Sunday, October 25, 2020

இராமாயணம் சில கேள்விகள்

 Question raised to Ramachandran Krishnamoorthy

ஆர் கே. உடல் நலம் தேறியபின் நிதானமாக இதை ஆராய்ந்து உங்கள் கருத்தை தெரிவிக்கவும்.
குருக்ஷேத்திர யுத்தம் முடிந்து, பாண்டவர்கள் சில காலம் ஆட்சிசெய்து பிறகு அவர்கள் வானகம் ஏகியபின் துவாரகையும் சகுனியின் வாரிசுகளால் தாக்கப்பட்டு பகவான் க்ருஷ்ணரும் பலராமரும் அவரவர் அவதார மகிமை முடிந்ததன் அடையாளமாய் சென்று மறைந்தபின் துவாபரயுகம் முடிந்தது, அதர்மத்தின் சாயல் படப்பட கலியுகம் பிறந்தது, இதுவரை தெரிந்ததே.
நடப்புக் கலியுகம் 28வது கலியுகம் எனச் சொல்லப்படுகிறது, நமது பூஜா க்ரம சங்கல்ப மந்திரங்களில் வருவது போல் அப்படித்தான் அர்த்தம் வருகிறது.
//மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் சுபாப்யாம்
சுபே சோபனே முஹூர்த்தே ஆத்ய ப்ரஹ்மண: த்விதீயபரார்த்தே, ச்வேதவராஹ கல்பே, வைவஸ்வத மன்வந்தரே, அஷ்டாவிம்சதிதமே, கலி யுகே, ப்ரதமே பாதே, ஜம்பூ த்வீபே, பாரத வர்ஷே, பரத கண்டே, மேரோர்ரூ தக்ஷிணே பார்ச்வே, சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யாவஹாரிகே, ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே,//
அப்படியெனில் அதற்கு முன் வந்த 27 கலியுகம் எனும்போது 27 சதுர்யுகங்கள் கடந்து போயுள்ளன. இந்த 27 என்பது ப்ரும்மாவின் சிருஷ்டி காரணம், அந்தக் காலம் தொட்டே என புரிந்து கொள்ள வேண்டும்.
வேறொரு இடத்தில் எங்கோ படித்தது இதனோடு பொருந்துகிறது. நாம் இன்று படிக்கும் இராமாயணம் எனும் இதிகாசமே ஒரே ஒரு இராமாயணம் அல்ல, இப் புவியின் பற்பல பிராந்தியங்களில் ஒவ்வொரு இராமகாதைகள் உண்டு, அதில் சிலவற்றில் இராவணன் நாயகனாகவும் இராமன் அனேகமாய் வில்லனாகவும் இருந்திருக்கும் சாத்தியம் உண்டு. நாம் இன்று பாராயணம் அனுக்ரஹிக்கும், அனுஷ்டிக்கும் வால்மீகி முதலான இராமாயணம், 27வது இராமாயணத்தின் மிகுதியா? அல்லது இதைப் புரிந்துகொள்ள வேறு காலதேச வர்த்தமானம் உண்டா ? ஒரு புரிதலுக்காகத்தான் இக்கேள்வி எழுகிறது. இதிகாசங்களை பழிக்கவோ குறைகூறவோ அல்ல என்பது உங்களுக்குப் புரியும்.
நேரம் கிட்டும்போது மேற்சொன்ன இரு தகவல்கள் (சந்தேகம்) குறித்து உங்கள் கருத்தை பகிரலாம்.

