Sunday, July 19, 2015

நாம்_எங்கே_போகிறோம்? எது ஜனநாயகம்? (2)

As shared on my Facebook wall since 17th July 2015:

அனைத்து அராஜக வழிமுறைகளையும் இவர்களே ஏற்படுத்துவார்களாம், பயனாளியை தண்டிக்கும் சட்டம் ஒரு சட்டமா?

சில பல சின்னத் திருட்டுக்களில் குற்றங்களில் கஞ்சா இத்யாதி நார்க்கோட்டிக் பொருட்களை 'யாரைக் குற்றவாளி அடையாளம் காட்டணும், அதன் போக்கில் சில வழக்குகள் நடக்கணும், அரசியல் எதிரிகளை பழி வாங்க சில பல முறைசாரா நடைமுறைகள் இந்த நாட்டில் உண்டு, யாரும் மறுக்க முடியாது. நடக்கவில்லை என்று சொன்னால் உப்புப் போட்டு சோறு தின்னும் யாரும் நம்ப மாட்டார்கள்.

சினிமாக்களில் காட்டப்படும் காட்சிகளில் வருகிற மாதிரி 'இவர்களே வைப்பார்களாம் இவர்களே எடுப்பார்களாம்' என்று இருக்கிறதே இது பொது வாழ்வியல் நடைமுறையில் இல்லை என்று யாராவது சொன்னால் பைத்தியக்காரன் கூட வழித்துக்கொண்டு சிரிப்பான்.

சினிமாவில் காட்டப்படும் காட்சிகள் மிகைப்படுத்தப்பட்டவை, நிஜம் அப்படியில்லை எனில் நிஜத்தில் இல்லாத காட்சிகளை காட்டும் திரைப்படம் எடுக்கும் தயாரிப்பாளர்களையும் அந்த சினிமாவை தணிக்கை செய்யும் அதிகாரிகளை கொண்ட சென்ஸார் அமைப்பு தூங்குகிறதா?

மேற்சொன்ன மாதிரி அரசே இங்கு அனைத்துத் துறைகளிலும் ஊழல், குற்றம் நடக்க ஏதுவான சட்ட ஓட்டைகள், இருக்கும் சட்டத்தை ஒழுங்காக அமல்படுத்த முடியாத அளவிற்கு நாட்டில் இருக்கும் முப்பரிமாண அல்லது நாற்பரிமாண ஒற்றுமை (சட்டம் செய்வோர் காப்போர் அமல்படுத்துவோர் நீதிபரிபாலன அமைப்பு) ஒன்றுக்குள் ஒன்று பின்னிப் பிணைந்து கிடக்கிறதே?

இதை, நாட்டில் நடப்பதை வெளியில் சொல்லும் தகுதியும் வாய்ப்பும் பெற்ற பத்திரிக்கை, சஞ்சிகை, தொலைக்காட்சி, இணையவழி தொலைக்காட்சி என்று உள்ள பற்பல ஊடகங்களை "இல்லாத ஒன்றை எதுக்கய்யா வெளிச்சம் போட்டு காட்டுகிறாய், பிடி தண்டனை?" என்று சட்டம் தன் கடமையைச் செய்யும் ப்ரெஸ் கவுன்சில் ஆப் இந்தியா தூங்குகிறதா? ப்ரெஸ் கவுன்சில் தன்னாட்சி அதிகாரம் செய்யும் உள்ள ஒரு அமைப்பு எனில், நீதி மன்றங்கள் எதற்கு?

நீதி மன்றங்களில் கீழ்மை நடு நிலை முன்சீப் உயர் உச்சம் என்று பற்பல அடுக்குக‌ள் இருக்கிறதே?

ஒரு தீர்ப்பு தவறெனும்போது (அறியாமை காரணமாய்) அதை மாற்றும் அதிகாரம் மேலே மேலே என்று ஜனாதிபதியிடம் கருணை மனு கொடுக்கும் வாய்ப்பு, அதை நிராகரிக்கும் வாய்ப்பு அவருக்கு இருக்கிறதா, அவர் நிராகரித்தால் மனித வாழ்வியல் உரிமை மறுக்கப்படுகிறதா என்று ஊடகங்களும் என் ஜி ஓக்களூம் அரசும் இன்ன பிற அமைப்புக்களும் காலம் காலமாய் விவாதம் செய்தே காலம் கழிகிறதே?

