Friday, May 22, 2020

கொரோனா பீதியில் வந்த பேதியும் விதுர நீதியும்!!

கொரோனா பீதியில் வந்த பேதியும் விதுர நீதியும்!!
முன் குறிப்பு:
யாரோ டாக்டர் பகிர்ந்த வீடியோ செய்தி ஒன்று கண்ணில் பட்டது நேற்று பின்னிரவில். பார்த்து விட்டு தூங்கியாச்சு. காலையில் தோன்றிய கருத்தின் தாக்கம் இது. கோக்குமாக்கு கோவாலு கொனஷ்டையாய் யோசித்ததன் பின் விளைவு. உபிஸ், இடதுசாரி, காங்கிரஸ் அபிமானிகளின் அடிவயிற்றில் பஞ்சவகை மூலம், பவுத்திரம் வகையறா வந்தால் கும்பெனியார் பொறுப்பல்ல!!
வீடியோ சொன்ன செய்தி. இந்த வைரஸ் இந்த பூமி தோன்றிய பல்லாயிரம் ஆண்டுகாலமாக, மனித குலம் தோன்றியபோதே இருந்து வரும் பல்வகை வைரஸ் அல்லது நுண்ணியிர்த் தாக்கங்களில் ஒன்று. டெஸ்ட் பாசிடிவா நெகடிவா என ஆராயும்போது வரும் அசிம்ப்ட்டமேடிக் மூலக் கூறுகளில் பலவகை உண்டு. அதில் ஒன்றாவது எக்குத் தப்பா எல்லாருக்குமே எந்தச் சீசனிலுமே எல்லா ஜியாக்ரஃபியிலுமே காட்டும், அதை வைத்து எல்லாரையும் 'கொரோனா பாசிடிவ்' என 14 நாள் வைத்தியம், ஊரடங்கு, லாக்டவுன் என அலைக்கழிப்பது என்ன நியாயம்? அது போதாதற்கு பொருளாதார முடக்கம், தேசிய அளவில் (உலக அளவில் என்று அவர் சொல்லலை) ஒரு மிகப் பெரும் பொரளியைக் கிளப்பி விடுவது ஞாயமாரே என்கிறார். இது போன்ற வீடியோக்கள் வாட்ஸப் வழி நீங்கள் பார்த்திருக்கலாம். நான் பார்த்தது ஒன்றே ஒன்று.
ஆச்சா, இந்த க்ரோனாலாஜியை கவனிக்க:
1) ஜனவரி துவங்கி இன்று வரை உலக சுகாதார மையம் ஏன் தாமதமாக இதைப் பற்றி உலகிற்கு தெரிவித்தது ? டிசம்பரில் வந்தபோதே ஏன் எச்சரிக்கை விடலை?
2) இந்திய அரசு உள்பட உலக நாடுகள் சுதாரித்து இதுபற்றிய புரிந்துணர்வு, விழிப்புணர்வு வந்து லாக்டவுன் செய்யணும் அது இது என முன்னேற்பாடுகள் செய்யவே பிப்ரவரி கடைசி முதல் மார்ச் 3ம் வாரம் வரை ஆனது.
3) மார்ச் 22ல் தான் முதல் ஊரடங்கு பற்றி நாம் யோசித்தோம்.
4) இதர உலக நாடுகளில் குறிப்பாய் ஐரோப்பாவில் ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி என்று அதற்குள் பெரிய பாதிப்பு நடந்து விட்டது.
5) இன்று கிட்டத்தட்ட 4 மாதம் கழித்து இந்த அன்பர் சொல்லும் வீடியோவின்படி இதெல்லாம் சாதாரண சளிக் காய்ச்சல்தான், பெரிய விஷயம்லாம் இல்லை என்பதை நம் மருத்துவர்கள் ஏற்கிறார்களா? நம் மருத்துவர்களுக்கு இது போன்ற வீடியோக்கள் கண்ணில் பட்டனவா?
