Sunday, July 19, 2015

படிப்பும் வேலை வாய்ப்பும் 10 விதக் கட்டளைகள்

32 வருட அனுபவத்தில் இதைப் பகிர்கிறேன். Original thought since 2015-16. 

என் அனுபவத்தை எழுதப்போனால் முக நூலில் நோட்வடிவில் எழுதினால் குறைந்தபட்சம் 50 நோட்கள் எழுதணும். யாரும்படிக்கப்போவதில்லை. பெரிசு எதுவோ பினாத்துது,தன் எரிச்சலைக் கொட்டுகிறது என்று உதாசீனப்படுத்தப்படும் சாத்தியம் உண்டு.

எனவே,10 பாயிண்டுகளாய் தருகிறேன். நடைமுறை யதார்த்தம் சொல்கிறேன்.கொள்வோர் கொள்க:

1) நம்முடையஅரசு அல்லது தனியார் கல்லூரிகளின்தரைமட்ட நிலவரம், அரசாங்கங்களின் தொடர்கண்ணயர்ச்சி கவனிப்பில்லாமை, சிஸ்டம் சரியில்லை, சிஸ்டம்மாறாத வரை நாம் உருப்படப்போவதில்லை என்று பற்பல காரணிகளைஆராயாமல் காரியத்தில் கண் வைக்கணும் (சிஸ்டம்மாறித்தான் நாமெல்லாம் கடைத்தேறணும் எனில் சமுத்திரத்தில் அலைஓய்ந்தபின்னர்தான் குளிப்பேன் என்கிற மனோபாவத்தில்தான் முடியும்).

2) சற்றுபொருளாதாரம் சரியாய் இருந்து ஃபீஸ்கட்டும் வாய்ப்புள்ளவர்கள் தத்தம் தகுதிக்கேற்ப வசதிக்கேற்பபிடித்த பாடம் பிடித்த ஊரில்பிடித்த கல்லூரியில் படிக்கலாம்.

3) ஏழ்மைச்சூழலில் உள்ளவர்கள் கிடைத்ததைப் பிடித்துக்கொண்டு முன்னே நடைபோட வேண்டியதுதான்.கடன் வாங்கி பணம் கட்டிபடித்திருந்தால் படிப்பில் கவனம் வைத்து நல்லமுறையில் தேர்ச்சிபெற ஆவன செய்யணும். ஆவரேஜுக்கும்மேல் மார்க் வாங்க முயற்சிக்கணும்.  எனக்குஒண்ணும் வராது, நானெல்லாம் ஆவரேஜுக்குமேலே தேறமாட்டேன் என்கிற 'தன்னம்பிக்கையில்லாதவர்கள்' பொறியியல் அல்லதுமருத்துவம் என்று கனவு காண்பதைவிட்டுவிட்டு சுய தொழில் அல்லதுகுடும்பத் தொழில் அல்லது தனக்குஎது நன்றாக வரும் என்பதைஅறிந்து அதில் கடைத்தேற வேண்டும்.வேறு வழியில்லை.


4) பணக்காரப்பின்னணியோ ஏழ்மைப் பின்னணியோ, கேம்பஸ்இன்டர்வியூவில் ஒண்ணும் கிடைக்கலை என்றுவாளாவிருந்துவிட்டு 2 அல்லது 3 வருடங்கள் வெட்டியாய்பொழுதைப் போக்கிவிட்டு பின்னர் ஓண்ணும் கிடைக்கலைஎன்று புலம்புவதில் அர்த்தமில்லை.

பணக்காரவீட்டுப் பிள்ளைகளுக்கு மாற்று வழி சொல்லஆளிருக்கும், மார்க்கமிருக்கும். பிழைத்துக்கொள்வார்கள்.
அவர்கள்கூட, முறையான வேலையிலோ தொழிலிலோதேறாவிட்டால் திருமணச் சந்தையில் விலைபோகமாட்டார்கள்.

ஏழை வீட்டுப் பிள்ளைகள் வங்கிக்கடன்கட்டவே தாவு தீர்ந்து போயிடும்.இதில் வேண்டியது கிடைக்கலை, அதனால் வெட்டியாய்த்தான் சுற்றுவேன்என்றிருந்தால் உற்றம் சுற்றம் பெற்றோர்அனைவரின் சொல்பேச்சு கேட்கணும்; கூடவே படித்த மற்றவர்மேலே போய்விட்டதைப் பார்த்து பொறாமை ஆற்றாமைநெகடிவ் சிந்தனைகள் தலைக்கேறும். தேவையா?

5) ஒரு வேலை கிடைத்தபின், பிடித்ததோஇல்லையோ அதில் முன்னேற ஆவனசெய்யணும். அரசு வேலை கிட்டினால்ஜாப் செக்யூரிட்டி இருக்கும், ஆனால் தொடர்ந்து தனதுதகுதியை மாற்று வழியில் சாஃப்ட்ஸ்கில்ஸ் எனப்படும் மேலாண்மை, நிர்வாகவியல், அவரவர் துறை சார்ந்தமேற்படிப்பு படிக்க தொடர்ந்து முயற்சிக்கணும்.ஒரு வேலை கிடைத்துவிட்டது, இதிலேயேசாகும்வரை காலத்தை ஓட்டிவிடுவேன் என்றுவாளாவிருந்தால் அரசு வேலை கூடநிலைக்காது. தனியார் வேலை பற்றிச்சொல்லவே வேண்டாம்.

