Sunday, July 19, 2015

Movie Review: Shamithab (Hindi) (Tamil review)

Since Feb 15, 2015, from my Facebook wall:

ஷமிதாப் என் பார்வையில்!!

சீனி கம் மற்றும் பா என்கிற இரு நல்ல திரைப்படங்களைத் தந்த டைரக்டர் பால்கியின் மூன்றாவது படைப்பு 'ஷமிதாப்'

விஸ்கி பஸ்கி எடுக்கும்போது உஸ்கி ஜான் ச்சலி ஜாயேகி!!

விஸ்கியோட வீர்யம் தூக்கணும்னா தண்ணி கொஞ்சம் கொறச்சுத்தான் கலக்கணும்!!

விஸ்கி ஒருவனை அந்த நிமிடம் மேலே மேலே தூக்கிச்செல்லும், தண்ணி ஒண்ணும் பண்ணாது!!

போதை ஏறணும்னா விஸ்கிதான் வேணும், தண்ணி இருந்து ப்ரயோஜனமில்லை!!

ஆனா, யதார்த்தம் புரியும்போது, விஸ்கி ரொம்ப ரொம்ப தூக்கலாகி அதோட எஃபெக்ட் ஜாஸ்தியாகி போதை தலைக்கேறியாச்சுன்னா தண்ணி கொடுத்தாத்தான் போதை இறங்கும்!! நம்மளோட ஈகோங்கற விஸ்கி இறங்கணும்னா அமைதி, புரிதல், பரஸ்பர இருப்பு, புரிந்துணர்தல், ஒருவருக்கு மற்றவர் எந்த அளவுக்கு முக்கியமானவர் அல்லது முக்கியமானது என்பது அனுபவத்தில்தான் தெரியும், புரியும்.

இதை உணர்ந்துகொள்ள இதை மிகச் சரியாக சொல்லி வந்துள்ள ஒரு அருமையான திரைப்படம் ஷமிதாப்.

ஒருவரது குரல்வளம் சரியில்லை என்று ஆல் இந்தியா ரேடியோவில் கொல்கத்தாவில் ஒரு காலத்தில் நிராகரிக்கப்பட்டவர், பின்னாளில் பிக் பி என்கிற மிகப் பெரிய ஆளுமையாக பாலிவுட்டின் ஷெஹன்ஷாவாக உலக இரங்கில் இந்திய சினிமாவின் குரலாக முன்பு நிராகரிக்கப்பட்ட அந்தக் குரல்தான் ஓங்கி ஒலித்தது, அந்தக் குரலுக்கென்று ஒரு ஆளுமை உள்ளது. இது அமிதாப் பச்சன் போல் பச்சன் என்கிற பிம்பம்.

இவர் மேலே மேலே வர பாலிவுட்டில் எத்தனையோ சிந்தனைச் சிற்பிகள் சாதனையாளர்கள் இயக்குனர்கள் படைப்பாளிகள் பின்னணியில் இருந்தனர். மன்மோகன் தேசாய், சிப்பி சகோதரர்கள், பின்னாளில் இவரது ஆளுமையை பயன்படுத்திக்கொண்டு தத்தம் பெயர்களை பாலுவிட்டில் கோலோச்சியவர்கள் ஒரு பெரிய லிஸ்ட் என்றாலும் இவரது வளர்ச்சியில் பின்னணியில் இருந்த முக்கியமானவர்கள், கே.ஏ. அப்பாஸ், மனோஜ்குமார், யஷ் சோப்ரா, குறிப்பிட்டுச் சொல்ல சிலர் மட்டுமே இப்போது என் நினைவில்.

பெங்களூரில் ஒரு சாதாரண பஸ் கண்டக்டராக வாழ்க்கையைத் துவக்கி இன்று தென்னகத்தின் தன்னிகரில்லா சூப்பர் ஸ்டாராய் பரிமளிக்கும் சிவாஜி ராவ் கெயிக்வார் (எ) ரஜினிகாந்த் என்கிற பிம்பம். இதில் கே.பாலசந்தர் என்கிற இயக்குனரின் படைப்பாளியின் பின்னணி இருந்தது.

ஆரம்ப காலத்தில் திரையுலகில் துணை இயக்குனராய் நடன இயக்குனராய் பரிமளித்து வாழ்க்கையைத் துவக்கி பின்னாளில் நல்லதொரு ஆசான் (பாலசந்தர்) இவருக்கு வாய்த்தார். கமல் என்கிற ஒரு மாபெரும் ஆளுமையைக் குறிப்பிட்டுச் சொல்ல இனி ஒன்றும் இல்லை.

ரஜினி கமல் இருவருக்குமே பின்னர் மகேந்திரன், பாரதிராஜா, பாலாஜி, பஞ்சு அருணாச்சலம், ஏவிஎம், சிவாஜி பிலிம்ஸ் என்று பற்பலர் இவர்களது  வளர்ச்சியில் பின்னணியில் இருந்தார்கள். இருவருமே தத்தமது சொந்த பிரபல்யம், திறமையால் தத்தம் பாணியில் ஆளுமையில் மேன் மேலும் மெருகேறி முன்னேறினார்கள். ஒருவர் சூப்பர் ஸ்டார் எனில் மற்றவர் சூப்பர் ஆக்டர் என்கிற பிம்பத்தை எல்லாம் தாண்டி உலக நாயகன் என அறியப்படுகிறார்.

