From my Facebook wall since 15th March 2015:
(To be continued)
மீண்டும்செஸ்ஸுக்கு வருகிறேன். செஸ் விளையாட்டில் செஸ் விளையாட்டின் போக்கும் அதில் ஒரு குடும்பத்தில்அல்லது நாட்டில் பல்வேறு காரணிகள், பங்குதாரர்கள் விளையாடும் இந்த வாழ்க்கை அல்லதுஅரசியல் விளையாட்டு தொடர்பான அலசல்தான் இந்தப் பதிவு.
முதலில் ஒவ்வொருகாயினுக்கும் உள்ள விதிகளை ஆராய்வோம்.
பான் / சிப்பாய்:முதல் முறை மட்டும் ரெண்டு கட்டம் நேராய் போகலாம். அடுத்தடுத்த ஸ்டெப்களில் விளையாட்டின்போக்கில் ஒரு ஸ்டெப் நேராகவோ க்ராஸாகவோ போகலாம்.
பிஷப்/சேனாதிபதி):க்ராஸாக மட்டும் போகலாம். ஒரு கட்டம், ரெண்டு கட்டம் என்கிற வித்தியாசம் அல்லது கட்டுப்பாடுஇல்லை. எதிரணியினரின் கொல்லைப்புறம் வரை கூட, ராஜாவுக்கு அருகே கூட செல்லலாம் (எதிர்ராஜாவுக்கு ரெண்டு கட்டம் முன்பு வரை, ஒரு கட்டம் வரை சென்றால் ராஜாவே போட்டுத் தள்ளிவிடுவார்என்கிற அபாயம் உண்டு).
குதிரை: ஒவ்வொருஸ்டெப்பும் ஒரு நேர்/ஒரு க்ராஸ், அல்லது க்ராஸ்/ நேர் என்கிற ரெண்டு கட்டம் நகரலாம்.ஆட்ட நேரம் முழுவதும், இப்படிப் பட்ட நெருக்கடி குதிரைக்கு உண்டு. அதைத் தாண்டி குதிரையானவர்அகலக்கால் வைக்க முடியாது (வைத்தால் நாலு காலில் ஒரு கால் ஒருக்கால் நட்டுக்கும் அல்லதுபுட்டுக்கும் என்கிற காரணமாய் இருக்கலாம்).
ரூக் (யானை): நேராகமட்டுமே செல்லலாம். ஆனால் நினைத்த மாதிரி ஒரு கட்டமோ ரெண்டு மூணு கட்டமோ எதிராளியின்கொல்லைப்புறம் வரை கூட, ராஜாவின் அருகே கூட ரெண்டு கட்டம் வரை செல்லலாம். என்ன ஒரு ரிஸ்க், சேனாதிபதிக்கு இருக்கும் அதே ரிஸ்க்இவருக்கும் உண்டு, ராஜாவின் அருகே ஒரு கட்டம் வரை சென்றால்
க்வீன் (ராணி): எப்போதும் ராஜாவுக்கு பக்கத்திலேயே இருப்பவர். சண்டைஎன்று வந்து விட்டால் களத்தில் இறங்கி அடிக்கும் வல்லமை பெற்றவர். நேராகவோ குறுக்காகவோஒரு ஸ்டெப்போ ரெண்டு மூணு ஸ்டெப்போ எந்த நேரத்திலும் எல்லா மார்க்கத்திலும் யாரை வேண்டுமானாலும்,எதிரணியின் ராஜா உள்பட போட்டுத் தள்ளும் உரிமை ராணிக்கு உண்டு. கூடவே தன் ராஜாவுக்குஇருக்கும் நெருக்கடி (ராஜா ஒரு மூவ் மட்டுமே நேர் அல்லது குறுக்கு என்று இருப்பதால்),ராஜாவுக்கு எந்த நேரத்தில் யார் மூலம் ஆபத்து வரும் என்று அனுமானித்து அக்கம் பக்கம்பார்த்துக்கொண்டே தூரத்திலிருந்து வரும் ஏவுகணைக்கு நிகரான தாக்குதலையும் சமாளிக்கணும். ராஜாவைக் குறி வைத்து யார் வந்தாலும் எந்த நேரத்திலும்போட்டுத் தள்ளும் உரிமை ராணிக்கு உண்டு. குதிரை மாதிரி ஒரு நேராகவும் குறுக்காகவும்ஒரே சமயத்தில் நகரும் சாத்தியம் மட்டுமே ராணிக்கு இல்லை. ஒன்று நேராய் தாக்கணும், இல்லை குறுக்காய் தாக்கணும்.கூடவே எதிரணியின் ராணி தன் ஆருயிர் ராஜா மேல் கண் வைத்துவிட்டால் தாக்குதல் செய்துவிட்டால்ராணியின் கதை அம்போதான். எதிரணியின் ராஜா போரில் விழுந்து விட்டால் இந்த ராணியின் கதைஅம்போதான். மீண்டும் சிலிர்த்தெழுந்து சண்டை போடுவதெல்லாம் நிஜ வாழ்வில் போர்க்களத்தில்குருக்ஷேத்திரத்தில் சாத்தியமாகலாம். அதற்குக் கூட நிஜ வாழ்வில் மந்திரி ப்ரதானிகள்ஆலோசித்து அனுமதி வழங்கணும், அப்போதுதான் ராணி தன்னையும் நாட்டையும் எதிரியிடமிருந்துகாப்பாற்றிக்கொள்ள முடியும்.
