From my Facebook wall since 21st April 2015:
இந்த வெள்ளைக்கார தொரைங்களோட தொழில் நேர்மை (?) எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிச்சிருக்கு.
அவங்க புதுசு புதுசா தொழில் நுட்பம் விஞ்ஞான வளர்ச்சி அது இதுன்னு தினம் எதுனா கொண்டு வருவாங்க.
அது நல்லா பிச்சுக்கிச்சுன்னா மேலே மேலே வசதிகளுடன் அபிவிருத்திகளுடன் இன்னும் இன்னும் என்று மேம்படுத்திக்கொண்டேயிருப்பாங்க (கல்லா கட்டறது தனி!!)
அதை சந்தைப் படுத்த இந்தியா சைனா என்று மூன்றாம் உலக சந்தைகள் அவர்களுக்கு டை ஹாத் கா கேல் (ச்சும்மா சுண்டி விளையாடுவாங்க, தமிழில் சொல்றதா இருந்தா வலது கை செய்வதை இடது கை அறியாமல் செய்வாங்க!! தானமெல்லாம் இருக்க்கட்டும், வியாபார தந்திரம் அதைச் சொன்னேன்)
அப்புறம் புது புதுசா மருந்து கண்டுபிடிப்பாங்க. ஒரே உள்ளீடு உள்ள பற்பல மருந்துகளைக் கண்டுபிடிச்சுக்கிட்டே இருப்பாங்க.
கூடவே புது புதுசா வியாதிகளை உண்டுபண்ணுவாங்க, இல்லேன்னா, புதுசா வந்திருக்கறதா உட்டாலக்கடி பண்ணி தாங்கள் கொண்டு வரும் மருந்துகளை விற்க சந்தை தேடுவாங்க.
இதில் சில வகை மருந்துகள் அவையுமே நோயாளிக்கு பின் விளைவைத் தரும் அதனால் அதற்கு மாற்று மருந்தாக வேறொரு மருந்தையும் அவர்களே தருவாங்க வேற!!
முன்னர் சொன்ன தொழில் நுட்ப வசதிகளால் வரும் பின் விளைவுகள், அது தரும் சுகாதார ரீதியான தாக்கங்களையும் அவர்களே பிற்காலத்தில் கொஞ்சம் கொஞ்சமா வெளியே விடுவாங்க, எப்பன்னா, அவங்க பொருள் சந்தையில் மக்களின் பயன்பாட்டில் நீங்கா இடம் பிடித்தபின், மக்களால் அவையின்றி ஓரணவும் அசையாது என்பதை ஆர்ஜிதப்படுத்திக்கொண்டபிறகு.
பிறகு அந்தப் பின் விளைவுகள் எந்த அளவுக்கு மனித குலத்தின் மாண்பை கேவலப்படுத்துகிறது, அதனால் அதன் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளணும், முடிந்தால் தவிர்க்கணும் என்று இன்டர்னெட் மூலம் பிரசங்கம் செய்வார்கள்.
இடையே, அது மாதிரி பொருட்களை சந்தையில் வாங்க காசு பணம் வசதியில்லாதவங்களுக்காக அவங்களே கடன் வசதி தரும் கடன் அட்டைகளை தருவாங்க.
அந்தக் கடன் அட்டைகளின் வழி மீள முடியாத கடன் தொல்லைகளினால் எந்த அளவுக்கு மக்கள் உலகளாவிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்கிற ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் அவர்களே தருவாங்க.
அதையெல்லாம் படிக்க எவனுக்கு நேரம் இருக்கும்? அதனால் அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
அ) தங்கள் கொணரும் புதுப்புது பொருட்களுக்கு சந்தை என்றுமே இருக்கும்
ஆ) புதுப்புது மருந்துப் பொருட்கள் இத்யாதி அதற்கும் சந்தை என்றுமே இருக்கும்
இ) கடன் வசதி தரும் பொருளாதாரக் காரணிகளையும் அவர்களே நிர்ணயிப்பார்கள்
ஈ) எல்லாவற்றுக்கும் மேல் உலகளாவிய அளவில் அனைத்துச் சந்தைகளையும் (வணிகம், தங்கம், பெட்ரோல், உணவுப் பொருட்கள்) என்று அனைத்தும் அவர்கள் கையில்.
இதை இப்படி யாராவது கருத்து சொன்னா, இவன் ஒரு 'எக்சென்ட்ரிக், ஹிப்போக்ரேட், நெக்ஸ்ட் இவன் ஒரு சைக்கோவா ஆயிடுவான்'னு சொல்லி இவனுக்கும் அதே மருந்தைக் கொடுங்கடா என்று மீண்டும் சந்தை, சந்தை, சந்தை!! விந்தை, விந்தை, விந்தை!!
தட் அவங்களே வைப்பாங்களாம், அவங்களே எடுப்பாய்ங்களாம், க்ரேட் மொமென்ட்!!
No comments:
Post a Comment