Sunday, July 19, 2015

Brain & Mind an Analysis மூளை மற்றும் மனது ஒரு பார்வை (பகுதி # 2)

From my Facebook wall since 18th May 2015:

(Part 1 is not traceable now, sorry and sincere apologies). When found from my archives, I would share for sure).

மூளை மற்றும் மனசு (ப்ரெயின் மற்றும் மைன்ட்) ஒரு பார்வை (லாஜிக் மாஜிக் அனாலிஸிஸ்) ‍ பகுதி # 2

மூளையை தவிர்த்து மைன்ட் என்று உள்ளதின் காரணமாய் காலத்தை மூணாய் பிரித்தார்கள், பிரித்தறியும் ஆர்வமும் நம் முன்னோர்களுக்கு வந்தது, அது தொடர்பில் நரம்பியல் அல்லது மூளையியல் என்று மருத்துவ உலகமும் தொடர்ந்து ஆராய்ச்சி செய்கிறது.

தொடர்ந்து சிந்தித்ததில்:

மூணாப் பிரிச்சது சரி ( நேற்று, இன்று, நாளை) கால வரையறைகளை. 

மூணா, ஆங்கில மூன், மூனா சந்திரன், அதாவது, மனித மனதின் எண்ணம் சார்ந்த சிந்தனைகள், சிந்தனை வயப்படுவது இவையெல்லாம் எதனால் ஏற்படுகிறது? நமது சிந்திக்கும் திறனை கட்டுப்படுத்துவது சந்திரன். அதாவது சந்திரனின் ஆதிக்கம் ஒரு ஜாதகரின் ஜாதகத்தில் குறைவாக இருக்கும் பட்சத்தில் அவர் தனது படிப்பிலோ தொழிலிலோ கவனக் குறைவாக இருக்க வாய்ப்பு உண்டு. 

மிகக் குறைவாய் இருந்தால் படிப்பில் அல்லது தொழிலில் மந்தகதி ஏற்பட்டு அவரது பெர்ஃபார்மன்ஸ் அடிபடும். மார்க் குறையும். மிக மிகக் குறைவாய் இருப்பின் (கூடவே ஒருவேளை வேறு கிரகங்களின் ஆதிக்கம் ஆளுமை கூடியிருப்பின்) மனப் பிறழ்வுகள், மனோ வியாதி இத்யாதி வரலாம். 

சந்திரனின் ஆளுமை ஆதிக்கம் கூடியிருப்பின் புத்தி பலம் சிந்திக்கும் திறன் படிப்பு அல்லது தொழிலில் கவனம் கூடி பெர்ஃபார்மன்ஸ் மிகும். மார்க் நன்றாகப் பெறுவார். சாதகமான பலன்கள் இருக்கும் (கூடவே வேறு கிரகங்கள் ஆளிமை எப்படி என்பதும் கருத்தில் கொள்ளணும்). 

அந்த ஆளுமை ஆக அதிகமாய் ஒருவருக்கு இருப்பின் அவர் ஒரு இன்டலக்சுவல் ரேஞ்சுக்கு தன் தொழிலிலோ படிப்பிலோ துறை சார்ந்த முயற்சியில் முன்னேறுவார் அல்லது வெற்றி பெறுவார் எனலாம். 

எனக்கு ஜோதிடத்தில் அத்தனை பரிச்சயம் இல்லை, பாண்டித்தியம் இல்லை, எனவே ஜோதிட வல்லுனர்கள் பார்வைக்கு இதை விடலாம் அவர்கள் கருத்து அறிய. 

சந்திரனுக்கு அந்த எனர்ஜி எங்கிருந்து வருகிறது? சூரியனிடமிருந்து. 

நமக்கு மானிடனுக்கு அறிவு புத்தி சிந்தனை தொடர்பான கட்டமைப்பை நிர்ணயிப்பது சந்திரன், அவர்தம் ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் சூழல், கூட இருக்கும் கிரக நிலைகளின் சாதக பாதக அம்சங்களில் அது நிர்ணயிக்கப்படுகிறது என்று பார்த்தோம். 

அந்த அறிவு சார்ந்த எனர்ஜியை நமக்குத் தருவதில் புதன் (மெர்க்குரி) பெரும் பங்கு வகிக்கிறது. பேச்சு வாக்கில் நாம் சொல்வதில்லையா 'என்ன நான் சொல்றது வெளங்கிச்சா இல்லையா, நீ என்ன ட்யூப் லைட்டா' என்று.  ட்யூப் லைட்டில் இருப்பது என்ன, மெர்க்குரி? 

