Showing posts with label Social Responsibility. Show all posts
Showing posts with label Social Responsibility. Show all posts

Sunday, July 19, 2015

நாம்_எங்கே_போகிறோம்? எது ஜனநாயகம்? (3)

Since July 17th 2015 as shared on my Facebook wall:

இந்த நாட்டில் எதற்குத்தான் வரியில்லை? 'சுலப் சுச்சாலய்' (Sulab Swachalay) என்று பொதுக் கழிப்பிடம் செல்வோரிடம்தான் இங்கு 12.36% (இன்று 16% ஆகிவிட்டது, நாளை 20% ஆகலாம்) வசூலிக்கப்படவில்லை. அந்த கழிப்பிட நிர்வாகம் செய்பவர் அந்த கான்டிராக்டை எடுப்பதற்கு அவர் செலவு செய்யும் முதலீடுக்கு அதே 12.36% வரி உண்டா, பகவான் ஜாந்தா ஹை!! 

[பகவான்? கோன் ஹை பகவான்? ஐஸா கோயி நஹை, ஹம் மே ஸே கோய்பி பக்வான்கோ ஜாந்த்தா நஹி ஹை!! ஹம் பகுத் அறிவு ஹை!! ஹமாரா பகுத் அறிவு போல்த்தா ஹை, கி, கி, கி, (ஹி, ஹி, ஹி என்று படிப்பவர் அர்த்தப்படுத்திக்கொண்டால் கம்பெனி பொறுப்பல்ல!!) பக்வான், யானி, கடவுள், அப்படி யாரும் உண்டு, இல்லை என்கிற ஆன்மீகத் தேடலுக்குள் இந்தப் பதிவு செல்லவில்லை. மையக் கருத்து அதுவல்ல.].

குடிமகன் சம்பளப்பட்டியலில் இருப்பவன் (பே ரோல்) அவனிடம் ஈட்டிக்காரன் போல் முதலிலேயே வருமான வரி பிடித்தம் செய்தபின்னர்தான் சம்பளமே அவன் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது, அல்லது காசாக கொடுக்கப்படுகிறது.

வருமான வரி ஏய்க்கும் எத்தனையோ பெருந்தனக்காரரை, கார்ப்பரேட் முதலாளிகளிடம் இந்தக் கட்டுப்பாட்டை விதிக்காத சட்டம், அரசு முறை, ஒரு நாட்டின் குடிமகனை நம்பாமல் முதலிலேயே வரிவிதித்து அவன் செல்கிற இடமெல்லாம் அந்த வரி இந்த வரி என்று தீட்டி வசூல் செய்து ஜனவரி பிப்ரவரியில் அவனிடம் காசில்லாத நேரத்தில் அதில் இன்வெஸ்மென்ட் செய்தால் வரிவிலக்கு, இதில் வரிவிலக்கு என்று ஒரு பொய் வியாபாரம் இங்கு நடக்கிறதே, Anybody cares?

அது மாதிரி சிறு முதலீடு குடிமகன் செய்யும்போது வரிவிலக்கு தரும் அரசு, பிறகு என்ன செய்கிறது? அல்லது செய்யப்போவதாய் அவ்வப்போது பாவ்லா பூச்சாண்டி காட்டுகிறது?  அதையே மெச்சூரிட்டிக் காலத்தில் காசாக்கும்போது வரி உண்டு என்று ஒரு அராஜகச் சட்ட நடைமுறைகள் வந்துள்ளதாக அறியப்படுகிறதே ? குறிப்பாக பி.எப். எனப்படும் பிராவிடன்ட் பன்ட் காசாக்கும்போது? தெரிந்தவர்கள் கூறலாம். (இதனை நான் இங்கு மிகைப்படுத்திக் கூறவில்லை, ஆதாரம், லிங்க் என்று கேட்காதீர்)

லைப் இன்சூரன்ஸ் முதலீட்டிற்கு ஆரம்பத்தில் வரி கிடையாது. அதை காசாக்கும்போது மெச்சூரிட்டி காலத்தில் வரி வசூலிக்கணும் என்று நம் அண்ணாச்சி சிதம்பரம் அம்பலத்தார் ஐடியா கொடுத்ததாய் அவர் ஹார்ட் வோர்டில் படித்த எக்கனாமிக்ஸ் அப்படிச் சொல்லிக்கொடுத்ததாய் எங்கிட்டோ படித்த நினைவு. அதாவது, ஒருவன் சேமிக்கிறான் எனில் அவனைச் சிறுகச் சிறுகச் சேமிக்க விட்டுவிடு. பொழைச்சுப் போகட்டும். மொத்தமாய் அவன் அந்தச் சேமிப்பை காசாக்கி அவன் புள்ளைக் குட்டிக்கு எதோ ஒரு கல்யாணமோ கார்த்திகையோ கருமாதியோ பண்ணும்போது காசாகக் கேட்பானே அப்போது அவனிடம் ஈவு இரக்கம் இல்லாமல் வரியாகப் பிடுங்கு என்று ஐடியா கொடுத்ததாய் எங்கேயோ என்றோ படித்த நினைவு. தெரிந்தவர்கள் கூறலாம். (இதனையும் நான் இங்கு மிகைப்படுத்திக் கூறவில்லை, ஆதாரம், லிங்க் என்று கேட்காதீர்).

பொதுவாய் பிசினஸ் செய்திகள் தலைப்புச் செய்திகள் இவற்றை அவதானித்து வந்தாலே உண்மை விளங்கும்.

அதே அரசு ஒரு குடிமகனுக்கு இந்த முறையில் ஏன் அரசு நிர்வாகம் செய்யக்கூடாது? 

அ) 'நீ உன் சம்பளத்தை எடுத்துக்கொண்டு போ, உன் குடும்பத்தை முறையாய் காப்பாற்று, கல்வி சுகாதாரம் என்று முறையாய் செலவு செய்
ஆ) செலவு செய்தது போக மிச்சம் மீதி இருந்தால் உன் உபரி வருமானத்தை முதலீடு செய் (ஆயுள் காப்பீட் இத்யாதி).
இ) இந்த அரசு உன்னை நம்புகிறது, இந்த ஆண்டுக்குரிய உன் வருமானத்திற்கு அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டிற்குள் வருமானம் குறித்த ரிட்டர்ன்கள் தாக்கீது செய்.
ஈ) அடுத்த காலாண்டிற்குள் இந்த அரசு அலசி ஆராய்ந்து உனக்கு முறையான நேர்மையான வரி விதிக்கும் அதை அடுத்த அரையாண்டிற்குள் நீ அரசுக்கு 6 மாத காலத்திற்குள் வரியை அரசு கஜானாவில் கட்டி விடு என்று ஏன் இந்த அரசு சொல்வதில்லை?

இ) அப்படி அவன் நியாயமாய் நேர்மையாய் கட்டுவான் என்று இந்த அரசு குடிமகனை ஏன் நம்பவில்லை? அப்படி நம்பாத அளவுக்கு அவனை நேர்மை தவறி வாழும் அளவுக்கு அவனிடம் வரி வசூல் கிட்டத்தட்ட அவனது சரி பாதி வருமானம் வரியாகவே போகிறதே ( நேரடியாகவோ மறைமுகமாகவோ). அப்படி சட்டம் இயற்றும் வகையில் அரசு நிர்வாக நடைமுறைகளில் வழிமுறைகள் ஐ.ஏ.எஸ். ஐ.சி.எஸ். ஐ.ஆர்.எஸ். என்று பல்துறை நிர்வாக அமைப்பு இருக்கிறதே, அதில் அந்த அதிகாரிகளுக்கு அவர்கள் பணிக்காக பயிற்சி பெறும்போது ஏன் சொல்லிக்கொடுப்பதில்லை? அப்படி பயிற்சி செய்யணும் பயிற்றுவிக்கணும் என்று ஏன் இந்த அரசு சட்டம் இயற்றவில்லை? இந்த நாட்டில் சட்டங்களுக்கா பஞ்சம்? பத்தோடு பதினொன்று, அத்தோடு இன்னொன்று ஒரு சட்டம் இருந்துவிட்டுப் போகட்டுமே?

தன்னுடைய குடிமகனை நேர்மையாக வாழவிடாமல் அவனை நேர்மையற்ற செயலை செய்யும் அளவுக்கு ஊக்குவிக்கும் சட்டவியல் நடைமுறைகளைக் கொண்ட ஒரு நாடு நாசமாய்த்தான் போகும்.

பன்னாட்டு நிதி முனையம் இன்ன பிற பன்னாட்டு நிதி முதலீடுகளை செய்பவர்களையும் அவர்கள் மூலம் இங்கு கார்ப்பரேட்
நிர்வாகம் செய்யும் நிறுவனஙகளுக்கு மக்கள் வரிப்பணத்தை கொடுக்கும் அரசு அவர்களை நம்பும் அரசு ஏன் தன் குடிமகனை நம்புவதில்லை ?

(to be continued)

நாம்_எங்கே_போகிறோம்? எது ஜனநாயகம்? (2)

As shared on my Facebook wall since 17th July 2015:

அனைத்து அராஜக வழிமுறைகளையும் இவர்களே ஏற்படுத்துவார்களாம், பயனாளியை தண்டிக்கும் சட்டம் ஒரு சட்டமா?

சில பல சின்னத் திருட்டுக்களில் குற்றங்களில் கஞ்சா இத்யாதி நார்க்கோட்டிக் பொருட்களை 'யாரைக் குற்றவாளி அடையாளம் காட்டணும், அதன் போக்கில் சில வழக்குகள் நடக்கணும், அரசியல் எதிரிகளை பழி வாங்க சில பல முறைசாரா நடைமுறைகள் இந்த நாட்டில் உண்டு, யாரும் மறுக்க முடியாது. நடக்கவில்லை என்று சொன்னால் உப்புப் போட்டு சோறு தின்னும் யாரும் நம்ப மாட்டார்கள்.

சினிமாக்களில் காட்டப்படும் காட்சிகளில் வருகிற மாதிரி 'இவர்களே வைப்பார்களாம் இவர்களே எடுப்பார்களாம்' என்று இருக்கிறதே இது பொது வாழ்வியல் நடைமுறையில் இல்லை என்று யாராவது சொன்னால் பைத்தியக்காரன் கூட வழித்துக்கொண்டு சிரிப்பான்.

சினிமாவில் காட்டப்படும் காட்சிகள் மிகைப்படுத்தப்பட்டவை, நிஜம் அப்படியில்லை எனில் நிஜத்தில் இல்லாத காட்சிகளை காட்டும் திரைப்படம் எடுக்கும் தயாரிப்பாளர்களையும் அந்த சினிமாவை தணிக்கை செய்யும் அதிகாரிகளை கொண்ட சென்ஸார் அமைப்பு தூங்குகிறதா?

மேற்சொன்ன மாதிரி அரசே இங்கு அனைத்துத் துறைகளிலும் ஊழல், குற்றம் நடக்க ஏதுவான சட்ட ஓட்டைகள், இருக்கும் சட்டத்தை ஒழுங்காக அமல்படுத்த முடியாத அளவிற்கு நாட்டில் இருக்கும் முப்பரிமாண அல்லது நாற்பரிமாண ஒற்றுமை (சட்டம் செய்வோர் காப்போர் அமல்படுத்துவோர் நீதிபரிபாலன அமைப்பு) ஒன்றுக்குள் ஒன்று பின்னிப் பிணைந்து கிடக்கிறதே?

இதை, நாட்டில் நடப்பதை வெளியில் சொல்லும் தகுதியும் வாய்ப்பும் பெற்ற பத்திரிக்கை, சஞ்சிகை, தொலைக்காட்சி, இணையவழி தொலைக்காட்சி என்று உள்ள பற்பல ஊடகங்களை "இல்லாத ஒன்றை எதுக்கய்யா வெளிச்சம் போட்டு காட்டுகிறாய், பிடி தண்டனை?" என்று சட்டம் தன் கடமையைச் செய்யும் ப்ரெஸ் கவுன்சில் ஆப் இந்தியா தூங்குகிறதா? ப்ரெஸ் கவுன்சில் தன்னாட்சி அதிகாரம் செய்யும் உள்ள ஒரு அமைப்பு எனில், நீதி மன்றங்கள் எதற்கு?

