Thursday, July 16, 2020

திராவிட அரசியலும் ஹோலோக்காஸ்டும் (ஒரு கருத்தியல் ஒப்பீடு) ‍ பாகம் 1

திராவிட அரசியலும் ஹோலோக்காஸ்டும் (ஒரு கருத்தியல் ஒப்பீடு) ‍ பாகம் 1

இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் அதற்கு முன்பு, பின்பு யூதர்களுக்கு எதிராக நாஜிக்கள் செய்த வரலாற்றுப் புகழ் நாசகாரியங்கள், அட்டூழியங்கள், ஏதோ ஒரு premeditated காழ்ப்புணர்ச்சியில் ஒரு இனத்தையே வேரறுக்கும் கயமைத்தனத்துடன் நடந்த நிகழ்வுகள் இன்னமும் பலருக்கு மறக்க முடியாது.

இன்றைய இளம் தலைமுறைக்கு அதன் பின்னணி, யூதர்கள் அதன்பின் எப்படி தங்களுக்கு என ஒரு நாட்டை இஸ்ரேல் என நிர்மாணிக்க எப்படியெல்லாம் போராடினார்கள் என்பதெல்லாம் தனிக்கதை.

அந்த ஹோலோக்காஸ்ட் எனும் வன்முறைகள் அதைப்பற்றி பேசவே கூடாது, பேசினால் தலை இருக்காது என ஒரு சாரார்.

அதைப்பற்றி மறுதலித்து அப்படி ஒன்று நடக்கவே இல்லை எனச் சொல்லி மறுத்துப் பேசுவோர் சந்திக்கும் வாழ்வியல் தார்மீகச் சங்கடங்கள் அனேகம்.

இதை ஏன் இப்ப பேசறே என்கிறீர்களா?

திக, திமுக நாத்திகப் பிரச்சாரம், குறிப்பாக இந்து மதக் கடவுள் கள், ஆன்மீக நம்பிக்கைகள் இதைப்பற்றி பார்ப்பன எதிர்ப்பு எனப் பேசிப் பேசியே திராவிட அரசியலர் தமிழ் நாட்டில் ஒரு மூளைச்சலவை 100 ஆண்டுகளாக செய்து வருகின்றனர். அது கடந்த 60 ஆண்டுகளில் அதிகமாய் அட்டகாசம், அட்டூழியம், என கள நிலவரம் ஒரு சமூக அவலமாய் இன்று தமிழ் நாட்டில் ஆகிவிட்டது.

இதுபற்றிய தொடர் சிந்தனை அடுத்து வருகிறது. Have a break for this evening.


திராவிட அரசியலும் ஹோலோக்காஸ்டும் (ஒரு கருத்தியல் ஒப்பீடு) ‍ பாகம் 2

ஒரு நண்பரின் பதிவில் அவரது மையக் கருத்து இது:

நண்பர் யார், கருத்துச் சொன்னவர் யார் என்பதெல்லாம் தனி. இங்கு நாம் கருத்தை 'கருத்தாய்' கருத்தியல் ரீதியாய் எதிர் கொள்வோம்.

// இந்துக்களை அவமதிக்க டாப் to பாட்டம் கட்சியில் எல்லோரும் கிளம்பி வருவார்கள். அடி பலமா விழுந்தா நேரு, வீராசாமி, பவுடர் முருகன் என்று யாராவது அல்லக்கைகளை விட்டு அறிக்கை கொடுப்பார்கள். இதுதான் திமுக Strategy.