கிங் (ராஜா): நடுநாயகமாய் வீற்றிருப்பார், கம்பீரமாய். அவருக்கு இருக்கும் பொறுப்புக்களில் சண்டை வந்துவிட்டால், இருந்த இடத்திலிருந்து ஓரடி மட்டுமே அசைவார் (குறுக்காகவோ நேராகவோ). மற்றபடிசண்டையில் போர்க்களத்தில் ராஜாவுக்கு இருக்கும் மிகப் பெரிய நெருக்கடி ராணிக்கோ சேனாபதிக்கோயானைக்கோ இருக்கும் எங்கு வேண்டுமானாலும் செல்லும் உரிமை கிடையாது. ஆனால் கிட்ட வந்துவிட்டால்யாரையும் போட்டுத் தள்ளும் ஆளுமை / உரிமை உண்டு. குதிரையைப் பார்த்து ராஜா பொறாமை கொண்டாலும்ஆச்சரியமில்லை, ஒரு குதிரைக்கு இருக்கும் உரிமை கூட நமக்கு இல்லையே என்று தனியே அமர்ந்துயோசிக்கலாம், வேறு ஒன்றும் செய்ய முடியாது. அப்படி யோசித்துக்கொண்டிருந்தாலும், தூரத்திலிருந்துவரும் தாக்குதலைச் சமாளித்து இடவல மாற்றம் மட்டும் செய்து தப்பித்துக்கொள்ளலாம். ஏனெனில்அக்கம் பக்கம் யாருமில்லா நேரத்திலோ அக்கம் பக்கம் எதாவது காலியிடம் கிட்டினால் சந்தர்ப்பம்பார்த்து ஒரு நேர் கோட்டில் அல்லது குறுக்குக் கோட்டில் எதிராளியின் சேனாபதியோ யானையோராணியோ ராஜாவை போட்டுத்தள்ளும் அல்லது செக்மேட் செய்யும் சாத்தியம் உண்டு.
குதிரை, சேனாபதி,யானை, ராணி, சிப்பாய் இவை அனைவருக்கும் பொதுவான அபாயக் கட்டங்கள் எச்சரிக்கையாய் இருக்கவேண்டிய தருணங்கள் இவை:
அ) எதிரணியின் சகபோராளி ராணியோ குதிரையோ சேனாபதியோ யானையோ சிப்பாயோ கூட போட்டுத் தள்ளும் சாத்தியக்கூறுகள்உண்டு. எனவே எதிரணியில் உள்ளே புகுந்து அழிச்சாட்டியம் செய்ய முனைந்தால் உஷாராய் இருக்கணும்,அக்கம் பக்கம் பார்க்கணும், தூரத்தில் இருப்பவரின் மீதும் ஒரு கண் வைக்கணும். கிட்டத்தில் நடக்கும் சண்டையில் தூரத்தே இருந்துவரும் தாக்குதலை சமாளிக்கும் சாதுர்யம் வேண்டும்.
ஆ) நாம் இருக்கும்இடம் என்ன, அடுத்த மூவ் என்ன செய்யணும், அதற்கு எதிராளி என்ன செய்வான், அவனது கூட்டாளிவேறு எங்கிட்டோ கவனமாய் அவன் இருக்கிறான் என்று வாளாவிருந்துவிட்டால் நாம் ஏதோ ஒருமூவ் செய்யப்போய், ஈஸி டார்கெட் என்று ஒன்றை நினைத்து அட்டாக் செய்யப்போவோம், எங்கிருந்தோஒரு யானையோ ராணியோ சேனாபதியோ தாக்கலாம். எதிரணியின்சிப்பாயோ குதிரையோ அருகில் போனால்தான் வெட்டுவர். மற்றவர் எங்கிருந்தாலும் தாக்கும்அபாயம் உண்டு.
No comments:
Post a Comment