நீதி மன்றங்களில் கீழ்மை நடு நிலை முன்சீப் உயர் உச்சம் என்று பற்பல அடுக்குக‌ள் இருக்கிறதே?

ஒரு தீர்ப்பு தவறெனும்போது (அறியாமை காரணமாய்) அதை மாற்றும் அதிகாரம் மேலே மேலே என்று ஜனாதிபதியிடம் கருணை மனு கொடுக்கும் வாய்ப்பு, அதை நிராகரிக்கும் வாய்ப்பு அவருக்கு இருக்கிறதா, அவர் நிராகரித்தால் மனித வாழ்வியல் உரிமை மறுக்கப்படுகிறதா என்று ஊடகங்களும் என் ஜி ஓக்களூம் அரசும் இன்ன பிற அமைப்புக்களும் காலம் காலமாய் விவாதம் செய்தே காலம் கழிகிறதே?

ஒரு தீர்ப்பு சரியில்லை என்று இருக்கக் கூடாது. அப்பீல் (மேல் முறையீடு) என்று வரும்போது விதிக்கப்பட்ட தீர்ப்பும் தண்டனையும் அதிகப்படுத்தப்பட வேண்டும், அப்பீல் செய்யும் எண்ணமே வராதபடி நீதி பரிபாலனம் உச்சத்தில் கண்ணியத்தில் இருக்க வேண்டும்.

இதெல்லாம் இந்த முறைசாரா ஜன நாயக நாட்டில் சாத்தியமா ஸார், என்ன ஸார் நீங்க, நீங்க எந்த நாட்டில் இருக்கிறீர்கள் என்று கேட்பீர்கள் ஆனால், ஒரு சாமானியனுக்கு நீதியும் முறையான கல்வியும் மருத்துவ வசதி இத்யாதி நடைமுறைகள் ஒரு குடிமகனாய் கிடைக்க வேண்டும். கிடைக்கும் வகையில் சட்டமும் ஒழுங்கும் நீதி நிலை நாட்டப்பட வேண்டும்.

இதற்கு அரசே கேம்ப்ளிங் என்று நேரடியாக அதே பெயரில் செய்யலாமே? மேற்சொன்ன அனைத்து நடைமுறைகளும் பொது நிர்வாகமும் ஒரு வகையில் பார்த்தால் கேசினோ மாதிரிதானே இருக்கிறது, தியரிட்டிக்கலி அன்ட் ஓல்ஸோ பிராக்டிக்கலி?

கேம்ப்ளிங் செய்வது காசினோ!!

அதில் உள்ளே போவது விளையாடுவது நட்டப்படுவது ஏமாறுவது, பின் 'அய்யோ அய்யய்யோ, எல்லாம் போச்சே' என்று அழிவது நம் குடிமகன்களில் ஒருவனோ அவன‌து கசினோ!!

அதில் இடையிடையே காட்டப்படும் திரைப்படங்களில் வருவது அசினோ அவரது கசினோ பிசினோ!!

அதில் குடிமகன் நட்டப்படுவது உள்ளே செல்பவன் வெளியே வரும்போது அவன் பையில் காசு நோ !!

காலம் காலமாய் இதையெல்லாம் சகித்துக்கொள்ளத்தான் குடிமகன் பழக்கப்படுத்தி வைக்கப்பட்டுள்ளான். அவன் எதுக்கும் சரிப்பட்டு வராதவன், கையாலாகாதவன், அவனை மேன்மேலும் நல்ல கல்வி பெற்று உயராமல் பார்த்துக்கொள்ள வேண்டும், இல்லையேல், அவன் நம்மை கேள்வி கேட்பான் என்று ஆட்சியாளர்களை காலம் காலமாய் யோசிக்க வைத்து அதன்படி சட்ட நீதி பரிபாலனம் அரசு முறை பொது நிர்வாகம் இருக்கிறதே, இது மாறுமா? நடக்குமா?

எங்கே போகிறோம் நாம்? 

இப்படி பலவாறு குடிமகன் தர்க்க நியாயப்படி கேள்விகள் கேட்பதால் ஜன நாயக ஆட்சி சரியில்லை, ராணுவ ஆட்சியோ சர்வாதிகார ஆட்சியோ எதேச்சாதிகார ஆட்சியோ தான் சரி என்று நான் வாதிடவில்லை. குறைகள் எல்லா ஆட்சிமுறைகளிலும் இருக்கிறதுதான். நாடு நல்லாட்சி பெறணும் என்கிற நல்லெண்ணத்தில் உச்சந் தலையில் சூட்டைக் குறைக்க  நல்லெண்ணெய் தடவிக்கொண்டே எல்லா சாமானியர்களும் கேட்பது இதுதான். இது என்று விடியும்? 

(to be continued)

நாம்_எங்கே_போகிறோம்? எது ஜனநாயகம்? (1)

As shared on my Facebook wall since 17th July 2015:

ஒரு முறைப்படுத்தப்பட்ட ஜனநாயக ஆட்சி தம் குடிமக்களுக்கு நல்லாட்சி வழங்கும்.

அடிப்படைக் கல்வி, உயர்கல்வி, மருத்துவம், தொழில்துறைகள், வணிகம், வர்த்தகம், சுங்கம், கலால், வரி வசூல், சட்டம் ஒழுங்கு, நீதி பரிபாலனம், தேசம் தழுவிய இயற்கை சக்திகளின் ஒருமுகப் பயன்பாடு (நதி நீர் மேலாண்மை, சரிவிகித நிலப் பங்கீடு இத்யாதி), என்று அனைத்துத் துறைகளிலும் துறைகளையும் நன்றாக திறம்பட நிர்வகித்து அப்பழுக்கற்ற அரசாங்க நடைமுறைகளை, மக்கள் எளிதாக பின்பற்றவும், மக்களுக்கு வேண்டிய வசதிகள் தேவைகள் நிறைவேறவும் ஆவன செய்ய ஒரு முறைப்படுத்தப்பட்ட அரசு தகுதி பெறுகிறது, தகுதி பெறும், ஆவன செய்யும்.
>> மேற் சொன்னது ஒரு ஐடியல் அரசாங்கம் பற்றியது.

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடுகள் என்று ரெண்டாம் இடம் என்று மார் தட்டி கொள்ளும் நாம் என்ன செய்கிறோம்?

கல்வியை தனியாருக்கு கொடுத்து விட்டோம்; மிச்சம் மீதி இருக்கும் அரசுத் துறை கல்வி நிறுவனங்களில் தரம் இல்லை.

மது, சிகரெட் இத்யாதி லாகிரி வஸ்துக்கள் அரசே விற்கிறது. கலவி வியாபாரம் இன்னமும் தேசியமயமாக்கப்படவில்லை?

மனித உரிமை ஆர்வலர்களின் 'நிர்வாகம் அவர்தம் நடைமுறைகள் சட்டம் ஒழுங்கை அமலாக்குவதில் அவர்தம் ஈடுபாடு பன்னாட்டு_தேசிய_மயமாக்கப்பட்டுவிட்டது' (என்.ஜி.ஓ. க்கள் வழியாக!!!)

இயற்கை சக்திகள் பயன்பாடு, நதி நீர் மேலாண்மை, நிலப் பங்கீடு, சுத்திகரிக்கப்பட்ட குடி நீர் சப்ளை, அடிப்படைச் சுகாதாரம் முறையாக தேசம் தழுவிய வழிமுறைகளில் அப்பழுக்கற்ற முறையில் நிர்வாகம் செய்யும் அளவுக்கு தேசியமயமாக்கப்படவில்லை? 

சட்டம் இயற்றுபவர்கள் இவர்களே!! சட்டத்தை நீதி பரிபாலனம் செய்பவர்கள் இவர்களே!!

சட்டத்தை ஆங்காங்கே ஓட்டை வைத்து இயற்றி விட்டு, கிட்டத்தட்ட தேவைக்கேற்ப மாறுதல்கள் செய்து வருகிறது அரசு. அதே சட்டத்தை பயிற்றுவிக்கும் அரசு வெளியே வரும் சட்ட நிபுணர்கள் அதே சட்டத்தில் உள்ள நல்ல விஷயங்களை பயன்படுத்தி மக்களுக்கு எதாவது செய்யலாமே?

சட்டம் இயற்றுவதும் இவர்கள்தானே? ஓட்டைகளைப் பயன்படுத்தி குற்றம் சாட்டப்பட்டவர்கள் தப்பிக்கவும் வாய்தா வாங்கி வாங்கியே கீழ் நிலை முதல் உச்ச நிலை நீதி மன்றங்கள் வரை காலம் கடத்துபவர்களும் இவர்களே!!

ஒரு நீதி மன்றம் தரும் தீர்ப்பு மேல்முறையீடு என்று வரும்போது அந்த நீதிபதி மேல்முறையீட்டின் அவசியம் என்ன, கீழ்மை நீதிமன்றம் தவறிழைத்துள்ளதா என்று ப்ரிமாஃபேஸி ஆதாரம் இருக்கிறதா என்று ஆராய வேண்டும். இல்லையேல், மேல்முறையீட்டு மனு உடனடியாக தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.

கீழ்மை நீதி மன்றத்தின் நீதிபதியும் அதே சட்டம் படித்து வந்தவர்தானே? அவர் தவறிழைத்திருக்க சாத்தியம் உண்டா?
மேல்முறையீட்டு விசாரணையில் படிப்படியான அடுக்குகளில் உள்ள நீதிமன்றங்கள் முந்தைய தீர்ப்பு தவறு எனில் அந்த தவறான நீதிபதியை ஏன் குற்றம் சாற்றுவதில்லை? சஸ்பென்ஸ் செய்வதில்லை? அவருடைய அறியாமை, சட்ட அறிவு நுணுக்கம் இல்லாமை மன்னிக்கப்படுகிறதா?

கீழ்மை நீதி மன்றத்தின் நீதிபதி முறையான சட்டம் படித்த, வழக்காடு மன்றங்களில் பலவித அனுபவம் பெற்றபின்னர்தான் நீதிபதி ஆகிறார் என்று நம்புவோம். யாரும் கல்லூரியில் படித்து விட்டு நேரடியாக நீதிபதி ஆவதில்லை, எனில், அவரது அறியாமை என்பது இங்கு கேள்விக்குறியதாகிறது.

அனுபவஸ்தர்கள்தான் நீதிபதி பணிக்கு அமர்த்தப்படுகிறார்கள் எனில், அந்த அறியாமை எங்கு வந்தது? இல்லாத அறியாமை மன்னிக்கப்படுகிறது எனில் அவர் நீதிபதி பதவிக்கே தகுதியானவர் அல்ல என ஆகிறது. அப்படியெனில் அவரை அந்தப் பதவிக்கு தெரிவுசெய்வதில் குழப்பமா? அதிலுள்ள பணியாளர் தேர்வு நடைமுறைகளில் குழப்பமா?


சட்டம் தெரிந்த நிபுணர்கள் சொல்வார்கள், காலம் காலமாகச் சொல்லி வந்துள்ளனர். அதாவது நமது இந்திய அரசியல் அமைப்பும் நீதி பரிபாலன முறைகளூம் பிரிட்டிஷ் முறைகளை அடியொற்றிய நடைமுறைகளையும் காலம் காலமாக பஞ்சாயத்து நாட்டாமை என்கிற கிராம அளவில் இருந்துவந்த பல நடைமுறைகளை ஒருங்கிணைத்து நியாயமான தீர்ப்பு எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது. எனில், 100க்கும் மேல் காலப்போக்கில் தேவைப்படும் அப்டேட்கள் சட்ட விதிமுறை மாறுதல்கள் செய்யப்படுகிறதே, சரிதான், காலத்திற்கேற்ப அரசும் சட்டம் ஒழுங்கு நீதி பரிபாலன வழிமுறைகள் அப்டேட் செய்யப்பட வேண்டும், ஒப்புக்கொள்ளணும்.

