Wednesday, October 7, 2020

எங்கே செல்லும் இந்தப் பாதை?

 

ஒரு சிக்க பெத்த டவுட்டு மக்கா(ஸ்), மச்சா(ஸ்). யாராவது இந்த புளிச் சக்கை, வண்டல்மண், கரிசல் மண், களிமண், ஏன், பெரியார் மண்ணையே எடுத்துக்கோங்களேன், இல்லாங்காட்டி இந்த வீல், விம், ரின், சர்ஃப் எக்ஸெல், டைட், ஏரியல் என்னவெல்லாமோ இருக்கோ, எந்தக் கருமத்தையாவது போட்டு வெளக்கிடுங்கோ எசமான்.
அகில உலகிலும் ஹிட்லரைப் பற்றிப் பேச்செடுத்தால் 'அந்தாளைப் பத்திப் பேசாதே, பேசினால் உன்னை நாடு கடத்திப்புடுவேன், நாட்டாமைய வெச்சு 'ஊருக்குள்ளே வராதே' ரேஞ்சில்தான் பயம் காட்டுவாங்க. அம்புட்டு 'மனித நேயம் மிக்க நல்லவரு, வல்லவரு, நாலும் தெரிஞ்'சவரு' அவரு.
அவர் அம்புட்டு வைராக்கியமா ஒரு கூட்டத்தை இந்த ஒலகத்திலேயே இருக்கப்டாதுன்னு தொரத்தித் தொரத்தி அடிச்சிருக்காருன்னா அவரு ஏதோ ஒருகாலக் கட்டத்துல அந்த ஜியானிஸ்ட் என அழைக்கப்படும் கூட்டத்தால் பாதிக்கப்பட்டிருக்கணும், சொந்தக் குடும்ப அளவிலோ, அல்லது, சித்தாந்த ரீதியாய் தான் வாழ்ந்த சமூகம் சார்ந்த சரீர, சாரீர, உளவியல் இன்ன பிற பாதிப்புக்களுக்குள் ஒருவர் ஆழ்த்தப்பட்டிருந்தால் மட்டுமே ஹிட்லர் மாதிரியான ஒருவருக்கு அப்படி ஒரு வன்மம் இரத்தத்தில் ஊறியதோடு மட்டுமல்ல, அவர் 'ம்' எனச் சொன்னால் தலையாய தண்ணி குடிச்சு அவரோட ஆசைய, அன்புக் கட்டளைய 'தல சொல்லிட்டாப்ல, செய்ஞ்சிடுவோம், தலையோட கட்டளையே சாசனம்' என நம்ம பாகுபலி ரேஞ்ஜில் சிரமேற்று நிறைவேற்றி இருக்க மாட்டார்கள், அவரது இராணுவமும் இதர அவரது அபிமானக் கூட்டமும்.
சரி, அம்புட்டு கெட்டவங்களான அந்த யூதர்கள் எவ்ளோதான் 'ஓடினார், ஓடினார், வாழக்கையின் எல்லைக்கே ஓடினார் என அந்த பப்புவா நியூ கினியா 'தன்னைத்தான் இழுக்கும் ஆகர்ஷண சக்தி இருக்கும் எல்லை வரை ஓடினார்' இல்லையா?
யூதர்கள் எப்படியோ ஒருங்கிணைந்து பின்னாளில் தமக்கென ஒரே ஒரு தக்கினியூண்டு கிராமத்தை, நகரத்தை, சரி சரி, அடிக்க வரப்டாது, ஒரு நாட்டை நிர்மாணித்து தமது பரிபூரண உழைப்பு, விடாமுயற்சி, போர்க்குணம், இன்ன பிற சித்தாந்தமோ விஞ்ஞானமோ மெய்ஞ்ஞானமோ ஏதொ ஒரு ஆத்ம பலம், அதைக் கொண்டு அவர்களுக்கே உரிய பிரத்தியேக ஆத்ம நிர்பர் குணாதிசயம் கைக்கொண்டு இன்று உலகளவில் ஒரு முக்கிய உந்து சக்தி, தவிர்க்க முடியாத சக்தி, உலகின் முதல் போலீஸ்கார் அங்கிட்டு தலைமைப் பொறுப்பில் யார் அமர்ந்தாலும் இவர்களது கண்ணசைவும் ஆதரவும் இல்லையேல் அந்த தலைமைப் போலீஸ்கார் ஒரு துக்கிணியூண்டு தும்மல் கூடப் போட முடியாது என்கிற அளவு ஆளுமையுடன் நிற்கின்றனர்.