அமிதாப் ரஜினி என்கிற மாபெரும் இரு பிம்பங்கள் அவர்தம் அடிப்படை ஆரம்பகால வரலாறு இவற்றை உள் நோக்கினால் அவர்கள் பின்புலம் என்ன, எந்தத் தகுதியில் அவர்கள் அடையாளப்படுத்தப் பட்டார்கள் என்றெல்லாம் யோசித்தால் அவர்கள் மிகப் பெரிய பலவீனம் பின்னாளில் மிகப் பெரிய பலமாகப் பரிமளித்தது என்றால் மிகையல்ல. திரையுலகப் பின்புலமும் கிடையாது. ஓரிரு பலவீனமாக குணாதிசயங்கள் அல்லது உடற்கூறியலில் நெகடிவ்வாக சொல்லப்பட்ட காரணிகளையும் மீறி வந்தார்கள். வென்றார்கள்.

பிற்காலத்தில் உருவமும் இல்லை, ஹீரோ மெட்டிரியலும் இல்லை, சொல்லிக்கொள்ளும்படியான எந்தவொரு ப்ளஸ்ஸும் இல்லை, தந்தை ஒரு தயாரிப்பாளர், இயக்குனர், அண்ணன் ஒரு இளம் இயக்குனர் என்கிற பின்புலத்தில் ஒரு சிறு விடலைப் பையனாய் தம் வாழ்வைத் துவக்கி இன்று சுமார் 10 12 ஆண்டுகளில் தமிழ்த் திரையுலகில் ஒரு முக்கியமான வளர்ந்துவிட்ட ஒரு கலைஞன் தனுஷ் என்கிற முரளி என்கிற கார்த்திக்ராஜா.

இதை அடிப்படையாக யூகித்தால் ஒரு கலவை செய்தால் அதில் கமல் என்கிற உதவி இயக்குனரின் அபிலாஷகள் அவர் நடிகராகாமல் இருந்தால் என்னாவாகியிருப்பார் என்கிற யூகத்திற்குள் செல்லாமல் அதையும் ஒரு காரக்டராக சேர்த்து முப்பெரும் காரணிகளை ஒரு தீமாகக் கருத்துருவாக்கி ஒரு சாதனை வரலாறு படைக்கப்பட்டிருக்கிறது. அதில் தனுஷ் என்கிற நடிகனையும் அக்ஸரா ஹாஸன் என்கிற அதே கமலின் பெண் அறிமுகம் வேறு. இளையராஜா என்கிற இன்னொரு காரணிவேறு சேர்ந்தால்? கேட்கவா வேண்டும். 

தனுஷுக்கு இந்தியில் ஒரு நல்ல அறிமுகமாய் இந்தித் திரைப்பட உலகில் காலூன்ற இது ஒரு நல்ல வாய்ப்பு. ரஞ்சானாவில் ஏற்கெனவே அறிமுகமாகிவிட்டிருந்தாலும், இந்தப் படம் அவருக்கு ஒரு நல்ல பேரைப் பெற்றுத் தரும் என்பது என் கருத்து.

அதுதான் ஷமிதாப். என்ன ஒரு நடிப்பு!! என்ன ஒரு திறமை!! அமிதாப்பும் தனுஷும் சரியான தேர்வாய் நல்ல நடிப்பில் வந்துள்ளது. இருவரும் படம் முழுவதும் தந்துள்ள பங்களிப்பை கடைசி சில காட்சிகளில் அக்ஸரா ஹாசன் தூக்கிச்சாப்பிட்டு விடுகிறார். முதல் படம், அறிமுகம் என்கிறதையெல்லாம் தாண்டி புலிக்குட்டிக்கு நீந்தக் கற்றுக்கொடுக்கணுமா ?

2015ல் வேறு எந்தத் திரைப்படமும் இதைவிடத் தூக்கலான விஷயங்களைத் தாங்கி வந்தாலொழிய இதுவரை வந்துள்ள படங்களில் அமிதாப் அல்லது தனுஷ் இருவருக்குள் ஒருவருக்கு சிறந்த நடிகராக தேசிய அளவில் விருது வருமளவுக்கு ஸ்கோப் உள்ள படம் இது. ஒருவர் சிறந்த நடிகராய் தேர்ந்தெடுக்கப்பட்டால் மற்றவர் சிறந்த துணை நடிகர் என்கிற தகுதியைப் பெறும் அளவுக்கு இருவரும் நன்றாக நடித்துள்ளனர்.

சிறந்த புது அறிமுகம் என்கிற தகுதியில் அக்சரா வரலாம், வாய்ப்புண்டு. எல்லாம் இதைவிட ஒரு நல்ல படைப்பு வேறு யாரும் தராவிட்டாலொழிய.

கொடுத்த காசுக்கு தியேட்டரில் சென்று பார்க்க ஒரு நல்ல படம் என்பேன்.



No comments:

Post a Comment