6) ஒரே இடத்தில் நீண்ட காலம் இருப்பதும் தவறு (இவன் எதுக்கும் சரிப்பட்டு வரமாட்டான் என்கிற அளவுகோல் வந்துவிடும், உங்கள் பயோடேட்டா யாரால் பரீசீலிக்கப்படுகிறதோ அங்கு)

அதற்காக அடிக்கடி இடம் மாறுவதும் தவறு (இவன் ஒரு இடத்திலும் தங்க மாட்டான், இவனுக்கு ஏன் நாம் வேலை கொடுக்கணும்? என்கிற கேள்வி வரும்).

ஒரு இடத்தில் 18 முதல் 24 மாதங்கள் என்பது ஒரு சராசரியான ஒப்புக்கொள்ளக்கூடிய கால நேர இடைவெளி அவசியம். நாம் நம்மை செம்மைப்படுத்திக்கொள்ளவும், சந்தைக்கேற்றவாறு நம்மை ஒருங்கிணைத்து நம் திறமைகளை வளர்த்துக்கொள்ளவும் இது உதவும்.
  
தனியார்துறையாய் இருந்தால் உள் நாடோ வெளிநாடோ தொடர்ந்து பல்வேறு வேலை வாய்ப்புக்களுக்குவிண்ணப்பித்து 18 மாதங்களுக்கு ஒரு முறை பணிமாற்றம் பெற முயற்சி செய்வதுஇன்றைய காலகட்டத்தில் வெகு அவசியம். கிட்டினால்பதவி உயர்வு கூடவே வருமானஉயர்வு என முன்னேறலாம். ஒன்றும்கிடைக்காவிட்டாலும் கூட, தன்னுடைய சந்தைவிலை என்ன என்கிற குறிப்பாவதுகிடைக்கும். அதற்கேற்றாற்போல் தன்னை தன் திறமைகளைமெருகேற்றிக்கொள்ள சந்தைக்கு ஏற்றவாறு தன்னை தயார்ப்படுத்திக்கொள்ளஅதன் மூலம் ஒரு வழிபிறக்கும்.

7) பணி நிரந்தரம் வாய்த்தால் யாருக்குக் கசக்கும்? இந்தக் காலத்தில் யாரும்எந்தப் பணியிலும் தொடர்ந்து சாகும் வரை நிலைக்கமுடியாது. முறையான பயிற்சி, தேர்ச்சி,அதன் மூலம் வரும் வாய்ப்பைசரியாய் பயன்படுத்திக்கொள்பவர்கள்தான் வாழ்க்கையில் முன்னே முன்னே எனச்செல்ல முடியும்.

8) கிடைப்பதுபோதும், என்று குண்டுச் சட்டியில்குதிரை ஓட்டும் எண்ணம் கொண்டவர்கள்வேலையிலும் மற்றுமல்ல வாழ்க்கையிலும் கூட பின் தங்கிவிட வாய்ப்பு அதிகம். சுற்றியுள்ளவர்கள்சம வயதுள்ள நபர்களுடன்ஒப்பீடு செய்தே உங்களை உண்டுஇல்லை என்று ஆக்கிவிடுவார்கள். ஒருசமயம் 'ஏன்டா இந்த வாழ்க்கைவாழ்கிறோம்' என்று தற்கொலை அல்லதுஓடிப் போகும் மன நிலைக்குத்தள்ளப்படலாம். இதைத் தவிர்க்க தொடர்முயற்சியில் முன்னே செல்ல வேண்டும்.

9) யார்எது சொன்னாலும் செய்தாலும் தனக்கு எது வருமோஅதை அனுமானித்து அதன் பேரில் வேலைஅல்லது தொழில் முயற்சி செய்யணும்,புலியைப் பார்த்து பூனை சூடுபோட்டுக்கொண்டது மாதிரியான அடுத்தவரைப் பார்த்து காப்பி பேஸ்ட்செய்தால் வீண்தான். எல்லாரும் எல்லாத் துறையிலும் வெற்றிபெறுவதில்லை. ஓரளவுக்கு நேரமும் அதிருஷ்டமும் கைகூடிவரும்போதுதான் வாய்ப்புக்களே நமக்கு வருகின்றன. அதையும்பயன்படுத்திக்கொள்ளாமை என்பது நம் தவறாய்முடியும்.

10) முடிந்தால் ஆர்வமிருப்பின், ஆர்வம் இல்லையேல் ஆர்வம் மேற்கொள்ள ஆவன செய்து, இயன்றவரை தாய் மொழி ஆங்கிலம் தவிர பிற மொழிகளில் வெறுப்பில்லாமல் கற்றுக்கொள்ளும் மனோபாவம் வேண்டும். பன் மொழிப் புலமை இருப்பவர்கள்தான் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் காலூன்ற முடியும். இதில் உணர்ச்சி பூர்வமாய் முடிவெடுப்பதால் நஷ்டம் நமக்குத்தான், அடுத்தவருக்கில்லை.    

கடைசியாய்தன்னம்பிக்கையை விடக்கூடாது. எது வந்தாலும் சமாளிப்பேன்,எந்தச் சூழலிலும் தாண்டி வெளியே வருவேன்,என்கிற சுய புரிதலும், சமூகம்சார்ந்த புரிதலும் இருந்தால் ஒருவன் வெற்றி பெறுவதில் தடையேதுமில்லை.

No comments:

Post a Comment