6) இந்த வீடியோவில் சொன்னபடி இருந்தால், உலக சுகாதார மையம், அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜெர்மனி என கிட்டத்தட்ட 194 உலக நாடுகளில் 180ல் பாதிப்பு இருக்கு. அத்துணை மருத்துவ நிபுணர்களும் துறை வல்லுனர்களும் இது சாதாரண ஜுரம், காய்ச்சல் என்பதை உணர்ந்தேவோ உணராமலேயோ வெட்டியாய் உலக மக்களை அலைக்கழித்து ஒரு மாபெரும் உலக ஊரடங்கு நடத்தி, சர்வதேச பயணிகள் விமானச் சேவை முதல் அலுவலகப் பணிகள் முதற்கொண்டு முடங்கியதே? அதெல்லாம் ப்ரூடாவா?
7) பற்பல ஹேஷ்யங்கள் தாங்கிய வீடியோக்கள் வாட்ஸப், ஃபேஸ்புக் இதர ஊடகங்களின் வழி பலவாறான சதித் திட்டங்கள், ஃபார்மா கம்பெனிகள் செய்த சதி. ஏதோ ஒரு வியாதிக்கு மருந்து அல்லது வேக்ஸீன் கைவசம் வைத்துக் கொண்டே அவர்கள் ஆடிய நாடகமா இது ?
8) என் முந்தைய வளைகுடாப் பணியில் அவதானித்து உணர்ந்த மருத்துவத் துறை கேப்பிடல் இயந்திரங்கள், எக்ஸ்ரே மெஷின்கள், அனைத்து வியாதிகளையும் அலசி ஆராய பல பன்னாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் மருத்துவ உபகரணங்களில் இந்த வென்ட்டிலேட்டர்கள் என்பவை அதிக விலை மதிப்புள்ளவை. 1990_முதல் 1997 காலக் கட்டத்தில் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பானிலிருந்து தருவித்து எங்கள் நிறுவனம் விற்ற பற்பல மருத்துவ மெஷின்கள், ஸ்கானிங், சிடிஸ்கான், ரேடியாலஜி, கார்டியாலஜி, கைனக்காலஜி என பற்பல வகைகளில் இந்த வென்ட்டிலேட்டர்கள் அன்றைய விலையில் சுமார் 20000, 30000 அமெரிக்க டாலர் மதிப்புள்ளவை.
9) இன்று இந்த கொரோனா காலத்தில் இந்தியாவில் சுமார் ரூபாய் 5000 முதல் 15000, 20000 க்குள் அதே வென்ட்டிலேட்டர்கள் தயாரிக்க முடிகின்றது.
10) அன்று முதல் இன்று வரை இடைப்பட்ட காலக்கட்டத்தில் தயாரித்து விற்பனையாகாத வென்ட்டிலேட்டர்கள் முதல் விற்பனை அல்லது மறு விற்பனை (ரீஸேல்) வழி தள்ள விட இயலாமல் அல்லது அவர்கள் சொல்லும் விலையில் வாங்க ஆளில்லாத சூழலில் அந்த பன்னாட்டு கம்பெனிகள் இருந்தனவா?
11) கூடவே இந்த சானிடைசர்கள், மாஸ்க்குகளில் பலவகையான தரம் உண்டு. அவையும் விற்காமல் இருந்தனவா?
12) அம்புட்டையும் விற்கவும் மேன்மேலும் இதன் வழி இலாபம் பார்க்க இப்படி ஒரு உலகாயத நாடகம் நடக்கிறதா? அதன் ஒரு அங்கம் இந்த கொரோனா பீதியும் அவதியும் பொருளாதார முடக்கமுமா?
13) மேற்சொன்ன சதிக்கான ஹேஷ்யங்களில் ஒன்று உலகப் பெரிய நிறுவனத்தின் என்.ஜி.ஓ. அது மெடிக்கல் துறையில் காட்டும் ஆர்வம், ஃபிலாந்த்ரப்பிக் முன்னெடுப்புக்கள், பண முதலீடுகள் ஒருபக்கம். அதில் எத்துணை நியாயமான சுகாதார அபிவிருத்திக்கானது, எத்துணை பற்பல விஞ்ஞான வழி ஆராய்ச்சிகள், தொழில் துறை முன்னெடுப்புக்கள், அதன் பின்னே இருக்கக்கூடிய வர்த்தக ரீதியிலான இலாபக் கணக்குகள்?
