Sunday, July 19, 2015

சொல்வனம் (சொல்லாமலே) (5)

Since 3rd April 2015, from my Facebook wall:

மேற்கத்தியநாகரிகம் குழந்தை வளர்ப்பில் ஒருநடைமுறை கடைப்பிடிக்கிறது. 18 அல்லது 20 வயதாகிவிட்டால் பிள்ளைகளை அவர்கள் தங்களுடன் இருக்கவிடுவதில்லை. கட்டாயமாய் அவனை வாழ்வியலைக் கற்கவெளியே அனுப்பிவிடுகிறார்கள்.

நம் சமூகத்தில் குடும்பச் சூழலிலேயே ஒருவன் வாழ்வியலைக் கற்கும்அவலம் நேருகிறது. குடும்பத்தை விட்டு ஒருவன் தன்வழி தனி வழியென்று சென்றால்அவன் பொறுப்பில்லாதவனாய் பார்க்கப்படுகிறான். முதியோரைப் பராமரிக்கும் பொறுப்பும் அவனுக்கு இருக்கிறது. கூட்டுக்குடும்பமாய்வாழ்ந்திருந்தால் ஒரு வேளை உறவுச்சிக்கல்கள் இல்லாமலிருக்குமா என்று ஆராய்ந்தால் அங்கும்எத்துணை பேர் முறையாய் தம்அன்பை வெளிப்படுத்துகிறார்கள்?

பொருளாதாரஏற்றத் தாழ்வுகளில் அதன் தாக்கத்தில் பரஸ்பரஒருங்கிணைப்பும் அரவணைப்பும் புரிந்துணர்வும் எத்தனை பேரிடம் இருக்கிறது?  போட்டிபொறாமை என்று வந்து அவரவர்தம் வழியில் பிரிகிறார்கள். சகோதரசகோதரிகளிடம் ஆழ்மனதில் அன்பு இருந்தாலும், அவரவர்அன்பை வெளிப்படுத்த சந்தர்ப்பம் இருந்தும் அதைப் பயன்படுத்துபவர்கள் குறைவு.ஏனெனில் அவரவருக்கு தத்தம் குடும்பம், பிள்ளைப்பேறு,குழந்தை வளர்ப்பு என்று அவரவருக்குவேலைகள் பொறுப்புக்கள் காத்திருக்கின்றன.

அன்பு என்பது பருவத்தே அந்தந்தசமயத்தில் செயல் வழி மட்டுமல்ல,சொல்வழியிலும் வெளிப்படுத்தப்பட வேண்டும்.

சொல் அல்லது செயல் வழிஇல்லாமல் காலம் கடந்துவிட்டால், பின்னாளில்வெறும் உடல் மொழிகளில்தான் அன்பானதுவெளிப்படுத்த வேண்டி காத்திருக்கும்.

அவ்வப்போதுஉடல்மொழிகளில் அரவணைப்பில் ஒரு 10 நிமிடப் பேச்சில்அன்பை வெளிப்படுத்தக் கூட இங்கு நம்சமூகத்தில் பலருக்குத் தெரியாது. காரணம் ,அக்கம் பக்கம்,பெரியோர் சிறியோர் கூடி வாழும்சமூகத்தில் உடல் வழி அன்பின்வெளிப்பாடு என்பது இங்கு ஆபாசமாகவோஅனர்த்தமாகவோதான் பார்க்கப்படுகிறது.

நண்பர்களுக்குள்கூட இந்த அன்பின் வெளிப்பாடுபெரும்பாலும் குடும்பத்தினர்களிடம் உள்ளது போல் வித்தியாசங்கள்சொல்வழி, செயல்வழி அல்லது உடல்மொழிஅல்லது மௌனமொழியில் வெளிப்பட்டாலும் வெளிப்படாவிட்டாலும், பற்பல நட்புக்கள் பரஸ்பரபுரிந்துணர்வின் அடிப்படையில் ஆழ்மனதில் ஒருவருக்கொருவர் கொண்டுள்ள மதிப்பு, மரியாதை காரணாமாய்நட்பானது தொடரும்.

