Sunday, July 19, 2015

நாம்_எங்கே_போகிறோம்? எது ஜனநாயகம்? (1)

As shared on my Facebook wall since 17th July 2015:

ஒரு முறைப்படுத்தப்பட்ட ஜனநாயக ஆட்சி தம் குடிமக்களுக்கு நல்லாட்சி வழங்கும்.

அடிப்படைக் கல்வி, உயர்கல்வி, மருத்துவம், தொழில்துறைகள், வணிகம், வர்த்தகம், சுங்கம், கலால், வரி வசூல், சட்டம் ஒழுங்கு, நீதி பரிபாலனம், தேசம் தழுவிய இயற்கை சக்திகளின் ஒருமுகப் பயன்பாடு (நதி நீர் மேலாண்மை, சரிவிகித நிலப் பங்கீடு இத்யாதி), என்று அனைத்துத் துறைகளிலும் துறைகளையும் நன்றாக திறம்பட நிர்வகித்து அப்பழுக்கற்ற அரசாங்க நடைமுறைகளை, மக்கள் எளிதாக பின்பற்றவும், மக்களுக்கு வேண்டிய வசதிகள் தேவைகள் நிறைவேறவும் ஆவன செய்ய ஒரு முறைப்படுத்தப்பட்ட அரசு தகுதி பெறுகிறது, தகுதி பெறும், ஆவன செய்யும்.
>> மேற் சொன்னது ஒரு ஐடியல் அரசாங்கம் பற்றியது.

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடுகள் என்று ரெண்டாம் இடம் என்று மார் தட்டி கொள்ளும் நாம் என்ன செய்கிறோம்?

கல்வியை தனியாருக்கு கொடுத்து விட்டோம்; மிச்சம் மீதி இருக்கும் அரசுத் துறை கல்வி நிறுவனங்களில் தரம் இல்லை.

மது, சிகரெட் இத்யாதி லாகிரி வஸ்துக்கள் அரசே விற்கிறது. கலவி வியாபாரம் இன்னமும் தேசியமயமாக்கப்படவில்லை?

மனித உரிமை ஆர்வலர்களின் 'நிர்வாகம் அவர்தம் நடைமுறைகள் சட்டம் ஒழுங்கை அமலாக்குவதில் அவர்தம் ஈடுபாடு பன்னாட்டு_தேசிய_மயமாக்கப்பட்டுவிட்டது' (என்.ஜி.ஓ. க்கள் வழியாக!!!)

இயற்கை சக்திகள் பயன்பாடு, நதி நீர் மேலாண்மை, நிலப் பங்கீடு, சுத்திகரிக்கப்பட்ட குடி நீர் சப்ளை, அடிப்படைச் சுகாதாரம் முறையாக தேசம் தழுவிய வழிமுறைகளில் அப்பழுக்கற்ற முறையில் நிர்வாகம் செய்யும் அளவுக்கு தேசியமயமாக்கப்படவில்லை? 

சட்டம் இயற்றுபவர்கள் இவர்களே!! சட்டத்தை நீதி பரிபாலனம் செய்பவர்கள் இவர்களே!!

சட்டத்தை ஆங்காங்கே ஓட்டை வைத்து இயற்றி விட்டு, கிட்டத்தட்ட தேவைக்கேற்ப மாறுதல்கள் செய்து வருகிறது அரசு. அதே சட்டத்தை பயிற்றுவிக்கும் அரசு வெளியே வரும் சட்ட நிபுணர்கள் அதே சட்டத்தில் உள்ள நல்ல விஷயங்களை பயன்படுத்தி மக்களுக்கு எதாவது செய்யலாமே?

சட்டம் இயற்றுவதும் இவர்கள்தானே? ஓட்டைகளைப் பயன்படுத்தி குற்றம் சாட்டப்பட்டவர்கள் தப்பிக்கவும் வாய்தா வாங்கி வாங்கியே கீழ் நிலை முதல் உச்ச நிலை நீதி மன்றங்கள் வரை காலம் கடத்துபவர்களும் இவர்களே!!

ஒரு நீதி மன்றம் தரும் தீர்ப்பு மேல்முறையீடு என்று வரும்போது அந்த நீதிபதி மேல்முறையீட்டின் அவசியம் என்ன, கீழ்மை நீதிமன்றம் தவறிழைத்துள்ளதா என்று ப்ரிமாஃபேஸி ஆதாரம் இருக்கிறதா என்று ஆராய வேண்டும். இல்லையேல், மேல்முறையீட்டு மனு உடனடியாக தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.

