Sunday, July 19, 2015

சொல்வனம் (சொல்லாமலே) (4)

From my Facebook wall since 3rd April 2015:

மேலை நாடுகளில் பெரும்பாலும் தொழிலுக்கும் குடும்பத்திற்கும் சரி நிகர் சமானமாய்நேரம் ஒதுக்கி கவனமாய் வாழ்கிறார்கள்.வார விடுமுறை நாட்கள், சிலபொது விடுமுறை நாட்கள் என்றுஎப்போது சந்தர்ப்பம் வாய்த்தாலும், அவ்வப்போது சுற்றுலா அது இதுஎன்று சென்று குடும்பத்தினருடன் ஒருபிணைப்பை அவர்கள் நிலை நிறுத்திவாழ்கிறார்கள். பெரும்பாலும் அங்கு அன்பு என்பதுசொல்லாலேயே ஆட்படுகிறது. சொல் வழி அன்புஎன்பது சாத்தியமாகிறது.

நம் இந்திய அல்லது ஆசியச்சமூகத்தில் (கீழைத் தேசத்தில் பொதுவாய்)அன்பு என்பது பெரும்பாலும் சொல்வழியில்அல்லாமல் செயல்வழியில்தான் வெளிப்படுகிறது. தலைவன் ஆகப்பட்டவன் பொருளீட்டித்தன் கடமையைச் செய்து ஆவனசெய்து பிள்ளை வளர்ப்பு அவர்தம்படிப்பு இவற்றில் அதிகம் கவனிப்புசெய்ய அவனது தொழில் சார்ந்தகவனம் மேற்சொன்னவற்றில் குறைகிறது. இடையில் பிள்ளைகள் வளர்ந்துபெரியவர்களாகிறார்கள்.

சிலகாலம்சென்று தலைவன் உலக அனுபவம்பெற்று மேன்மேலும் தன்னைத் தொழிலில் நிலைநிறுத்திக்கொள்ள தன்னைத் தயார்செய்து கொள்கிறான்.இடையே பிள்ளைகளுக்கும் தந்தைக்கும், சில குடும்பங்களில் கணவன்மனைவியருக்குள்ளேயே மனத்தளவில் அன்பிற்கான ஏக்கம் ஊறிப்போய் காலப்போக்கில்மனத்தளவில் ஒரு பிரிவு ஏற்படுகிறது.

இந்தப் பிரிவானது ஏதோ ஒரு கோணத்தில்தகப்பனுக்கும் பிள்ளைகளுக்கும் தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே ஒரு உளவியல்சிக்கலை ஏற்படுத்துகிறது.

பிள்ளைகள்வளர்ந்தபின் சமயம் பார்த்து தம்ஏக்கங்களை நேரடியாய் வெளிப்படுத்தும் மார்க்கம் அறியாமல் காலச் சூழலில்ஏதோ ஒரு நொடியில் அதுஆங்காரமாய் காலத்தே வெளிப்படுத்தாத அன்புகோபத்தின் வெளிப்பாடாய் மாறுகிறது. சந்தர்ப்பம் பார்த்து பரஸ்பர தாக்குதல்கள்ஏற்படுகின்றன. சாதாரண உரையாடல்கள் கூடவீண் சொல்லாடல்களில் முடிந்து சிறுகச் சிறுகஅந்த சொல்லாடல்களின் தாக்கம் மாற்றுப் பார்வையில்ஒரு குடும்பத்தின் அங்கத்தினர்களிடையெ மாபெரும் உளவியல் சிக்கலைஏற்படுத்துகிறது.

அவரவருக்குஆழ்மனதில் தெரியும்: தலைவன் ஏன் தன்அன்பை வெளிப்படுத்தவில்லை; அவனிடத்தில் அன்பு இல்லாமல் இல்லை,அன்பு என்று ஒன்று இல்லாமலாஅவன் பொருளீட்ட வெளியில் சென்றான், அக்கறையும்பொறுப்பும் இருந்ததனால்தானே வந்த வாய்ப்பை பயன்படுத்திபொருளீட்ட விழைகிறான்; பிரிவின் தாக்கத்தால் அன்பைஅவ்வப்போது சொல்வழி வெளிப்படுத்தும் அவசியம்உணராமலேயே, செயல்வழி வெளிப்படுத்தினால் போதும்என்கிற கோணத்திலேயே அவன் தன் வாழ்வைச்செலுத்துகிறான், பின் காலப்போக்கில் வாழ்வையும்தொலைத்து குடும்பத்தினரின் அன்பையும் தொலைத்து 'எதுக்கடா இத்தனை நாள்வாழ்ந்தோம், இதற்குத்தானா இத்தனை காலம் அவதியுற்றாய்?குடும்பத்தினரையும் அவர்தம் அன்பையும் தொலைக்கத்தானாகாலம் காலமாய் பொருளீட்ட விழைந்தாய்?விடுமுறையில் வரும்போது அவ்வப்போது சேர்த்து வைத்து வாங்கியபொருட்கள், சாதனங்கள் இத்யாதி அவன் கண்முன்னே கொட்டிச் சிரிக்கும்.

செயல் வழி அவன் காட்டியஅன்பும் அரவணைப்பும் ஒரு ஜடப் பொருளாய்மாறி அன்பின் ஏக்கத்தால் அவனும்ஏங்கி காலப்போக்கில் அவனும் ஒரு ஜடப்பொருளாய்தன் குடும்பத்திற்கே தானே ஒரு விருந்தாளியாய்(சில சமயம் அழையா விருந்தாளியாய்க்கூட) ஆகிப்போகிறான்.

எந்தக் குடும்பத்திற்காக உழைத்தானோ கஷ்டப்பட்டானோ அந்தக் குடும்பத்தின் தலைவன்என்கிற தகுதியையும் இழக்காமலே இழந்து அவர்கள் முன்புபேயிங் கெஸ்ட்டாய் வாழும் நிலைக்குத் தள்ளப்படுகிறான்.

No comments:

Post a Comment