Monday, November 24, 2014

மத மாற்றம் ஒரு பார்வை!!

A friend of mine from Facebook has asked this query as his status post asking for feedback.  This is what I shared with him in a private message today (25-11-2014)

சட்டம் தெரிந்தவர்களின் கருத்தை எதிர்பார்க்கிறேன்
இரு வேறு மதத்தை சார்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளும் போது கண்டிப்பாக இருவரும் அவர் தம் மதத்திலேயே தொடரவேண்டும். கட்டாயம் மதம் மாறுதல் கூடாது (அவன்/அவள் விருப்ப பட்டே மாறுகிறார்கள் என கண்டிப்பாக சொம்படிக்க கூடாது)
அவன்/அவள் மத விஷயங்களில் தலையிட கூடாது அவன்/அவள் தங்கள் மத வழக்கப்படி கடவுளை துதிக்க அனுமதிக்க வேண்டும்.
எக்காரணத்தை கொண்டும் தனி நபர் மத சுதந்திரத்தில் தலையிட கூடாது.
அவர்கள் வாரிசுகளின் மீது குறிப்பிட்ட மதத்தை திணித்தல் கூடாது இதற்காகவே அவர் தம் வாரிசுகளை தனி பிரிவாக அங்கீகரித்து அவர்களுக்கு தனியாக இட ஒதுக்கீடு வழங்கும் படி செய்யவேண்டும்.
-----------------------------------------------------------------------------------
இது துவக்க புள்ளி தான். நிறை குறைகள் இருக்கலாம். இது தொடர்பாக நண்பர்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன்.
சட்ட ஞானம் உள்ளவர்களிடம் அதிகமாக


மத மாற்றம் காதல் தன் மதத்தை பழக்க வழக்கத்தை தொடர இயலாமை (ஆணோ பெண்ணோ) இது தொடர்பான சட்ட ரீதியான விளக்கம் கேட்டிருந்தீர்கள். வெளிப்படையாக நாகரிகம் அல்லது கான்ட்ரவர்சியல் இடுகைகள் தவிர்க்கவே பலர் வெளிப்படையாக பேசாமல் பூடகமாகத் தங்கள் பதிவை பதிகிறார்கள். நானும் என் கருத்தை தனிப்பட்ட ரீதியில் உள்பெட்டியில் பதிவுசெய்ய விழைகிறேன்.

இந்த விஷயத்தில் நாட்டில் நடப்பது ஒரு எமொஷனல் ப்ளாக் மெயில் ரீதியில் லவ் ஜிஹாத் என்னவோ புதுப்பெயர் வேறு கொடுத்துள்ளார்கள் (மீடியாவில்).

உங்களுக்குத் தெரியாததல்ல. ஆணோ பெண்ணோ அவன்/அவள் இந்துவாக இருந்து மற்ற நபர் முக்காலோ பாவாடையோ எந்த மதம் சார்ந்தவராக இருந்தாலும், இந்துவாகப்பட்டவர்தான் கட்டாயம் மதம் மாறியாக வேண்டும். மற்றவர்கள் இங்கே இந்துவாக மாறி உள்ளே வர அவர்கள் மார்க்கம் அவர்களை அனுமதிக்காது, மீறினால் உயிரோடு இருப்பதே அரிதாகிவிடும். அதிக பட்சம் சமூகத்திலிருந்து தள்ளி வைத்தல் என்கிற நிலையைத்தான் அந்தக் காதலர்கள் சந்திக்கணும் (உயிரோடு விட்டுவைக்கும் இரக்க சுபாவம் மிச்ச சொச்சம் இருந்தால், பெரியவர்களிடத்தில்).

சட்ட ரீதியாக அனுகூலங்கள், சலுகைகள், அடுத்த சந்ததியருக்காக குறிப்பிட்டீர்கள். இந்த மாதிரி இந்துவாகப் பார்த்து தேடித் தேடி காதல் என்கிற மாயையில் சுண்டியிழுக்க வேண்டியது, பின்னர் திருமணம் என்கிற நேரம் வரும்போது ஒருவர் மற்றொருவருக்குத் தேவை என்று வருகிறபோது இந்துவானவர்தான் விட்டுக்கொடுக்க வேண்டும் (வழக்கம்போல்). கால நேர வர்த்தமானங்கள் சரியாக அவர்கள் வாழ்வில் வாய்த்தால் அவர்கள் வாழ்வு சுமுகமாகப் போகும். இல்லையேல் அந்த இந்துவாய் இருந்து மாறியவருக்கு சொர்க்கம் நரகம் பாதாள லோகம் இகரபரசுகம் எல்லாம் இந்த மண்ணில்தான். சொல்லை மீறினால் வேறு ஊருக்கோ நாட்டுக்கோ அழைத்துச் செல்லப்பட்டு விபசாரம் இன்ன பிற வேண்டத் தகாத விளைவுகளைத்தான் சந்திக்கவேண்டும் (இந்து பெண்ணாக இருப்பின்).  நம்பி வந்தவரை நட்டாற்றில் விட்டுவிட்டு ஓடிவிடுவதில் அந்த இரு க்ரூப்புக்கும் சொல்லியா தரணும்? அடுத்து 2, 3 4 என்று சேர்த்துக்கொள்ளத்தான் மார்க்கம் அவர்களை அனுமதிக்கிறதே?