அதே நேரத்தில் 'ஒரு குற்றவாளி தப்பித்தாலும் பரவாயில்லை, ஒரு நிரபராதி தண்டனை பெறக்கூடாது' என்கிற ஒரே காரணத்தை உத்தேசித்து அதன் பின்னணியில் அதில் உள்ள ஓட்டையை பயன்படுத்தி எக்செக்பஷன் ஓவர் ரூல் (Exceptions can over rule and this is acceptable, like that) செய்யும் அளவுக்கு கீழ் நிலை முதல் உச்ச நீதி மன்றம் வரை ஒரு வழக்கு பல ஆண்டு காலம் நடக்கிறதே?

பரவலாக ஒரு ஆசாமி குற்றம் செய்திருக்கிறார் நம்பவைக்கப்பட்ட ஒருவர், அவர் குற்றம் செய்திருக்க வாய்ப்பில்லை என்று நம்ப வைக்கப்பட சாத்தியமில்லாத நேரத்தில் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி முறையான குற்றம் சாட்டப்பட்டவர் தப்பித்து வந்துள்ளார்களே? எந்த சட்டம் இதை சாத்தியமாக்கியது?

நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்கிற கோணத்திலேயே விசாரணை செய்யும் நீதி மன்றங்கள் குற்றவாளி தண்டிக்கப்படாமல் போகும் வாய்ப்பினை சட்டமே வழங்குகிறதே, ஏன் இந்த இரட்டை நிலை?

பெரும் வழக்குகளில் தேசத்தின் ஆணிவேரை ஆட்சியாளர்களின் அடிப்படை இருப்பை ஆட்டுவிக்கும் வழக்குகளில் எதோ ஒரு கீழ் நிலை அதிகாரிகளோ ரோட்டில் போகும் குப்பன் சுப்பன் ஜேப்படித் திருடன் என்கிற வகையில் "கையாலாகாதவன்" "இவன் எதுக்கும் சரிப்பட்டு வரமாட்டான்" 'இவனை உள்ளே தள்ளினால் யாருக்கும் ஒருவித நஷ்டமும் இல்லை' 'அவன் குடும்பம் நடுத்தெருவில் நிற்குமே, நிற்கட்டுமே, யாருக்குக் கவலை?'

பெருந்தனக்காரர்களையும் அரசியல் ஆட்சியாளர்கள் செய்யும் (முன்னாள் இன்னாள்) ஊழல்வியாதிகளையும் இதே சட்டம் விட்டுவிடுகிறதே, ஏன் இந்த இழி நிலை?

நீதி மன்றத்துக்குள்ளே இந்த ஊழல் அரக்கன் நுழைந்துள்ளான் என்று ஹேஷ்யமாய் காமெடிக்காக 1972 வாக்கிலேயே 'துக்ளக்' நாடகத்தில் சொல்லப்பட்ட விஷயங்கள் 40 ஆண்டுகள் கழித்து உண்மையானது இந்த தேசத்தின் சாபக்கேடா?

அரசே கல்வி கலவி கேள்வி மது சிகரெட் இத்யாதி லாகிரி வஸ்துக்களை விற்கிறது. சாலைப் போக்குவரத்தில் விபத்துக்கள் நடக்காமல் தவிர்க்க ஹெல்மெட் உபயோகிக்கணும் என்று சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படுகிறது, தேவைதான். அதே ஹெல்மெட் தரமான ஐ.எஸ்.ஐ. முத்திரை அல்லது தரச் சான்றிதழ் உள்ள ஹெல்மெட் விற்றால் பராவயில்லை.

அதே ஹெல்மெட் ஆந்திராவிலோ வேறு எங்கேயோ தரம் குறைந்த ஐ.எஸ்.ஐ. முத்திரை இல்லாத ஹெல்மெட்கள் வீதி தோறும் விற்கப்படுகிறதே, அந்தத் தயாரிப்பாளர்களை அரசு என்ன செய்கிறது? அங்கும் தானே கலால் வரி வசூலிக்கப்படுகிறது (என்று நம்புவோம்). இல்லை, அந்தப் பொருளே டூப்ளிகேட், எனவே அங்கு கலால் வரி என்று ஒன்று கிடையாது என்று சொன்னால் சுத்தம், வாழ்க ஜன நாயகம்!! வாழ்க உல்லாஸ் நகர்!!

(உல்லாஸ் நகர் எங்கிட்டு இங்கு வந்தது? என்று கேட்கப்படாது. அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் என்று போட்டு வரும், விற்கப்படும் அது மேட் இன் யு.எஸ்.ஏ.). அது மாதிரி பல இடங்களில் விற்கும் பொருட்களில் அப்படியே அச்சு அசல் காப்பியடித்து டூப்ளிக்கேட் விற்கும் சந்தைக்கு உல்லாஸ் நகர் சந்தை பெயர் போனது, தற்சமயம் அங்கு அந்த வியாபாரம் நடக்கிறதா தெரியாது. அது ஹேஷ்யமாய் வேடிக்கையாய் சொல்வார்கள் மேட் ஏஸ் யு.எஸ்.ஏ. என்று. அதைத்தான் சுருக்கமாகக் குறிப்பிட்டேன்).

முறையற்ற தரமற்ற பொருட்களை தயாரித்து விற்பவனை கேள்வி கேட்காத சட்டம், அதைப் பயனாளியாய் இருந்து கிடைச்ச காசில், உழைச்ச காசில், டாஸ்மாக், இத்யாதி விஷயங்களில் செலவு செய்தது போக மிச்சம் மீதி இருக்கும் காசில் வாங்கி அனுபவிக்கும் சாமானியனை சட்டம் கேள்வி கேட்கிறதே?

ஒரு தேவையற்ற பொருளை அரசே விற்கிறது. அரசு விற்க வேண்டிய அவசியம் இல்லாத பொருளை அரசே விற்கிறது. அதை விற்கும்போது விளம்பரமும் செய்யப்படுகிறது. அந்த விளம்பரத்திலும் வரி வசூல் அரசுக்கு கிடைக்கும்

விளம்பரத்தில் 'சிகரெட் பிடிப்பது உடல் நலனுக்கு கேடு புற்று நோய் வரும்' 'மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு' என்று அடிக்கோட்டில் ஒரு எச்சரிக்கை வாங்குபவனுக்கு இருக்கிறதே, விற்பவனுக்கு ஏன் இல்லை?


(to be continued) 

எது சுதந்திரம்? எங்கே சுதந்திரம்? (2)

1980கள் வரை நம் இந்திய (பரவலாக) அல்லது குறிப்பாக தமிழ்ச் சமூக வீடுகளில் கூட்டுக் குடும்பம் என்பது காணப்பட்டது. 

ஒரு காலனி அல்லது ஸ்டோர் என்கிற அமைப்பில் பார்த்தால் அன்றெல்லாம் ஒரு மனையில் அல்லது வீடு அல்லது தொகுப்பு வீடு என்று சொல்லப்படும் ரெண்டு கட்டு, மூன்று கட்டு வீடுகளில் வீட்டு 4 அல்லது 5 அறைகள் இருக்கும். ஓரிரண்டை முதலாளி தன் பராமரிப்பில் வைத்துக்கொண்டு மற்ற அறைகளை வாடகைக்கு விட்டு விடுவார். அந்த வருமானம் அவருக்கு தன் இதர செலவினங்களுக்கு ஈடாகும். 

பெரும்பாலும் கூட்டுக் குடும்பமாய் வாழ்ந்த நம் சமூகத்தில் அது மாதிரி கட்டுமானம் உள்ள வீடுகளில் பெரும்பாலும் மாடி போன்ற அமைப்பு இருக்காது. இருந்தாலும் ஒரு மாடி என்கிற அளவில்தான் இருக்கும். 

அது மாதிரி கூட்டமைப்பில் அனைவரும் தனித்தனி குடும்பங்களாய் இருந்தாலும் அது ஒரு ஜாயின்ட் ஃபேமிலி அல்லது கூட்டுக் குடும்பங்களின் கூட்டமைப்பாய்தான் வாழ்ந்தனர். ஒண்டுக் குடித்தனம் எனும் சொலவடை கூட உண்டு. திருச்சி மாதிரி ஊர்களில் ஸ்டோர் என்று அழைப்பர். 

பெரும்பாலும் கணவன் மனைவி (தலைவன் தலைவி) அல்லது புதிதாய்த் திருமணம் ஆன தம்பதிகளைத் தவிர அந்த வீடுகளில் உறுப்பினர்கள் அனைவரும் கூட்டாய்தான் கூடம், தாழ்வாரம், முற்றம் என்கிற அமைப்புக்களில் இரவு தங்குவது உரையாடுவது உறங்குவது வழக்கம். 

சிறுவர் சிறுமியர் ஆண் பெண் அவரவருக்கு தக்கபடி அந்த அமைப்பில் தமக்கென்று ஓரிடத்தைப் பிடித்து இளைப்பாறுவர். குமரிப் பெண்கள் அவர்களுக்கென்று தனியிடத்தையும் ஆண்கள், திருமணாமாகாத ஆண்கள் அந்தப் பரந்த பெரிய வீடுகளின் திண்ணைகளிலும் இளைப்பாறுவர். மச்சு வீடு எனப்படும் மாடி வீடு வாய்க்கப் பெற்றவர்கள் தம்பதிகளை மேலே இருக்கச் சொல்லிவிட்டு ஒரு பகிர்ந்த கூட்டமைப்பில் வாழ்ந்து வந்தனர். 

அது மாதிரி அமைப்புக்கள் 1980களுக்கு பிறகு அரிதாகிவிட்டது. 90களில் குளோபலைசேஷன் அல்லது லிபரலைசேஷன் என்கிற உலகமயமாக்கலின் தாக்கத்தின் விளைவு தனி மனித வருமானம் கொஞ்சம் கொஞ்சமாக உயர உயர, கூட்டுக் குடும்பங்கள் பிரிந்து ந்யூக்ளியர் குடும்பம் என்கிற தனி வீடு, தனி அமைப்பாய் மக்கள் வாழத் துவங்கிவிட்டார்கள். இது காலம் நமக்குச் செய்த கொடை என்று கூட சொல்லலாம். 

(to be continued) 

எது சுதந்திரம்? எங்கே சுதந்திரம் ? (1)

As shared on my Facebook wall since 16th July 2015:

சுதந்திரம் என்பது என்ன?

ஆகஸ்டு 15 இந்தியாவின் 69 வது சுதந்திர தினம் (68 முடிகிறது, 69 தொடங்குகிறது)

ஆகஸ்டு 14 அண்டை நாடான பாகிஸ்தான் தன் 69தைத் தொடுகிறது.

ஆகஸ்டு 15ல் பி.ஆர்.காங்கோ, தென் கொரியா இன்ன பிற நாடுகள் கூட தத்தம் சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றன.

சுதந்திரம் என்பது என்ன? அதன் வரையறை என்ன? அது எல்லோருக்கும் கிட்டியுள்ளதா? கிட்டுகிறதா? 

விடுதலை, சுதந்திரம், உரிமை சார் சுதந்திரம் எனப் பல உண்டு. ஆங்கிலத்தில் சொல்லப்படும் இன்டிபென்டன்ஸ் எனும் சுதந்திரம், விடுதலை எனும் பொருளில் கொள்ளப்படும் சுதந்திரம், ஒரு மனிதன் தான் விரும்பியதைச் செய்யும் சொல்லும் கருதும் சுதந்திரம் (எண்ண அளவில்), கருதியதை சொல்லும் சுதந்திரம், பத்திரிகைச் சுதந்திரம், ஒரு படைப்பாளி தன் கருத்தை தன் படைப்பின் வழி சொல்லும் சுதந்திரம் என்று பல உண்டு.

ஆங்கிலத்தில் விளக்கினால் சுதந்திரம், விடுதலை, இவற்றை தெளிவாக விளக்கலாம், தமிழில் சொல்லாடல் இந்த விஷயத்தில் குறைவு. லிபரேஷன் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் விடுதலை வேட்கை சார்ந்த அரசியல் சார்ந்த போர், ஆட்சிபெறும் உரிமை கோரும் போராட்டம், தன்னாட்சி சார்ந்த போராட்டம் இவற்றின் வடிகால் வெற்றீ பெறும்போது கிடைக்கும் விடுதலையும் சுதந்திரம்தான் (தமிழில்). ஆங்கிலத்தில் அதற்கு போராடிப் பெற்றால்தான் விடுதலை அல்லது சுதந்திரம் பெற்றதாக கருதப்படும்.