கூடுதல் தகவல். இந்திய அயோத்தியா போல தாய்லாந்தில் ஒரு அயோத்தியா உண்டு. இந்தோனேஷியா பாலியில் ஒருவித இராமாயணம் இன்றும் ஆலயங்களில், வீடுகளில் தினசரி அனுஷ்டிக்கப்படுகிறது. ஏறக்குறைய இராமகாதை, இராவண வதம் அனைத்தும் இந்தியக் காதை போல் ஒற்றுமையாய் இருக்கும்.
தாய்லாந்தில் இன்றும் நேஷனல் எக்ஸ்பிரஸ்வெ, பாங்காக் நகரில் முக்கிய வீதிகள் இராமா 1, இராமா 2, என இருக்கு. நான் நேரில் கண்டுள்ளேன். தெருக்கள் வீதிகள் பெயர்களில் ராமன், சீதா, லக்ஷ்மன் பெயர்கள் உண்டு.
வேறு கோணத்தில் யோசித்தால் இது புரியும். அதாவது இன்று நாம் இலங்கை என நினைத்துக் கொண்டிருக்கும் இலங்கை உண்மையான இராமாயண கால முழு இலங்கை அல்ல. ஒருங்கிணைந்த ஆப்பிரிக்கா, இந்திய, ஆஸ்திரேலியத் துணைக் கண்டம் அதன் ஷேப் (மேப் வடிவம்) இன்று இருப்பதுபோல் அன்று இல்லை.
அகண்ட பாரதம் என பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மங்கோலியா, சீனாவின் சில பகுதி, திபெத், நேபாளம், பங்களாதேஷ், பர்மா (மியான்மர்), தாய்லாந்து , மலேசியா, இன்றைய சிங்கப்பூர் அன்றைய மலாயாவின் ஒரு துணுக்கு (அதாவது சென்னையில் ஒரு துணுக்கு அயோத்தியாக்குப்பம் என்பது போல்), தாய்லாந்து, இந்தோனேஷியா இதெல்லாம் ஒன்றுபட்ட இராமராஜ்யத்தின் ஒரு அங்கம் என்றால் நம்புவீர்களா? இதைப் பற்றி முன்பு எப்போதோ எழுதியிருக்கிறேன். தேடித் தருகிறேன்.
சுந்தர காண்டம், பட்டாபிஷேக சர்க்கம் (யுத்த காண்டத்தில் 131வது சர்க்கம்) படிக்கும்போது அதிலுள்ள வர்ணனைகள், இராம பட்டாபிஷேகத்திற்கு அனைத்து சமுத்திரங்களிலிருந்தும், நீர் நிலைகள், புண்ய நதிகளிலிருந்தும் அபிஷேகத்திற்கு தீர்த்தம் கொண்டு வர வசிஷ்டர் வானரர்களுக்கு பணிக்கிறார். அவர்கள் வானரதிகள் (அனுமன், அங்கதன் உள்பட) ஜிங்னு போயிட்டு ஜங்னு குடம் குடமாய் அபிஷேக ஜலம் எட்டுத்திக்கிலிருந்தும் கொண்டு வருகின்றனர். அது இந்துமாக் கடல், அரபிக் கடல், வங்கக் கடல் என இன்று அறியப்படும் கடல், தூரத்தில் உள்ள பசிபிக் (கிழக்கு, மேற்கு இருமருங்கிலும்), ஆர்ட்டிக், அன்டார்டிகா என அனைத்து சமுத்திர தீர்த்தங்களும் வருகின்றன, குறுகிய காலத்தில் கொணரப்படுகின்றன.
பட்டாபிஷேக நாளில் இதெல்லாம் நடக்கிறது. இதைப் பற்றிய வால்மீகியின் வர்ணனை கம்ப ராமாயணத்தில் எப்படியோ தெரியாது, சுந்தர காண்டத்தில் நாம் படிப்பது ஒரு துளியே. நீளம் கருதி சுருக்கி நமக்குச் சொல்லப்பட்டது. வானராதிகளின் சக்தி, திவ்ய ரூபம் பற்றிய வர்ணனைகளை அறிய அது உதவும்

நான் சொல்ல வந்த பாயின்ட் என்னென்னா, இமாலய த்வீபத்தில் அகண்ட பாரதம் இருந்தால் எப்படியோ அப்படி தென் இந்தியாவில் தனுஷ்கோடி என்பது சுமார் 55 வருடம் முன்பு கடலுக்குள் சென்றது. பூம்புகார், தரங்கம்பாடி பகுதியில் ஓரளவு மூழ்கியது. அந்த முழுகிய தென் பகுதி லெமூரிய கண்டம். அதில்தான் வரலாற்று ரீதியாக வரும் சிவ தாண்டவம் நடந்த மதுரை. இன்று நாம் காணும் அறியும் உங்கள் பிறந்த ஊர் மதுரை என்பது வடமதுரை. வட இந்தியாவில் மதுரா உண்டு, கிருஷ்ணர் வரலாறு தொடர்பில் வரும் அது வேறு. அன்றைய தென்மதுரையே முதலாம் தமிழ்ச் சங்கம் என அறியப்படும் தொல்காப்பியர் வரலாறில் வருவது.
அது கடலோடு மூழ்கிவிட்டது. அப்படி மூழ்கிய இந்தியப் பகுதி அதுவே ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா வரை இருபுறமும் நீண்டுபோகும். எத்தனையோ மில்லியன் ஆண்டுகள் முன்பு கடலுக்கடியில் நிகழ்ந்த டெக்ட்டோனிக் ப்ளேட்டுகளின் (பூகம்பம் போன்ற) உரசல்களின் விளைவால் அன்றைய ஒருங்கிணைந்த இந்துமாக் கடற்பகுதி பிரிந்து இன்று தனித்தனியே ஆப்பிரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா என அறியப்படுகிறது. இது வரலாற்று ரீதியாக தொல்லியல் உண்மை. இதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.

