Sunday, July 19, 2015

நம்மை_நாம்_அறிவோம் (1)

Since 6th June 2015 from my Facebook wall:

நம்மை_நாம்_அறிவோம்_(தொடர்பதிவு)

இது ஒரு ஆறு பாகத் தொடர்.

கருப்பொருளின் வீச்சு, வீர்யம், தாக்கம், நீளம் கருதி ஆறு பாகங்களாகப் பகிர்ந்துள்ளேன்.

என்னப்பா, ஒரே போஸ்டா போடக் கூடாதான்னு யாரும் சிலாகிக்கக் கூடாது. ஒரே தொகுப்பாய் இருந்தால் நீளம் பக்கம் பக்கமாய் போகும், நீண்ட பதிவுகளை யாரும் படிப்பதும் கிடையாது, ஆர்வமும் குறைவு.

ஆங்கிலத்தில் போட்டால் 'தமிழில் போடேம்பா' என்கின்றனர் சிலர்.
தமிழில் போட்டால் 'எனக்கு தமிழ் படிக்கத் தெரியாது, ஆங்கிலத்தில் போடேன்பா' என்கின்றனர் வேறு சிலர்.

இந்தப் பதிவின் கருத்து உபயம் நேற்று நான் கண்ட ஒரு காணொளியில் தோன்றிய தாக்கம், என் கருத்தை முதலில் ஆங்கிலத்தில் ஒரே பதிவாய் அந்தக் காணொளியோடு பகிர்ந்தேன்.

'அறிவோம்_வாரீர்' இந்த இணைப்பியை (டேக்) அதன் வழி இந்தத் தொகுப்பின் மூலம் (அந்த ஆங்கிலக் காணொளியும்) காணலாம். 

அதன் தொடர்ச்சிதான் இந்தத் தலைப்பில் இதை இந்தத் தொடரில் தந்துள்ளேன்.

இதற்கு மேல் சொல்ல ஆயிரம் தகவல் உண்டு. நான் ஒன்றும் புதிதாய் சொல்லவில்லை, பற்பல சான்றோர் ஆன்றோர், நம்மில் வாழ்ந்தோர், வாழ்வோர் சொல்லியதுதான்.

கொள்வதும் கொள்ளாததும் அள்ளுவதும் கிள்ளுவதும் தள்ளுவதும் பார்ப்பவர் படிப்பவரின் உரிமை / பார்வை / தேர்வு.

அந்த காணொளி வீணொளியாய் எனக்குப்படவில்லை.
வானொலியாய் கேளொலியாய் இணையொளியாய் முக நூலொளியாய் பகிர ஆசைதான். அறிந்ததை தொகுக்கும் வல்லமை இருப்பினும், நேரம் காலம் வாய்க்க வேண்டும், மேன்மேலும் இதுகாறும் என் கருத்தில் உள்ள விடயங்களை பகிர்வதற்கு.

காலம் பதில் சொல்லும்!! காலம் வழிகாட்டும்!! காலம் செல்லும் பாதையில் செல்வோம்!!

நம்மை நாம் அறிவோம்
உண்மை நீயே உணர்
உன்னையறிய உலகம் சுற்று
அகம் புறம் அறம் மறம் இகம் பரம் முகம் வெளியே இல்லை
உன் முகம் அது? உன் முகம்எது ? உன் முகம் இது ?
=>அது இது எது இவற்றில் எதனில் அது இதுவாய் இருக்கிறது?
=>இம் மூன்றை உணர்ந்தால் உன்னை நீ அறிவாய்
=>கூடவே அதையும் நீ உணர்வாய்
=>அது என்பது இங்கு ஒரு குறியீடுஅவ்வளவே.
=>அது அவன், அவள், அவர், அவர்கள், என்று இருக்கலாம்
=>அவர்கள் யார்? எவர்? எங்கிருந்து வந்தனர்?
=> எதை உனக்கு தந்தனர்? எதை உன்னிடமிருந்து பெற்றனர்?
=> எதை உன்னிடமிருந்து எடுத்து உனக்கே தனதாய்த்தந்தனர்?
=> அதைப் பெற்று நீ என்ன கண்டாய்?உணர்ந்தாய்?
=> அதைப் பெற்றாய், சரி, எதை இழந்தாய்? எதை இழந்ததாய் உணர்ந்தாய்?

#நம்மை‍‍_நாம்_அறிவோம்

No comments:

Post a Comment