ஏற்கெனெவே இருப்பதை ஒருவர் 'இந்தா வச்சுக்கோ' என்று கொடுப்பதல்ல சுதந்திரம். காரணம், பகுத்தறிவின் தாக்கத்தில் வளர்ந்த இந்தத் தமிழ்ச் சமூகம் கூடவே இதைக் கேட்கும் 'அதுதான் அங்கேயே முதலிலேயே இருக்கிறதே, நீ என்ன அதை எனக்கு அல்லது எங்களூக்கு கொடுப்பதற்கு?' இருப்பதை நாங்கள் எடுத்துக் கொள்வதை நீ தடை செய்தால் அப்போது அது சுதந்திரமின்மை, எனவே அதைக் கோரி ஒரு சுதந்திரப் போர் அல்லது விடுதலைப்போர் என்று அறியப்படும், எனில், அது போராடிப் பெற வேண்டிய நிலையில் சமூகமோ ஒரு தனிப்பட்ட மனிதனோ உள்ளாகிறது/உள்ளாகிறான்.
பின் குறிப்பு: 
இதே தலைப்பில் ஆங்கிலத்தில் ஒரு தொடராக இங்கே பகிர்ந்துள்ளேன். எண் வரிசை வாயிலாக ஆங்கிலப் பதிவும் தமிழ்ப் பதிவும் ஒரே நேர்க்கோட்டில் ஒரே மொழியாக்கத்தில் இருக்கணும் என்கிற அவசியம் இல்லை.

ஆனால் தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் சொல்ல வந்ததை தெளிவாக சொல்ல விழைகிறேன். சொற்கோவை சிந்தனைவழி சென்று அதன்படி வருவதால், ஆங்கிலப் பதிவின் நேரடித் தமிழாக்கமாக கருத வேண்டாம்.

ஆங்கிலம் வேண்டுவோர் அதைப் படிக்கலாம். சாராம்சம் நான் சொல்ல வரும் கருத்து ஒன்றுதான். மையக் கருத்து ஒரு புள்ளீயில்தான் செல்லும். 

நம்மை நாம் அறிவோம் (6)

திரை கடலோடியும் திரவியம் தேடு என்றனர் ஆன்றோர் அன்று.
கரை காணாக் கடல் இருந்தும் குடிக்க நீர் இல்லை இங்கு, ஏன்?

குடிக்க நீர் இல்லை எதனால்? நீர் இங்கிருந்து அங்கு சென்றதாலா? 

நீவிர் அவிகளால் (பரிசுத்த) ஆவிகளாக்கப்பட்டதால் அவிகள் ஆவிகளாகி, ஆவின் பாலை பாலையிலிருந்து வந்தவன் சோலையில் இருப்பவனுக்கு பால்மணம் மாறாப் பச்சிளம் பாலகனுக்கும் பாலகிக்கும் அந்த ஆவின் பாலை பாலில்லாமல் பால் மணம் அறியாமல் சோலைவனத்தை பாலைவனமாக்கும் அப்பால் எப்பால் இப்பால் இவற்றை குறிப்பால் உணர்த்த ஒருப்பால் உண்ட தனபால் வருவானோ, கோபால் வருவானோ, அன்பால் சொல்வானோ, என்பால் வருவானோ, பண்பால் கொள்வானோ, எண்பால் இணைவானோ முப்பாலும் பயின்றாலும் எப்பாலும் பகிராமல் ஏமாப்பால் இறுமாப்பால் கருவேம்பால் அடிப்பானோ? 

வீழும்பால் எழும்பால் அழும்பால் பாலில்லா பாலகன் அழும்பால் அதன் ஏக்கத்தின் வீழ்ச்சிப்பால் அது கொணரும் தழும்பால் மழும்பால் எப்பால் உணர்வீரோ இல்லையோ கரும்பால் இனிப்பால் துவர்ப்பால் உவர்ப்பால் காராப்பால் காராம்பசுவின் பால் உந்தன் அகப்பால் புறப்பால் மறப்பால் அறப்பால் அறிவீரோ, முறைப்பால் உணர்வீரோ? இல்லையேல் காமப்பால் பகிர்ந்தே காணாம்பால் ஆகிவிடுவீரோ?

சொற்பால் பொருட்பால் குறிப்பால் இவன் பகர்வதை பகிர்வதை இவன்பால் பற்பாலோர் பயின்றனரே, பகிர்ந்தனரே, பகர்ந்தனரே, வாழ்ந்து காட்டினரே, ஒருவரா, இருவரா ?

ஆதிசங்கரர்
அகத்தியர்
ஸ்ரீ அரவிந்தர்
பரமாச்சார்ய ஸ்வாமிகள் (பெரியவாள்)
பட்டினத்தார்
திருமூலர்
அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர்
நாயன்மார்கள், ஆழ்வார்கள்
ஆண்டாள், மீரா
ரமணர்
சின்மயானந்தர்
தயானந்த சரஸ்வதி
வேதாத்திரி மகரிஷி (ஸ்வாமிகள்)
ஸ்ரீதர அய்யாவாள் (முதலான ஆன்மீகப் பெரியோர், உபாசனாகுலத் திலகங்கள்)
கிருபானந்த வாரியார்
அவ்வைப்பாட்டி
திருவள்ளுவர்
தொல்காப்பியர்
இராமகிருஷ்ணர்
விவேகானந்தர்
திலகர்
கோகலே
மகாத்மா காந்தி
இராஜாஜி
சர்தார் பட்டேல்
பாரதி
பாரதிதாசன்
வ வே சு
உ வே சா
மீ ப சோ
ம போ சி
கி வா ஜ‌
லா ச ரா
கல்கி
முத்தையா (கண்ணதாசன்)
அரங்கராஜன் சீனியர் (வாலி)
அரங்கராஜன் ஜூனியர் (சுஜாதா)
எம்.எஸ். உதயமூர்த்தி
நம்மாழ்வார் (இயற்கை விஞ்ஞானி)
அப்துல் கலாம்
(மற்றும் பலர்)
இவர்களில் சிலர் மீதும் அவர்தம் கொள்கை வாழ்வியல் நெறிமுறைகளில் பலருக்கும் ஐயப்பாடுகள், மாற்றுக்கோணச் சிந்தனைகளின் வழி நிறை குறைகளூம் இருக்கலாம் (அவரவர் பார்வையில்). எனில், அவர்கள் கூறிய நல்லனவற்றைக் கொள்வோமே?

காலம் பதில் சொல்லும்!! காலம் வழி காட்டும்!! காலப்போக்கில் நாம் உணர்வோம்!! 

நம்மை நாம் அறிவோம் (5)

=> உங்களுக்கு அறிவு இல்லை, தெளிவு இல்லை, உலகம் புரியலை என்று பற்பல உத்திகளைக் காட்டி புத்திகளைப் புகட்டியதாய் பகற்றி தொழில் நுட்பம், பட்டறிவு, பல்கலை வித்தகம் என்று பற்பல மாயங்களைக் காட்டினான்

=> இவர்களுக்கு தேவையில்லாததை இவர்களிடம் முதலில் விற்போம், காலப்போக்கில் நமக்குத் தேவையானதை இங்கிருந்து கொள்வோம் என வர்த்தகம் பேசி தர்க்கம் பேச வாயில்லாமல் போதையில் கிடத்தி வர்க்க பேதம் காட்டி கட்டிப் போட்டான்

=> இன்று அவனே வருகிறான், பற்பல காணொளிகள், காட்சிப் படங்கள் இவற்றைக் காட்டி 'அடேய் மானிடா, பகட்டில் போகாதே, ஆடம்பரத்தில் அழியாதே, பொய்யை மெய்யென்று மயங்காதே, இயற்கையை உணர்வாய், இயற்கைதான் உந்தன் சொத்து, இயற்கையை உன் முன்னோர் உணர்ந்ததால் உன் மண் தழைத்தது, இயற்கையை நாங்கள் மாசுபடுத்தியதை நீ உணராமலேயே உணராததாலேயே உன்னை உன் மண்ணை நீ இழந்தாய், இழந்தோம் என்று தெரியாமலேயே உன்னில் பற்பல தலைமுறையினர் மாய்ந்து போயினர், மாண்டும் போயினர்.

அந்தக் காணொளிகளில் அவன் மேலும் சொல்கிறான்: 

மனிதம் உணர், இயற்கையை நேசி, உறவை உணர், உறவைப் பேணு, அக்கம்பக்கம் பார், உன் மாமன், அத்தான், மைத்துனன், மைத்துனி, அகமுடையான், அகமுடையாள், மூத்தோர் இளையோர் இவர்களை நேசி என்று நமக்கு என்று அவனது முன்னோர்கள் காட்டிய பாதையில் வந்த இந்தத் தலைமுறையினர் இன்று நமக்குப் பாடம் புகட்டுகின்றனர்

=> இடையே சுமார் 800 அல்லது 1000 ஆண்டுகளில் நாம் என்ன கற்றோம், பெற்றோம், இழந்தோம், இழந்ததை மீட்க முடியுமா?

=> இயற்கையைப் பேணுவதையும் பல்லுயுர் ஓம்புதல், உற்றம் சுற்றம் நட்பு இவர்களை சக மனிதனை விலங்குகளை புழு பூச்சிகளைப் பேணும் நம் மண்ணின் மாண்பை மரபை பண்பை பகட்டில்லாமல் இனியும் காப்போமா, காக்கும் உத்தியை பயில்வோமா, பகர்வோமா,  பகிர்வோமா?

காலம் பதில் சொல்லும்!!

நம்மை நாம் அறிவோம் (4)

=> காலப்போக்கில் நம் முன்னோர் மறைந்து அடுத்தடுத்த சந்ததியினர் சில பல சூட்சுமங்களை நல்லன அல்லன என்று அனைத்தும் கொண்டனர், கற்றனர், கற்றுணர்ந்தனர்
=> அவனது அவர்களது முன்னோர் மறைந்து அடுத்தடுத்த சந்ததியினர் வல்லான் வகுத்ததே சட்டம் என்று பிற்காலத்தில் அடக்குமுறை ஒன்றே ஆட்சிமுறை; மற்போர், விற்போர் இவை மூலம் ஜெயிக்க முடியாது, விற்போர் என்று போவோம், விற்போம், என்று தொடர்ந்து விற்கின்றனர்.
=> இந்த நிலத்தை இதன் மாட்சிமையை மாண்பை இவர்கள் உணராமலேயே அவன் தன்னை இங்கு நம்மில் ஊடுருவி நம்மில் ஒருவனாய் இருப்பதாய் பாவ்லா காட்டி நம் கையை எடுத்து நம் கண்ணில் மட்டுமல்ல, நம்  ஆணிவேரிலேயே ஆப்பு வைத்தான்
=> இயற்கை வளத்தை உணர்ந்து படிப்படியாய் ஒவ்வொன்றாய் வீழ்த்தினான், மாசுபடுத்தினான், மண்ணைச் சுரண்டினான், விண்ணை ஆக்ரமித்தான்,
=> பெண்ணைக் கொடுத்தான், பெண்ணை எடுத்தான், பெண்ணை பெண்ணில் பேணாமலேயே பேணினான்
=> ஆணை கொடுத்தான், ஆணை அடிமையாக்கினான், ஆணவம் கொண்டான், ஆணவம் அகற்றி ஆண் அகம் அறியாமலேயே ஆணுக்கு புறம் காட்டி புறமுதுகு காட்டினான், முதுகில் குத்தினான்
=> ஆணின் வீர்யம் அறிவு திறமை வல்லமை அனைத்தும் உற்சாக பானம், போதைப்பொருள், புகைப்பொருள், பெண்ணாசை மண்ணாசை விண்ணாசை காட்டி ஆணின் அசல் அவனறியாமலேயே அவனை தன் மயக்கம் உண்டாக்கி அவனை அவனால் அவனில் கொண்டான்
=> அந்த ஆணை ஓர் ஆணையால் மடக்கியதால் ஆணின் மூலமே பெண்ணை ஆண்டான்
=> பெண்ணின் வீர்யம் தாய்க்குலத்தின் மாண்பு, பண்பு, அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எனும் நாற்குணத்தை நிர்மூலமாக்கினான்
=> காலப்போக்கில் பெண்ணையும் ஆண் குலத்தை வீழ்த்தியதுபோல் போதை இத்யாதி லாகிரி வஸ்துக்களால் ஆட்கொண்டான்

