Sunday, July 19, 2015

குடும்ப வாழ்க்கையும் சதுரங்க வேட்டையும் (3)

Since 15th March 2015 from my Facebook wall:

இந்தப் பின்னணியில்ஒரு தனி மனிதன் குடும்பத் தலைவனாக அல்லது தலைவியாக ஒரு குடும்பத்தைக் கட்டிக் காப்பதைஒப்பு நோக்கினால்?

அந்த வீட்டின் குடும்பத்தின்நேரடி வாரிசாய் மட்டுமே இருக்கணும் என்கிற அவசியமில்லை, ஒரு பொதுவானவன் கூட அந்த வீட்டிற்காகஉழைக்கலாம், சம்பளத்திற்கு வேலையாளாய் இருக்கலாம், தோட்டத் தொழிலாளியாகவோ வீட்டு வேலைகள்,சமையல், இத்யாதி, ட்ரைவர் அது இது என்று சிற்சில பணிகள் இருக்கும். அந்த வகையில் வெளியாள்ஒரு சிப்பாயாகவோ சேனாபதியாகவோ யானைபோல் பலமுள்ளவராகவோ இருக்கலாம்.

சிப்பாயாக உள்ளேநுழைந்து முதலாளியின் அல்லது குடும்பத் தலைவனின் அல்லது தலைவியின் ஆதர்ச அன்பைப் பெற்றுதன் தகுதி, திறமை வளர்த்துக்கொண்டு ஒரு சேனாபதியாய் ஒரு குதிரையா யானைபலம் கொண்ட போராளியாய்வரலாம். இதில் பெரும்பாலும், சேனாபதி, குதிரை அல்லது யானை என்கிற தகுதியில் அந்தக்குடும்பத்தின் நேரடி வாரிசுகளோ நெருங்கிய உறவினர் வழியில் வந்த பங்காளியோ பங்காளியின்வாரிசோ தூரத்து உறவில் வந்த வாரிசோ வரலாம், தகுதி, திறமை இவற்றால் முதலாளியின் அன்பையும்ஆதரவையும் பெற வேண்டும். அவ்வளவுதான்.

ராணியாகப் பட்டவர்முன்னோர் மூத்தோர் பார்த்து மணம் முடித்து வைத்தவராய் இருக்கலாம் (அரேஞ்ஜ்டு மாரேஜ்),ராஜாவே தன் பராக்கிரமத்தால் படை பல வென்று தன் புஜபல கஜபல மாச்சரியங்களால் கவரப்பட்டு(தானாகவோ ராஜா விரும்பியதாலோ) பரஸ்பர விருப்பம் பேரில் அல்லது ஒருதலைக் காதல் அதன்மூலம் ராஜா தக்கவாறு காய் நகர்த்தி கவர்ந்து வந்த அண்டை நாட்டு இளவரசியாகவோ கூட இருந்திருக்கலாம்,அந்த வகையில் காதலித்து மணந்த மணமகளாய் அந்த ராணி இருக்கலாம்.

அல்லது சண்டையில்போர்க்களத்தில் எதிரியை வென்று எதிரியின் ராணியையோ எதிரி நாட்டு இளவரசியையோ கவர்ந்துவந்திருக்கலாம், இந்த மாதிரி கூட ராணியாகும் பாக்கியம் சிலருக்கு உண்டு.

ஒரு ராஜாவாய் குடும்பத்தலைவன் தானே களத்தில் இறங்கி தன் தனிப்பட்ட கல்வியறிவு, கல்வியறிவு இல்லாவிட்டாலும்,தன் திறமை, ஆளுமை, புத்திச் சாதுர்யம் இவற்றால் சம்பளம் பெரும் ஒரு போராளியாகவோ அல்லதுவேறு எங்கோ ஒரு சேனாபதியாகவோ யானையாகவோ குதிரையாகவோ சிப்பாயாகவோ சம்பாதித்து பொருள்சேர்த்து தன் குடும்பத்தைக் காக்க வேண்டும்.

ஒரு ராணியாய் தலைவியானவள்முற்காலத்தில் அவள் நேரடியாய் களத்தில் இறங்கி வேலை செய்ய அவசியம் இருந்ததில்லை. அவள்அந்தப் புரத்தில் இருந்து கொண்டே ராஜதானி அவையில் என்ன நடக்கிறது, எந்த மந்திரி ப்ரதானிஎப்படி இருக்கிறார், சேனாபதி இன்ன பிற தளபதிகள் என்னென்ன ஆலோசனை சொல்கிறார்கள், அவைமுன்னோர்கள் வீட்டுக்கு வரும் உறவினர்கள், நட்பு வட்டத்தில் உள்ள அண்டை நாட்டினர்,நட்பாய் உள்ள தூரதேசத்து அரசர் (அவர் பால்ய நண்பராய், ராஜாவுக்கோ ராணிக்கோ முன்பே தெரிந்தநண்பராய் இருக்கலாம்) என்று வருவோர் போவோர் அனைவரையும் அனுசரித்து அவை முன்னவர் ராஜாவின்கண் சாடை அறிந்து குறிப்பறிந்து ஆவன செய்யும் தகுதியும் உரிமையும் ஆளுமையும் ராணிக்குஉண்டு. ராணியும் தக்க சமயத்தில் அமைதியாக தனியாகவோ அல்லது சபை முன்னிலையில் ஒரு கண்ஜாடையில் ராஜாவுக்கு குறிப்பால் உணர்த்தி அதன்படி ராஜா அல்லது ராஜாங்கம் அவை முன்னெடுப்பைநடத்துவது போல குடும்பத் தலைவனின் சூழல் அறிந்து குடும்பச் சூழலைப் பேணிக் காக்கும்உரிமை, தகுதி, ஆளுமை ராணிக்கும் உண்டு. சில நேரங்களில் ராஜா தனிப்பட்ட ரீதியில் அந்தரங்கமாய்ரகசியமாய் சில காரியங்கள் செய்யலாம், ராணியிடம் சொல்லாமல் கூட ராணிக்கு தெரியாமல் கூடசெய்யலாம், திட்டம் தீட்டலாம், தேவைப்பட்டால் இந்த ராணியை ஓரங்கட்டி விட்டு வேறு ராணியின்மீது அல்லது வேறு பெண்ணை ரெண்டாவது ராணியாகக் கூட கொணர ஆயத்தம் செய்யலாம். இதையெல்லாம்அனுமானித்து ராணி அனவரதமும் கண்ணும் கருத்துமாய் காரியத்தில் கண் வைக்கணும், கூடவேராணி தன் இருப்பையும் ஒரு பட்ட மகிஷியாய் சக்கரவர்த்தினியாய் சக்கரவர்த்திக்கு ஆலோசனைசொல்லிக்கொண்டே தன் சக்கரவர்த்தினி ஸ்தானத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும்.

