தினம் ஒரு ஆப்பிள் தின்றால் டாக்டரிடம் செல்ல வேண்டாம் (இது ஒரு ஆங்கில முதுமொழி) An Apple a day keeps the doctor away.
ஆப்பிளில் உள்ள பாசிடிவ் அம்சங்கள் அத்துணை எனச் சொல்லப்படுகிறது. அமெரிக்க அல்லது மேற்கத்திய நாகரிகத்தின் உள்ளீடுகளை ஒப்புக்கொள்ளாதவர்கள் ஒரு ஆப்பிளுக்குப் பதிலாக இரண்டு நாட்டு வாழைப்பழம் சாப்பிட்டால் கூட அதே சத்து கிட்டும் எனச் சொல்வார்கள்.
இதில் கவனிக்கத்தக்க வேறொரு அம்சம் உண்டு. விதை, அதிலிருந்து துளிர்க்கும் செடி, விருட்சம் என ஆப்பிள் பயிராகி ஆப்பிள் காய், கனி என பரிமாணம் பெற்றபின் நாம் உண்கிறோம். சரி.
விதையிலிருந்து வரும் காயும் கனியும் உடலுக்கு, போஷாக்கிற்கு நல்லது என்கின்றனரே, ஆனால், அதே விதை அப்படியே உணவாய் உட்கொள்ள நேர்ந்தால், அதுவே விஷம் எனச் சொன்னார்களா?
மனித உடலுக்கு நல்லது எதுவோ அதைச் சொன்னவர்கள் அதில் ஏதேனும் கெட்ட விஷயங்கள் இருந்தால் அதையும் சொல்லணுமா வேண்டமா?
Well, apple seeds can indeed be poisonous, but it takes quite a few of them to kill you and only if they have been crushed. Apple seeds (and the seeds of related plants, such as pears and cherries) contain amygdalin, a cyanogenic glycoside composed of cyanide and sugar. When metabolized in the digestive system, this chemical degrades into highly poisonous hydrogen cyanide (HCN). A lethal dose of HCN can kill within minutes.
என்னது, விதை விஷமா? ஆம், விதையை அப்படியே சிறிது சிறிதாக நம்மை அறியாமல் விழுங்கி விட்டால் பிரச்சினையில்லை. அதைக் கடித்து, மென்று, துகள் துகளாக உண்ணும் அபாக்கியம் நேர்ந்தால், அதுவே விஷமாகிறது. ஆப்பிள் குடும்பத்தில் வரும் பியர்ஸ் மற்றும் செர்ரீஸ்க்கும் இதே. அவற்றின் விதைகளுக்கும் அதே நிலைதான்.
அதாவது, பொதுவாக ஒரு ஆப்பிளில் நாம் காணக்கூடிய விதைகள் 5 முதல் 8 வரை இருக்கலாம். ஓரிரு ஆப்பிள் உண்பதால் விதைகள் எப்படியோ நம் வயிற்றுக்குள் சென்று விட்டால், நம் ஜீரண மணடலம் அவற்றை கிரஹிக்கும், பிரச்சினையில்லை. அதுவே, சுமார் 18 அல்லது 19 ஆப்பிள்களை ஒருவர் தொடர்ந்து உட்கொண்டால் விதைகளும் சேர்ந்தே மென்றுவிட்டால், அது கிட்டத்தட்ட 150 விதைகளுக்கான சங்கதிகளை உள்வாங்கிச் செல்கிறது.
நம் உடலின் ஜீரணத் தன்மை அதை கிரஹிக்காது. காரணம், ஆப்பிள் விதைகளில் உள்ள அமிக்தலின் அதில் சயனைடு மற்றும் சர்க்கரைச் சத்து உள்ளது.
