Sunday, July 19, 2015

நம்மை நாம் அறிவோம் (6)

திரை கடலோடியும் திரவியம் தேடு என்றனர் ஆன்றோர் அன்று.
கரை காணாக் கடல் இருந்தும் குடிக்க நீர் இல்லை இங்கு, ஏன்?

குடிக்க நீர் இல்லை எதனால்? நீர் இங்கிருந்து அங்கு சென்றதாலா? 

நீவிர் அவிகளால் (பரிசுத்த) ஆவிகளாக்கப்பட்டதால் அவிகள் ஆவிகளாகி, ஆவின் பாலை பாலையிலிருந்து வந்தவன் சோலையில் இருப்பவனுக்கு பால்மணம் மாறாப் பச்சிளம் பாலகனுக்கும் பாலகிக்கும் அந்த ஆவின் பாலை பாலில்லாமல் பால் மணம் அறியாமல் சோலைவனத்தை பாலைவனமாக்கும் அப்பால் எப்பால் இப்பால் இவற்றை குறிப்பால் உணர்த்த ஒருப்பால் உண்ட தனபால் வருவானோ, கோபால் வருவானோ, அன்பால் சொல்வானோ, என்பால் வருவானோ, பண்பால் கொள்வானோ, எண்பால் இணைவானோ முப்பாலும் பயின்றாலும் எப்பாலும் பகிராமல் ஏமாப்பால் இறுமாப்பால் கருவேம்பால் அடிப்பானோ? 

வீழும்பால் எழும்பால் அழும்பால் பாலில்லா பாலகன் அழும்பால் அதன் ஏக்கத்தின் வீழ்ச்சிப்பால் அது கொணரும் தழும்பால் மழும்பால் எப்பால் உணர்வீரோ இல்லையோ கரும்பால் இனிப்பால் துவர்ப்பால் உவர்ப்பால் காராப்பால் காராம்பசுவின் பால் உந்தன் அகப்பால் புறப்பால் மறப்பால் அறப்பால் அறிவீரோ, முறைப்பால் உணர்வீரோ? இல்லையேல் காமப்பால் பகிர்ந்தே காணாம்பால் ஆகிவிடுவீரோ?

சொற்பால் பொருட்பால் குறிப்பால் இவன் பகர்வதை பகிர்வதை இவன்பால் பற்பாலோர் பயின்றனரே, பகிர்ந்தனரே, பகர்ந்தனரே, வாழ்ந்து காட்டினரே, ஒருவரா, இருவரா ?

ஆதிசங்கரர்
அகத்தியர்
ஸ்ரீ அரவிந்தர்
பரமாச்சார்ய ஸ்வாமிகள் (பெரியவாள்)
பட்டினத்தார்
திருமூலர்
அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர்
நாயன்மார்கள், ஆழ்வார்கள்
ஆண்டாள், மீரா
ரமணர்
சின்மயானந்தர்
தயானந்த சரஸ்வதி
வேதாத்திரி மகரிஷி (ஸ்வாமிகள்)
ஸ்ரீதர அய்யாவாள் (முதலான ஆன்மீகப் பெரியோர், உபாசனாகுலத் திலகங்கள்)
கிருபானந்த வாரியார்
அவ்வைப்பாட்டி
திருவள்ளுவர்
தொல்காப்பியர்
இராமகிருஷ்ணர்
விவேகானந்தர்
திலகர்
கோகலே
மகாத்மா காந்தி
இராஜாஜி
சர்தார் பட்டேல்
பாரதி
பாரதிதாசன்
வ வே சு
உ வே சா
மீ ப சோ
ம போ சி
கி வா ஜ‌
லா ச ரா
கல்கி
முத்தையா (கண்ணதாசன்)
அரங்கராஜன் சீனியர் (வாலி)
அரங்கராஜன் ஜூனியர் (சுஜாதா)
எம்.எஸ். உதயமூர்த்தி
நம்மாழ்வார் (இயற்கை விஞ்ஞானி)
அப்துல் கலாம்
(மற்றும் பலர்)
இவர்களில் சிலர் மீதும் அவர்தம் கொள்கை வாழ்வியல் நெறிமுறைகளில் பலருக்கும் ஐயப்பாடுகள், மாற்றுக்கோணச் சிந்தனைகளின் வழி நிறை குறைகளூம் இருக்கலாம் (அவரவர் பார்வையில்). எனில், அவர்கள் கூறிய நல்லனவற்றைக் கொள்வோமே?

காலம் பதில் சொல்லும்!! காலம் வழி காட்டும்!! காலப்போக்கில் நாம் உணர்வோம்!! 

No comments:

Post a Comment