Sunday, July 19, 2015

மெக்காலே மக்காலே முக்காலே ஷோக்காலே!!

As shared on my Facebook wall since 26th May 2015:

இந்திய வரலாற்றின் சாராம்சம், அன்று முதல் இன்று வரை. 

1. இந்த நாட்டில் சமூக ஒருங்கிணைப்புடன் கூடிய மக்கள் கூட்டம் இருக்கிறது, அந்த ஒருங்கிணைப்பை ஒற்றுமையை உடை, அதற்கு எந்த வித சாம தான பேத தண்ட உபாயங்களையும் கடைக்கொள்; சாதி மத இன மொழி வேற்றுமையை பயன்படுத்தி இவர்கள் ஒற்றுமையை உடை. எந்தச் சூழலிலும் இவர்களுக்குள் இருக்கும் 'வேற்றுமையில் ஒற்றுமை' எனும் சங்கிலியை அறு. 

2. மஞ்சள், வேம்பு, விதை நெல், மூலிகை வைத்தியம், சித்த வைத்தியம், ஏராளமான இயற்கை நிலம் மற்றும் வளம்; ஏரி, கிணறு, ஆறுகள், நதிகள், குளம் குட்டை என்று ஏகத்துக்கும் கூடிய நீராதாரம் கொண்ட வற்றாத ஜீவ நதிகள் எல்லாத் திசைகளிலும் இருக்கிறது. அதுவும் சுத்தமான குடி நீர். அந்த இயற்கை தந்த கொடையையும் வளத்தையும் நீர் ஆதாரத்தையும் உடை, அந்த அடிப்படைக் கட்டமைப்பை உடை. 

3. சாமானியன் அதிகம் படிக்காவிட்டாலும் ஓரளவுக்கு படித்தவர்கள் குறைவு; இவர்களின் கல்வி வளர்ச்சி எப்படியோ, ஆனால் ஒரு சில கூட்டத்தினரின் அறிவையும் அறிவுசார் மூலதனத்தையும் நம்பி இவர்கள் சமூக அமைப்பு இருக்கிறது. அந்த அறிவுசார் ஆதாரத்தை எந்த வித மூளைச் சலவை செய்தும் அழி. அவர்களை முதலில் நம் வழிக்குக் கொண்டு வரணும், இந்தப் படிப்பறிவில்லாத ஆனால் உழைக்கும் வர்க்கத்தை வேறு வழிகளில் சமாளிக்கலாம். அது கால ஓட்டத்தில் சமாளிக்க வேண்டிய கைக்கொள்ள வேண்டிய அணுகுமுறை. 

4. மூலிகை வைத்தியம், ஆயுர்வேதம், சித்த வைத்தியம் என்று இவர்களின் மருத்துவ சிகிச்சைகள் வித்தியாசமாய் இருக்கிறது, அவை எப்படி இவர்களுக்கு எங்கிருந்து அந்த ஆதாரம் வந்தது, அதன் மூலத்தை உடை, அந்த அடிப்படை ஆதாரத்தை அழி. 

5. படிப்பறிவு இல்லாவிட்டாலும், வேறு சில அறிவு சார் மேதமை கொண்ட உருவ வழிபாடுகளும் கோயில்களும் அவை சார்ந்த இயற்கை வளமும் இவர்களை அந்த வழிபாடு மற்றும் மத நம்பிக்கைகளில் இவர்கள் ஒரு தேர்ந்தெடுத்த வல்லமையைக் கொண்டிருக்கிறார்கள், அந்த வலிமையையும் நம்பிக்கையையும் உடை, அந்த மத ஒற்றுமையைக் குலை. 

6. அரசியல் நிர்வாகம் ராஜாங்கம் நீதி பரிபாலனம் என்று இவர்களின் ஆட்சிமுறையே சரியில்லையே, ஒரு விதத்தில் இவர்களின் இந்த ஒற்றுமைதான் நமக்கு எதிரி, அதனால் இவர்களின் ஒற்றுமையை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டால்?  அரசியல் ரீதியாக ஆட்சியாளர்கள் தமக்குள் பிராந்திய ரீதியில் பிரிந்துள்ளனர், அந்தப் பிளவை பயன்படுத்தி இவர்களை இந்தத் தேசத்தின் மாட்சிமையை நம் கைக்குள் கொண்டு வரணும், அதற்கு மேற்சொன்ன நல்ல விஷயங்களை, இல்லை இல்லை, நமக்கு ஒத்து வராத கெட்ட விஷயங்களை தூக்கியெறியணும். அதற்கு அடுத்தக்கட்ட நடைமுறைகளை செய்யணும் என்று சுமார் 350 ஆண்டுகள் முன்பு 'வர்த்தக ரீதியில் உள் நுழைந்த வந்தேறிகள்' செய்த சதி இன்று 
1) அடிமைபடுத்துதல்
2) அரசியல் ரீதியாய் நாடு பிடித்தல்
3) வர்த்தக ரீதியில் கப்பம் கட்ட வைத்தல்
4) நிர்வாக ரீதியில் இவர்களில் அறிவுசார் திறமைசாலிகளை நம் கட்டுக்குள் வைத்துக்கொண்டு இவர்கள் கையாலேயே இவர்கள் கண்ணைக் குத்த வைத்தல்
5) எந்த இயற்கை வளம் நீர் ஆதாரம் என்று இவர்கள் ஸ்டிராங்காய் இருக்கிறார்களோ அந்த வளத்தையும் ஆதாரத்தையும் பாழ் செய் ( நவீனம் என்கிற கோணத்தில்)
6) விதை நெல் என்று ஒன்றுதானே இவர்களை வெளியாரிடம் கையேந்தாத நிலையை வைத்துள்ளது, அதை முதலில் உடை (எரியறதைப் பிடுங்கினால் அடுத்தது என்ன?)
7) இன மத சாதி மோதல்களை உண்டாக்கு
8) மதப் பற்றையும் மொழிப் பற்றையும் இவர்களை இவர்களாகவே கைவிடும் எண்ணத்தை உண்டாக்கு, அதை மேன்மேலும் பெரிதாக்கு, இவர்கள் மத இன ஒற்றுமை தானாகவே அழியும்
9) இன்னும் என்னென்னவோ உத்திகள் கையாண்டு இந்த மண்ணை காலம் காலத்திற்கும் எந்த விதத்திலாவது நம் கைக்குள்ளேயே வைத்திருக்கணும். எங்கே அடிச்சா அங்க வலிக்குமோ அங்க அடிச்சா எங்கே வேண்டுமானாலும் வலிக்கட்டுமே? இந்தப் பாலிசிதான் அவர்களின் தாரக மந்திரம். 


இதுதான் நமது இந்திய வரலாற்றின் சாராம்சம், அன்று முதல் இன்று வரை. 

இதை நான் சொன்னால், என்னை மாதிரிப் பலர் சொல்லியுள்ளார்கள், தத்தம் பாணியில் பலவேறு தருணங்களில். 

என்னலே, நீ மக்காலே என்கிறீயளா?  எல்லாம் அந்த மெக்காலே செய்த முக்காலே மூணு வீசம் ஷோக்காலே வந்த உபாயம்!! நம்மையெல்லாம் மேக்காலே நோக்க வைச்சு வடக்காலே இடக்காலே கீழ்க்காலே போக விடாமல் செய்து தெக்காலே நிற்க வைத்த சாதுர்யம், சாமர்த்தியம், சல்லியத்தனம் வேறு யாருக்கு வரும் மக்களே? 

No comments:

Post a Comment