14) மேற்சொன்ன சதிகளில் ஈடுபடும் விஞ்ஞான அல்லது மருத்துவ விஞ்ஞான ஆராய்ச்சியாளர்களில் ஒருவரே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வெள்ளை மாளிகைக்கு அணுக்கமான ஒரு அமைப்பில் ஆலோசகரோ சேர்மனோ ஏதோ ஒரு பொறுப்பில் இருக்கிறார், அவர் டைரக்டராக இருக்கும் நிறுவனமே இந்த வைரஸ்க்கான தயாரிப்பில்
இருப்பதாக ஒரு செய்தி ஓடுது.
15) கனடாவைச் சேர்ந்த ஒரு மருத்துவ விஞ்ஞான ஆராய்ச்சி நிறுவனம், அதில் வேலை பார்த்த சீனத்துறை மருத்துவம் தொடர்பான ஆராய்ச்சியாளர், அவர் வழி வூஹானுக்கு சென்ற வேக்ஸீன் முன் மாதிரி; அதன் பின்னர் நடந்த விபரங்கள் இன்று உலக தொலைக்காட்சிகளில் தினசரி தலைப்புச் செய்தி மட்டுமல்ல, பிரிண்ட் மீடியாவில் பத்திரிகை பதிப்பிட காகிதம் சப்ளைக்கே அந்த ப்ரிண்ட் மீடியா முதலாளிகள் புவ்வாவுக்கே லாட்டரி என்றும், விகடன் குழுமம், தி இந்து ஆங்கிலப் பத்திரிக்கை உள்பட பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்யும் அளவுக்கு தொழில் முடக்கம்.
16) முதலில் குறிப்பிட்ட வீடியோ ஹேஷ்யம் (இதெல்லாம் சும்மா ப்ரூடா, ரெகுலரான வைரஸே, ஊரடங்கெல்லாம் அநாவசியம் என ஒரு மருத்துவர் சொல்லும் அளவுக்கு நதி மூலம், ரிஷிமூலம் இருந்தால், மேற்குறிப்பிட்ட இதர ஹேஷ்யங்கள், தொழில் முடக்கம் இத்யாதி அனைத்தையும் கூட்டிக் கழிச்சுப் பார்த்தால் சாமானியனாய் நாம் இதையெல்லாம் அணுகினால், என்ன தோன்றுகிறது?
17) கவனிக்க, அமெரிக்கா உள்ளிட்ட 61 உலக நாடுகள் சீனா மீது வழக்கும் நஷ்ட ஈடு கோருதல்; ஜெர்மனி மட்டுமே முதலில் சீனா மீது வைத்த பல பில்லியன் டாலர் நஷ்ட ஈடு கோருதல். இதர நாடுகளின் அதே மாதிரி நஷ்ட ஈட்டுக் கோரிக்கை எவ்வளவு மதிப்பீட்டில் இருக்கும்?
இந்தப் பின்னணியில் எனக்குத் தோன்றும் சில கருத்துக்கள் கோக்குமாக்கு கோவாலு கொனஷ்டை ஐடியா!!
அங்கே இங்கே சுத்தி இந்த வைரஸ் மேட்டர் அமெரிக்கா/சீனா வர்த்தகப் போர்னு முடியப்போவுது.
விவாதம் எப்படிப் போவும்னா அதை இதை பண்ண இந்தப் பாழாய்ப்போன WTO, GATT குறுக்கே நிக்கிது 3வது உலகப்போர் அதிதுன்னு இன்னும் பலகோடி நஷ்டம், பல உயிர்கள் பலின்னு போகாமல் இருக்க நம்ம புதுதில்லி பாஜகவைச் சேர்ந்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இப்ப ஒரு வருஷம் டூட்டில அங்கிட்டு இருக்காப்ல.
மோடிஜி ஆலோசனையாய் அவராண்ட சொல்லி ஒரு உலக அமைதி பரிபாலன யோசனைன்னு ஐ.நா.சபை மூலமா ஒரு தீர்மானம் போட்டுட வேண்டியது.
