ட்விட்டர்னா என்னா? பித்துக் குறிக்க வாரீயளா?
Twitter Twitter என்கிறார்களே, Twitter என்றால் என்ன?
What can you do in Twitter ?
Twitter-ல் எழுதுவதை ட்விட் என்று சொல்லுவதா? ட்வீட் என்று சொல்வதா? Is it to Twit or Tweet in Twitter?
Twitter-ல் எதை எழுதுவது? எதை எழுதக்கூடாது, ஏதாவது வரைமுறை அல்லது வரையறை உள்ளதா?
பொதுவாக இது மாதிரி வலைத்தளங்களைப் பயன்படுத்துவது எதையும் யாரையும் பற்றி அவதுறாகவோ ஆபாசமாகவோ, எதையாவது எழுதி விட்டு பின்னைர்
வீட்டுக்கு ஆட்டோகிராபுக்காக யாரும் வராவிட்டாலும் ஆட்டோ வராத வரை கண்ணியமாக நம் மனதில் பட்டதை எழுதலாம் என்று மேலெழுந்தவாரியாகத் தெரிகிறது.
எனக்கு இந்த மாதிரி Twitter, Facebook, LinkedIn, Orkut போன்ற வலைத்தளங்களைப் பயன்படுத்துவதில் சற்றே தயக்கம் மற்றும் முன்கருத்தாக்கம் (own perception) உண்டு (அது சரியா தவறா என்பது பிறகு). இது மாதிரி சமுக வலைத்தளங்களைப் பயன்படுத்துபவர்கள் சொல்வது, உலகளவில் சமுகத்தில் உள்ளவர்களிடம் தொடர்பு வைத்துக்கொள்ள இந்த வலைத்தளங்கள் உதவுவதாக கூறுவார்கள், அனால் எனக்கு ஒன்று புரியவில்லை. எனக்குத் தெரிந்தவரை சில பல பத்தாண்டுகளாகவே (பலர் சொல்லக்கூடும் இது பத்தாண்டிகளாக இல்லை, சில பல நூறாண்டுகள் என்றே சொல்லலாம் என்று). நடப்பு நடைமுறை துரிதகதி அல்லது எந்திரகதி வாழ்க்கை முறையில் (Fast-track as well as mechanical lifestyle) யாரும் தன வீட்டுக்குள்ளேயே அல்லது தனது அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களுடனேயே பேச்சு வார்த்தை மற்றும் தொடர்பு வைத்துக்கொள்வது இல்லை, அது உறவினராகட்டும் நண்பர்களாகட்டும். பிறகு எப்படி எங்கேயோ கண்காணாத தேசத்தில், ஊரில் உள்ளவரோடு தொடர்பு அல்லது அளவளாவுவது சாத்தியம்? கேட்டல் உலகம் உங்கள் கையில் உள்ளது, உலகம் ஒரு கிராமமாகச் சுருங்கி விட்டது என்கிறார்கள்.
கிராமங்களே கேட்பாரில்லாமல் போய்விட்டது, எல்லாம் நகரமயமாகி விட்டது. கிராமவாசியையோ கிராமத்திற்கே உரிய வாழ்க்கைமுறையையோ இப்பொழுது யாரும் சீண்டுவதாக அல்லது வழக்கத்தில் வைத்துள்ளதாகத் தெரியவில்லை. பக்கத்து வீட்டில் நடக்கும் நல்லது கெட்டது என்ன என்றே தெரியாமல்தான் இன்று பலபேர் வாழ்க்கை ஓடுகிறது. பக்கத்து வீட்டுக்காரன் செத்தால்கூட எட்டிபார்த்து ஒரு நாலு வார்த்தை ஆறுதலாகவும் பிரிவாகவும் பேச இன்றைய காலகட்டத்தில் மனிதனுக்கு நேரம் இல்லை. இதற்கு இந்தக் கட்டுரையாளனும் விதிவிலக்கில்லை.