ஆனால், குடும்ப உறுப்பினர்களிடையே அன்பின்வெளிப்பாடு காலத்தே சொல், செயல்,உடல் மொழி என்று ஏதோஒரு வழியில் வெளிப்படுத்தப்பட வேண்டும்.இல்லையேல், உளச் சிக்கல்கள், உறவுச்சிக்கல்கள், குடும்பங்களின் பிரிவானது தவிர்க்க இயலாமல் போகும்.

அந்தப் பிரிவானது கூடி வாழ்ந்தாலும், மனத்தளவில்பிரிவில் தொடரும். சிலருக்கு நிரந்தரப்பிரிவாகக்கூட மாறலாம்.
இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வாய்'வெளிப்படையான பேச்சுவார்த்தை' மூலம் தீர்த்துக்கொள்ள முடியாதவிஷயங்கள் என்று எதுவுமே கிடையாதுஎன்பர்.

அது எத்தனை கஷ்டம் என்பதுஅது மாதிரி உள மனச்சிக்கல்களை அனுபவிப்பவர்களுக்குத்தான் தெரியும் புரியும்.

அவரவருக்குஅவரவர் சுயமரியாதை சார்ந்த தாக்கம், இழப்பு,அதனூடேயான பிரத்தியேக கருத்துக்கள், சுய அவதானிப்புக்கள், சுயகௌரவம் சார்ந்த விஷயம். அடுத்தவர்பார்வையில் அந்த சுயமரியாதை மற்றவரதுஈகோவாகப் பார்க்கப்படும்.

யார் விட்டுக்கொடுப்பது, யார் அனுசரித்துப்போவது என்பதில்ஒரு ஈகோ தலைக்காட்டும். ஈகோ, சுயமரியாதை, சுய கௌரவம் எல்லாவற்றையும்தாண்டி காலம் கடந்து வரும்ஞானோதயம் இருதரப்புக்குமே ஒரு இடியாப்பச் சிக்கலைத்தான்கொண்டுசேர்க்கும்.

என்னதான்ஒருவர் மற்றவரை ஆழ்மனதில் புரிந்துவைத்திருந்தாலும், அவரவர் சுய கௌரவம்தலைதூக்கும்போது 'சாரிட்டி என்பது தன்னில்தான்துவங்கணும்' (சாரிட்டி பிகின்ஸ் அட்ஹோம்') என்கிற நிலைப்பாடு வரும்.

கூடவே, அந்தக் குடும்பத்தலைவனுக்கு வயதொத்தகாரணிகள், உடல்கூறியல் சிக்கல்கள், உடல் உபாதைகள் வந்துஅவன் தொடர்ந்து உள, உடல், மனஉபாதைகளோடே காலந்தள்ள வேண்டிய நிர்ப்பந்தம் வரும்.

சில நண்பர்கள் விஷயத்தில் கேள்விப்பட்டுள்ளேன். ஆற்றொனா மனோபலம் வாய்த்தவர்கள்மட்டுமே இது மாதிரி சூழல்களைக்கடந்து இறுதிவரை போராடி இயற்கையின்முடிவு இயற்கையாய் வரும்வரை காலம் தள்ளுவர்.

சிலருக்குஇருதய மன அழுத்தம் தாங்காமல்இருதய இயக்கமே நின்றுபோய் இயற்கைஎய்துவிடுவர். பின்னர் அந்தக் குடும்பத்தினர்'இந்த மனுஷன் கடைசி வரைக்கும்நம்மளையெல்லாம் புரிஞ்சுக்கவே இல்லையே? ஒண்ணுமே சொல்லாமபொட்டுன்னு போய்ட்டாரே?ன்னு அங்கலாய்ப்பர். தர்க்கநியாயம் உணர்ந்தவர்கள் ' நாமளும் அவரை புரிந்துகொண்டு அனுசரித்து வாழ்ந்திருக்கலாம்' என்று தத்தம் தவற்றைகாலம் கடந்து உணர்வர். அதுமாதிரி காலம் கடந்து வரும்ஞானோதயம் யாருக்குப் பயன்?

எல்லாம்அவரவர் பார்வையில் விட்டுக்கொடுத்துப் போவதில் புரிந்துணர்வு ஏற்பட்டாலொழியகுடும்பங்கள் சேர்ந்து அன்பாய் ஆதரவாய்அரவணைப்பாய் இருப்பது அபூர்வம் என்கிறஅளவில் இன்றைய சமூகம் இருக்கிறது.

(concluded)

No comments:

Post a Comment