WTO, GATT அந்த மாதிரி agreements, conventions எல்லாத்துக்கும் 6 மாசம் சஸ்பெண்டட்.
Anti dumping, லொட்டு லொசுக்கு பஞ்சாயத்து எதுனாச்சும் யாருக்கும் இருந்தால் 194 நாடுகளும் அவிங்கவிங்க பேசி அவங்களுக்குள்ளயே தீர்த்துக்கங்க. அதுல இருக்குற டாலர் நெட் ரிசல்ட் அம்புட்டையும் reconcile பண்ணிக்கங்க.
6 மாதம் கழிச்சு 1.1.2021 முதல் புதிய WTO , GATT என்ன எழவோ கொண்டு வந்துக்குங்க.
அதுலருந்து USD linked பரிவர்த்தனை எதுவும் கெடியாது. அவங்கவங்க சொந்த கரன்சியிலே தீர்த்துக்கணும். No more common currency like USD linked or Yuan or Euro linked. EU ல இருக்கற அம்புட்டு பயலுகளும் அதே 1.1.21க்குள் பேசிக்கொண்டு EUR as common currency வேணுமா வேணாமா. அதையும் அப்படியே பைசல் பண்ணுங்க.
ஜனவரி 1 2021 லருந்து ஒரு பய அமெரிக்கா சீனா ரஷ்யா ஜெர்மனின்னு எவண்ட்டயும் ரவுடித்தனம் பண்ணப்டாது.
மோடிஜிக்கு 2020 அமைதிக்கான நோபெல் பரிசு, peace be upon eஅர்த். அடிக்க வரப்டாத். ப்ராது என்னவா இருந்தாலும் பேசித் தீர்த்துக்கலாம்.
அமெரிக்கா மற்றும் சைனா ரெண்டுமே அக்யூஸ்டு லிஸ்ட்டில் போட்டு உலக மையம் ஐ. நா. சார்பில் உலக நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும். ரெண்டுமே தற்காலிகமாய் 5 வருடங்கள் ஐ. நா. வின் செக்யூரிட்டி கவுன்ஸிலில் இருந்து நீக்கம்/சஸ்பென்ஷன். அவர்களுக்கு மாறாய் இந்தியாவும் ஜப்பானும் அதே பாதுகாப்புக் கௌன்சிலுக்கு நிரந்தர உறுப்பினராய் அனுமதி.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் தலா 500 பில்லியன் டாலர்கள் மொத்தம் 1 ட்ரில்லியன் தண்டனையாய் ஐ. நா. சார்பில் உலக வங்கியில் நஷ்ட ஈடாய் சமர்ப்பிக்க வேண்டும். இது 1 ட்ரில்லியனா 10 ட்ரில்லியனா என்பதை உலக நீதிமன்றம் தீர்மானிக்கட்டும். அந்த நிதியிலிருந்து உலக அளவில் பாதிக்கப்பட்ட நாடுகளின் நஷ்ட ஈடுக்கு உதவிக்கரம் அளிக்கப்பட வேண்டும்.
உலக அளவில் லாபியிங் முக்கியமானது. இந்த வைரஸ் பரவியது, பரவ விடப்பட்டது, அதற்கான மருந்து அல்லது வேக்ஸீன் தயாரிப்பு இதில் கூட லாபியிங்தான் நடக்கிறது. உலக அளவில் இந்த என்.ஜி.ஓ.க்கள் எனும் ரூட்டில் நடக்கும் வஹாபிய, வாடிகன், ஆபிரஹாமிய லாபியிங் நமக்கெல்லாம் தெரியாததல்ல.
அதே லாபியிங் ரூட்டில் மோடிஜி ஆலோசனை என ஒரு லாபியிங் இந்தியா செய்ய முடியாதா? மேற்சொன்ன ரூட்டில் அமெரிக்காவும் சீனாவும் தனிமைப்படுத்தப்பட்டால், அவர்கள் போட்ட ரூட்டிலேயே இதற்கு ஒரு நிரந்தரத் தீற்வும் கொணரலாமே?

23/05/2020 Thoughts for the day by Singai Sivas shared discreetly to limited friends only. 

No comments:

Post a Comment