அப்படிப்பட்ட யூதர்களை பரம ஜென்ம விரோதிகளாய் பார்க்கிறார்கள் அராபியர்கள். ஓரளவு அகண்ட காலிஃபேட் எனும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை உலகெங்கும் பரந்துபட்டு நிர்மாணிக்க நினைத்து ஒவ்வொரு நூற்றாண்டிலும் ஆங்காங்கே தன் ஆதரவாளர் எனும் அல்லக்கைக் கூட்டத்தை வளர்த்துக் கொண்டு அந்த காலிஃபேட் நிர்மாணிப்பதே தமது சித்தாந்தத்தின் ஆகப் பெரிய சாதனை என இன்றளவில் உழைக்கும் கூட்டம் துருக்கியர்கள் என்போரின் தலைமையில் இருக்கிறது. இதுவொன்றும் சிதம்பர இரகசியமல்ல. அதற்கு வஹாபியர் கூட நெஞ்சார்ந்த ஆதரவும் நடைமுறை யதார்த்தத்தில் பொருளாதரம், நிதி, கருத்தியல் ரீதியிலான ஆதரவும் வஹாபியர்களிடமிருந்து துருக்கியருக்கு உண்டு என்பதும் உள்ளங்கை வெள்ளிடை மலை.
அந்த அராபியர் கூட்டத்தில் வஹாபியர் விரோதி எனப் பாவிக்கும் இன்னொரு கூட்டம் ஷியா பிரிவினர். ஷியா பிரிவினருக்கு மேற்சொன்ன யூதர்களும் எதிரி/விரோதி.
இதில் சம்பந்தமே இல்லாத ஆசியர் கூட்டம் அதில் சீனா, கொரியா, இந்தியா, ஜப்பான் வருகிறது.
மலேசியா, இந்தோனேஷியா இதெல்லாம் வஹாபியர் வழியில் (தேவைப்பட்டால் துருக்கியர் வழியில்) செல்லக்கூடும். சித்தாந்தம் இணைக்கிறது.
வியட்னாம், பிலிப்பைன்ஸ் இதெல்லாம் கம்யூனிஸம் அல்லது வாடிகன் சொல்லும் வழியில் போகும்.
மேலே சொல்லாத கூட்டத்தில் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஓரணியில் அதாவது வாடிகன் சொல்லும் கிறிஸ்தவ அடிப்படைவாத நேட்டோ எனும் ரூபத்தில் வருமோ? இதர ஐரோப்பியர்கள் தேசங்களில் பெருவாரி நேட்டோ, சிறுவாரி ரஷ்ய ஆதரவில், இன்னும் சிறுவாரி வஹாபிய ஆதரவை நோக்கி இன்றைய 21ம் நூற்றாண்டு இட்டுச் செல்கிறது.
பிரிட்டிஷ், போர்ச்சுகல், ஃப்ரெஞ்ச், அதன் முன் முகலாய ஆதிக்கம் இதில் ஓரளவு பண்டைய மங்கோலிய மற்றும் ஆப்கானிய வழி ஆதிக்கமும் இந்த இந்திய மண்ணில் வேரூன்றியதால் சுமார் 800 வருட ஆக்கிரமிப்பின் வழி, அதன் பெயரில் ' நாடு பிடிக்கும் ஆசை அதில் மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை, பொருளாசை இன்னும் என்னென்ன ஆசைகள் இருக்க முடியுமோ அம்புட்டும் தலைக்கொண்டு' இந்த மண்ணில் 800 ஆண்டுகளாய் களமாடி இருக்கிறார்கள்.
