Thursday, July 16, 2020

திராவிட அரசியலும் ஹோலோக்காஸ்டும் (ஒரு கருத்தியல் ஒப்பீடு) ‍ பாகம் 3

திராவிட அரசியலும் ஹோலோக்காஸ்டும் (ஒரு கருத்தியல் ஒப்பீடு) ‍ பாகம் 3

முன் இரு பதிவுகள் படித்தால்தான் இப்பதிவு புரியும் என்பதால், அவற்றை கமென்ட்டில் உள்ள இணைப்பில் பார்க்கவும்.

அதற்கு என் மறுதலிப்பு இது:
// பின்னூட்டக் கருத்துச் சொன்ன அன்பர் ஏதோ காங்கோவிலோ நைஜீரியாவிலோ வாழ்கிறாரோ என்னவோ?
மத்தவங்களை அப்படிப் பேசலியே எனக் கேட்பதே மகா கேவலமான படு அபத்தமான கேள்வி//பார்வை.

213 நாடுகளில் இந்தியா ஒன்று மட்டுமே பொடலங்காய் செக்யூலர் எனச் சொல்லிக்கொண்டு இம்புட்டு அழிச்சாட்டியமும் நடக்கிறது. இங்குதான் இந்துக்கள் பெரும்பாலும் வாழ்கிறோம். இங்குதான் இந்து நாத்திகர்கள் சக இந்துக்களை அவமதிக்கிறார்கள். அப்போ இங்குதானே அவர்களின் பாரபட்சமான 'பிற மதச் சார்புள்ள இந்து த்வேஷம் த்வனிக்கும் செயல்பாடுகளை விமரிசிக்க முடியும்? அவர்கள் இங்கு கேனைத்தனமாக நடந்து கொள்வதால்தானே, இங்குள்ள பிற சோ கால்டு செக்யூலர் மதங்களான 'இறக்குமதி இந்திய மண்ணிற்கு அன்னிய மதங்களில் முதன்மை ரெண்டு மதம், இஸ்லாம், கிறித்தவம் குறித்த த்வேஷப் பார்வை உனக்கு ஏன் இல்லை' என்று அதே நாத்திகர்களைக் கேட்க முடியும்? இதற்கு ஆப்பிரிக்காவுக்கோ அனகோன்டாவுக்கோவா போக முடியும்?

எங்கள் அப்பன் தாத்தன் முப்பாட்டன்களுக்கு ரோஷம் இருந்ததோ இல்லியோ வெளிப்பட்டதோ இல்லையோ வெளிப்படுத்தினார்களோ இல்லையோ அது அந்தந்தக் காலக்கட்டத்தில் இருந்த பொதுவெளி நாகரிகம், இந்த நாத்திக கூட்டத்திடம் இல்லாத நாகரிகம், கருதி நாத்திகவியாதிகளிடம் பிரச்சினை வேண்டாம் என ஒதுங்கிப் போன சகிப்புத்தன்மை அன்று இருந்தது.

'ஒன்ற அப்பன் இளிச்சவாயனா இருந்தானே, நீயும் இருந்துட்டுப் போயேன்'னு கேட்பது போல இருக்கு இது. மிகக் கேவலமான வாதமாய் தெரிகிறது. அன்று நடந்ததற்கு அவர்கள் அமைதி காத்தார்கள், அவர்கள் பாடு. இன்று நடப்பது சகித்துக்கொள்ள முடியலை, அதனால்தான் விழிப்புணர்வுடன் கேள்வி கேட்கிறோம். இது எங்கள் பாடு, டாட்.

எல்லாவற்றிற்கும் மேலே 'சகிப்புத் தன்மையைப் பற்றி' கருத்துச் சொல்ல இந்திய வாழ் இஸ்லாமியர்களுக்கு தகுதியில்லை. ரெண்டாவது டாட்.//

இனி தொடர்ந்து நாம் யோசிப்போம்.

இவர்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். காலம் காலமாய் ஆதிக்க சாதியின் அடக்குமுறை, சனாதனி வைதீக மதங்களின் ஆட்சி, அல்லது வைதீக அன்பரிகளின் ஆளுமை, பார்ப்பனர் அல்லாத பிற ஆளுமைகளைப் பேசாமல் வசதியாக மல்லாந்து படுத்திருந்து குதூகலித்து விட்டு, ஒரு வித கெக்களிப்பு, எகத்தாளம், யதேச்சாதிகாரத் த்வனி கொண்டு பார்ப்பனை மட்டும் குறிப்பாய் அடித்தால் மற்ற ஆளுமைச் சாதியினர் ஒன்றிணைந்து தம் பக்கம் வந்து விடுவார்கள் என்கிற கள யதார்த்தம் அவர்களை அப்படி பேச வைக்கிறது.

இதில் கெக்களிப்பது யார்? வஹாபியமும் ஆபிரகாமிய மதங்களும் கருத்தியல் ரீதியாய் சில நூறு ஆண்டுகளாய் இங்கே வேரூன்றி 'எங்கிருந்தோ வந்து இங்கிருந்தே எடுத்து இங்கிருந்தே மூளைச் சலவை செய்து, இங்கிருந்து எடுத்ததை அவர்களுடையதாய் அசலானின் அசலாக்கி, அதையே வேறு போத்தலில் ஊற்றி இங்கேயே மறுபடியும் வினியோகிப்பார்களாம், மேலும், ஒரிஜினலாய் ஆதிமூலமாய் சனாதனியாய் இங்கேயே இருந்ததை, இருப்பதை எம்மிடமே எம் மக்கள் மூலம் மூளைச் சலவை செய்து இலவசம் அல்லது பொருளாதாரச் சலுகை எனும் ரூட்டில் நம் சரக்கை நமக்கே விற்பார்களாம் என்னய்யா பம்மாத்து இது?

தலைப்பிற்கும் மேற்சொன்னவற்றிற்கும் என்ன சம்பந்தம் என யாரும் கேட்கலாம். அடுத்த பதிவில் வருகிறேன்.

இந்த கருத்தியல் ரீதியிலான எண்ண ஓட்டம் ஓரிரு பதிவில் சொல்லிவிட இயலாது. இச் சிந்தனை மேன்மேலும் தொடரும், தொடர்பு எல்லையில் காத்திருக்கவும்.

No comments:

Post a Comment