்காக்கவும் தான் வளர்ச்சியடையவும் முடியும், கூடவே தனக்கு வேண்டியதை எடுத்துக் கொள்ளவும் முடியும் என உணர்ந்தான்
=> உண்மை உணர்ந்தான், உள்ளம் தெளிந்தான், அறிவை பயன்படுத்தினான்
No comments:
Post a Comment