As shared in my Facebook wall since 10th Feb 2015
2035 December 27one fine morning at Koneri Raja Puram (near Kumbakonam) a small village inThanjavur District.
காட்சி 1 டிசம்பர்27, 2035
தாத்தா:இத்தனை வயசுல என்னை ஏன்டாஅலைக்கழிக்கறேள்? என்னால முடியலேடா.
பேரன்: இல்லே தாத்தா, எவ்ரிதிங் வில் பி ஆல் ரைட். அம்மா ஈஸ் தேர், ஐ ஆம் தேர், வி வில் டேக் கேர் ஆப் யூ. டோன்ட் ஒர்ரி தாத்தா
(மனசுக்குள்: இந்த தாத்தாவுக்கு எப்படிபுரிய வைக்கறதுன்னே தெரியலையே. அவருக்கும்காதும் கேட்க மாட்டேங்கறது, கண்ணும்சரியாத் தெரியறதில்ல)
தாத்தா:உங்களுக்கே தெரியும்டா கண்ணா, என்னால இவ்ளோல்லாம்ட்ராவல் பண்ண முடியுமா? இங்கேருந்துமெட்ராசுக்கு போணும், அதுவும் ராத்திரிமெயில்ல, அப்பறம் அங்கேருந்து என்னவோசொன்னியே விசாவா, பாஸ்போர்ட்டா, என்னதுஅது? அங்கேருந்து ந்யூ யார்க் சிக்காகோஎன்னவோ சொன்னாய்? எந்த ஊரு அது?
பேரன்: ஆமாம், தாத்தா, சிகாகோ.
தாத்தாவின்மகள் வருகிறார். என்னடா, தாத்தாவை சரிப்பண்ணிட்டியா?ராத்திரி கிளம்பலாமா?
பேரன்: அம்மா, என்னால முடியலம்மா. நாலு நாளா தாத்தாக்கிட்ட பேசிப்பேசி இந்த பழைய மாதிரி இவாள்ளாம் பேசறாளே, இந்தப் பாஷ எனக்கு நல்லா தொத்திடுத்து, No, No, தொத்திண்டுடுத்து. என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் கிண்டல் பண்றாம்மா.
அம்மா: அதுக்கென்னடா இப்போ? தொத்திடுத்து அது இதுன்னு அபிஷ்டு மாதிரி பேசிண்டு? (அடடே, நானே இதெல்லாம் பேசி கிட்டத்தட்ட 40 வருஷம் ஆச்சுடா, எனக்கும் தொத்திண்டுடுத்தே!)
பேரன்: தட்ஸ் வாட் ஐஸேம்மா. நீயே சொல்றே 40 வருஷம் ஆச்சுன்னு. 4 நாள்ல இதை நான் பிக்கப் பண்ணிண்டுட்டேன். ஆனா, என் ப்ரெண்ட்ஸ் என்னை நக்கல் பண்றாம்மா. தேயார் டீஸிங் மீ, வெரி மச் எம்பராஸிங்மா.
அம்மா: அப்பிடில்லாம் ச்சொல்லக்கூடாதுட்டயா. ஒரு காலத்துல தாத்தா,அவரோட அப்பா, மாமா, தாத்தால்லாம் இப்படித்தான் வீட்டுல வெளியில கோயில்லன்னு பேசிப்பா. நாமல்லாம் 40 வருஷம் முன்னாடி அமெரிக்கா போயிட்டோம். நோக்குத் தெரியாதுடா கண்ணா,உங்க தோப்பனார்............
பேரன்: தோப்பனாரா, அது யாரும்மா? புதுசா இருக்கே, இங்கே வயல்ல ஐமீன் பேடி ஃபீல்ட்ல தலைல வொயிட்டா எதையோ சுத்திண்டு வொர்க் பண்ணிண்டு இருந்தாரே, நீ கூட நம்ம வில்லேஜ் ஃபார்மிஸ்ட்னு சொன்னியே, அவராம்மா?
அம்மா: அடக் கடவுளே, தோப்பனார்னா உங்க அப்பாடா, ஐ மீன், யுவர் டாட். உங்க அப்பா 45 or 50 வருஷம் முன்னால எஞ்ஜினிரிங் மெட்ராஸ் எம் ஐ டில படிச்சுட்டு அவரோட ப்ரெண்ட் யாரோ சொன்னாருன்னு அமெரிக்கால நாஸால இருக்கற டிவிஷன்ல அவரை கூப்டதா சொல்லி இங்கேருந்து அமெரிக்கா போயிட்டார். உங்க அப்பா அந்தக் காலத்துல சரியான ப்ரில்லியன்ட்டாம்டா. நேக்கு கல்யாணம் ஆன புதுசுல அதெல்லாம் ஒரு எழவும் தெரியாது. நான் பத்தாம் கிளாஸ் ஃபெயில், மேலே படிக்கலே.
பேரன்: ஏம்மா, நீ படிக்கலேங்கறே, எப்படி பிட்ஸ்பர்க்ல நாலு ஸ்கூல்ல விசிட்டிங் ப்ரொபசரா இருக்கே? ஒண்ணும் புரியலயே?
அம்மா: அந்தக் கதையெல்லாம் அப்பறமா சாவகாசமா சொல்றேன், இப்போ தாத்தாவை கூட்டிண்டு ஸ்டேஷனுக்கு வர வேலையைப் பாரு.
பேரன்: ஓக்கே, ஐ'ல்டேக் கேர்.
(to be continued)
No comments:
Post a Comment