 மலேசியத் தலை நகர் கோலாலம்பூர் தெற்கில் உள்ளது. வடக்கில் உள்ள நகரம் பினாங்கு. அங்கிருந்து சிறு கப்பல் அல்லது பெரிய வகைப் படகு எனப்படும் ஃபெர்ரியில் செல்லும் சுமார் ஒன்று அல்லது இரண்டு மணி நேர தூரத்தில் லங்க்காவி எனும் தீவு உண்டு. இந்த லங்க்காவிக்கும் இன்றைய இலங்கை என அறியப்படும் தீவான நாட்டிற்கும் தொடர்பு இருக்க வேண்டும். காரணம், மேற்சொன்ன ஒருங்கிணைந்த இராமராஜ்யத்தில் டெக்ட்டோனிக் தகடுகளின் உராய்வு நிகழ்ந்து 3 கண்டங்களாக பிரியும் முன்ன்ர் இருந்த இந்து மகா சமுத்திரம் அடங்கிய இராஜ்ஜியம். 

அப்படிப்பட்ட ஒருங்கிணைந்த இராமராஜ்யம் திரைகடலோடி வானராதிகள் அனைத்து சமுத்திரம், மற்றும், கங்கை, யமுனை, ப்ரும்மபுத்ரா, சரஸ்வதி, நர்மதா, மகா நதி, கோதவரி க்ருஷ்ணா காவிரி, தென்பெண்ணை, தாமிரபரணி வைகை என ஜலமெடுத்து வந்தார்கள் எனில், அனைத்து சிற்றரசர்களும் சக்ரவர்த்தி இராமபிரான் ஆண்ட அயோத்தியை தலை நகராய்க் கொண்ட இராஜ்யம் என்பதுதானே பொருள்?
இன்றைய ருஷ்யா அக்காலத்தில் சிவன் தொடர்பான சில காதைகள் உண்டு. அதேபோல் ஒவ்வொரு உலகப் பிராந்தியத்திலும் சனாதனி வைதீக மதத்தின் ஆட்சி இருந்தது, அதன் மூலக் கூறுகள் ஒவ்வொரு இடத்திலும் இருந்ததற்கான சான்றுகள் இன்றைய ருஷ்யா, துருக்கி, பெர்ஷியா, யஸீதி இனம், கலிஃபோர்னியா என இன்று நாம் அறியும் கபிலாரண்யம் என நம் சனாதனிவேர் பரவலானது. அது ஒரு பெருங்கடல், புரிந்து கொள்ள ஒரு பிறவி சாத்தியமில்லை.
திதி வார நக்ஷத்திரம், வாரம், சூலை, ஹோரை, மாதம், வருடம், 60 வருட சுற்று, பற்பல சுற்றுக்கள் அடங்கிய ஒரு கல்பம், பல கல்பங்கள் அடங்கிய சதுர்யுகம், பல சதுர்யுகஙக்ள் அடங்கிய ப்ரும்மாவின் ஒரு நால் (அதில் பாதி நாள் என அறியப்படும் தக்ஷிணாயனம், உத்தரயானம்) இதெல்லாம் பெரும் கடல்.
அப்படி சுற்றிச் சுற்றி பல யுகங்கள் வரும். தற்போது நடப்பது 28 வது கலியுகம் என்பது மட்டும் புரியலாம். அதனால்தான் நாம் இருக்கும் பூமி, அதில் நாம் இருக்கும் திசை, நாடு, தீபகற்பம், பிராந்தியம், இன்ன நதி அது இது என பூஜா சங்க்ல்பம், தர்ப்பண மந்திரம் அதில் சங்கல்பம் என வருகிறது. அதாவது அப்பேற்பட்ட பெரிய ஒரு பூகோள அமைப்பில் நாம் ஒவ்வொருவரும் ஒரு துளி என்பது புரியும்.