எல்லோர் வாழ்க்கையும் காலையில் துவங்கி இரவு உறங்கும் வரை அப்படியாகி விட்டது. யாருக்கும் தன் குடும்பம், தன் தொழில் அல்லது உத்தியோகம்செலவிட, தன் முன்னேற்றம் இத்யாதிக்கு நேரம் செலவிடவே போதவில்லை. அண்டை வீட்டுக்காரன் அசலானகிவிட்டான், அசலான் நகலனாகும் வேளையில், சமூக வலைத்தலத்தின் மூலம் ஒருவன் எப்படி சுமுகமான தகவல் தொடர்பினை வைத்துக்கொள்வது? யோசிக்கவேண்டிய விஷயம்தான்.
சரி, Twitter-ல் ஒரு இடம் (ID) துண்டு நம் பெயரில் போடலாம் என்று முடிவு செய்து, என்ன பெயரில் போடலாம் - சொந்தப்பெயரிலா? இணை அல்லது துணைப் பெயரிலா? தமிழனுக்குதான் இணை துணை வைத்துக்கொள்வதில் ஒரு அலாதி சுகம் உண்டே? நம் பெயரில் போடலாம் என்று பெயர் கொடுத்தால் அதே பெயரில் வேறு யாரோ முன்னரே பதிவாக்கிவிட்டர்கள்.
சரி, Twitter-ல் என்ன மொழியில் எழுதலாம் - எல்லோருக்கும் உகந்த ஆங்கிலத்திலா? நமக்குத்தெரிந்த தாய் மொழியாம் செம்மொழியான தமிழிலா? இல்லை, தமிங்கிலத்திலா? சரி, பிரதானமாக தமிழிலும் ஆங்காங்கே தேவைக்கேற்றவாறு ஆங்கிலத்திலும் என்று வைத்துக்கொண்டாலும், எதைப் பற்றி எழுதுவது? பலரது ட்விட்டரில் கண்டவாறு : 'இன்று சீக்கிரமே எழுந்துவிட்டேன், இன்று அங்கே போனேன், அதைச் செய்தேன், இதைச் செய்தேன், அவரைப்பார்த்தேன், தூங்கினேன்' என்றெல்லாம் எழுதுவதில் என்ன சுவாரசியம் இருக்கிறது?
ஒரு வேளை இன்றைய கால கட்டத்தில் நடக்கும் நாட்டு நடப்புகளைப்பற்றி நமது கருத்தை, விமரிசனத்தை எழுதலாமா - மேதகு எழுத்தாளர் ஞாநி அவர்கள் பாணியில் ஒரு பாராட்டு (சொட்டு), குட்டு, திட்டு அல்லது செல்லமாக ஒரு தட்டு இப்படி எதை எழுதுவது? அடடா, இப்பவே கண்ணைக் கட்டுதே, சரி நமது வலை முன்னோர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்து அதை அடியொட்டியோ வேறு மாதிரியாகவோ எழுதுவது எந்த அளவுக்கு 'காப்பி' அடிக்காதவாறு நம் கருத்தை தகவல்தொகுப்பாக எழுதலாமா?
போதும்டா சாமி என்று சும்மா இருக்கலாமா? பின், இவ்வளவு தூரம் யோசித்தபின் இதையாவது கிறுக்கி வைத்தால், அதற்கு நம் நேயர்களின் விமரிசனம் என்னவாக இருக்கும்? எதையாவது எக்குத் தப்பாக எழுதி வைத்தால் விட்டுக்கு ஆட்டோவோ தள்ளுவண்டியோ அனுப்புவார்களோ?
இது வலைப்பூவில் ஒரு அரங்கேற்றம்தான், முன்னோட்டம்தான்.
இன்னும் வரும்.
நல்ல அரங்கேற்றம்தான். வாழ்த்துக்கள்.
ReplyDelete