மற்ற எல்லா சித்தாந்தங்களிலும் இருந்த இந்த நாடு பிடிக்கும் ஆசை பாரத மண்ணில் இருந்த மன்னர் பரம்பரைக்கும் இருந்திருக்கிறது. வடக்கிலிருந்து தெற்கெ வந்தோர், தெற்கிலிருந்து வடக்கு அல்லது கிழக்கு நோக்கிச் சென்றோர் என அவர்களின் அடிச்சுவடுகள் தஞ்சை, மதுரை, காஞ்சி, வியட்னாம், தாய்லாந்து, மலேசியா எனப் பலவாறு பார்க்கிறோம். திரித்துச் சொல்லப்பட்டதோ, மெய்யாகவே நடந்ததோ, வரலாறு நமக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் மேலே.
இந்தப் பின்னணியில் முதல் பத்தியில் சொன்ன ஹிட்லர் நல்லவரா? யூதர்கள் நல்லவர்களா? காலிஃபேட் எனும் பேராசையில் திளைப்போர் நல்லவர்களா? அம்புட்டுப் பேரும் நல்லவிங்கன்னு மட்டும் சொல்லிப்புடாதீய, அப்புறம் அம்பேரிக்காவிலும் ப்ரான்ஸிலும் ஜெர்மனியிலும் கொரியாவிலும், சீனாவிலும் ஆயுத ஃபேக்டரிகள் அம்புட்டும் ஊத்தி மூடிட்டுப் போயிட வேண்டி இருக்கும். அந்தப் பேராசையில் எண்ணெய் ஊற்றி நெருப்பு வளர்க்க அவ்வப்போது தேவைப்படும் க்ரூட் ஆயில் எனும் அத்தியாவசிய எண்ணெயும் வேண்டியிருக்கு. அந்த நெருப்பை அணைந்துவிடாமல் அணையா விளக்காய் காக்கவே ஒரு தனிக் கூட்டம் இருக்கு, அவிகளுக்கு கஸ்டோடியன்னு ஒரு டைட்டில் வேற.
மேற்சொன்ன அம்புட்டு கூட்டமும் மனிதக் கூட்டத்தை ஏதோ ஒரு ரூபத்தில் ஆளுமைப்படுத்த நினைக்கிறது. ஒருவருக்கொருவர் நட்பு, விரோதம், துரோகம், குரோதம், நண்பனுக்கு எதிரி நண்பன், எதிரிக்கு எதிரி நண்பன் என பற்பல (வி)யூகங்களில் அவரவர் சித்தாந்தம், அடிப்படைவாதம், மதவாதம், மதத் தீவிரவாதம், இவற்றை அவரவருக்கு உரிய சதவிகிதப்படி 10,20,30, 40 என அவுன்ஸ் அவுன்ஸா கலந்து எங்கோ ஏதோ ஒரு ஏஸி ரூம்லயோ ஆடம்பர ஐந்து நட்சத்திர விடுதியிலோ பண்ணை வீட்டிலோ பரந்து விரிந்த கடலோர விஸ்ராந்தி வெட்டவெளியிலோ அமர்ந்து 'அடுத்து என்னென்ன ஆட்டையப் போடலாம்' என ஆலோசனைகள் எப்போதும் நடந்து கொண்டேதான் இருக்கு. ஊடால, வர்த்தக உலகம்னு ஒண்ணு இருக்கு. அது ஒரு தனி அசுரத் தாலாட்டு எப்பவுமே 24 மணி நேரம், 12 மாதங்கள், 52 வாரங்கள் 365 நாட்கள், கலியுகம் முடியும் வரை இந்த வர்த்தக உலகம் செய்யும் சேட்டை ஓயாது.
இதில் ஏமாளியாய் நோஞ்சானாய் ஒரு ஐக்கிய நாடுகள் சபை, உலக வர்த்தக சபை, உலக சுகாதார சபை. எல்லாம் சரியா நடக்குதான்னு வேவு பார்க்க ஒரு நீதி பரிபாலன சபை. இவை அம்புட்டுக்கும் நிதியாதாரம் வேணுமே, அம்புட்டு பேருக்கும் பசிக்குமே, அதுக்கு கரன்சி தீனி போடும் ஒரு 'ரகசிய சபை' என இந்த உலகம் என்னவோ ஓடிக்கிட்டுத்தான் இருக்கு.
