Sunday, July 19, 2015

நாம்_எங்கே_போகிறோம்? எது ஜனநாயகம்? (3)

Since July 17th 2015 as shared on my Facebook wall:

இந்த நாட்டில் எதற்குத்தான் வரியில்லை? 'சுலப் சுச்சாலய்' (Sulab Swachalay) என்று பொதுக் கழிப்பிடம் செல்வோரிடம்தான் இங்கு 12.36% (இன்று 16% ஆகிவிட்டது, நாளை 20% ஆகலாம்) வசூலிக்கப்படவில்லை. அந்த கழிப்பிட நிர்வாகம் செய்பவர் அந்த கான்டிராக்டை எடுப்பதற்கு அவர் செலவு செய்யும் முதலீடுக்கு அதே 12.36% வரி உண்டா, பகவான் ஜாந்தா ஹை!! 

[பகவான்? கோன் ஹை பகவான்? ஐஸா கோயி நஹை, ஹம் மே ஸே கோய்பி பக்வான்கோ ஜாந்த்தா நஹி ஹை!! ஹம் பகுத் அறிவு ஹை!! ஹமாரா பகுத் அறிவு போல்த்தா ஹை, கி, கி, கி, (ஹி, ஹி, ஹி என்று படிப்பவர் அர்த்தப்படுத்திக்கொண்டால் கம்பெனி பொறுப்பல்ல!!) பக்வான், யானி, கடவுள், அப்படி யாரும் உண்டு, இல்லை என்கிற ஆன்மீகத் தேடலுக்குள் இந்தப் பதிவு செல்லவில்லை. மையக் கருத்து அதுவல்ல.].

குடிமகன் சம்பளப்பட்டியலில் இருப்பவன் (பே ரோல்) அவனிடம் ஈட்டிக்காரன் போல் முதலிலேயே வருமான வரி பிடித்தம் செய்தபின்னர்தான் சம்பளமே அவன் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது, அல்லது காசாக கொடுக்கப்படுகிறது.

வருமான வரி ஏய்க்கும் எத்தனையோ பெருந்தனக்காரரை, கார்ப்பரேட் முதலாளிகளிடம் இந்தக் கட்டுப்பாட்டை விதிக்காத சட்டம், அரசு முறை, ஒரு நாட்டின் குடிமகனை நம்பாமல் முதலிலேயே வரிவிதித்து அவன் செல்கிற இடமெல்லாம் அந்த வரி இந்த வரி என்று தீட்டி வசூல் செய்து ஜனவரி பிப்ரவரியில் அவனிடம் காசில்லாத நேரத்தில் அதில் இன்வெஸ்மென்ட் செய்தால் வரிவிலக்கு, இதில் வரிவிலக்கு என்று ஒரு பொய் வியாபாரம் இங்கு நடக்கிறதே, Anybody cares?

அது மாதிரி சிறு முதலீடு குடிமகன் செய்யும்போது வரிவிலக்கு தரும் அரசு, பிறகு என்ன செய்கிறது? அல்லது செய்யப்போவதாய் அவ்வப்போது பாவ்லா பூச்சாண்டி காட்டுகிறது?  அதையே மெச்சூரிட்டிக் காலத்தில் காசாக்கும்போது வரி உண்டு என்று ஒரு அராஜகச் சட்ட நடைமுறைகள் வந்துள்ளதாக அறியப்படுகிறதே ? குறிப்பாக பி.எப். எனப்படும் பிராவிடன்ட் பன்ட் காசாக்கும்போது? தெரிந்தவர்கள் கூறலாம். (இதனை நான் இங்கு மிகைப்படுத்திக் கூறவில்லை, ஆதாரம், லிங்க் என்று கேட்காதீர்)

லைப் இன்சூரன்ஸ் முதலீட்டிற்கு ஆரம்பத்தில் வரி கிடையாது. அதை காசாக்கும்போது மெச்சூரிட்டி காலத்தில் வரி வசூலிக்கணும் என்று நம் அண்ணாச்சி சிதம்பரம் அம்பலத்தார் ஐடியா கொடுத்ததாய் அவர் ஹார்ட் வோர்டில் படித்த எக்கனாமிக்ஸ் அப்படிச் சொல்லிக்கொடுத்ததாய் எங்கிட்டோ படித்த நினைவு. அதாவது, ஒருவன் சேமிக்கிறான் எனில் அவனைச் சிறுகச் சிறுகச் சேமிக்க விட்டுவிடு. பொழைச்சுப் போகட்டும். மொத்தமாய் அவன் அந்தச் சேமிப்பை காசாக்கி அவன் புள்ளைக் குட்டிக்கு எதோ ஒரு கல்யாணமோ கார்த்திகையோ கருமாதியோ பண்ணும்போது காசாகக் கேட்பானே அப்போது அவனிடம் ஈவு இரக்கம் இல்லாமல் வரியாகப் பிடுங்கு என்று ஐடியா கொடுத்ததாய் எங்கேயோ என்றோ படித்த நினைவு. தெரிந்தவர்கள் கூறலாம். (இதனையும் நான் இங்கு மிகைப்படுத்திக் கூறவில்லை, ஆதாரம், லிங்க் என்று கேட்காதீர்).