இன்றைய விமானம், கப்பல் வழி பயணங்களில் கிழக்கிலிருந்து மேற்கோ, வடக்கிலிருந்து தெற்கோ சென்று வர எவ்வளவு நேரம் பிடிக்கிறது? அமெரிக்காவின் ஒரு முனைக்கு மேற்கு மார்க்கமாய் போனால் ஒரு நேரம், கிழக்கு மார்க்கமாய் போனால் ஒரு நேரம் பிடிக்கும் (கால நேர வர்த்தமானம்) சுமார் 24 மணி நேரம் ஆகும் சென்னையிலிருந்து அமெரிக்காவின் ஏதோ ஒரு முனைக்கு இரு ரூட்டிலும் போய்வர. சென்னையிலிருந்து ஆஸ்திரேலியா நியூஜிலாந்து போக 17 மணி நேரம் ஆகும்.
வானராதிகள் ஒரே நாளில் பட்டாபிஷேக தீர்த்தம் கொண்டு வர ஜிங்குன்னு போயிட்டு ஜங்குன்னு வந்தாகன்னு சொன்னா இன்றைய குழந்தைகள் கேலி செய்யும். ஆனால், வானராதிகளின் சக்தி அப்படி. அப்போது அனுமனின் சக்தி? யோசிக்க வேண்டியது இருக்குல்ல? நூறு யோஜனை கடந்து ஒரே நாளில் காலையில் புறப்பட்டு மாலை அந்தி சாய்வதற்குள் இலங்கை சென்றடைந்தது சுந்தர காண்டத்தில் வருது. அதை 15 நிமிடத்தில் கதையாக நாம் படிக்கிறோம். அனுமனின் பராக்கிரமம் அப்படி என்பதற்காக சொல்வது.
இராமேஸ்வரம் அல்லது மண்டபத்திலிருந்து யாழ்ப்பாணத்தின் ஒருமுனை 18 கிமீ என சொல்லப்படுகிறது. நூறு யோஜனை என்பது கி.மீ. அல்லது மைல் கணக்கில் கன்வர்ட் பண்ணினால் எவ்வளவு என்பது தேடிப் படித்தால் புரியும். அதுவே ஒரு பிரயத்தனம் எனச் சொல்லப்படுகிறது. அனுமன், அங்கதன் உள்ளிட்ட வானராதிகள் அப்படி வானுலகில் அஞ்சாரம் செய்தவர்களாக சொல்லப்படுகிறது.

கூடுதல் கேள்வி வருகிறது. அதாவது நடப்பது 28வது கலியுகம் எனில் (அஷ்டாவிம்சதி தமே) இதற்கு முன் வந்த 27 சதிகளில் இதுபோன்ற இதிகாசங்கள் புராணகாதைகள் உண்டு என நம்ப சாத்தியக்கூறுகள் உண்டு. அவற்றைப் பற்றியெல்லாம் வரலாற்றுக் குறிப்புகள் எந்தப் புராணத்தில் நாம் எடுத்துப் படித்து
அறியலாம்?
இருக்குறதை மொதல்ல படிய்யா, மத்ததெல்லாம் அப்பாலிக்கா வெச்சுக்கலாம்னு கலாய்க்கப்டாது.

சில மெய்யான படித்த அறிஞர்களிடம் இதைக் கேட்டால் 'தம்பி இத பாருங்கோ, இதிகாச புராணங்களில் சொன்னதை பெரியவா நமக்குச் சொன்னதை அப்படியே கேட்டுண்டு போயிடணும், ரொம்ப ஆராயப்டாது, அது அனர்த்தம், தர்க்கத்தில் போய் முடியும் தெரியுமோன்னோ என்று நம்மை வாயடைத்துச் செல்வதும் உண்டு.

ஒரு பக்கம், யார் எதைச் சொன்னாலும் அப்படியே எடுத்துக்கப்டாது. ஒவ்வொண்ணுத்துக்கும் ஆயிரம் அர்த்தம் உண்டு. நமக்குரிய சிற்றறிவு வெச்சுண்டு குதர்க்கம் பேசப்டாது என்பார்கள். மறுபக்கம், கேள்வி கேட்டால் தான் விஷயத்தின் வீர்யம் புரியும், உண்மைகள் புரிபடும், தெளிவு வரும், ஞானம் விரிவாகும் என்பார்கள். அவர்களே முன்னுக்குப் பின் முரணாக வாதம் செய்வர் என்பது தனி ட்ராக்.

