Sunday, July 19, 2015

குடும்ப வாழ்க்கையும் சதுரங்க வேட்டையும் (1)

From my Facebook wall since 15th March 2015:

ஆங்கிலத்தில்'செஸ்' என அறியப்படும் 'சதுரங்கம்'விளையாட்டு, அதன் நுணுக்கங்கள், விளையாட்டுவிதிகள், எந்த எந்த காயின்கள்(விளையாட்டின் பங்குதாரர்கள்), எந்த அளவில் மூவ்செய்ய முடியும், அவரவருக்கு விதிக்கப்பட்ட வரையறை என்ன, எந்தஎல்லைக்குள் அவர்களை நகர்த்தலாம், என்கிறவரையறைகளைத் தாண்டி (பேசிக் ரூல்ஸ்,ரெகுலேஷன்ஸ், ப்ரொசிஜர்ஸ் அன்ட் மோட்ஸ் ஆபரேன்டிஎன்று சொல்வார்கள்) எந்தக் காய்களை எப்படிசூட்சுமமாக நகர்த்தணும், எதிராளி அதாவது போட்டியாளரின்மனப்பாங்கு எப்படி இருக்கும், நமதுஒவ்வொரு மூவுக்கும் அவர் என்ன பதில்மூவ் செய்வார் என்று யூகிப்பதும்,அதன்படி நமது காய் நகர்த்துதல்களைநாம் அனுமானிக்கணும். ச்சும்மா எடுத்தேன் கவிழ்த்தேன்என்று காய் நகர்த்தினால் மிகக்குறுகிய காய் நகர்த்துதல்களிலேயே (10க்குள்) நம்மைசெக்மேட் செய்துவிடுவார்கள்.

எனக்கு விளையாடத் தெரியும், ஆனால் ஒரு பெரியநிபுணன் என்றெல்லாம் சொல்லிக்கொள்ள முடியாது, அந்த விஷயத்தில் சிறுவயதில் கிரிக்கெட்டில் இருந்த ஆர்வம் கூடஎனக்கு செஸ் இன்ன பிறவிளையாட்டுக்களில் ஆர்வம் இருந்தது கிடையாது.
செஸ் என்றால் விஸ்வநாதன் ஆனந்த்ரேஞ்சுக்கெல்லாம் கிடையாது. ரூல்ஸ் தெரியும், ஆனால்ப்ரொஃபஷனலாக விளையாடிய அனுபவமெல்லாம் கிடையாது. எந்த விளையாட்டிலுமே அப்படிப்ரொஃப்ஷனல் அனுபவம் கிடையாது.

திண்ணைக்கச்சேரி என்பார்களே அதுபோல திண்ணையில் கோஷ்டிசேர்ந்து விளையாடும், 10 கடலை உருண்டை பந்தயம்என்கிற வகையில் கேரம் போர்ட்,சீட்டாட்டம் (ஏஸ், ரம்மி மட்டும்)விளையாட அனுமதி இருந்தது. காசுவைத்து விளையாடுவது கிடையாது, அதில் ஆர்வமும் இருந்ததுகிடையாது. சில பெரிசுகள் காசுவைத்து காலம் காலமாக ஒருரிலே ரேஸ் மாதிரி தினசரிஒரு கூட்டம் விளையாடிக்கொண்டிருக்கும். அக்ரஹாரத்துப் பெருசுகள்,வேலை வெட்டிக்குப் போகாதவர்கள் அல்லது வாழ்ந்து கெட்டவர்கள்என்று ஒரு கோஷ்டி அங்குபார்க்கலாம்.  சீட்டுவிளையாட்டில் தம் சொத்தையே இழந்தவர்களைநான் அறிவேன். (மகாபாரதம் ரேஞ்சுக்கு இல்லாட்டாலும்).



பள்ளிக்காலத்தில்இன்டோர் கேம்ஸ் என்றால் ஆண்களுக்குசீட்டுக்கட்டு, கேரம் போர்ட், ஆண்பெண் வித்தியாசமில்லாமல் சோழி ஆடுவது, பெண்களுக்கென்றேப்ரத்தியேகமாய் இருந்த ஒரு சிறுவளையம் போன்ற ரப்பரை காட்ச்பிடித்து விளையாடுவது அதிலும் மூவர் இருந்தால்இடையில் இருப்பவர் மங்கியாகிவிடுவார். வெகு சிலர் டேபிள்டென்னிஸ் வீட்டுக்குள் விளையாடுவர் (அவர்கள் வீட்டுக் காம்பவுண்டுக்குள்).

வெளி விளையாட்டுக்களில் கிட்டிப்புல், பலிங்கி, க்ரிக்கெட், ஃபுட்பால்வாலிபால் இவைதான் ப்ரதானமானது (பலிங்கியில்பலவகை உண்டு, முக்கு, லாக்,ஏதோ ஒரு மூலையில் 'ப'மாதிரி ஒரு டப்பா போட்டுஅதில் மூன்று குழிகள் இருக்கும்,அதில் 2 சிறிய கோலிகள் 1 பெரியகோலி வைத்து விளையாடுவோம். இதிலும்தனித் தனியாய் விளையாடுவதும் உண்டு.நிறைய நபர்கள் இருந்தால் ரெண்டுரெண்டு டீமாயும் விளையாடுவது உண்டு).

ஸ்ட்ரீட் கிரிக்கெட், கோடை காலத்தில் ஆற்றங்கரைக்குச்சென்று ஒரு ஒன்டே மாட்ச்ரேஞ்சுக்கு விளையாடும் டென்னிஸ் பால் கிரிக்கெட்,சற்றே பெரியவர்கள் விளையாடும் கார்க் பால் கிரிக்கெட்,சாலிக் பால் கிரிக்கெட் அல்லதுஒரு பெரிய டெஸ்ட் மாட்ச்ரேஞ்சுக்கு ஒரு ஸ்கூல் மைதானத்தில்முன் அனுமதி பெற்று வாரஇறுதி நாட்களில் விளையாடும் க்ளப் க்ரிக்கெட், இன்டர்ஸ்ட்ரீர் மாட்சுகள் என்று க்ரிக்கெட்டில் பலவகைஉண்டு.

 சிலசமயம்ஃபுட்பால் அல்லது வாலிபால், தெருவிலேயேவிளையாடும் டென்னிஸ் என்றும் இருந்ததுண்டு.

இவற்றில் எனக்கு ப்ரொஃபொஷனல் கிரிக்கெட்டில் பங்கெடுத்த அனுபவமில்லை. என் ரெண்டாவது அண்ணன்மற்றும் அவரது செட்டில் அவர்கள்விளையாடுவதை வேடிக்கை பார்த்த அனுபவம்உண்டு. அவர் அருமையாக ஸ்டைலாகநீந்துவார், கிரிக்கெட்டில் அவரது ஸ்பெஷலாட்டி பௌலிங்காபேட்டிங்கா என்று நினைவில்லை. மீடியம்பேஸ் அல்லது லெக் ஸ்பின்என்று நினைவு. அது லெக்ஸ்பின்னா ஆஃப் ஸ்பின்னா என்றெல்லாம்எனக்கு பிரித்துப் பார்க்க அப்போதெல்லாம் தெரியாது.இப்பவும் தெரியாது என்பது வேறு.


(To be continued)

No comments:

Post a Comment