=> பெண் மூலம் நிர்மூலம் என்று ஒரு பகட்டான வார்த்தையை அறியாமையால் இங்கு மக்கள் சொல்வதுண்டு, அந்தப் பெண் மூலமே இந்தச் சமூகத்தை நிர்மூலமாக்கும் வித்தை மேற்கொண்டு ஆண் பெண் இயற்கை அனைத்தும் சாய்த்தான்

நம்மை நாம் அறிவோம் (3)

=> ஒற்றுமையை உடைக்க வேற்றுமையை பயன்படுத்தினான்
=> பலம் என இருந்ததை உடைக்க தொழில் அல்லது பட்டறிவு அல்லது அனுபவ அறிவு என இருந்ததை களவாட திட்டம் தீட்டினான் 
=> அடிப்படைக் கல்வி பரவலாக இல்லை, அனைவருக்கும் கல்வி என்று பாடம் படித்தான், மூளைச் சலவை செய்தான்
=> வர்த்தகம் செய்ய வந்தவன் நம்மை நம்பவைக்க நம்மில் ஒருவராகி நம்மை நம்பிக் கழுத்தறுக்கும் மாயத்தை செய்து காலப்போக்கில் நம்மை நம்மில் நாம் இழந்தோம் என்று உணராமலேயே தான் தன்னை இங்கு பரவ விட்டான், பரவினான், நம்மையும் வெளி மண்ணில் பரவ விட்டான்
=> தொழில் நுட்பம், வர்த்தகம், புரிந்துணர்வு அது இது என்று பற்பல மாயச் சொற்களை அள்ளி வீசினான்
=> பகட்டில், ஆடம்பரத்தில், விதேசிப் பொருளின் மீது நாட்டத்தை ஏற்றினான்
=> கூடவே அறிவை மழுங்கடிக்கும் உற்சாக பானம் அது இது என்று ஒரு கூட்டத்தையே நாறடிக்க அவன் கொணர்ந்ததை நம்மை நம் ஆட்களே ஆட்சி செய்யும் தொடர்ந்து நாறடிக்கும் வித்தையை நம்மில் இருந்த வித்யைகளை அவித்யைகளாக்கும் சூட்சுமம் பயிற்றுவித்தான்

நம்மை_நாம்_அறிவோம் (2)

Since 6th June 2015 from my Facebook wall:

=> சரி, உணர்ந்தாயே, அது உன்னில் இருந்தது என்று உனக்கு எப்படி தெரிந்தது? யார் சொன்னது? யார் சொல்லிக் கொடுத்தது?

=> உன்னில் இருந்ததை உன் அகம் அறியாமல் உன்னிடமிருந்து பெற்று உன்னை நிர்மூலமாக்கியது யார்?

=> உன்னிடமிருந்து பெற்றதை உனக்கே ஒரு சந்தைப் பொருளாய் கொடுத்து உன்னை சந்தியில் நிறுத்தியது யார்? 

=> உன்னைநீயே உணராமல் புறத்தே தள்ளி வைத்தது யார்? எது? அந்தசூட்சுமம் என்ன? அந்த மாயவித்தை என்ன?

=> அந்தமாயம்தான் வர்த்தகமா? வணிகமா? பன்னாட்டு வியாபாரமா?

=> அவனுக்குதேவையானது இங்கே இருந்ததை அவன்உணர்ந்தான்

=> இங்குள்ளதைஇவர்கள் பகிர்ந்துண்டதை, பகிர்ந்து அனுபவித்ததைக் கண்டான்

=> இவர்களில் உள்ள பற்பல வேற்றுமைகளைக் கண்டான் (இனம், மொழி, கலாச்சாரம், பண்பாடு,பழக்க வழக்கங்கள் இத்யாதி)

=> இந்த பல்வேறு வேற்றுமைகளை மீறிய ஒற்றுமையை தனி மனித ஒழுங்கை, சமூகத்தை,சமூகக் கட்டுப்பாட்டை கண்டான்

=> இவர்களின் பலம், பலவீனம், ஒற்றுமை, வேற்றுமை,ஒருங்கிணைப்பு இவற்றை உடைத்தால்தான் தன் வர்த்தகம் பேணிக்காக்கவும் தான் வளர்ச்சியடையவும் முடியும், கூடவே தனக்கு வேண்டியதை எடுத்துக் கொள்ளவும் முடியும் என உணர்ந்தான்

=> உண்மை உணர்ந்தான், உள்ளம் தெளிந்தான், அறிவை பயன்படுத்தினான்

நம்மை_நாம்_அறிவோம் (1)

Since 6th June 2015 from my Facebook wall:

நம்மை_நாம்_அறிவோம்_(தொடர்பதிவு)

இது ஒரு ஆறு பாகத் தொடர்.

கருப்பொருளின் வீச்சு, வீர்யம், தாக்கம், நீளம் கருதி ஆறு பாகங்களாகப் பகிர்ந்துள்ளேன்.

என்னப்பா, ஒரே போஸ்டா போடக் கூடாதான்னு யாரும் சிலாகிக்கக் கூடாது. ஒரே தொகுப்பாய் இருந்தால் நீளம் பக்கம் பக்கமாய் போகும், நீண்ட பதிவுகளை யாரும் படிப்பதும் கிடையாது, ஆர்வமும் குறைவு.

ஆங்கிலத்தில் போட்டால் 'தமிழில் போடேம்பா' என்கின்றனர் சிலர்.
தமிழில் போட்டால் 'எனக்கு தமிழ் படிக்கத் தெரியாது, ஆங்கிலத்தில் போடேன்பா' என்கின்றனர் வேறு சிலர்.

இந்தப் பதிவின் கருத்து உபயம் நேற்று நான் கண்ட ஒரு காணொளியில் தோன்றிய தாக்கம், என் கருத்தை முதலில் ஆங்கிலத்தில் ஒரே பதிவாய் அந்தக் காணொளியோடு பகிர்ந்தேன்.

'அறிவோம்_வாரீர்' இந்த இணைப்பியை (டேக்) அதன் வழி இந்தத் தொகுப்பின் மூலம் (அந்த ஆங்கிலக் காணொளியும்) காணலாம். 

அதன் தொடர்ச்சிதான் இந்தத் தலைப்பில் இதை இந்தத் தொடரில் தந்துள்ளேன்.

இதற்கு மேல் சொல்ல ஆயிரம் தகவல் உண்டு. நான் ஒன்றும் புதிதாய் சொல்லவில்லை, பற்பல சான்றோர் ஆன்றோர், நம்மில் வாழ்ந்தோர், வாழ்வோர் சொல்லியதுதான்.

கொள்வதும் கொள்ளாததும் அள்ளுவதும் கிள்ளுவதும் தள்ளுவதும் பார்ப்பவர் படிப்பவரின் உரிமை / பார்வை / தேர்வு.

அந்த காணொளி வீணொளியாய் எனக்குப்படவில்லை.
வானொலியாய் கேளொலியாய் இணையொளியாய் முக நூலொளியாய் பகிர ஆசைதான். அறிந்ததை தொகுக்கும் வல்லமை இருப்பினும், நேரம் காலம் வாய்க்க வேண்டும், மேன்மேலும் இதுகாறும் என் கருத்தில் உள்ள விடயங்களை பகிர்வதற்கு.

காலம் பதில் சொல்லும்!! காலம் வழிகாட்டும்!! காலம் செல்லும் பாதையில் செல்வோம்!!

நம்மை நாம் அறிவோம்
உண்மை நீயே உணர்
உன்னையறிய உலகம் சுற்று
அகம் புறம் அறம் மறம் இகம் பரம் முகம் வெளியே இல்லை
உன் முகம் அது? உன் முகம்எது ? உன் முகம் இது ?
=>அது இது எது இவற்றில் எதனில் அது இதுவாய் இருக்கிறது?
=>இம் மூன்றை உணர்ந்தால் உன்னை நீ அறிவாய்
=>கூடவே அதையும் நீ உணர்வாய்
=>அது என்பது இங்கு ஒரு குறியீடுஅவ்வளவே.
=>அது அவன், அவள், அவர், அவர்கள், என்று இருக்கலாம்
=>அவர்கள் யார்? எவர்? எங்கிருந்து வந்தனர்?
=> எதை உனக்கு தந்தனர்? எதை உன்னிடமிருந்து பெற்றனர்?
=> எதை உன்னிடமிருந்து எடுத்து உனக்கே தனதாய்த்தந்தனர்?
=> அதைப் பெற்று நீ என்ன கண்டாய்?உணர்ந்தாய்?
=> அதைப் பெற்றாய், சரி, எதை இழந்தாய்? எதை இழந்ததாய் உணர்ந்தாய்?

#நம்மை‍‍_நாம்_அறிவோம்

மெக்காலே மக்காலே முக்காலே ஷோக்காலே!!

As shared on my Facebook wall since 26th May 2015:

இந்திய வரலாற்றின் சாராம்சம், அன்று முதல் இன்று வரை. 

1. இந்த நாட்டில் சமூக ஒருங்கிணைப்புடன் கூடிய மக்கள் கூட்டம் இருக்கிறது, அந்த ஒருங்கிணைப்பை ஒற்றுமையை உடை, அதற்கு எந்த வித சாம தான பேத தண்ட உபாயங்களையும் கடைக்கொள்; சாதி மத இன மொழி வேற்றுமையை பயன்படுத்தி இவர்கள் ஒற்றுமையை உடை. எந்தச் சூழலிலும் இவர்களுக்குள் இருக்கும் 'வேற்றுமையில் ஒற்றுமை' எனும் சங்கிலியை அறு. 

2. மஞ்சள், வேம்பு, விதை நெல், மூலிகை வைத்தியம், சித்த வைத்தியம், ஏராளமான இயற்கை நிலம் மற்றும் வளம்; ஏரி, கிணறு, ஆறுகள், நதிகள், குளம் குட்டை என்று ஏகத்துக்கும் கூடிய நீராதாரம் கொண்ட வற்றாத ஜீவ நதிகள் எல்லாத் திசைகளிலும் இருக்கிறது. அதுவும் சுத்தமான குடி நீர். அந்த இயற்கை தந்த கொடையையும் வளத்தையும் நீர் ஆதாரத்தையும் உடை, அந்த அடிப்படைக் கட்டமைப்பை உடை. 

3. சாமானியன் அதிகம் படிக்காவிட்டாலும் ஓரளவுக்கு படித்தவர்கள் குறைவு; இவர்களின் கல்வி வளர்ச்சி எப்படியோ, ஆனால் ஒரு சில கூட்டத்தினரின் அறிவையும் அறிவுசார் மூலதனத்தையும் நம்பி இவர்கள் சமூக அமைப்பு இருக்கிறது. அந்த அறிவுசார் ஆதாரத்தை எந்த வித மூளைச் சலவை செய்தும் அழி. அவர்களை முதலில் நம் வழிக்குக் கொண்டு வரணும், இந்தப் படிப்பறிவில்லாத ஆனால் உழைக்கும் வர்க்கத்தை வேறு வழிகளில் சமாளிக்கலாம். அது கால ஓட்டத்தில் சமாளிக்க வேண்டிய கைக்கொள்ள வேண்டிய அணுகுமுறை. 

4. மூலிகை வைத்தியம், ஆயுர்வேதம், சித்த வைத்தியம் என்று இவர்களின் மருத்துவ சிகிச்சைகள் வித்தியாசமாய் இருக்கிறது, அவை எப்படி இவர்களுக்கு எங்கிருந்து அந்த ஆதாரம் வந்தது, அதன் மூலத்தை உடை, அந்த அடிப்படை ஆதாரத்தை அழி. 

5. படிப்பறிவு இல்லாவிட்டாலும், வேறு சில அறிவு சார் மேதமை கொண்ட உருவ வழிபாடுகளும் கோயில்களும் அவை சார்ந்த இயற்கை வளமும் இவர்களை அந்த வழிபாடு மற்றும் மத நம்பிக்கைகளில் இவர்கள் ஒரு தேர்ந்தெடுத்த வல்லமையைக் கொண்டிருக்கிறார்கள், அந்த வலிமையையும் நம்பிக்கையையும் உடை, அந்த மத ஒற்றுமையைக் குலை. 

