Sunday, July 19, 2015

சொல்வனம் (சொல்லாமலே) (1)

From my Facebook wall, since 3rd April 2015:

புதுக்குறள்(இப்படி ஒரு திருக்குறள் அசலாய்இருக்காவிடில்):
சொல்லுகசொல்லின்றிச் சொல்லற்க அ.'.தின்
சொல்லலிற்சொல்லாமை நன்று.

சொல்லால்அடித்த சுந்தரி........ன்னு பிரபல பாட்டுகூட உண்டு.

சொல்லாமலே......சொல்லாமலே........ன்னு ஒரு காதல்பாட்டு உண்டு.

சொல்லாமலே,யார் வைத்தது (தைத்தது) என்றும்பாடல் உண்டு.

சொல்ல வேண்டியதை சொல்லத் தக்கதை சொல்லவேண்டிய தருணத்தில் சொல்லாமல் விடுவதும், சொல்லக் கூடாததை சொல்லக்கூடாத தருணத்தில் சொல்வதும் சரி நிகர் சமமானதவறாகும்.

உலகில் வாழும் எந்த மனிதரும்பேசும் பேச்சு, செய்யும் செயல்,தருணத்திற்கு ஏற்றாற்போல் மௌனம் பேசி வாழும்வாழ்க்கை என்று அவரவர் நோக்கில்சொல்லும் செயலும் மௌனமும் ஆட்சிசெய்கிறது.

பேச்சைக்குறை, வேலையைப் பெருக்கு என்பர்.வெட்டிப்பேச்சு பேசாதே, காரியத்தில் கண்வை என்று இதன்உள்ளார்ந்த அர்த்தம்.

சிலர் பேசிப்பேசியே பொழுதைக் கழிப்பர். வெட்டிப்பேச்சுவீராச்சாமியாய் வலம் வந்து வாழ்வைத்தொலைத்தவர் அனேகர் இங்கு.

ஒரு சராசரி மனிதன் தன்வாழ் நாளில் படிப்பில், வேலையில்,பணி நிமித்தம், தொழில் நிமித்தம் இன்னபிற வாழ்வியல் நடைமுறைகளில் பேச்சு எனும் சொல்ஒன்றுக்குத்தான் அதிக நேரம் செலவிடுகிறான்.

சராசரிக்கும்அதிகமாய் ஞானம் (அது விஞ்ஞானமோ,மெய்ஞ்ஞானமோ ஆத்ம ஞானமோ ஆன்மவிச்சாரமோ தத்துவ விச்சாரமோ இறைத்தேடலோ)எதுவாயினும் ஏதோ ஒரு ரூபத்தில்மனிதன் தன் எண்ணங்களை வெளிப்படுத்துகிறான்.அது மேடைப் பேச்சாகவோ, சட்டசபைஅல்லது நாடாளுமன்றம் மாதிரியான மக்கள் பிரதி நிதித்துவத்திருச்சபையோ இறைச் சபையோ சத்சங்கமோபட்டிமன்றமோ இயல் இசை நாடகம்முதலான கலா ரூபமோ இணையவழிஇது மாதிரி ஊடகங்களோ ஏதோஒன்றில் தன்னை தன் எண்ணஓட்டத்தை வெளிப்படுத்துகிறான்.

கால ஓட்டத்தில் பலரின் எண்ணங்கள் உள்ளுக்குள்ளேமருகிப் போய் அவரவர் வாழ்ந்துமுடிக்கும்போது அவனோடு மண்ணோடு மண்ணாய்வீணாகிப் போகின்றன.

பலரின் எண்ணங்கள் பதியப்பட்டு ஏதோ ஒரு ரூபத்தில்உலகியல் நடைமுறையில் புத்தகங்களாகவோ காட்சிப் படங்களாகவோ ஒலி/ஒளிப் பேழைகளாகவோ நூலகம்முதலான ஊடகங்கள் அல்லது தகவல்தொழில் நுட்ப வசதிக்கேற்ப அரங்கேறிஒரு காட்சிப் பொருளாக இனிவரும் சந்ததியினர் படித்தறிய ஏதுவாய் உறக்கம் கொள்கின்றன.

(தொடரும்)

No comments:

Post a Comment