கீழ்மை நீதி மன்றத்தின் நீதிபதியும் அதே சட்டம் படித்து வந்தவர்தானே? அவர் தவறிழைத்திருக்க சாத்தியம் உண்டா?
மேல்முறையீட்டு விசாரணையில் படிப்படியான அடுக்குகளில் உள்ள நீதிமன்றங்கள் முந்தைய தீர்ப்பு தவறு எனில் அந்த தவறான நீதிபதியை ஏன் குற்றம் சாற்றுவதில்லை? சஸ்பென்ஸ் செய்வதில்லை? அவருடைய அறியாமை, சட்ட அறிவு நுணுக்கம் இல்லாமை மன்னிக்கப்படுகிறதா?

கீழ்மை நீதி மன்றத்தின் நீதிபதி முறையான சட்டம் படித்த, வழக்காடு மன்றங்களில் பலவித அனுபவம் பெற்றபின்னர்தான் நீதிபதி ஆகிறார் என்று நம்புவோம். யாரும் கல்லூரியில் படித்து விட்டு நேரடியாக நீதிபதி ஆவதில்லை, எனில், அவரது அறியாமை என்பது இங்கு கேள்விக்குறியதாகிறது.

அனுபவஸ்தர்கள்தான் நீதிபதி பணிக்கு அமர்த்தப்படுகிறார்கள் எனில், அந்த அறியாமை எங்கு வந்தது? இல்லாத அறியாமை மன்னிக்கப்படுகிறது எனில் அவர் நீதிபதி பதவிக்கே தகுதியானவர் அல்ல என ஆகிறது. அப்படியெனில் அவரை அந்தப் பதவிக்கு தெரிவுசெய்வதில் குழப்பமா? அதிலுள்ள பணியாளர் தேர்வு நடைமுறைகளில் குழப்பமா?


சட்டம் தெரிந்த நிபுணர்கள் சொல்வார்கள், காலம் காலமாகச் சொல்லி வந்துள்ளனர். அதாவது நமது இந்திய அரசியல் அமைப்பும் நீதி பரிபாலன முறைகளூம் பிரிட்டிஷ் முறைகளை அடியொற்றிய நடைமுறைகளையும் காலம் காலமாக பஞ்சாயத்து நாட்டாமை என்கிற கிராம அளவில் இருந்துவந்த பல நடைமுறைகளை ஒருங்கிணைத்து நியாயமான தீர்ப்பு எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது. எனில், 100க்கும் மேல் காலப்போக்கில் தேவைப்படும் அப்டேட்கள் சட்ட விதிமுறை மாறுதல்கள் செய்யப்படுகிறதே, சரிதான், காலத்திற்கேற்ப அரசும் சட்டம் ஒழுங்கு நீதி பரிபாலன வழிமுறைகள் அப்டேட் செய்யப்பட வேண்டும், ஒப்புக்கொள்ளணும்.

அதே நேரத்தில் 'ஒரு குற்றவாளி தப்பித்தாலும் பரவாயில்லை, ஒரு நிரபராதி தண்டனை பெறக்கூடாது' என்கிற ஒரே காரணத்தை உத்தேசித்து அதன் பின்னணியில் அதில் உள்ள ஓட்டையை பயன்படுத்தி எக்செக்பஷன் ஓவர் ரூல் (Exceptions can over rule and this is acceptable, like that) செய்யும் அளவுக்கு கீழ் நிலை முதல் உச்ச நீதி மன்றம் வரை ஒரு வழக்கு பல ஆண்டு காலம் நடக்கிறதே?

பரவலாக ஒரு ஆசாமி குற்றம் செய்திருக்கிறார் நம்பவைக்கப்பட்ட ஒருவர், அவர் குற்றம் செய்திருக்க வாய்ப்பில்லை என்று நம்ப வைக்கப்பட சாத்தியமில்லாத நேரத்தில் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி முறையான குற்றம் சாட்டப்பட்டவர் தப்பித்து வந்துள்ளார்களே? எந்த சட்டம் இதை சாத்தியமாக்கியது?

நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்கிற கோணத்திலேயே விசாரணை செய்யும் நீதி மன்றங்கள் குற்றவாளி தண்டிக்கப்படாமல் போகும் வாய்ப்பினை சட்டமே வழங்குகிறதே, ஏன் இந்த இரட்டை நிலை?

பெரும் வழக்குகளில் தேசத்தின் ஆணிவேரை ஆட்சியாளர்களின் அடிப்படை இருப்பை ஆட்டுவிக்கும் வழக்குகளில் எதோ ஒரு கீழ் நிலை அதிகாரிகளோ ரோட்டில் போகும் குப்பன் சுப்பன் ஜேப்படித் திருடன் என்கிற வகையில் "கையாலாகாதவன்" "இவன் எதுக்கும் சரிப்பட்டு வரமாட்டான்" 'இவனை உள்ளே தள்ளினால் யாருக்கும் ஒருவித நஷ்டமும் இல்லை' 'அவன் குடும்பம் நடுத்தெருவில் நிற்குமே, நிற்கட்டுமே, யாருக்குக் கவலை?'

