=> காலப்போக்கில் நம் முன்னோர் மறைந்து அடுத்தடுத்த சந்ததியினர் சில பல சூட்சுமங்களை நல்லன அல்லன என்று அனைத்தும் கொண்டனர், கற்றனர், கற்றுணர்ந்தனர்
=> அவனது அவர்களது முன்னோர் மறைந்து அடுத்தடுத்த சந்ததியினர் வல்லான் வகுத்ததே சட்டம் என்று பிற்காலத்தில் அடக்குமுறை ஒன்றே ஆட்சிமுறை; மற்போர், விற்போர் இவை மூலம் ஜெயிக்க முடியாது, விற்போர் என்று போவோம், விற்போம், என்று தொடர்ந்து விற்கின்றனர்.
=> இந்த நிலத்தை இதன் மாட்சிமையை மாண்பை இவர்கள் உணராமலேயே அவன் தன்னை இங்கு நம்மில் ஊடுருவி நம்மில் ஒருவனாய் இருப்பதாய் பாவ்லா காட்டி நம் கையை எடுத்து நம் கண்ணில் மட்டுமல்ல, நம் ஆணிவேரிலேயே ஆப்பு வைத்தான்
=> இயற்கை வளத்தை உணர்ந்து படிப்படியாய் ஒவ்வொன்றாய் வீழ்த்தினான், மாசுபடுத்தினான், மண்ணைச் சுரண்டினான், விண்ணை ஆக்ரமித்தான்,
=> பெண்ணைக் கொடுத்தான், பெண்ணை எடுத்தான், பெண்ணை பெண்ணில் பேணாமலேயே பேணினான்
=> ஆணை கொடுத்தான், ஆணை அடிமையாக்கினான், ஆணவம் கொண்டான், ஆணவம் அகற்றி ஆண் அகம் அறியாமலேயே ஆணுக்கு புறம் காட்டி புறமுதுகு காட்டினான், முதுகில் குத்தினான்
=> ஆணின் வீர்யம் அறிவு திறமை வல்லமை அனைத்தும் உற்சாக பானம், போதைப்பொருள், புகைப்பொருள், பெண்ணாசை மண்ணாசை விண்ணாசை காட்டி ஆணின் அசல் அவனறியாமலேயே அவனை தன் மயக்கம் உண்டாக்கி அவனை அவனால் அவனில் கொண்டான்
=> அந்த ஆணை ஓர் ஆணையால் மடக்கியதால் ஆணின் மூலமே பெண்ணை ஆண்டான்
=> பெண்ணின் வீர்யம் தாய்க்குலத்தின் மாண்பு, பண்பு, அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எனும் நாற்குணத்தை நிர்மூலமாக்கினான்
=> காலப்போக்கில் பெண்ணையும் ஆண் குலத்தை வீழ்த்தியதுபோல் போதை இத்யாதி லாகிரி வஸ்துக்களால் ஆட்கொண்டான்
=> பெண் மூலம் நிர்மூலம் என்று ஒரு பகட்டான வார்த்தையை அறியாமையால் இங்கு மக்கள் சொல்வதுண்டு, அந்தப் பெண் மூலமே இந்தச் சமூகத்தை நிர்மூலமாக்கும் வித்தை மேற்கொண்டு ஆண் பெண் இயற்கை அனைத்தும் சாய்த்தான்

No comments:
Post a Comment