சில குடும்பங்களில்மேற்சொன்ன அனைத்து விஷயங்களையும் ஒரு ராணியானவர் தன் தலைப் பொறுப்பாய் செய்வதுண்டு.அங்கு ராஜாவானவர் இருப்பார், பெயருக்குத்தான் ராஜா, மற்றபடி பொருளீட்டுதல், குடும்பத்தைபராமரித்தல், சண்டை சச்சரவுகள் வந்தால் தக்க ஆலோசனை சொல்லி வழி நடத்துதல் என்று அனைத்தும்அங்கு ராணியின் அல்லது குடும்பத் தலைவியின் ஆளுமையால் நடக்கும். அனேகமாக பெரும்பாலும்இன்றைய சமூகத்தில் பெருவாரியான குடும்பங்களில் பொருளீட்டுவதில் மட்டுமே ராஜா கண்ணும்கருத்துமாய் இருப்பார். மற்றைய குடும்ப நிர்வாகம் அனைத்தும் ராணியின் வசமே.
பெரும்பாலும் ஆண்மகன் தலைவனாய் இருக்கும் குடும்பங்களாகட்டும், அல்லது பெண்டிர் குடும்பத் தலைவியாய்இருக்கட்டும் குடும்பங்களாகட்டும் (அவரவர் சூழல், நிர்ப்பந்தங்கள், கட்டுதிட்டுக்குள்வாழணும் என்கிற சமூகச் சூழலில் சிக்கியுள்ளவர்கள் உள்பட) ராணியின் பங்கு மிக முக்கியமானது.

ஆண் திரை கடலோடியும்திரவியம் தேடும் நோக்கில் உள்ளூர், வெளியூர், வெளி நாடு என்று அலைந்தாலும், வீட்டைப்பொறுத்தவரை ராணிதான் ராஜா ப்ரதானமாக. அந்த அளவில் ஆணின் பங்கானது பொருளாதாரத் தேவையைநிறைவேற்றுவது, தேவைப்பட்ட அளவுக்கு ஆலோசனை வழங்குவது மட்டுமே எனில் மிகையல்ல. பல குடும்பங்களில்ஆண் குடும்ப விஷயங்களில் நிர்வாகத்தில் ராணி அளவுக்கு அக்கறை எடுத்துக்கொள்வதில்லைஎன்று ஒரு கம்ப்ளெயின்ட் இருக்கும். இது ஓரளவுக்கு உண்மையும் கூட, சில குடும்பங்களில்.இதைப் பொதுமைப்படுத்தி சொல்ல முடியாது. ஆனால் அப்படி ஒரு சூழல் இருப்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால், பெருவாரியானகுடும்பங்களில் ராஜா ஆகப்பட்டவன் குடும்பத்தை நிர்வகிப்பதில் அதிக ஆர்வமும் முடிவெடுக்கும்அதிகாரமும் ஆளூமையாக இருப்பதும் உண்டு, சகஜம்தான். எனவே இன்றைய சூழலில் குடும்பச் சூழலில்சிதம்பரம் ஆட்சி (ஆண் ஆதிக்கம்), மதுரை ஆட்சி (பெண் ஆதிக்கம்) அல்லது மயிலை (ஆண் பெண்இருவருக்குமே முக்கியத்துவம்) ஆட்சி என்பது அவரவர் சூழலைப் பொறுத்தது.

குடும்ப நிர்வாகமாய்இருக்கட்டும், குழந்தைகள் வளர்ப்பாய் இருக்கட்டும், அவர்தம் கல்வி, ட்யூஷன், பொழுதுபோக்கு,மேற்கொண்டு எக்ஸ்ட்ரா கோச்சிங் ம்யூசிக், கிரிக்கெட், டென்னிஸ், பேட்மின்டன், கீபோர்டு,அபாக்கஸ், இத்யாதி அம்சங்களில் குழந்தைகளை அவர்தம் போக்குக்கு விட்டு பற்பல வித்தைகளைகற்பிக்க வைத்து குழந்தை வளர்ப்பில் பெரும்பங்கு வகிப்பவர் ராணிதான், இதில் மாற்றுக்கருத்துக்கே இடமில்லை.

(தொடரும்)


No comments:

Post a Comment