பெருந்தனக்காரர்களையும் அரசியல் ஆட்சியாளர்கள் செய்யும் (முன்னாள் இன்னாள்) ஊழல்வியாதிகளையும் இதே சட்டம் விட்டுவிடுகிறதே, ஏன் இந்த இழி நிலை?

நீதி மன்றத்துக்குள்ளே இந்த ஊழல் அரக்கன் நுழைந்துள்ளான் என்று ஹேஷ்யமாய் காமெடிக்காக 1972 வாக்கிலேயே 'துக்ளக்' நாடகத்தில் சொல்லப்பட்ட விஷயங்கள் 40 ஆண்டுகள் கழித்து உண்மையானது இந்த தேசத்தின் சாபக்கேடா?

அரசே கல்வி கலவி கேள்வி மது சிகரெட் இத்யாதி லாகிரி வஸ்துக்களை விற்கிறது. சாலைப் போக்குவரத்தில் விபத்துக்கள் நடக்காமல் தவிர்க்க ஹெல்மெட் உபயோகிக்கணும் என்று சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படுகிறது, தேவைதான். அதே ஹெல்மெட் தரமான ஐ.எஸ்.ஐ. முத்திரை அல்லது தரச் சான்றிதழ் உள்ள ஹெல்மெட் விற்றால் பராவயில்லை.

அதே ஹெல்மெட் ஆந்திராவிலோ வேறு எங்கேயோ தரம் குறைந்த ஐ.எஸ்.ஐ. முத்திரை இல்லாத ஹெல்மெட்கள் வீதி தோறும் விற்கப்படுகிறதே, அந்தத் தயாரிப்பாளர்களை அரசு என்ன செய்கிறது? அங்கும் தானே கலால் வரி வசூலிக்கப்படுகிறது (என்று நம்புவோம்). இல்லை, அந்தப் பொருளே டூப்ளிகேட், எனவே அங்கு கலால் வரி என்று ஒன்று கிடையாது என்று சொன்னால் சுத்தம், வாழ்க ஜன நாயகம்!! வாழ்க உல்லாஸ் நகர்!!

(உல்லாஸ் நகர் எங்கிட்டு இங்கு வந்தது? என்று கேட்கப்படாது. அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் என்று போட்டு வரும், விற்கப்படும் அது மேட் இன் யு.எஸ்.ஏ.). அது மாதிரி பல இடங்களில் விற்கும் பொருட்களில் அப்படியே அச்சு அசல் காப்பியடித்து டூப்ளிக்கேட் விற்கும் சந்தைக்கு உல்லாஸ் நகர் சந்தை பெயர் போனது, தற்சமயம் அங்கு அந்த வியாபாரம் நடக்கிறதா தெரியாது. அது ஹேஷ்யமாய் வேடிக்கையாய் சொல்வார்கள் மேட் ஏஸ் யு.எஸ்.ஏ. என்று. அதைத்தான் சுருக்கமாகக் குறிப்பிட்டேன்).

முறையற்ற தரமற்ற பொருட்களை தயாரித்து விற்பவனை கேள்வி கேட்காத சட்டம், அதைப் பயனாளியாய் இருந்து கிடைச்ச காசில், உழைச்ச காசில், டாஸ்மாக், இத்யாதி விஷயங்களில் செலவு செய்தது போக மிச்சம் மீதி இருக்கும் காசில் வாங்கி அனுபவிக்கும் சாமானியனை சட்டம் கேள்வி கேட்கிறதே?

ஒரு தேவையற்ற பொருளை அரசே விற்கிறது. அரசு விற்க வேண்டிய அவசியம் இல்லாத பொருளை அரசே விற்கிறது. அதை விற்கும்போது விளம்பரமும் செய்யப்படுகிறது. அந்த விளம்பரத்திலும் வரி வசூல் அரசுக்கு கிடைக்கும்

விளம்பரத்தில் 'சிகரெட் பிடிப்பது உடல் நலனுக்கு கேடு புற்று நோய் வரும்' 'மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு' என்று அடிக்கோட்டில் ஒரு எச்சரிக்கை வாங்குபவனுக்கு இருக்கிறதே, விற்பவனுக்கு ஏன் இல்லை?


(to be continued) 

No comments:

Post a Comment