Sunday, July 19, 2015

சொல்வனம் (சொல்லாமலே) (2)

From my Facebook wall since 3rd April 2015:

மனித வாழ்க்கையில் ஒருவன் அல்லது ஒருவள்ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தன் கருத்தை ஏதோஒரு ரூபத்தில் வெளிப்படுத்துகிறான்.

அன்பு எனும் ஒரு வார்த்தைபல வழிகளில் வெளிப்படுத்தப்படுகிறது.

ஒரு தாய் தன் அன்பைபிள்ளைகளிடத்தில் அவர்கள் எப்படி இருந்தாலும்,தன் வாழ் நாள் முழுவதும்பாசம் வைத்திருக்கிறாள். தாயன்புக்கு நிகரான அன்பு இந்தஉலகில் வேறெதுவும் இருந்துவிட இயலாது.

தாயன்புகிட்டாமல் வளரும் பிள்ளைகள் பின்னாளில்உகந்த பராமரிப்பு அன்பின்மை காரணமாய் ஒரு பண்பானபிள்ளையாய் வளர்வது அபூர்வம்.

ஒரு தந்தையின் அன்பு என்பது தலைமுறைதலைமுறையாக எந்தக் காலத்திலும் சரியாகவெளிப்படுத்த முடியாத ஒன்றாகவே பெரும்பாலும்இருந்து வந்துள்ளது.

விரும்பியோவிரும்பாமலோ தெரிந்தோ தெரியாமலோ அறிந்தோஅறியாமலோ அறியாமையினாலோ தந்தையின் அன்பு என்பது பரிபூரணமாய்உணரப்படாமலேயே போய் விடுகிறது.

அன்பை வெளிப்படுத்துவதில் முறையான அல்லது முறைசாராக்கல்வியறிவு இங்கு அவசியப்படுவதில்லை, அதுஒரு காரணியாய் இருக்க அவசியமில்லை.

கல்வியறிவுபெற்றவர்கள் கூட, பல ஊர்,பல தேசம் கடந்துவாழ்வியல் அனுபவம் வாய்க்கப்பெற்றவர்கள் கூடதத்தம் பிள்ளைகளிடம் தங்கள் உள்ளார்ந்த அன்பைசரியாக சரியான தருணத்தில் வெளிப்படுத்தினார்களாஎனில் இல்லை என்று தான்சொல்ல வேண்டும்.

எந்த ஒரு சமூகத்திலும், ஒருஆணாகப்பட்டவன் காலம் காலமாய் பள்ளிஅல்லது கல்லூரிக்காலத்திற்குப் பின் ஒரு பணிஅல்லது தொழில் நிமித்தம் தன்னைத்தயார்ப்படுத்திக்கொண்டு தகுதிப்படுத்திக்கொண்டு 'திரைகடலோடியும் திரவியம் சேர்' என்றுஅதில் கண்ணும் கருத்துமாய் இருக்குமாறுஆயத்தப்படுத்தப்படுகிறான்.

ஒரு பெண்ணாகப்பட்டவள் காலம் காலமாய் அதுபோல்வீட்டைக் கவனிக்கவும், வீட்டைப் பராமரித்துப் பேணிக்காக்கவும்பிள்ளைகளை வளர்க்கவும், ஆண் அல்லது தலைவன்கொணரும் திரவியத்தை முறையான வழிகளில் பயன்படுத்திதற்காலம் எதிர்காலம் என்று குடும்ப வாழ்க்கையில்கவனம் செலுத்தி தன்னையும் தன்குடும்பத்தையும் காக்க தலைவனுக்கு உடன்பாடாய்ஏற்றாற்போல் பாங்காய் இருக்குமாறு பெண்ணானவள்பணிக்கப்படுகிறாள்.

காலப்போக்கில்உலகளாவிய அனுபவங்கள், கல்வி கேள்விகளில் தேர்ச்சி,வளர்ச்சி, சமுதாய மாற்றங்கள், சமூகபொருளாதாரச் சூழலில் வரும் மாற்றங்களையொட்டிஇந்த ஆண் பெண் விகிதாச்சாரஅளவுகோல் மாறுபடுகிறது.

முன் தலைமுறைகளில் பெண்ணுக்கு உலக அனுபவம் குறைவு,ஆணுக்கு உலக அனுபவம் அதிகம்,அவன் பொருளீட்டுகிறான் என்கிற கூடுதல் தகுதிஅது இது என்று ஆண்மகனைமுன்னிறுத்தியே இந்தச் சமூகம் வாழ்ந்திருக்கிறது.பெண்ணானவள் அடுக்களை அல்லது இல்லம்தாண்டிய சமூகச் சூழலில் பயிற்றுவிக்கப்படாமல்அவளைத் தனிமைப்படுத்தி வைத்திருந்தாலும், பெண்ணுக்கு அவர்தம் தகுதி, இடம்,பண்பு, குணம் சார்ந்த கோட்பாடுகளின்அடிப்படையில் ஆணாகப்பட்டவன் பெண்ணை ஒரு தந்தையாகவோகணவனாகவோ பிள்ளையாகவோ பேரனாகவோ அரவணைத்து ஆதரவாய்அனுசரணையாய் இருக்கணும் என்று சொல்லிச்சொல்லி வளர்க்கப்பட்டுகாலம் காலமாய் இந்தச் சமூகம்ஆணாதிக்கச் சமூகம் பார்க்கப்படுகிறது.

பெண்ணுக்கும்ஒரு மனம் உண்டு, உணர்வுகள்,உணர்ச்சிகள், ஏக்கங்கள், அபிலாஷைகள் உண்டு, அவளுக்கும் ஒருஆண்போல் பள்ளி அல்லது கல்லூரியென்றுபோய் பட்டறிவு பெற்று ஆணுக்குச்சமமாக கல்வியறிவு, தொழில் என்று உலகஅனுபவம் வேண்டும் என்று பற்பலகாலங்களில் பலர் முன்னின்று உணர்த்தியோவாழ்ந்து காட்டியோதான் பெண் தானும் வாழ்க்கையில்ஆணுக்கு நிகராக சாதிக்க முடியும்,உலகியல் நடைமுறைகளில் அனுபவம் பெற முடியும்,சில நேரம் ஆணுக்கு மேலாகவேசாதிக்க முடியும் என்று பலர்சாதனைப் பெண்களாக நம்மில் வாழ்ந்துள்ளனர்,வாழ்ந்து வருகின்றனர்.

(தொடரும்)

No comments:

Post a Comment