Thursday, August 29, 2024
Divya Alan Froese Wedding 25 Aug 2024
எங்கள் ஒரே மகள் சௌபாக்யவதி திவ்யா ஆலன் ஃப்ரேஸ் திருமணம் 2024 ஆகஸ்டு 25ம் தேதி காலை 10_11 மணியளவில் கனடா, டொரோன்ட்டோவில் டொரோன்ட்டோ பொட்டானிக்கல் கார்டன் திறந்தவெளி அரங்கில் இனிதே நடந்தேறியது.
மாப்பிள்ளையின் தகப்பனார் (75+), ஆண் பிள்ளைகள் மூவர் (இவர் ரெண்டாவது மகன்), மூத்த சகோ + மனைவி, அவர்களது ஒரே மகன் (13), மூத்த சகோதரி, இளைய சகோதரர் அவரின் மனைவி ஆகியோர் மட்டுமே அவர்கள் தரப்பில். மற்றது எல்லாம் நண்பர்கள் மட்டும். மாமியார் இல்லை, காலமாகி பலகாலம் ஆச்சு.
24ம் தேதி மாலை மெஹந்தி/ஹென்னா எனும் வரவேற்பு நிகழ்வு, டின்னர். இந்திய/கனடிய வீகன் ஸ்டைல் உணவு. வெஜிட்டேரியன் (பால் பொருட்கள் சேர்க்காத) வீகன் வகை உணவு மட்டுமே. மாமிசம் வகையறா இல்லை. சுமார் 40 பேர் மகள்/மாப்பிள்ளையின் நண்பர்கள் (அலுவலக, முன்னாள் கல்லூரி மற்றும் கசின்கள்) வந்திருந்தனர். அவர்கள் அடுத்த நாள் முக்கிய திருமண நிகழ்விற்கும் வந்திருந்தனர்.
25ம் தேதி 10_11 காலை முக்கிய திருமண நிகழ்வு. மாப்பிள்ளை பூர்வீகம் நெதர்லாந்து, ஃபின்லாந்து பக்கம், முன்னோர்கள் ஏதோ ஒரு காலக் கட்டத்தில், இரண்டாம் உலகப்போர் சமீபமோ என்னவோ மெல்ல மெல்ல மைக்ரேட் ஆகி உக்ரைன் பக்கம் சென்று பிறகு கனடாவில் குடியேறிய வம்சாவளி. ஆர்த்தோடாக்ஸ் க்றிஸ்டியன், எந்தப் பிரிவு தெரியலை. மாப்பிள்ளை மட்டும் சுமார் 6_7 வருடங்களாக ஜீவ காருண்யம், பச்சை பூமி, வீகன் உணவு என ஒரு கட்டுப்பாட்டுடன் வாழ்பவர். என் மகளுக்கும் இது முன்பு சிங்கப்பூரில் இருந்த காலம் தொட்டே பரிச்சயம், ஒருவேளை அந்த குணாதிசயம்தான் இவர்களை எப்படியோ ஏதோ ஒரு ரூபத்தில் சேர்த்து வைத்ததோ என்னவோ? இருவருக்கும் சுமார் 2 ஆண்டு கால பழக்கம், நட்பு அது காதலாய் மலர்ந்து, திருமணம் எனும் பந்தத்தில் கொண்டு சேர்த்துள்ளது.
மகள் 2 வருடம் முன்பே கனடிய நிரந்தரவாசி (பெர்மனென்ட் ரெசிடென்ட்) ஆகி, இந்த வருடம் பிப்ரவரி/மார்ச்சில் குடியுரிமையும் கிடைத்துவிட்டது. ஏப்ரல் மாதம் குடியுரிமைக்கான அனைத்து சம்பிரதாயங்களையும் முடித்தாள். பாஸ்போர்ட் இந்த வாரத்தில் வரும் என்றாள், அதன் பின் இந்தியக் குடியுரிமை சரண்டர் செய்யணும்.