ஒரு தீர்ப்பு சரியில்லை என்று இருக்கக் கூடாது. அப்பீல் (மேல் முறையீடு) என்று வரும்போது விதிக்கப்பட்ட தீர்ப்பும் தண்டனையும் அதிகப்படுத்தப்பட வேண்டும், அப்பீல் செய்யும் எண்ணமே வராதபடி நீதி பரிபாலனம் உச்சத்தில் கண்ணியத்தில் இருக்க வேண்டும்.

இதெல்லாம் இந்த முறைசாரா ஜன நாயக நாட்டில் சாத்தியமா ஸார், என்ன ஸார் நீங்க, நீங்க எந்த நாட்டில் இருக்கிறீர்கள் என்று கேட்பீர்கள் ஆனால், ஒரு சாமானியனுக்கு நீதியும் முறையான கல்வியும் மருத்துவ வசதி இத்யாதி நடைமுறைகள் ஒரு குடிமகனாய் கிடைக்க வேண்டும். கிடைக்கும் வகையில் சட்டமும் ஒழுங்கும் நீதி நிலை நாட்டப்பட வேண்டும்.

இதற்கு அரசே கேம்ப்ளிங் என்று நேரடியாக அதே பெயரில் செய்யலாமே? மேற்சொன்ன அனைத்து நடைமுறைகளும் பொது நிர்வாகமும் ஒரு வகையில் பார்த்தால் கேசினோ மாதிரிதானே இருக்கிறது, தியரிட்டிக்கலி அன்ட் ஓல்ஸோ பிராக்டிக்கலி?

கேம்ப்ளிங் செய்வது காசினோ!!

அதில் உள்ளே போவது விளையாடுவது நட்டப்படுவது ஏமாறுவது, பின் 'அய்யோ அய்யய்யோ, எல்லாம் போச்சே' என்று அழிவது நம் குடிமகன்களில் ஒருவனோ அவன‌து கசினோ!!

அதில் இடையிடையே காட்டப்படும் திரைப்படங்களில் வருவது அசினோ அவரது கசினோ பிசினோ!!

அதில் குடிமகன் நட்டப்படுவது உள்ளே செல்பவன் வெளியே வரும்போது அவன் பையில் காசு நோ !!

காலம் காலமாய் இதையெல்லாம் சகித்துக்கொள்ளத்தான் குடிமகன் பழக்கப்படுத்தி வைக்கப்பட்டுள்ளான். அவன் எதுக்கும் சரிப்பட்டு வராதவன், கையாலாகாதவன், அவனை மேன்மேலும் நல்ல கல்வி பெற்று உயராமல் பார்த்துக்கொள்ள வேண்டும், இல்லையேல், அவன் நம்மை கேள்வி கேட்பான் என்று ஆட்சியாளர்களை காலம் காலமாய் யோசிக்க வைத்து அதன்படி சட்ட நீதி பரிபாலனம் அரசு முறை பொது நிர்வாகம் இருக்கிறதே, இது மாறுமா? நடக்குமா?

எங்கே போகிறோம் நாம்? 

இப்படி பலவாறு குடிமகன் தர்க்க நியாயப்படி கேள்விகள் கேட்பதால் ஜன நாயக ஆட்சி சரியில்லை, ராணுவ ஆட்சியோ சர்வாதிகார ஆட்சியோ எதேச்சாதிகார ஆட்சியோ தான் சரி என்று நான் வாதிடவில்லை. குறைகள் எல்லா ஆட்சிமுறைகளிலும் இருக்கிறதுதான். நாடு நல்லாட்சி பெறணும் என்கிற நல்லெண்ணத்தில் உச்சந் தலையில் சூட்டைக் குறைக்க  நல்லெண்ணெய் தடவிக்கொண்டே எல்லா சாமானியர்களும் கேட்பது இதுதான். இது என்று விடியும்? 

(to be continued)

No comments:

Post a Comment