அதே கோணத்தில் ஆராய்ந்தால்: ஆதி மனிதன், கற்கால மனிதன், சமவெளி, காடு, மலை, நிலம், நீர்ப்பரப்பு, பாலைவனம் ஆங்காங்கே மனித குலம் வளர்ந்து இன்று மனிதன் எங்கெங்கோ என்னென்னவாகவோ பரிமாணம் / பரிணாமம் பெற்று விட்டான். விஞ்ஞான வளர்ச்சியின் மூல்ம் தொழில் நுட்பம் அது இது என இயற்கையை வென்றானா, இயற்கை அவனை வென்றதா என்பதை இன்றைய கொரோனா கேள்விக்குறியாக்கி இருக்கிறது.
விஞ்ஞானம் வளர்ந்த அதே ஸ்திதியில் இறை வழிபாடு, அதிலொரு மண், பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியம் என வளர்ந்த மனிதன் மதம் எனும் பேய் பிடித்து ஆட நேர்ந்ததில் மனிதம் தொலைத்து நிற்கிறான். ஒவ்வொரு இனக்குழுவிற்கும் இடையே உள்ள ' நீயா நானா' போட்டியில் தன் மதமே பெரிது என்கிறான். அதற்கு எங்கிருந்தோ கொரியரில் எந்தக் காலத்திலோ வந்த புத்தகத்தை காரணம் காட்டி ' நீ என் மதம் இல்லையெனில் நீ வாழத் தகுதியற்றவன்' என சக மனிதனை அழிக்கத் துணிகிறான்.
அந்த அழிவுப்பாதைக்கு அவன் கொடுக்கும் பெயர் ஜிகாத், ஷிர்க், அல்லது காஃபீர் இன்ன பிற. அவனது இனக்கூட்டம் சிறிதாய் சிறுபான்மையாய் இருக்கும்வரை அவன் அடங்கிப் போகிறான். அதே சிறுகச் சிறுக தன் இனக்கூட்டத்தை அதிகரித்து சிறுபான்மை முழுப் பெரும்பான்மை கூட வேண்டாம், நூற்றில் 5,10,15 என வளரும்போது உரிமைப்போர் என்கிறான், சித்தாந்தம் பேசுகிறான். ஆட்சியாளர்களிடம் கெஞ்சிக் கொஞ்சி பிறகு தன் ஆளுமையை நிர்மாணிக்கிறான். நூற்றில் 30, 40 என வந்துவிட்டாலே தனக்கு அனைத்து அதிகாரமும் வேண்டும் என்கிறான். அதிகாரம் வந்து விட்டால், தன் சொல்லே வேதம் என்கிறான்.
அதாவது ஆப்பிளில் உள்ள விதைகள் போல சிறிதாய் இருக்கும்போது விழுங்கப்பட்டாலும் பாதகமில்லை. ஆனால், அதே விதைகளின் எண்ணிக்கை கூடும்போது விழுங்கப்பட்டால் மென்று முழிங்கி விதைகள் துகள்களாய் விஷமாய் மாறும்போது ஆட்கொல்லியாகிறது.
புரிகிறதா? விதைகளின் ஒற்றுமை, வேற்றுமை? சாதி, மொழி, இனம், மதம் என மனிதம் பிரியும்போது விதைகளின் ஆட்சி எங்கே போகிறது என்று?
பொறுப்புத் துறப்பு:
மேற்சொன்ன விதைகளின் மகிமை ஒரு தகவலுக்காக, சொல்ல வந்த செய்திக்கு உறுதி சேர்க்க சொல்லப்பட்டது. இதையே உதாரணமாய் எடுத்துக்கொண்டு யாரும் விஷப்பரீட்சையில் ஈடுபட்டால், கும்பெனியார் பொறுப்பல்ல!! தகவலை தகவலாக மட்டுமே பார்க்கவும்!!
மேற்சொன்ன விதைகளின் மகிமை ஒரு தகவலுக்காக, சொல்ல வந்த செய்திக்கு உறுதி சேர்க்க சொல்லப்பட்டது. இதையே உதாரணமாய் எடுத்துக்கொண்டு யாரும் விஷப்பரீட்சையில் ஈடுபட்டால், கும்பெனியார் பொறுப்பல்ல!! தகவலை தகவலாக மட்டுமே பார்க்கவும்!!
#April 29 2020 posted originally in Facebook
No comments:
Post a Comment