6. அரசியல் நிர்வாகம் ராஜாங்கம் நீதி பரிபாலனம் என்று இவர்களின் ஆட்சிமுறையே சரியில்லையே, ஒரு விதத்தில் இவர்களின் இந்த ஒற்றுமைதான் நமக்கு எதிரி, அதனால் இவர்களின் ஒற்றுமையை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டால்?  அரசியல் ரீதியாக ஆட்சியாளர்கள் தமக்குள் பிராந்திய ரீதியில் பிரிந்துள்ளனர், அந்தப் பிளவை பயன்படுத்தி இவர்களை இந்தத் தேசத்தின் மாட்சிமையை நம் கைக்குள் கொண்டு வரணும், அதற்கு மேற்சொன்ன நல்ல விஷயங்களை, இல்லை இல்லை, நமக்கு ஒத்து வராத கெட்ட விஷயங்களை தூக்கியெறியணும். அதற்கு அடுத்தக்கட்ட நடைமுறைகளை செய்யணும் என்று சுமார் 350 ஆண்டுகள் முன்பு 'வர்த்தக ரீதியில் உள் நுழைந்த வந்தேறிகள்' செய்த சதி இன்று 
1) அடிமைபடுத்துதல்
2) அரசியல் ரீதியாய் நாடு பிடித்தல்
3) வர்த்தக ரீதியில் கப்பம் கட்ட வைத்தல்
4) நிர்வாக ரீதியில் இவர்களில் அறிவுசார் திறமைசாலிகளை நம் கட்டுக்குள் வைத்துக்கொண்டு இவர்கள் கையாலேயே இவர்கள் கண்ணைக் குத்த வைத்தல்
5) எந்த இயற்கை வளம் நீர் ஆதாரம் என்று இவர்கள் ஸ்டிராங்காய் இருக்கிறார்களோ அந்த வளத்தையும் ஆதாரத்தையும் பாழ் செய் ( நவீனம் என்கிற கோணத்தில்)
6) விதை நெல் என்று ஒன்றுதானே இவர்களை வெளியாரிடம் கையேந்தாத நிலையை வைத்துள்ளது, அதை முதலில் உடை (எரியறதைப் பிடுங்கினால் அடுத்தது என்ன?)
7) இன மத சாதி மோதல்களை உண்டாக்கு
8) மதப் பற்றையும் மொழிப் பற்றையும் இவர்களை இவர்களாகவே கைவிடும் எண்ணத்தை உண்டாக்கு, அதை மேன்மேலும் பெரிதாக்கு, இவர்கள் மத இன ஒற்றுமை தானாகவே அழியும்
9) இன்னும் என்னென்னவோ உத்திகள் கையாண்டு இந்த மண்ணை காலம் காலத்திற்கும் எந்த விதத்திலாவது நம் கைக்குள்ளேயே வைத்திருக்கணும். எங்கே அடிச்சா அங்க வலிக்குமோ அங்க அடிச்சா எங்கே வேண்டுமானாலும் வலிக்கட்டுமே? இந்தப் பாலிசிதான் அவர்களின் தாரக மந்திரம். 


இதுதான் நமது இந்திய வரலாற்றின் சாராம்சம், அன்று முதல் இன்று வரை. 

இதை நான் சொன்னால், என்னை மாதிரிப் பலர் சொல்லியுள்ளார்கள், தத்தம் பாணியில் பலவேறு தருணங்களில். 

என்னலே, நீ மக்காலே என்கிறீயளா?  எல்லாம் அந்த மெக்காலே செய்த முக்காலே மூணு வீசம் ஷோக்காலே வந்த உபாயம்!! நம்மையெல்லாம் மேக்காலே நோக்க வைச்சு வடக்காலே இடக்காலே கீழ்க்காலே போக விடாமல் செய்து தெக்காலே நிற்க வைத்த சாதுர்யம், சாமர்த்தியம், சல்லியத்தனம் வேறு யாருக்கு வரும் மக்களே? 

Chennai Airport - Grievances - Response from AAI

As shared on my Facebook wall since 12th May 2015:

Courtesy my brother Krishna Murthy, who invariably takes on all civic issues with concerned authorities within his bandwidth, managed to elicit some response to his repeated follow up and queries from Chennai Airports Authority on the recent episodes of 'repetitive' falling of ceiling. 

With his permission, I am sharing the response received from AAI, Chennai below: Rest is self-explanatory. 

Let's all hope good sense prevail so safety and security of passengers and all the inmates of various commercial establishments who are working 24/7 in the Airport premises.  Let's give ample opportunity for the larger good to happen in the interests of General Public. 

This is shared purely with an intent to display 'what's going on, as a ground reality, nothing more nothing less, period. 

//Quote//

this is based on my usual interaction by email with Chennai Airport authorities, Civil Aviation of India and Airports Auth. of India and Central Govt grievance lodging sites, I used to get responses about my communications to them re: Chennai airport , every time they used to respond quickly. But this time the below response came a bit late but seems much after internal inq's and based on their feedback, here is their latest response to me , fyi just sharing.

ksk (K.S.Krishnamoorthy) 

---------- Forwarded message ----------
From: PGO Chennai
Date: Wed, May 6, 2015 at 2:43 PM
Subject: Observations made on Chennai Airport (MOCAV/E/2015/00426) Dt. 4th Apr, 2015
To: "ksk.kallur@gmail.com"
Cc: Airport Director Chennai , GM OPS Chennai , gmgfschn , jgm ops ch , pgofficerchq


Dear Sir,
This has reference to subject  grievance lodged on the CPGRAMS portal subsequently forwarded to us for redressal, in this context we have the following submission to make:
            At the outset the news write ups appearing in media and the facts and figures mentioned there in are exaggerated, unverified probably gathered from unreliable sources aimed at generating hype.  We from AAI have given rejoinders to some of these news items but nothing was put to print so far.
            2. Not to forget, such kind of unwarranted, irresponsible and false reporting, at times, results in avoidable negative publicity which deters the people from using the airport and go for alternative locations. This not only causes embarrassment to the great city like Chennai but also affects the image and reputation of this great state.
             3. There are certain incidents of glass panels falling down and false ceiling caving in but not all of these have fallen due to poor workmanship. In fact, some of them are accidentally brought down by some of the staff working at the Airport. However, the figures mentioned and the information shared on certain websites are far from being true. In fact the very existence of some of these sites is unknown.  In this back drop, it is unfortunate and unjust that some of our esteemed customers who have reposed faith in us for long are jumping to conclusions, based on these unverified write ups.
            4. Notwithstanding the above, we at Chennai Airport have initiated the following augmentation measures to justify our claim and clear the air as far as public perception is concerned:
  1. We have taken up the issue of glass panes with I.I.T. Madras for conducting a technical study, results of which are awaited.
  2.  We have erected Stainless Steel barricades at ground level so as to prevent general public accessing those areas to prevent any untoward incident.
  3. The POP/ Gypsum Boards used as side panels along with AC vents are being replaced with Alcotel material to augment safety. Although the traditional POP / Gypsum boards are no way inferior or unsafe.
  4. We have constituted an Intergrated Maintenance Unit (IMU), consisting a group of officials from Engineering, Housekeeping to constantly monitor the facilities and their timely maintenance.
            5. It is pertinent to mention here that around 2000 Employees of AAI along with those of CISF, Airlines, Concessionaires are working under the same roof and it forms our duty to ensure their safety apart from that of our valued customers, the traveling public. “Perform or Perish” – holds good with any Organization and AAI is no exception.   Therefore we humbly request you to repose faith in our efforts and commitment for the cause of Aviation in India and support us in our constant endeavour to offer best facilities, infrastructure and services.
            6. The proposed transfer of this airport to private operators under PPP model is pending for long and is hampering further development of the airport. More delay will further increase the woes of traveling public.
            7.  Factual and responsible besides ethical journalism is our request for the betterment of all the stakeholders of this airport.
With Regards
S.S.Raju
DGM(Ops-AOCC)
for PGO, AAI-Chennai Airport.

//Unquote//

Payment options, Charges and the anomaly

Payment Options and its ramifications for an Individual Customer (read Common Man)

Disclaimer:
At the outset, let me clarify this post is relevant ONLY to common man who is an individual customer (not an Enterprise or Shop or Body Corporate or Partnership or Trust in any form). There may be apprehensions by the impacted establishments, institutions including Banks, Insurance Companies in this regard. 
.
I am talking about a practical anomaly impacting a common man who happens to invest his surplus cash, if any, left out after spending for bare necessities in life, at times, he might be forced to commit with a pure intention of savings or some sort of investment with a return of investment inmind.

Most banks, insurance, hospitals, commercial establishments,shopping malls, Jewelry shops and air travel service providers including airlines have the payment option by cash or a charge to debit card, credit card (Visa, Master Card, Amex, Diners) whatsoever.

Some, rather, most of them quote the terms and conditions as stipulated by RBI rules (the Country’s Central Bank) and hence charge an additional charge of 1% to 3%, at times even 4% depending on type of transaction or shopping that one enters into.

Insisting on payment by Cash only and not accepting a Credit Card Payment

For discussion, let’s exclude the case of air travel,leisure travel and jewelry shopping, even luxurious electronics shopping, all of these are mere luxury by nature, the world would not turn upside down if someone does not buy a jewelry or travel on leisure, so any charge extra is justified under whatever pretext (quoting the Central Bank’s rules and/or the Seller’s or Service Providers’ Financial terms and conditions whatsoever).  The charge here somehow is justified as regardless who bears or absorbs the charge (the customer and/or the Credit Card Company – read Amex, Diners, Visa or Master Card – is going to charge anyway for the transaction as per their T&Cs).

I am talking about the charge to Credit Card being rejected by the Seller / Service Provider, where the customer is insisted to settle byDebit Card or cash.  I would say it’s the customer who pays for the product or services, under the pretext that bank will charge extra.

Whether the payment is by debit card or credit card, seller in any way gets the credit instantly, customer’s account is debited instantly,while the seller claims there is a delay in getting a credit to his account.   If there is a delay, it’s the problem of operational convenience between the Seller and the Bank, where in the world is the customer to be penalized for any delay in the process, especially since customer is getting the debit instantly, and there is no delay here.

As long as the customer is being debited instantly –regardless if it is debit card or credit card – it’s as good as he is paying cash.  It only then becomes for customer to settle to the Bank (or the party that issued the Credit Card) where the seller has no say or no role to play. Why then, the seller rejects to payment option by Credit Card?

Charging service charges or fees on the transaction amount if paid by debit card or credit card

I don’t see any reason why there should be a charge for any transaction that involves shopping at a super market, retail outlet, hospital or insurance related products or services  (as mentioned above, let’s not consider luxury shopping including leisure travel and jewelry shopping here, where I have already clarified the charge is justifiable as if customer is enjoying a luxury or planning for a luxury so he is entitled to pay for any additional charge).
However, any bare necessity payables shall NOT be subjected to this because the customer is paying for his day to day living costs and sustenance, and when it comes to insurance products, the customer is investing his spare cash, if any, or by borrowing from credit card, where he is investing in his future for his life with a view to secure himself or his family.  Without insurance, he will be into doldrums and his entire rest of life would be in peril if he does not have enough insurance coverage and protection, so insurance payments are NOT a luxury and it is a bare necessity. 

Moreover, the customer is investing his hard earned money into his future and the insurance company is getting the cash flow without any interest (as if being paid in the near future to the customer, like a term deposit).Insurance Company is obviously going to reinvest elsewhere to make their sustained business for a longer time into the future. 

Moreover, someone might say 'Insurance is a subject matter of solicitation' so nobody is forcing the customer to take up an insurance policy in principle.   I would say, across the world, no customer would volunteer to take up insurance as a commitment, so the word 'solicitation' is only on document as if customer initiates it; however, in practice, the insurance agent or consultant is the one who initiates it by his marketing skills to sell a product or service. Hence, we cannot come to a conclusion here 'it is a subject matter of solicitation by customer, so he is supposed to pay for additional charges, if any, in the process. 