இதில் நல்லவர் யார்? கெட்டவர் யார்? வல்லான் யார்? நொள்ளான் யார்? இவர்களுக்கிடையே சகுனி வேலை பார்க்கும் கயவர்கள் யார்? இதைத் தேடிப் போனால் எங்கே செல்வோம்?
கூட்டிக் கழிச்சுப் பார்த்தால் மெய்ப்பொருள் தேடும் ஆன்மீக ரூட் வேற. அது உள்ளே தேடுன்னு சொல்லிண்டே உலகம் முழுவதும் கடை பரப்பி (வர்த்தகத்தில் இது கிளை மட்டும்) உள்ளே தேடும் குயுக்தி என்ன என்று வெளியே அம்புட்டுப் பேரையும் தொரத்துது, இந்தத் தொரத்தலில் சிக்காத 'கழுவுற மீனில் நழுவுற மீனாய்' நடுத்தர வர்க்கப் பாமரன்கள்.
விழுகுற மீன் நோக்கா நேக்கா என நேக்காப் பறிக்க படித்த, படிக்காத, படித்தும் பாமரனாய், படிக்காத மேதைகளாய் எவ்வளவோ பேர் அந்த ஒற்றை மீனுக்காய் ஓடுகிறான், ஓடுகிறான். அந்த ஓட்டத்தில் திமிங்கலங்களும், சுறாக்களும், கழுகுகளும், வல்லூறுகளும், ஆந்தைகளும், நரிகளும் காத்திருக்கின்றன அந்த உலகளாவிய 8 வழிப் பாதையில். சிக்கினவன் சீமானாய் வாழ்வானா, செம்மறியாட்டுக் கூட்டமாய் சிதறிப் போவானா?
அம்புட்டும் இங்கே உள்ளங்கையில் கூகுளாண்டவர் காட்டுகிறார். அவர் சரியா காட்டலேன்னா இருக்கவே இருக்கு, நவீன விஞ்ஞானம் காட்டும் செயற்கை புத்திசாலித்தனமும் (Artificial Intelligence) எந்திரகதி மெய்ஞ்ஞானம் வளர்க்கும் எந்திரக் கல்வியும் (Machine Learning). இவை ஆக்க சக்தியா அழிவுச் சக்தியா, காலம் சொல்லும்.
இதற்கிடையில் 'என்னவோ நடக்குது, மர்மமாய் இருக்குது, ஒரு எளவும் புரியலைன்னு நம்மில் பலர் அறுதிப் பெரும்பான்மையில் இருக்கிறோம் (2/3வது கூட்டம்). எவன் செத்தால் என்ன, எனக்குத் தேவை 3 வேளை உண்டக்கட்டி (basic fundamental survival material) எனும் ஒரு பெருங்கூட்டமும் இதில் உண்டு.
ஆனாக்கூடி எது நடந்ததோ அது நன்றாக நடக்கிறதா இல்லையா, கண்ணன் காட்டிய நீதியின்படி, இனி நடக்க இருப்பது நல்லதா அல்லதா என்பது புரியாமல் நம்மில் பலரும் இந்த நேர்கோட்டில் இணைவோமோ?
அதாவது 'காலை மதியம் மாலை தினசரி மூன்று வேளை 108 அல்லது 1008 இறை நாமம், 30 நாட்கள், 52 வாரங்கள், 12 மாதங்கள், அப்படியே போடு ரிப்பீட்டு, கடை நாள் வரும்வரை, ரிப்பீட் மோட்லயே போ............... !! வேற எதையும் யோசிக்கப்டாதுன்னு நமக்கு நாமே ஒருங்கிணைவோம் வா ரூட்ல போவோமா ஊர்கோலம்?
இது கூட இறை நம்பிக்கை இருப்போருக்குத்தான். இல்லாதோர்க்கு அடப் போங்கையாதான்.

No comments:

Post a Comment