Sunday, July 19, 2015

வேலை தேடுதல் (தொடர்புச் சிக்கல்கள்) ஒரு பார்வை!!

From my Facebook wall, since 5th March 2015:

வேலை வாய்ப்பு தேடுவதில் உள்ள சிக்கல்கள், சங்கடங்கள், எதிராளி அதாவது வேலை தருபவரோ வேலை கிடைப்பதில் நமக்கு உதவி செய்வதாகச் சொல்லிக்கொள்பவர்கள் அல்லது உண்மையிலேயே உதவி செய்பவர்கள் சொல்லாமல் சொல்லும் சங்கதிகள், இத்யாதி விஷயங்கள் கொண்ட எனது பதிவு முக நூல் திரையில் விரைவில்!!

இதை, இது தொடர்பாக‌ என் அனுபவங்கள், அனுபவம் சார்ந்த என் எண்ணங்கள் என் பார்வையில் அல்லது ஒரு மூன்றாம் நபர் பார்வையில்  ஆங்கிலம் அல்லது தமிழில் எப்படி பகிர்வது என சுய முன்னெடுப்பு செய்து வருகிறேன்.

தன்னிலையிலிருந்து ஆக்டிவ் வாய்ஸிலா, மூன்றாம் நபர் ஒரு பார்வையாளர் அளவிலா என்று ஒரு கோணம் வேறு (இது ஒரு நாற்பரிமாண கோணத்தில் ஒரு கோணம்).

நாம எழுதறது ஒரு புலம்பல்ஸ் மாதிரியும் இருக்கக்கூடாது (உள்ளே இருக்கறது அப்பட்டமா வெளியே தெரிஞ்சுடுச்சுன்னா குட்டு வெளிப்பட்டுடுமே, ஓடினவன் ஓடியபடியே இருக்க, அகப்பட்டவன் பாடு மாதிரி ஆயிடும் என்னோட நிலைமை, ஹக்காங்!!)

எதிராளி படிப்பவருக்கு சுவாரசியமாவும் இருக்கணும் நம்ம கருத்தைப் படிச்சு கோடைக்கானல் சூசைட் ஸ்பாட்டுக்கு போற அளவுக்கு இருக்கக்கூடாது என்கிற உஷார் பக்கிரி லாஜிக்கும் கூடவே தோணும், தோணனுமே?

எதையாவது சொல்லப்போகில் ' நீ என்ன பெரிய அப்பாடக்கரா, அட்வைஸ் பண்ண வந்துட்டாரு'ன்னு யாரும் டபாய்க்கலாம், கலாய்க்கலாம்.

'உன்கிட்ட ஆயிரம் குப்பை இருக்கும்யா, அதை ஏன் பொதுவெளியில் கொட்டுகிறாய்' என்றும் ஏளனம் செய்வோர் உண்டு.

'எதை வேணுமானாலும் கொட்டு, நாங்கள் பார்த்துக்கொள்கிறோம், கொடுப்பது ஒன்றே உன் கடமை/உரிமை, அதை எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பது உனக்கு தேவையற்ற வேலை அதைப்பற்றி யோசிக்காதே' என்று சொல்வோர் சிலர்.

'அட யாருப்பா, அவனவனுக்கு ஆயிரம் ப்ரச்சினை, இவர் வேற சந்துல சிந்துபாடிக்கிட்டு? இல்லை, கிச்சுகிச்சு மூட்டிக்கிட்டு? என்று அங்கலாய்ப்பவர் சிலர்.

'அட, இப்படி ஒரு கோணம் இருக்கிறதா? ச்சொல்லவேயில்ல' என்று எதை விக்கிறாங்களோ  இல்லையோ 'ஊக்கு'விக்கிறவங்க சிலர்.

'ஊக்கு'விக்கறேன்கிற பேர்ல 'பின்'னூட்டத்தின் ரூபத்தில் குத்திக்கிழிப்பவர் சிலர்.

'இப்ப இன்னான்ற நீ, நாங்கள்ளாம் வேலை தேடணும்கிறியா இல்லை மூடிக்கிட்டு எங்கே இருக்கிறோமோ அங்கேயே இருக்கணும், வேலை மாத்தறேன், அது இதுன்னு வெட்டி வீராப்பு பேசிக்கிட்டு அலையக்கூடாது'ங்கறயா? அப்படின்னு சதாய்ப்பவர் சிலர்.

சீரியஸாச் சொன்னா 'என்னாடா இது, இவன் எப்பப் பார்த்தாலும் சீரியஸாவே எழுதறானே'ன்னு கோச்சுப்பர் சிலர்.

காமெடியா நகைச்சுவை கலந்து எழுதினா 'இந்த ஆளுக்கு விவஸ்தையே இல்லை, சீரியஸான மேட்டர்ல போய் காமெடி பண்ணிக்கிட்டு' அப்பிடின்னு புறந்தள்ளுபவர் சிலர்.

யார் எப்படி எடுத்துக்கொண்டாலென்ன, நம் கடன் கருத்துச் சொல்வது, புரிந்துகொள்வோர் புரிந்துகொள்ளட்டும், போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும் எனும் கோணத்தில் 'வாசகனின் கருத்துக்கு மதிப்பளிக்கிறோமோ இல்லையோ வாசகனுக்கு இதயத்தில் இடம் கொடுத்து அதன்படி சீராக சொல்ல வந்ததை சொல்லிவிட்டுப் போவோம்,

உள்ளத்தை அள்ளித் தராட்டாலும், உள்ளதை அள்ளித் தராட்டாலும், உள்ளதை கிள்ளி கொஞ்சம் பீராய்ஞ்சு ஸ்டேடஸோ நோட்ஸோ போட்டுட்டு போயிக்கிட்டே இருக்கணும், படிப்பவர்கள் பின்னிப் பெடலெடுக்கிறாங்களோ, நக்கல் நையாண்டி பண்றாங்களோ, பிக்கல் பீதாம்பரமாய் பிய்ச்சு உதறுறாங்களோ வாசகர் வட்டத்திற்கு விட்டுவிடுவோம் என்கிற தோரணையில் வருகிறது பற்பல ஹேஷ்யமான அதேவமயம் சுவாரசியமான பதிவுகள்.

பீடிகை பலமா இருக்கே, அனாசின், சாரிடான், பனடால், மனடால், பராசிட்டமால், ப்ரூஃபென், அயோடெக்ஸ், ஆக்ஸாயில் எல்லாம் ஸ்டாக் எடுத்து வச்சுக்கோங்க மக்கழே!!

(தொடரும்)

No comments:

Post a Comment