பாவாடை மார்க்கத்தில் 2, 3 4 என்று ஒபிஷியலாக இல்லாவிட்டாலும் ஆப்லைனில் வைத்துக்கொள்ள ஒரு தடையும் இல்லையே. ஒருவேளை குற்ற உணர்ச்சி உறுத்தினால் இருக்கவே இருக்கு, பாவப் பரிகாரத்திற்கு தனிப்பட்ட முறையில் ஒரு பாவாடையிடம் பாவ மன்னிப்பு கேட்டால் ஆயிற்று.

இது சில பல நூற்றாண்டுகளாக நம் மண்ணில் நம் எண்ணிக்கையைக் குறைத்து (ஒரு வித ஸ்ட்ரேடஜிக்கல் மூவ்) அவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க அவர்களுக்குள் போட்டி இருந்தாலும் யார் வென்றாலும் எதிரி தொலைந்தான் என்கிற மனோபாவம்தான் மேலோங்கி இருக்கிறது.

காதலரில் ஒருவர் மாறினாலே 50% இந்துவானவர் தன் தகுதியை இழக்கிறார் (மனதளவில் உள்ளத்தளவில் 50% மீதி தொடர்ந்து நம் மத விஷயங்களில் நாட்டம் இருக்கும் வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளாமல் நடித்துக்கொண்டுருப்பார்கள், சர்வைவலுக்காக!!)

இப்படித்தான் அவர்கள் பல தேசங்களில் தங்கள் அழிச்சாட்டியங்களை அரங்கேற்றி வந்திருக்கிறார்கள். வரலாறு சாமி!! அதற்குத்தான் அபிரகாமிய மேற்குலகம் வஹாபிய மேற்குலகம் கோடி கோடியாக கொட்டுகிறது இங்கே!!

சட்டப்படியாக இதை எதிர்கொள்வதில் ஒருவருக்கு தன் ஆயுள் பத்தாது. அடுத்த தலைமுறைக்கு ரிசர்வேஷன் அவர்கள் வளர்ந்து தத்தம் மதம் சார்பு நிலை குறித்து ஒரு முடிவு எடுப்பதற்குள் ஞான ஸ்னானம் இன்ன பிற கட்டுப்பாடுகளை விதித்துப் பழக்கி விடுவார்கள். மீறினால் உயிரோடு இருப்பதே சங்கடமாகிவிடாதா?

பிறகு எங்கே அவர்கள் சட்டப்படி முடிவெடுப்பது?

எல்லாம் இந்த தேசத்தை சீரழிக்க வந்த சீர்கேடுகள். அதன் தொடர்பில் வந்த அக்கறைதான் தங்கள் பதிவு என்பதை உணர்கிறேன்.

இது விஷயம் நாம் என்னதான் இங்கு கருத்துப் பரிமாறிக்கொண்டாலும் மாற்றம் இந்து மதம் காப்பாற்றப்பட நாம் ஏதாவது செய்யணும் என்கிற நம் அக்கறை புரிகிறது. நடைமுறை வாழ்க்கையில் அவரவர் தம் வழியைப் பார்த்துப் போகிறார்கள். எதற்கு வம்பு என்று குடிமகன் வாளாவிருக்கிறான். இந்த தேசத்தில் ஒரு நாள் ஒரு விடிவெள்ளி தோன்றும், நம்புவோம், எல்லாம் வல்ல இறைச் சக்தி அதற்கு ஒரு வழிகாட்ட வேண்டுவோம்.

நம் வரையில் நாம் நம் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும். நாம் இந்துவாக இப்பிறவியில் பிறந்தது ஒரு நோக்கத்தோடுதான் அதை ஏன் நாம் வலுக்கட்டாயமாக மாற்ற வேண்டும்?  நம்பிக்கையோடு நம் மத வழக்கங்களை நாம் கடைப்பிடிக்க யதார்த்தமாக ஒவ்வொரு இளைஞனுக்கும் சிறிது காலம் ஆகும். இது ஒரு நாளில் ஒரு சில வருடங்களில் வரும் மாற்றமல்ல. அதுதான் யதார்த்தம்!! 

No comments:

Post a Comment