மெர்க்குரி அந்த எனர்ஜியை ( எலக்ட்ரான், ப்ரோட்டான், ந்யூட்ரான் என்று விஞ்ஞான ரீதியில் தெரிந்தளிக்கப்பட்ட மூலக் கூறுகள் நமக்குத் தேவையான எனர்ஜியை சூரியனிடமிருந்து (புதன்) மெர்க்குரி பெற்று சந்திரன் வாயிலாக நம் சிந்தனை ஓட்டத்தை கட்டுப்படுத்துகிறது, சரி, புரிகிறது (எனலாம்). 

நமது பஞ்சாங்களில் திதி வார நட்சத்திர சூலை சூலம் ஹோரை கணம் பட்சி பார்ப்பது பல்லி சொல்லுக்குப் பலன் இத்யாதி பார்ப்பதன் அர்த்தம் இங்கு ஓரளவுக்கு பொருந்தும் என நினைக்கிறேன். 

ஞாயிறு வெள்ளி மேற்கே சூலம்
திங்கள் சனி கிழக்கே சூலம்
செவ்வாய் புதன் வடக்கே சூலம்
வியாழன் தெற்கே சூலம் = நினைவிருக்கிறதா?

அதாவது, சூலம் சொல்லும் திசையில் அந்த அந்தத் தினங்களில் சில காரியங்களை செய்யக் கூடாது, ஞாயிறு அன்று மேற்குத் திசையில் பயணிக்கக் கூடாது, திங்கள் கிழமை கிழக்குத் திசையில் பயணிக்கக் கூடாது இது போல பல விஷயங்கள் சொல்வார்கள். 

இது ஏன் என்று யோசிக்க எனக்கு தோன்றியது இவை. இது சரியா தவறா என் பார்வையில் வந்த கருத்து சரியா தவறா என்பது விஷய ஞானம் உள்ளவர்கள் தம் கருத்தை கமென்டில் பதியலாம். எனக்கு தெரிந்ததை புரிந்ததை பகிர்கிறேன், நிபுணர்களின் கருத்தை மதிக்கிறேன், மேலதிகத் தகவல் அறிய ஆவல் உண்டு. 

ஞாயிறு அன்று சூரியனின் நாள். சூலம் நேர் எதிர் திசையில் மேற்கே சொல்லியிருக்கிறார்கள். அதாவது சூரியன் இருக்கும் திசையில் பயணித்தால் நன்மை விளையும், நல்லது நடக்கும். எதிர்த் திசையில் சென்றால் நன்மை விளையும் சாத்தியம் குறைவு, என்று நாம் புரிந்து கொள்ளலாமா? இப்படி ஒவ்வொரு நாளிலும் அந்த அந்தத் திசையில் சூலம் அறிந்து ஒரு காரியத்தை செய்/அல்லது செய்யாதே அன்று வைத்திருக்கின்றனர், நம் முன்னோர். 

நாரதர் மாங்கனி கொணர்ந்து உண்டாக்கிய ஒரு கலகம் நமக்கெல்லாம் தெரியும். அந்த மாங்கனி யாருக்கு மூத்தவருக்கா இளையவருக்கா என்கிற ப்ரச்னை வந்ததில் இளையவர் உலகம் சுற்றி வந்து அதை வெல்வேன் என்று சென்றார். மூத்தவர் அம்மையப்பனே உலகம் என்று சுளுவாய் அவர்களைச் சுற்றிவிட்டு பழத்தை வென்றார். 

இளையவர் வந்து பார்த்து ரிசல்ட் அறிந்து கோபித்துக்கொண்டு அம்மை அப்பரிடம் விவாதம் செய்து பயனின்றி எங்கு போய் அமர்ந்தார், பழனி, அதாவது இந்த அகண்ட பாரதத்தின் தென் பகுதியில் உள்ள ஒரு குன்றில் (அல்லது மலை என்று கொள்க). 

அதாவது, இளையவராகிய குமரன் தனக்கு மாம்பழம் வேணும் என்று போட்டியில் உலகைச் சுற்றிய விஷயத்தில் அவருக்கு எனர்ஜி எங்கிருந்து வந்தது? வந்திருக்கும்? மயிலின் மீது சென்றார் எனில் மயிலுக்க்கு அந்த எனர்ஜி எங்கிருந்து வந்திருக்கும்? உலகம் சுற்றுவது என்பது சாதாரண விஷயம் இல்லையே?  அதற்கு திசை அறிந்து போக விஷய ஞானம் சிந்தனை வேண்டும், பிசிக்கலாய் எனர்ஜி வேண்டும், பறக்கும் சக்திக்கு உடல் திண்மை வேண்டும். இங்குதான் வாயு, சூரியன், சந்திரன், புதன் இத்யாதி கிரகங்களின் முக்கியத்துவம் வருகிறது. 