So, any charge (i.e. 1%to 3% whatever is charged as service charges for credit card payments) is NOT justified; if Visa or Master Card company is charging them, from a pure Financial and operational perspective, the Insurance Company can afford to absorb that cost so it can absorb that charge.
No Central Bank would insist on the Bank to charge the customer for administrative fees etc. for such services, especially insurance,health-care services.

Here, let me quote this popular saying, when it comes to trade, commerce and business, there are always two rules that apply:

Rule # 1: Customer is King or God.
Rule # 2: Customer is always right; any questions or concerns, see Rule # 1.

I know these rules ONLY applies outside India, purely with a western mindset.   In India, Customer is NOT even considered an object. 

[A literal Tamil Translated version would follow shortly].

சந்தை, சந்தை, சந்தை!! விந்தை, விந்தை, விந்தை!!

From my Facebook wall since 21st April 2015:

இந்த வெள்ளைக்கார தொரைங்களோட தொழில் நேர்மை (?) எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிச்சிருக்கு. 

அவங்க புதுசு புதுசா தொழில் நுட்பம் விஞ்ஞான வளர்ச்சி அது இதுன்னு தினம் எதுனா கொண்டு வருவாங்க. 

அது நல்லா பிச்சுக்கிச்சுன்னா மேலே மேலே வசதிகளுடன் அபிவிருத்திகளுடன் இன்னும் இன்னும் என்று மேம்படுத்திக்கொண்டேயிருப்பாங்க (கல்லா கட்டறது தனி!!)

அதை சந்தைப் படுத்த இந்தியா சைனா என்று மூன்றாம் உலக சந்தைகள் அவர்களுக்கு டை ஹாத் கா கேல் (ச்சும்மா சுண்டி விளையாடுவாங்க, தமிழில் சொல்றதா இருந்தா வலது கை செய்வதை இடது கை அறியாமல் செய்வாங்க!! தானமெல்லாம் இருக்க்கட்டும், வியாபார தந்திரம் அதைச் சொன்னேன்)

அப்புறம் புது புதுசா மருந்து கண்டுபிடிப்பாங்க. ஒரே உள்ளீடு உள்ள பற்பல மருந்துகளைக் கண்டுபிடிச்சுக்கிட்டே இருப்பாங்க.

கூடவே புது புதுசா வியாதிகளை உண்டுபண்ணுவாங்க, இல்லேன்னா, புதுசா வந்திருக்கறதா உட்டாலக்கடி பண்ணி தாங்கள் கொண்டு வரும் மருந்துகளை விற்க சந்தை தேடுவாங்க.

இதில் சில வகை மருந்துகள் அவையுமே நோயாளிக்கு பின் விளைவைத் தரும் அதனால் அதற்கு மாற்று மருந்தாக வேறொரு மருந்தையும் அவர்களே தருவாங்க வேற!! 

முன்னர் சொன்ன தொழில் நுட்ப வசதிகளால் வரும் பின் விளைவுகள், அது தரும் சுகாதார ரீதியான தாக்கங்களையும் அவர்களே பிற்காலத்தில் கொஞ்சம் கொஞ்சமா வெளியே விடுவாங்க, எப்பன்னா, அவங்க பொருள் சந்தையில் மக்களின் பயன்பாட்டில் நீங்கா இடம் பிடித்தபின், மக்களால் அவையின்றி ஓரணவும் அசையாது என்பதை ஆர்ஜிதப்படுத்திக்கொண்டபிறகு. 

பிறகு அந்தப் பின் விளைவுகள் எந்த அளவுக்கு மனித குலத்தின் மாண்பை கேவலப்படுத்துகிறது, அதனால் அதன் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளணும், முடிந்தால் தவிர்க்கணும் என்று இன்டர்னெட் மூலம் பிரசங்கம் செய்வார்கள். 

இடையே, அது மாதிரி பொருட்களை சந்தையில் வாங்க காசு பணம் வசதியில்லாதவங்களுக்காக அவங்களே கடன் வசதி தரும் கடன் அட்டைகளை தருவாங்க. 

அந்தக் கடன் அட்டைகளின் வழி மீள முடியாத கடன் தொல்லைகளினால் எந்த அளவுக்கு மக்கள் உலகளாவிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்கிற ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் அவர்களே தருவாங்க. 

அதையெல்லாம் படிக்க எவனுக்கு நேரம் இருக்கும்? அதனால் அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

அ) தங்கள் கொணரும் புதுப்புது பொருட்களுக்கு சந்தை என்றுமே இருக்கும்
ஆ) புதுப்புது மருந்துப் பொருட்கள் இத்யாதி அதற்கும் சந்தை என்றுமே இருக்கும்
இ) கடன் வசதி தரும் பொருளாதாரக் காரணிகளையும் அவர்களே நிர்ணயிப்பார்கள்
ஈ) எல்லாவற்றுக்கும் மேல் உலகளாவிய அளவில் அனைத்துச் சந்தைகளையும் (வணிகம், தங்கம், பெட்ரோல், உணவுப் பொருட்கள்) என்று அனைத்தும் அவர்கள் கையில். 

இதை இப்படி யாராவது கருத்து சொன்னா, இவன் ஒரு 'எக்சென்ட்ரிக், ஹிப்போக்ரேட், நெக்ஸ்ட் இவன் ஒரு சைக்கோவா ஆயிடுவான்'னு சொல்லி இவனுக்கும் அதே மருந்தைக் கொடுங்கடா என்று மீண்டும் சந்தை, சந்தை, சந்தை!! விந்தை, விந்தை, விந்தை!! 

தட் அவங்களே வைப்பாங்களாம், அவங்களே எடுப்பாய்ங்களாம், க்ரேட் மொமென்ட்!!

படிப்பும் வேலை வாய்ப்பும் 10 விதக் கட்டளைகள்

32 வருட அனுபவத்தில் இதைப் பகிர்கிறேன். Original thought since 2015-16. 

என் அனுபவத்தை எழுதப்போனால் முக நூலில் நோட்வடிவில் எழுதினால் குறைந்தபட்சம் 50 நோட்கள் எழுதணும். யாரும்படிக்கப்போவதில்லை. பெரிசு எதுவோ பினாத்துது,தன் எரிச்சலைக் கொட்டுகிறது என்று உதாசீனப்படுத்தப்படும் சாத்தியம் உண்டு.

எனவே,10 பாயிண்டுகளாய் தருகிறேன். நடைமுறை யதார்த்தம் சொல்கிறேன்.கொள்வோர் கொள்க:

1) நம்முடையஅரசு அல்லது தனியார் கல்லூரிகளின்தரைமட்ட நிலவரம், அரசாங்கங்களின் தொடர்கண்ணயர்ச்சி கவனிப்பில்லாமை, சிஸ்டம் சரியில்லை, சிஸ்டம்மாறாத வரை நாம் உருப்படப்போவதில்லை என்று பற்பல காரணிகளைஆராயாமல் காரியத்தில் கண் வைக்கணும் (சிஸ்டம்மாறித்தான் நாமெல்லாம் கடைத்தேறணும் எனில் சமுத்திரத்தில் அலைஓய்ந்தபின்னர்தான் குளிப்பேன் என்கிற மனோபாவத்தில்தான் முடியும்).

2) சற்றுபொருளாதாரம் சரியாய் இருந்து ஃபீஸ்கட்டும் வாய்ப்புள்ளவர்கள் தத்தம் தகுதிக்கேற்ப வசதிக்கேற்பபிடித்த பாடம் பிடித்த ஊரில்பிடித்த கல்லூரியில் படிக்கலாம்.

3) ஏழ்மைச்சூழலில் உள்ளவர்கள் கிடைத்ததைப் பிடித்துக்கொண்டு முன்னே நடைபோட வேண்டியதுதான்.கடன் வாங்கி பணம் கட்டிபடித்திருந்தால் படிப்பில் கவனம் வைத்து நல்லமுறையில் தேர்ச்சிபெற ஆவன செய்யணும். ஆவரேஜுக்கும்மேல் மார்க் வாங்க முயற்சிக்கணும்.  எனக்குஒண்ணும் வராது, நானெல்லாம் ஆவரேஜுக்குமேலே தேறமாட்டேன் என்கிற 'தன்னம்பிக்கையில்லாதவர்கள்' பொறியியல் அல்லதுமருத்துவம் என்று கனவு காண்பதைவிட்டுவிட்டு சுய தொழில் அல்லதுகுடும்பத் தொழில் அல்லது தனக்குஎது நன்றாக வரும் என்பதைஅறிந்து அதில் கடைத்தேற வேண்டும்.வேறு வழியில்லை.


4) பணக்காரப்பின்னணியோ ஏழ்மைப் பின்னணியோ, கேம்பஸ்இன்டர்வியூவில் ஒண்ணும் கிடைக்கலை என்றுவாளாவிருந்துவிட்டு 2 அல்லது 3 வருடங்கள் வெட்டியாய்பொழுதைப் போக்கிவிட்டு பின்னர் ஓண்ணும் கிடைக்கலைஎன்று புலம்புவதில் அர்த்தமில்லை.

பணக்காரவீட்டுப் பிள்ளைகளுக்கு மாற்று வழி சொல்லஆளிருக்கும், மார்க்கமிருக்கும். பிழைத்துக்கொள்வார்கள்.
அவர்கள்கூட, முறையான வேலையிலோ தொழிலிலோதேறாவிட்டால் திருமணச் சந்தையில் விலைபோகமாட்டார்கள்.

ஏழை வீட்டுப் பிள்ளைகள் வங்கிக்கடன்கட்டவே தாவு தீர்ந்து போயிடும்.இதில் வேண்டியது கிடைக்கலை, அதனால் வெட்டியாய்த்தான் சுற்றுவேன்என்றிருந்தால் உற்றம் சுற்றம் பெற்றோர்அனைவரின் சொல்பேச்சு கேட்கணும்; கூடவே படித்த மற்றவர்மேலே போய்விட்டதைப் பார்த்து பொறாமை ஆற்றாமைநெகடிவ் சிந்தனைகள் தலைக்கேறும். தேவையா?

5) ஒரு வேலை கிடைத்தபின், பிடித்ததோஇல்லையோ அதில் முன்னேற ஆவனசெய்யணும். அரசு வேலை கிட்டினால்ஜாப் செக்யூரிட்டி இருக்கும், ஆனால் தொடர்ந்து தனதுதகுதியை மாற்று வழியில் சாஃப்ட்ஸ்கில்ஸ் எனப்படும் மேலாண்மை, நிர்வாகவியல், அவரவர் துறை சார்ந்தமேற்படிப்பு படிக்க தொடர்ந்து முயற்சிக்கணும்.ஒரு வேலை கிடைத்துவிட்டது, இதிலேயேசாகும்வரை காலத்தை ஓட்டிவிடுவேன் என்றுவாளாவிருந்தால் அரசு வேலை கூடநிலைக்காது. தனியார் வேலை பற்றிச்சொல்லவே வேண்டாம்.

6) ஒரே இடத்தில் நீண்ட காலம் இருப்பதும் தவறு (இவன் எதுக்கும் சரிப்பட்டு வரமாட்டான் என்கிற அளவுகோல் வந்துவிடும், உங்கள் பயோடேட்டா யாரால் பரீசீலிக்கப்படுகிறதோ அங்கு)

அதற்காக அடிக்கடி இடம் மாறுவதும் தவறு (இவன் ஒரு இடத்திலும் தங்க மாட்டான், இவனுக்கு ஏன் நாம் வேலை கொடுக்கணும்? என்கிற கேள்வி வரும்).

ஒரு இடத்தில் 18 முதல் 24 மாதங்கள் என்பது ஒரு சராசரியான ஒப்புக்கொள்ளக்கூடிய கால நேர இடைவெளி அவசியம். நாம் நம்மை செம்மைப்படுத்திக்கொள்ளவும், சந்தைக்கேற்றவாறு நம்மை ஒருங்கிணைத்து நம் திறமைகளை வளர்த்துக்கொள்ளவும் இது உதவும்.
  
