Sunday, July 19, 2015

சொல்வனம் (சொல்லாமலே) (3)

Since April 3, 2015, from my Facebook wall:

ஒரு ஆணோ பெண்ணோ சிறுவயதில் தான் வளரும் குடும்பஅல்லது சமூகச் சூழலின் தாக்கத்தில்தன்னை மெருகேற்றிக் கொள்கிறான் / கொள்கிறாள்.

தலைமுறையாய்ஆண்டு அனுபவித்த குடும்பங்களில் கூட சமூக பொருளாதாரமாற்றங்கள் அதன் தாக்கங்களின் அடிப்படையில்பெரும் பணக்காரனாக இருந்தவர்களின் வாரிசுகள் கூட காலப்போக்கில் வறுமையின்கோரப்பிடியில் சிக்கித் தவித்தவர்கள் பலர்உண்டு.

பிறந்ததுமுதலே வறுமையின் தாக்கத்தில் வளர்ந்த குழந்தைகள் பிற்காலத்தில்காசு பணம் என்று தங்கள்கைகளில் வரும்போது சிறு வயதில் தமக்கேற்பட்டவறுமை அல்லது ஏழ்மை சார்ந்தஅனுபவத்தில்  காசுபணத்தின் அருமை பெருமை தெரிந்துமுறையாய் சேமித்து தொடர்ந்து பொருளீட்டிதத்தம் குடும்பத்தை வாழ்வியல் நடைமுறைகளில் மெதுவாய் ஒரு 30 40 ஆண்டுகளில்பெரும் பணக்காரனாகாவிட்டாலும் ஓரளவுக்கு சுயச் சார்புள்ளவனாய் வளர்கிறான்.இதுதான் கீழ் அல்லது இடைநிலை சமூக அளவில் நாம்காணும் யதார்த்தம்.

அப்படிப்பொருளீட்டி, சேமித்து தானும் வளர்ந்துதன் குடும்பம் உற்றம் சுற்றம் என்றுதன்னை நம்பியிருப்பவர்களை கட்டிக்காத்து, அவரவருக்குரிய கடமைகளை நிறைவேற்றுகிறான். கூடவேஎதிர்கால வாழ்விற்கும் முதுமைக்கும் தேவைப்படும் என்று சிறுகச் சிறுகச்சேமிக்கிறான்.

வேறு சிலரோ, ஏழ்மையின் காரணமாய்காசு பணம் கையில் வந்ததும்,தாறுமாறாய் காசு பணத்தைச் செலவழித்துஅனுபவிப்பதிலேயே தன் வாழ்க்கையைத் தொலைக்கின்றனர்.இடையில் குடும்பத்தைக் கவனிக்கவோ எதிர்காலத்திற்குச் சேமிக்க வேண்டும் என்கிறமனோபாவம் இன்றியோ தான் தோன்றித்தனமாய் வாழ்ந்து பிற்காலத்தில் சேமிப்பும்இல்லாமல் முதுமையில் மீண்டும் வறுமையில் உழல்கிறான்,பருவத்தே பயிர் செய் என்கிறஉணர்வில்லாமல் சேமிக்காததன் காரணத்தை தாமதமாய் உணர்கிறான்,தானும் அழிந்து தன் சந்ததிகளையும்நட்டாற்றில் விடுகிறான்.

நான் சொல்ல வந்த விஷயம்தாண்டி ஏதோ ஒரு போக்கில்சமூக வாழ்வியல் நடைமுறைகளை விளக்கம் செய்ய அவசியம்ஏன் வந்தது?

இது போல் ஒரு மனிதன்தன் வாழ்வியல் போக்கில் வாழும்போது குடும்பத்தோடுஇணைந்து வாழும் வாய்ப்பு பலருக்கும்வாய்ப்பதில்லை. தொழில் நிமித்தம் குடும்பத்தைவிட்டு பிரிந்து வாழ்ந்தால் பலஊர் தேசம் சென்று பொருளீட்டும்நோக்கில் செல்லும் தலைவன் அல்லதுதலைவி ஒரு 20 அல்லது 30 ஆண்டுகள்செலவிட்டு உழைப்பின் பலனை அனுபவிக்கிறானோ இல்லையோகுடும்பத்திற்காக உழைக்கிறார்கள், தங்களால் இயன்றவரை தத்தம்கடமையை இந்த சமூகத்திற்கு ஆற்றுகிறார்கள்,இதுதான் காலம் காலமாய் இருக்கும்வாழ்க்கை.

இடையே, அன்பை வெளிப்படுத்துவது என்பதில்அவரவர் போக்கில் ஒரு வித்தியாசம்வருகிறது. சிலர் பொருளீட்டும் நோக்கில்காலத்தை செலவிட்டு மனைவி/கணவன், தந்தை/மகன், தந்தை/மகள்,தாய்/மகன், தாய்/மகள்என்று பற்பல உறவுகளில் அவரவர்தத்தம் அன்பை உரிய காலத்தில்முறையே வெளிப்படுத்த உரிய அவகாசம் அனைவருக்கும்கிட்டுகிறதா?

என்னதான்தகவல் தொழில் நுட்பம் வளர்ந்திருந்தாலும்,எத்தனை பேர் முறையாய் அவற்றைபயன்படுத்துகின்றனர். சிலர் சேமிப்புக்கும் சிக்கனத்திற்கும்கண்டிப்பிற்கும் முக்கியத்துவம் கொடுத்து அளவோடு பேசிகுடும்பத்தோடு உள்ள தொடர்பை வைத்துக்கோள்கின்றனர். சிலர்அதிகம் பேசிப் பேசியே தொலைபேசிக்கட்டணம்அது இது என்று காசைத்தொலைக்கின்றனர்.
வெகு தொலைவில் பிரிந்து வாழும்குடும்பத்தினர் அவ்வப்போது தத்தம் அன்பையும் ஆதரவையும்அரவணைப்பையும் காலத்தே வெளிப்படுத்திட விடுமுறைக்காலம்ஒரு வசந்த காலமாய் வாய்ப்புவழங்கும்.

ஒரு சிலரது தொழில் சார்ந்தநிர்ப்பந்தங்கள் கட்டுப்பாடுகளில் தலைவனுக்கு விடுமுறை கிட்டும்போது பிள்ளைகளுக்குவிடுமுறை கிட்டாது. பிள்ளைகளுக்குக் கிட்டும்போது தலைவனுக்கு தலைவிக்கு விடுமுறை கிட்டாது.

தொழில் குடும்பம் என்று இருக்கிற இருபெரும்சங்கிலிகளை இந்தக் கயிற்றில் ஊசலாடும்அன்பு எனும் அரக்கன் ஒருசமயத்தில் தருணத்தில் நம்மை ஏதோ ஒன்றில்தான்கவனம் செலுத்துமாறு பணிக்கிறான். சிலருக்கு கல்வியறிவு குறைவாய் இருப்பின் அவரவர்தகுதிக்கேற்ப கிடைக்கும் பணியில் அமர்கிறார்கள். தொழில்அல்லது குடும்பம் இரண்டையும் பாலன்ஸ் செய்து அன்பைவெளிப்படுத்தும் மார்க்கத்தை சரிவரச் செயல்படுத்த இயலாமல்மனிதன் தவிக்கிறான். 

No comments:

Post a Comment