ஓட்டுக்கு கட்சித் தலைவரை பட்டை போட்டு காவி உடுத்தி காவடி எடுக்க வைக்க வேண்டும் மக்களே. எந்த ஓட்டு அரசியலுக்காக , இந்துக்களை அவர்கள் நம்பிக்கைகளை இழிவுபடுத்தினரோ அதே வாக்கு அரசியலுக்காக காவடி எடுக்க வைக்க வேண்டும். பின்னர் தோற்கடிக்க வேண்டும் அப்போதுதான் வாக்குவங்கிக்காக சிலரை திருப்த்திபடுத்த ஹிந்துக்களை இழிவுபடுத்தலாம் என்ற நிலை மாறும்.//

அதில் ஒரு பொது நண்பரின் பின்னூட்டக் கருத்து இது:
// ஏன் மற்ற மதங்களை நாத்திகர்கள் விமர்சிப்பதில்லை என்று சில இந்து மத நண்பர்கள் அடிக்கடி புலம்புவதைப் பார்க்கிறேன்.

ஆரம்பத்தில் பெரியாரை தி.க.வை எதிர்த்த இந்து ஆன்மிகவாதிகள் யாரும் இந்தக் கேள்வியைக் கேட்டதில்லை. எனக்குத் தெரிந்து, முதன்முதலில் சோ இந்த வாதத்தை 90களின் ஆரம்பத்தில் தொடர்ந்து சொல்லிவந்தார். இன்று பலரும் இதைச் சொல்லுவதைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது.
ஒரு நாத்திகன் எந்த மதத்தில் பிறந்து, அதை உதறி, கடவுள் நம்பிக்கை இல்லாதவனாக ஆனானோ, அந்த மதத்தைத்தானே அதிகமாக விமர்சிப்பான்?

கிறிஸ்தவ மதம் பெரும்பான்மையாக இருக்கும் நாடுகளில் நாத்திகர்கள் கிறிஸ்தவ மதத்தைத்தான் விமர்சிக்கிறார்கள். பிராட்வே மியூசிக்கலின் உச்ச நட்சத்திரமான ஆன்ட்ரூ லாய்ட் வெப்பர் (நம் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு முதல் உலக வாய்ப்பை வழங்கியவர்), பெரும் புகழை அடைந்தது "ஜீசஸ் கிறிஸ்ட் சூப்பர் ஸ்டார்" என்ற படைப்பின் மூலமே. அது இயேசுவின் மீது கடுமையான விமர்சனத்தை வைத்ததினால் மதவாதிகள் கொதித்தார்கள். ஆனால் அந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக பத்தாண்டுகளுக்கு மேல் தொடர்ந்து மேடைகளில் நிகழ்த்தப்பட்டு, இரு முறை திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது.

புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் மார்டின் ஸ்கார்சஸி மிகுந்த எதிர்ப்புக்கு நடுவில்தான் "தி லாஸ்ட் டெம்ப்டேஷன் ஆஃப் கிறிஸ்ட்" என்ற இயேசுவின் மன சபலங்களைப் பற்றிய நாவலைத் திரைப்படமாக எடுத்தார். எத்தனை எத்தனையோ புத்தகங்கள் கிறிஸ்தவ மத நம்பிக்கையை விமர்சித்தும், இயேசுவின் வாழ்வையும் போதனைகளையும் கேள்வி கேட்டும் எழுதப்பட்டிருக்கின்றன. டான் பிரவுன் எழுதிய "டா வின்சி கோட்" சமீபத்திய உதாரணம்.

இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த சல்மான் ருஷ்டிதான் "சாடானிக் வெர்சஸ்" என்ற இறை மறுப்பு நூலை எழுதினார். தஸ்லிமா நஸ்றீன் இஸ்லாமிய மத வெறியைப் பற்றி "லஜ்ஜா" நூலில் எழுதினார்.
இவர்களை எல்லாம் பார்த்து, கிறிஸ்தவரோ இஸ்லாமியரோ, 'நீங்க ஏன் இந்து மதத்தை எதிர்த்து எழுதவில்லை?' என்று முட்டாள்தனமாகக் கேள்வி கேட்பதில்லை என்பதையாவது புரிந்துகொள்ளுங்கள்.//

அதற்கு என் மறுதலிப்பு coming up next. இந்த கருத்தியல் ரீதியிலான எண்ண ஓட்டம் ஓரிரு பதிவில் சொல்லிவிட இயலாது

No comments:

Post a Comment