தனியார்துறையாய் இருந்தால் உள் நாடோ வெளிநாடோ தொடர்ந்து பல்வேறு வேலை வாய்ப்புக்களுக்குவிண்ணப்பித்து 18 மாதங்களுக்கு ஒரு முறை பணிமாற்றம் பெற முயற்சி செய்வதுஇன்றைய காலகட்டத்தில் வெகு அவசியம். கிட்டினால்பதவி உயர்வு கூடவே வருமானஉயர்வு என முன்னேறலாம். ஒன்றும்கிடைக்காவிட்டாலும் கூட, தன்னுடைய சந்தைவிலை என்ன என்கிற குறிப்பாவதுகிடைக்கும். அதற்கேற்றாற்போல் தன்னை தன் திறமைகளைமெருகேற்றிக்கொள்ள சந்தைக்கு ஏற்றவாறு தன்னை தயார்ப்படுத்திக்கொள்ளஅதன் மூலம் ஒரு வழிபிறக்கும்.

7) பணி நிரந்தரம் வாய்த்தால் யாருக்குக் கசக்கும்? இந்தக் காலத்தில் யாரும்எந்தப் பணியிலும் தொடர்ந்து சாகும் வரை நிலைக்கமுடியாது. முறையான பயிற்சி, தேர்ச்சி,அதன் மூலம் வரும் வாய்ப்பைசரியாய் பயன்படுத்திக்கொள்பவர்கள்தான் வாழ்க்கையில் முன்னே முன்னே எனச்செல்ல முடியும்.

8) கிடைப்பதுபோதும், என்று குண்டுச் சட்டியில்குதிரை ஓட்டும் எண்ணம் கொண்டவர்கள்வேலையிலும் மற்றுமல்ல வாழ்க்கையிலும் கூட பின் தங்கிவிட வாய்ப்பு அதிகம். சுற்றியுள்ளவர்கள்சம வயதுள்ள நபர்களுடன்ஒப்பீடு செய்தே உங்களை உண்டுஇல்லை என்று ஆக்கிவிடுவார்கள். ஒருசமயம் 'ஏன்டா இந்த வாழ்க்கைவாழ்கிறோம்' என்று தற்கொலை அல்லதுஓடிப் போகும் மன நிலைக்குத்தள்ளப்படலாம். இதைத் தவிர்க்க தொடர்முயற்சியில் முன்னே செல்ல வேண்டும்.

9) யார்எது சொன்னாலும் செய்தாலும் தனக்கு எது வருமோஅதை அனுமானித்து அதன் பேரில் வேலைஅல்லது தொழில் முயற்சி செய்யணும்,புலியைப் பார்த்து பூனை சூடுபோட்டுக்கொண்டது மாதிரியான அடுத்தவரைப் பார்த்து காப்பி பேஸ்ட்செய்தால் வீண்தான். எல்லாரும் எல்லாத் துறையிலும் வெற்றிபெறுவதில்லை. ஓரளவுக்கு நேரமும் அதிருஷ்டமும் கைகூடிவரும்போதுதான் வாய்ப்புக்களே நமக்கு வருகின்றன. அதையும்பயன்படுத்திக்கொள்ளாமை என்பது நம் தவறாய்முடியும்.

10) முடிந்தால் ஆர்வமிருப்பின், ஆர்வம் இல்லையேல் ஆர்வம் மேற்கொள்ள ஆவன செய்து, இயன்றவரை தாய் மொழி ஆங்கிலம் தவிர பிற மொழிகளில் வெறுப்பில்லாமல் கற்றுக்கொள்ளும் மனோபாவம் வேண்டும். பன் மொழிப் புலமை இருப்பவர்கள்தான் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் காலூன்ற முடியும். இதில் உணர்ச்சி பூர்வமாய் முடிவெடுப்பதால் நஷ்டம் நமக்குத்தான், அடுத்தவருக்கில்லை.    

கடைசியாய்தன்னம்பிக்கையை விடக்கூடாது. எது வந்தாலும் சமாளிப்பேன்,எந்தச் சூழலிலும் தாண்டி வெளியே வருவேன்,என்கிற சுய புரிதலும், சமூகம்சார்ந்த புரிதலும் இருந்தால் ஒருவன் வெற்றி பெறுவதில் தடையேதுமில்லை.

சொல்வனம் (சொல்லாமலே) (5)

Since 3rd April 2015, from my Facebook wall:

மேற்கத்தியநாகரிகம் குழந்தை வளர்ப்பில் ஒருநடைமுறை கடைப்பிடிக்கிறது. 18 அல்லது 20 வயதாகிவிட்டால் பிள்ளைகளை அவர்கள் தங்களுடன் இருக்கவிடுவதில்லை. கட்டாயமாய் அவனை வாழ்வியலைக் கற்கவெளியே அனுப்பிவிடுகிறார்கள்.

நம் சமூகத்தில் குடும்பச் சூழலிலேயே ஒருவன் வாழ்வியலைக் கற்கும்அவலம் நேருகிறது. குடும்பத்தை விட்டு ஒருவன் தன்வழி தனி வழியென்று சென்றால்அவன் பொறுப்பில்லாதவனாய் பார்க்கப்படுகிறான். முதியோரைப் பராமரிக்கும் பொறுப்பும் அவனுக்கு இருக்கிறது. கூட்டுக்குடும்பமாய்வாழ்ந்திருந்தால் ஒரு வேளை உறவுச்சிக்கல்கள் இல்லாமலிருக்குமா என்று ஆராய்ந்தால் அங்கும்எத்துணை பேர் முறையாய் தம்அன்பை வெளிப்படுத்துகிறார்கள்?

பொருளாதாரஏற்றத் தாழ்வுகளில் அதன் தாக்கத்தில் பரஸ்பரஒருங்கிணைப்பும் அரவணைப்பும் புரிந்துணர்வும் எத்தனை பேரிடம் இருக்கிறது?  போட்டிபொறாமை என்று வந்து அவரவர்தம் வழியில் பிரிகிறார்கள். சகோதரசகோதரிகளிடம் ஆழ்மனதில் அன்பு இருந்தாலும், அவரவர்அன்பை வெளிப்படுத்த சந்தர்ப்பம் இருந்தும் அதைப் பயன்படுத்துபவர்கள் குறைவு.ஏனெனில் அவரவருக்கு தத்தம் குடும்பம், பிள்ளைப்பேறு,குழந்தை வளர்ப்பு என்று அவரவருக்குவேலைகள் பொறுப்புக்கள் காத்திருக்கின்றன.

அன்பு என்பது பருவத்தே அந்தந்தசமயத்தில் செயல் வழி மட்டுமல்ல,சொல்வழியிலும் வெளிப்படுத்தப்பட வேண்டும்.

சொல் அல்லது செயல் வழிஇல்லாமல் காலம் கடந்துவிட்டால், பின்னாளில்வெறும் உடல் மொழிகளில்தான் அன்பானதுவெளிப்படுத்த வேண்டி காத்திருக்கும்.

அவ்வப்போதுஉடல்மொழிகளில் அரவணைப்பில் ஒரு 10 நிமிடப் பேச்சில்அன்பை வெளிப்படுத்தக் கூட இங்கு நம்சமூகத்தில் பலருக்குத் தெரியாது. காரணம் ,அக்கம் பக்கம்,பெரியோர் சிறியோர் கூடி வாழும்சமூகத்தில் உடல் வழி அன்பின்வெளிப்பாடு என்பது இங்கு ஆபாசமாகவோஅனர்த்தமாகவோதான் பார்க்கப்படுகிறது.

நண்பர்களுக்குள்கூட இந்த அன்பின் வெளிப்பாடுபெரும்பாலும் குடும்பத்தினர்களிடம் உள்ளது போல் வித்தியாசங்கள்சொல்வழி, செயல்வழி அல்லது உடல்மொழிஅல்லது மௌனமொழியில் வெளிப்பட்டாலும் வெளிப்படாவிட்டாலும், பற்பல நட்புக்கள் பரஸ்பரபுரிந்துணர்வின் அடிப்படையில் ஆழ்மனதில் ஒருவருக்கொருவர் கொண்டுள்ள மதிப்பு, மரியாதை காரணாமாய்நட்பானது தொடரும்.

ஆனால், குடும்ப உறுப்பினர்களிடையே அன்பின்வெளிப்பாடு காலத்தே சொல், செயல்,உடல் மொழி என்று ஏதோஒரு வழியில் வெளிப்படுத்தப்பட வேண்டும்.இல்லையேல், உளச் சிக்கல்கள், உறவுச்சிக்கல்கள், குடும்பங்களின் பிரிவானது தவிர்க்க இயலாமல் போகும்.

அந்தப் பிரிவானது கூடி வாழ்ந்தாலும், மனத்தளவில்பிரிவில் தொடரும். சிலருக்கு நிரந்தரப்பிரிவாகக்கூட மாறலாம்.
இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வாய்'வெளிப்படையான பேச்சுவார்த்தை' மூலம் தீர்த்துக்கொள்ள முடியாதவிஷயங்கள் என்று எதுவுமே கிடையாதுஎன்பர்.

அது எத்தனை கஷ்டம் என்பதுஅது மாதிரி உள மனச்சிக்கல்களை அனுபவிப்பவர்களுக்குத்தான் தெரியும் புரியும்.

அவரவருக்குஅவரவர் சுயமரியாதை சார்ந்த தாக்கம், இழப்பு,அதனூடேயான பிரத்தியேக கருத்துக்கள், சுய அவதானிப்புக்கள், சுயகௌரவம் சார்ந்த விஷயம். அடுத்தவர்பார்வையில் அந்த சுயமரியாதை மற்றவரதுஈகோவாகப் பார்க்கப்படும்.

யார் விட்டுக்கொடுப்பது, யார் அனுசரித்துப்போவது என்பதில்ஒரு ஈகோ தலைக்காட்டும். ஈகோ, சுயமரியாதை, சுய கௌரவம் எல்லாவற்றையும்தாண்டி காலம் கடந்து வரும்ஞானோதயம் இருதரப்புக்குமே ஒரு இடியாப்பச் சிக்கலைத்தான்கொண்டுசேர்க்கும்.

என்னதான்ஒருவர் மற்றவரை ஆழ்மனதில் புரிந்துவைத்திருந்தாலும், அவரவர் சுய கௌரவம்தலைதூக்கும்போது 'சாரிட்டி என்பது தன்னில்தான்துவங்கணும்' (சாரிட்டி பிகின்ஸ் அட்ஹோம்') என்கிற நிலைப்பாடு வரும்.

கூடவே, அந்தக் குடும்பத்தலைவனுக்கு வயதொத்தகாரணிகள், உடல்கூறியல் சிக்கல்கள், உடல் உபாதைகள் வந்துஅவன் தொடர்ந்து உள, உடல், மனஉபாதைகளோடே காலந்தள்ள வேண்டிய நிர்ப்பந்தம் வரும்.

சில நண்பர்கள் விஷயத்தில் கேள்விப்பட்டுள்ளேன். ஆற்றொனா மனோபலம் வாய்த்தவர்கள்மட்டுமே இது மாதிரி சூழல்களைக்கடந்து இறுதிவரை போராடி இயற்கையின்முடிவு இயற்கையாய் வரும்வரை காலம் தள்ளுவர்.

சிலருக்குஇருதய மன அழுத்தம் தாங்காமல்இருதய இயக்கமே நின்றுபோய் இயற்கைஎய்துவிடுவர். பின்னர் அந்தக் குடும்பத்தினர்'இந்த மனுஷன் கடைசி வரைக்கும்நம்மளையெல்லாம் புரிஞ்சுக்கவே இல்லையே? ஒண்ணுமே சொல்லாமபொட்டுன்னு போய்ட்டாரே?ன்னு அங்கலாய்ப்பர். தர்க்கநியாயம் உணர்ந்தவர்கள் ' நாமளும் அவரை புரிந்துகொண்டு அனுசரித்து வாழ்ந்திருக்கலாம்' என்று தத்தம் தவற்றைகாலம் கடந்து உணர்வர். அதுமாதிரி காலம் கடந்து வரும்ஞானோதயம் யாருக்குப் பயன்?

எல்லாம்அவரவர் பார்வையில் விட்டுக்கொடுத்துப் போவதில் புரிந்துணர்வு ஏற்பட்டாலொழியகுடும்பங்கள் சேர்ந்து அன்பாய் ஆதரவாய்அரவணைப்பாய் இருப்பது அபூர்வம் என்கிறஅளவில் இன்றைய சமூகம் இருக்கிறது.

(concluded)