ஸ்ரீ கிருஷ்ணப்ரேமி ஸ்வாமிகளின் ரெண்டாவது மகன் உபன்யாஸகர் (ஆடிட்டரும் கூட) ஸ்ரீமதி விசாகா ஹரியின் மைத்துனர், ஸ்ரீ ரெங்கன் ஜி அவர்கள் ஆங்கிலத்தில் இராமாயணம் குறித்த 8 அல்லது 10 தொகுதிகள் கொண்ட ஆராய்ச்சிக் குறிப்புகள் வெளியிட்டுள்ளார். சில ஆண்டுகள் முன்பு அதை வாங்கி இல்லத்தில் வைத்திருந்தேன். முதல் பாகம் மட்டுமே படிக்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. படித்து உள்வாங்கிக் கொள்ளும் பக்குவம் அன்று இல்லை. ஒரு இக்கட்டான சூழலில், சிஙகப்பூரை விட்டு காலிசெய்து இந்தியா பிறகு அரேபியா, ஜோர்டான், இரானுக்கு உத்தியோக ரீதியாய் புலம் பெயர்ந்த காலம் (2011_14) அப்போது அந்த ஆங்கிலத் தொகுப்பை சிங்கப்பூர் பொது நூலகத்தில் சேர்ப்பித்து விட்டேன். அது இருந்தால் ஒரு வேளை என் கேள்விகளுக்கான விடை அதில் இருக்கலாமோ என்னவோ? அவர் ஆராய்ச்சி செய்தது வால்மீகி இராமாயணத்தின் மீதான ஒரு ஆராய்ச்சியாளரின் பார்வை. முழுவதும் ஆங்கிலத்தில் சென்னையில் அல்லது அவர்களது தலைமையகம் விழுப்புரம் பக்கம் எங்கேயோ இருக்கு, அங்கே கிடைக்கலாம்.

ப்ரும்மா என்பவரே ஒருவர் மட்டுமல்ல, பற்பல சதுர் யுகங்கள் கடந்து ஒரு ப்ரும்மாவின் ஆயுட்காலம் முடியும். பிறகு ச்ருஷ்டியின் வினோதம் அடுத்தடுத்து ப்ரும்மாக்கள் வருவர் என்பது ஒரு வித புரிதல், இதுவும் எங்கேயோ படித்ததே.

அந்தப் பின்னணியில் நாம் அறியும் (வரலாறு பள்ளிப் பாடத்தில் ஓரளவு) சொல்லித் தரப்பட்ட காதைகளில் வரும் தொல்காப்பியர், அகத்தியர், ஔவையார் இவர்களெல்லாம் ஒருவரே அல்ல. ஒவ்வொரு யுக காலத்தில் ஒவ்வொரு அகத்தியர், ஔவையார் உண்டு என்பதுவும் உண்மை.

ஒரே ஒரு வால்மீகி இராமாயணம், அதையொட்டி அடுத்தடுத்து வந்த பல்வேறு இராமாயண காதைகள் (கம்பர் , துளசிதாசர், புரந்தரதாசர், கபீர்தாஸ் என) பல உண்டு. ஒரு இராமாயணத்தையே மறுதலித்து நாத்திகக் கும்பல் பலப்பலவாறு சிலாகித்து விமர்சனம் செய்கின்றனர். பற்பல இராமாயணங்கள் உண்டு எனில், என்னவெல்லாம் பேச்சுக்கள் வரும்?

மாதம் ஒருமுறை சுந்தர காண்டம் படிப்பது 5,6 வருஷமா ரெகுலர் ஆயிடுத்து. ஒவ்வொரு முறை படிக்கும்போதும் இப்படி எதாவது கேள்விகள் வரும், அவற்றை ஆவணப்படுத்துவதில்லை. அப்பப்ப வரும், மறந்துடுவேன். இந்த வாரம் இந்த வருஷத்தின் 10 வது தடவை படித்துக் கொண்டுள்ளேன். நாளை பட்டாபிஷேகம். அனுமனின் விசேஷ குணங்கள், அதுதான் சுந்தரகாண்டத்தின் அழகே, அற்புதமே. படிக்கப் படிக்க பிரமிப்பாய் இருக்கும். முன்பெல்லாம் கதை வடிவில் பாராயணம் செய்வது போய், என் நண்பர் ஸ்வாமினாதன் தயவில் ஸ்லோக வடிவ பாராயணம், 74 தடவை ஆயிடுத்து (74 மாதம்) 108 டோட்டல் டார்கெட். 75வது இந்த மாதத்தில் அவன் ஷெட்யூலில் வரும். அதற்கும் முன் என் தரப்பில் தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு நவராத்திரி 9 நாளும் படிப்பதுண்டு. அது இந்த வாரம். இந்தப் பின்னணியில் வரும் கேள்விகள், விளக்கம் தெரியா வினாக்கள் என ஆயுஸு கூடுது. இந்த ஜென்மாவில் இதற்கெல்லாம் விடை தெரியப்போறதில்லை என நினைக்கிறேன். முயற்சிப்போம்.
9 Comments
Like
Comment

No comments:

Post a Comment