பொதுவாய் பிசினஸ் செய்திகள் தலைப்புச் செய்திகள் இவற்றை அவதானித்து வந்தாலே உண்மை விளங்கும்.

அதே அரசு ஒரு குடிமகனுக்கு இந்த முறையில் ஏன் அரசு நிர்வாகம் செய்யக்கூடாது? 

அ) 'நீ உன் சம்பளத்தை எடுத்துக்கொண்டு போ, உன் குடும்பத்தை முறையாய் காப்பாற்று, கல்வி சுகாதாரம் என்று முறையாய் செலவு செய்
ஆ) செலவு செய்தது போக மிச்சம் மீதி இருந்தால் உன் உபரி வருமானத்தை முதலீடு செய் (ஆயுள் காப்பீட் இத்யாதி).
இ) இந்த அரசு உன்னை நம்புகிறது, இந்த ஆண்டுக்குரிய உன் வருமானத்திற்கு அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டிற்குள் வருமானம் குறித்த ரிட்டர்ன்கள் தாக்கீது செய்.
ஈ) அடுத்த காலாண்டிற்குள் இந்த அரசு அலசி ஆராய்ந்து உனக்கு முறையான நேர்மையான வரி விதிக்கும் அதை அடுத்த அரையாண்டிற்குள் நீ அரசுக்கு 6 மாத காலத்திற்குள் வரியை அரசு கஜானாவில் கட்டி விடு என்று ஏன் இந்த அரசு சொல்வதில்லை?

இ) அப்படி அவன் நியாயமாய் நேர்மையாய் கட்டுவான் என்று இந்த அரசு குடிமகனை ஏன் நம்பவில்லை? அப்படி நம்பாத அளவுக்கு அவனை நேர்மை தவறி வாழும் அளவுக்கு அவனிடம் வரி வசூல் கிட்டத்தட்ட அவனது சரி பாதி வருமானம் வரியாகவே போகிறதே ( நேரடியாகவோ மறைமுகமாகவோ). அப்படி சட்டம் இயற்றும் வகையில் அரசு நிர்வாக நடைமுறைகளில் வழிமுறைகள் ஐ.ஏ.எஸ். ஐ.சி.எஸ். ஐ.ஆர்.எஸ். என்று பல்துறை நிர்வாக அமைப்பு இருக்கிறதே, அதில் அந்த அதிகாரிகளுக்கு அவர்கள் பணிக்காக பயிற்சி பெறும்போது ஏன் சொல்லிக்கொடுப்பதில்லை? அப்படி பயிற்சி செய்யணும் பயிற்றுவிக்கணும் என்று ஏன் இந்த அரசு சட்டம் இயற்றவில்லை? இந்த நாட்டில் சட்டங்களுக்கா பஞ்சம்? பத்தோடு பதினொன்று, அத்தோடு இன்னொன்று ஒரு சட்டம் இருந்துவிட்டுப் போகட்டுமே?

தன்னுடைய குடிமகனை நேர்மையாக வாழவிடாமல் அவனை நேர்மையற்ற செயலை செய்யும் அளவுக்கு ஊக்குவிக்கும் சட்டவியல் நடைமுறைகளைக் கொண்ட ஒரு நாடு நாசமாய்த்தான் போகும்.

பன்னாட்டு நிதி முனையம் இன்ன பிற பன்னாட்டு நிதி முதலீடுகளை செய்பவர்களையும் அவர்கள் மூலம் இங்கு கார்ப்பரேட்
நிர்வாகம் செய்யும் நிறுவனஙகளுக்கு மக்கள் வரிப்பணத்தை கொடுக்கும் அரசு அவர்களை நம்பும் அரசு ஏன் தன் குடிமகனை நம்புவதில்லை ?

(to be continued)

No comments:

Post a Comment