I shared this on my Facebook since 27th Jan 2015.
If someone is looking for an English version, I need time, to compile one. Please bear with me.
ப்ரெயின் எமுலேஷன் அது இதுன்னு புச்சு புச்சா வருதாமே? நம்மோட மூளையை அப்படியே ப்ரதி எடுத்து நமது நினைவலைகள், நினைவில் தங்கிய எச்சங்கள், காலப்போக்கில் நாம் நினைக்கும் எண்ணங்கள், அவ்வப்போது காலத்திற்கேற்ற மாதிரி நம்மில் தோன்றும் எண்ண மாற்றங்கள், ஒரே விஷயத்தில் 10 வருடம் முன்பு நாம் நினைத்தது இன்று அப்படியே இருக்கணும் என்கிற அவசியம் கிடையாது, எனவே நம் மூளையின் பதிவுகளை ப்ரதியெடுக்கும் மாதிரி ப்ரோடோடைப் ரெடியாகிக்கொண்டிருப்பதாக ஒரு விஞ்ஞானப் பக்கத்தில் கண்டது. இரு தினம் முன்பு பகிரிந்திருந்தேன்.
அதன் தொடர்பில் எனக்கு இன்று தோன்றியது இது.
காலம் காலமாய் நாம் நம் அனுபவத்தில் பற்பல நிகழ்வுகள், எல்லாமே பாஸிடிவ்வாக இருக்கணும் என்கிற அவசியமில்லையே?
சிறு வயது முதல் முதிர் பருவம் வரை காலம் மாற மாற, நமது கோட்பாடுகள், எண்ண ஓட்டங்கள் மாறும். அன்று பிடித்தது இன்று பிடிக்காமல் போகலாம். இன்று மிகப் பிடிக்கிறது என்று நாம் நினைக்கும் விஷயங்கள் ஒரு காலத்தில் இருந்திருக்கவே சாத்தியமில்லை, அப்பறம்தானே அதை அன்று நமக்கும் பிடித்திருந்ததா இல்லையா என்கிற கேள்வி வரும்.
மனித உறவுகளிடையே இருக்கும் சிக்கல்கள், சங்கடங்கள், மரபு சார்ந்த அல்லது மரபு சாரா வழிமுறைகள், அதைக் கடைப்பிடிக்கும் நடைமுறைகள், அந்தந்த காலத்திற்கேற்ப முன்பு நமக்கு மிகவும் பிடித்தவர்கள் காலப்போக்கில் நம் எதிரிகளாய் பகைவர்களாய் சிலசமயம் துரோகிகளாய்க்கூட மாறியிருக்கலாம். மீண்டும் அவர்களுடன் சுமுகமான அல்லது பாசிடிவ்வான உறவு மலரும் என்பது நிச்சயமற்றது. நிகழ்ந்தால் தேவலை, ஆனால் நிகழுமா தெரியாது.
அது போல நம் வீட்டிற்குள்ளேயே சில பல உறவு வட்டத்தில் நட்பு வட்டத்தில் நல்லதும் கெட்டதும் ஒப்புக்கொள்ளக் கூடியதும், கூடாததும், சகித்துக்கொள்ள முடிந்ததும் முடியாததும் என்று பல்வகை நிகழ்வுகள் அதன் தாக்கமாய் அந்தந்த நபர்களைப் பற்றிய நம் எண்ண ஓட்டங்கள் அதன் படிமங்கள் விழுமியங்கள் நம் மனதில் வெளிப்படையாய் தெரியாவிட்டாலும், ஆழ்மனதில் படிந்திருக்கும். சில பல சந்தர்ப்பங்களில் அந்தப் பழைய பதிவுகளின் கூறுகள் உள்ளீடுகள் வெளியே வரலாம், அவை பாஸிடிவ்வான பதிவுகளாய் இருந்திட்டால் பாதகமில்லை. இன்று நெகடிவ்வாகிப் போன சில விஷயங்களையும் அதுதொடர்பான பின் விளைவுகளையும் மறந்து நாம் நம்மை மாற்றிக்கொள்ள அந்தப் பழைய பாசிடிவ் பதிவுகள் உதவும், உதவ வேண்டும். நாம் நம் வாழ்வில் எஞ்சிய காலத்தை நிம்மதியாகவும், உள மனச் சிக்கல்கள் இல்லாமல் தொடர அந்தப் பாசிடிவ் மாற்றம் உதவும்.
