Sunday, July 19, 2015

நம்மை நாம் அறிவோம் (5)

=> உங்களுக்கு அறிவு இல்லை, தெளிவு இல்லை, உலகம் புரியலை என்று பற்பல உத்திகளைக் காட்டி புத்திகளைப் புகட்டியதாய் பகற்றி தொழில் நுட்பம், பட்டறிவு, பல்கலை வித்தகம் என்று பற்பல மாயங்களைக் காட்டினான்

=> இவர்களுக்கு தேவையில்லாததை இவர்களிடம் முதலில் விற்போம், காலப்போக்கில் நமக்குத் தேவையானதை இங்கிருந்து கொள்வோம் என வர்த்தகம் பேசி தர்க்கம் பேச வாயில்லாமல் போதையில் கிடத்தி வர்க்க பேதம் காட்டி கட்டிப் போட்டான்

=> இன்று அவனே வருகிறான், பற்பல காணொளிகள், காட்சிப் படங்கள் இவற்றைக் காட்டி 'அடேய் மானிடா, பகட்டில் போகாதே, ஆடம்பரத்தில் அழியாதே, பொய்யை மெய்யென்று மயங்காதே, இயற்கையை உணர்வாய், இயற்கைதான் உந்தன் சொத்து, இயற்கையை உன் முன்னோர் உணர்ந்ததால் உன் மண் தழைத்தது, இயற்கையை நாங்கள் மாசுபடுத்தியதை நீ உணராமலேயே உணராததாலேயே உன்னை உன் மண்ணை நீ இழந்தாய், இழந்தோம் என்று தெரியாமலேயே உன்னில் பற்பல தலைமுறையினர் மாய்ந்து போயினர், மாண்டும் போயினர்.

அந்தக் காணொளிகளில் அவன் மேலும் சொல்கிறான்: 

மனிதம் உணர், இயற்கையை நேசி, உறவை உணர், உறவைப் பேணு, அக்கம்பக்கம் பார், உன் மாமன், அத்தான், மைத்துனன், மைத்துனி, அகமுடையான், அகமுடையாள், மூத்தோர் இளையோர் இவர்களை நேசி என்று நமக்கு என்று அவனது முன்னோர்கள் காட்டிய பாதையில் வந்த இந்தத் தலைமுறையினர் இன்று நமக்குப் பாடம் புகட்டுகின்றனர்

=> இடையே சுமார் 800 அல்லது 1000 ஆண்டுகளில் நாம் என்ன கற்றோம், பெற்றோம், இழந்தோம், இழந்ததை மீட்க முடியுமா?

=> இயற்கையைப் பேணுவதையும் பல்லுயுர் ஓம்புதல், உற்றம் சுற்றம் நட்பு இவர்களை சக மனிதனை விலங்குகளை புழு பூச்சிகளைப் பேணும் நம் மண்ணின் மாண்பை மரபை பண்பை பகட்டில்லாமல் இனியும் காப்போமா, காக்கும் உத்தியை பயில்வோமா, பகர்வோமா,  பகிர்வோமா?

காலம் பதில் சொல்லும்!!

No comments:

Post a Comment