எல்லாம் முடிந்து தெற்குப் பகுதியில் அமர்ந்ததாக புராணத்தில் படித்தோமே, தெற்கு எனில் தக்ஷிண திசை.  தக்ஷிணாமூர்த்தி என்றால் குரு, அதன் ஆங்கிலப் பெயர் ஜூபிட்டர். 

அங்காரகன் எனும் செவ்வாய் கிரகத்துக்கு முருகனைத்தான் வணங்குகிறோம். வேறு ஒரு கோணத்தில் குரு அம்சம் என்று சிவனையும் அவன் நெற்றிக்கண்ணில் உதித்த முருகனையும் குறிக்கிறோம், வணங்குகிறோம். படிப்பறிவு, தொழில் நிமித்தம் வளர்சி என்று குரு தக்ஷிணா மூர்த்தியை வணங்கும் அதே நேரத்தில் மருத்துவ ரீதியில் உள்ள குற்றம் குறைகள் அகல வைத்திய நாத மூர்த்தியாய் (செவ்வாய்க் கிரகப் ப்ரீதியாய்) அங்கும் சிவன் அல்லது முருகன் வருகிறார்.

புதன் (மெர்க்குரி) என்று பார்த்தால் புதன் கிரகத்துக்கு அதிபதி விஷ்ணு (VISHNU)

சூரியன் (சன் ஆங்கிலத்தில் SUN)
சுக்கிரன் (வீனஸ் ஆங்கிலத்தில் VENUS)
சுக்கிரன் என்பது ஆறாம் எண்ணுக்குரிய கிரகம். 

VENUS right in reverse SUNEV.   VE = Value Engineering. Value engineering (VE) is systematic method to improve the "value" of goods or products and services by using an examination of function. Value, as defined, is the ratio of function to cost. Value can therefore be increased by either improving the function or reducing the cost.

அதாவது ஒரு பொருளின் மதிப்பு நிர்ணயிக்கப்படுவதில் வீனஸ் எனும் சுக்கிரனின் (ஆறாம் இலக்கத்தின் எண்). 


அந்த ஆறாம் இலக்கம் இந்த உலகில் எந்த விதத்தில் எல்லாம் நம்மை ஆட்டுவிக்கிறது என்பதை முன்பு ஒரு பதிவில் நான் விளக்கியிருந்தேன். இன்று நாம் வணிக ரீதியில் முறையாக நேர் வழியில் வாங்கும் ஒவ்வொரு பொருளிலும் பார் கோட் என்று ஒன்று உண்டு. அந்த பார் கோட் எனும் கோட்பாட்டின் பின்னணியில் வர்த்தக ரீதியில் உள்ள பன்னாட்டு வணிகச் சட்டங்கள் (WTO or GATT o GTC) என்று உள்ள வர்த்தக பொருளாதார நடைமுறைகளில் இந்த பார்க்கோட் இல்லாமல் எந்த ஒரு பொருளையும் ஒரு தொழிலதிபர் அல்லது உற்பத்தியாளர் விற்கவோ வாங்கவோ முடியாது. அப்படி விற்றால் அது பன்னாட்டு நடைமுறைகளில் செல்லுபடியாகாது. 

இந்த பார் கோட், பின்னர் அதன் ஊடே உள்ள ஐ. எஸ். ஓ. முதலான நடைமுறைகள் இங்கு விவாதப் பொருளல்ல. 

சுக்கிரன் எப்படி ஆதிக்கம் செலுத்துகிறான் என்பதை குறிக்கவே இதைக் குறிப்பிட்டேன். 

சுக்கிரன் நமது தனி மனிதப் பொருளாதார வசதியை அது தொடர்பான நம் கிரக சஞ்சார நிலைகளை அனுசரித்து நமக்கு காசு பணம் பொருள் வசதி இருக்குமா இல்லையா என்று ஜாதகத்தில் தெரியும். 

இதையெல்லாம் இத்தனை டீப்பா ஆராய்ச்சி பண்ணி எழுதும் அளவுக்கு இந்த நாள் இனிய நாள் திங்கள் கிழமை (சந்திரனுக்கு உகந்த நாள்) அமைந்தது என்ன ஒரு தற்செயலான நிகழ்வு, சரிதானே?

[இந்தச் சிந்தனை இனியும் தொடரும் எனவே நினைக்கிறேன்)

No comments:

Post a Comment