ஆனால், இதற்கு நேர் எதிர்மறையான விஷயத்தை நோக்கினால், முந்தைய நெகடிவ் பதிவுகள், என்னதான் இன்று சிற்சில பாசிடிவ் நிகழ்வுகள் நடந்தாலும், பழைய பதிவுகளின் தாக்கம் நம்மை அப்படியே அலேக்காய்த் தூக்கிக்கொண்டு சென்று விடும். அந்தப் பழைய எண்ண ஓட்டங்கள், பதிவுகளின் விளைவாய் இன்று அத்திப்பூத்தாற்போல் நிகழும் பாசிடிவ்வை அந்த பழைய நெகடிவ் பாதிப்புக்கள் ஒண்ணுமில்லாமல் ஆக்கிவிடும்.
கண்டங்கள் 6 அல்லது 7 உள்ளன. ஆசியா ஆப்பிரிக்கா அன்டார்டிகா, அமெரிக்கா (தென் மற்றும் வடக்கு உள்பட), ஆஸ்திரேலியா, ஐரோப்பா, ஆர்ட்டிக் இது மட்டுமன்றி ஓஷியானா, ஆஸ்ட்ரலேசியா அது இதுன்னு புதுப் புது வார்த்தைப் ப்ரயோகங்கள் வருகின்றன.
அது மாதிரி இந்த அம்னீசியான்னு இருக்கே? நம்ம முன்னாள் மௌன குரு பிரதமர் அல்லது முன்னாள் துணைப் பிரதமர் இவர்களில் ஒருவருக்கு அல்லது இருவருக்குமோ செலக்டிவ் அம்னீசியா இருந்ததாக அரசியல் வட்டாரத்தில் கிண்டலாய் சிலர் சொல்லி மீடியாவில் படித்ததுண்டு.
அந்த மாதிரி செலக்டிவ் அம்னீசியா இந்த நெகடிவ் எண்ணங்கள், சித்தாந்தங்கள், இவற்றை அப்படியே மறந்து போற மாதிரி ஏதாவது இந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்தால் தேவலை.
பழசை எல்லாமே மறந்துவிட்டால் என்ன, ஒரேயடியாய்? அப்படிக் கூட கேட்கலாம். பழைய நல்லதுகள் பாசிடிவ் பதிவுகள் மறந்துவிட்டால் இன்று நாம் வாழும் நாளில் கூட வாழ்பவர்களையே அடையாளம் தெரியாமல் கோமா ஸ்டேஜுக்கு போகும் சாத்தியம் ஏற்படுமே? அதுவம் வேண்டாம்.
செலக்டிவ் அம்னீசியா மாதிரி நெகடிவ் மட்டும் நாம் மறந்துபோய்விட்டால், நேற்று எப்படி இருந்திருந்தாலென்ன? நாளை எப்படி இருக்கப்போகிறதோ என்னவோ, யார் அறிவார்? நாளையைப் பற்றி நாளை பார்த்துக்கொள்ளலாம். இன்று பாசிடிவ்வாக மட்டுமே இருக்க முடிந்தால், பழையன கழிந்து, புதியன நல்லது மட்டுமே தங்கி? அதுக்குத்தான் ஆன்மீகம், தியானம், யோகா முதலிய டெக்னிக்குகள் இருக்கிறதே எனச் சொல்லலாம். ஆனால் நாம் நம்மைப் பண்படுத்திக்கொள்ள வாழ்வில் எல்லா நாளூமே பாசிடிவ்வா இருக்க முடிந்தால் ப்ரச்னையே இல்லையே?
என்ன, நான் தெளிவாச் சொல்றேனா? பேராசைப் படுகிறேனோ? அத்தனைக்கும் ஆசைப்படு என்கிறார் ஒரு குரு. ஆசையை அறவே அறு என்கின்றனர் பிறிதொரு குருமார்கள். இது, இந்த ஆசை எந்த வகையில் வரும்?
Basically I don't want an emotional Dust Bin, but a Recycle Bin, so we can our Inbox always free from worries, free from negative traits, free from anything unsolicited for a human being. Can we achieve that?
If someone is looking for an English version, I need time, to compile one. Please bear with me.
No comments:
Post a Comment