டொராண்ட்டோ பொட்டானிக்கல் கார்டன் எனும் தோட்டத்தில் திறந்தவெளி அரங்கில் திருமணம், உள்ளே ஒரு சிறிய ஹாலில் உணவு பரிமாறுதல் (பொஃபே) பெரும்பாலும் இந்திய, ஓரளவு இத்தாலிய வகை உணவு, பழரசம், தேனீர் மட்டுமே உணவின் மெனு.
தீபம் ஏற்றல் அந்த இடத்தில் தடை என்பதால் விளக்கு ஏற்றி வைக்க இயலவில்லை. நம் குத்து விளக்கு ஏற்றி சீரியல் லைட் அமைப்பில் சில பல்புகள் மட்டுமே எரிய விட்டது. 20 போல் மண் அகல் (கார்த்திகை தீபத்திற்கு வருமே அது), அதில் சிறிது நல்லெண்ணை ஊற்றி டேபிள்களில் நிஜப் பூக்களுடன் வைத்திருந்தனர். மாலை மாற்றலில் ரோஜாப்பூக்கள் நிஜம் அதில் தலா ஒரு சிறு மாலை மற்றும் ப்ளாஸ்டிக் மால,ை மாலை மாற்றலுக்கு. அஷ்ட்டே.
சாஸ்திரிகள், பாதிரியார் என ப்ரீஸ்ட் யாருமில்லை, மதச் சடங்கே இல்லை என்றால் மிகையல்ல.
இரு மதத் தார்மீக, சம்பிரதாயச் சடங்குகள் எதுவும் இல்லாத, ஃப்யூஷன் (Fusion wedding) என்பது போல் 45 நிமிட நிகழ்வு, பொதுவாய் எல்லோரையும் வரவேற்றல், மாலை மாற்றல், பரஸ்பரம் மோதிரம் அணிவித்தல், இந்து முறை தாலி கட்டுதல் (மாங்கல்ய தாரண மந்திரம் இசையாய் ஒலிக்க), தொடர்ந்து துளசிச் செடியின் முன் ஏழுமுறை சுற்றி சப்தபதி மந்திரத்தை நான் சொல்லித் தர, நிகழ்ச்சி நடத்துபவர் (ஆங்க்கர் (Anchor), மாப்பிள்ளையின் அண்ணி) ஆங்கில அர்த்தம் சொல்ல (ஆடியன்ஸுக்கு என்ன நடக்கிறது என்பதை அறிவிக்க) ஏழு முறை சுற்றியபின் 'இனி இவர்கள் தம்பதியர்' எனச் சபைக்கு அறிவிக்க லஞ்ச் தொடர்ந்தது. லஞ்ச்சின் ஊடே கேக் வெட்டி விழா இனிதே முடிந்தது. முடியும் தருவாயில், கனட அரசு சார்பில் அதிகாரி வந்து 'ஆவண முறைப்படி' இருவரும் கையொப்பம் இட்டு மாப்பிள்ளையின் தந்தை அவர் தரப்பிலும் என் மகன் எங்கள் தரப்பிலும் சாட்சி / விட்னெஸ் ஆக கையொப்பம் இட்டனர். அனைத்தும் நிறைவேறியது.
லஞ்ச் இதர ஃபோட்டோ எடுத்தல் இவைதான் சற்று கூடுதலாய் நேரம் எடுத்தது.
என் வாழ்வில் இதைப் போல ஒரு சிம்ப்பிள் திருமண நிகழ்வு முதன் முதலாய் பார்த்தேன்.
ஒரு பெற்றோராய் இதர விருந்தினர்களைப் போல நானும் மனைவியும் பிள்ளை, கசின்கள் ஒரு விருந்தாளிதான் அங்கு.
நிகழ்ச்சி திட்டமிடல், ஒருங்கிணைப்பு, அனைத்தும் மகள்/மாப்பிள்ளையின் ஏற்பாடு. எங்களுக்கு அங்கே இங்கே பெட்டி தூக்குதல், பொருட்களை இடம் பார்த்து வைத்து ஆவன் செய்து நிகழ்ச்சி நடக்க உதவுதல் மட்டுமே வேலை.
வரதட்சிணை, நகை நட்டு என 'ஊஹூம் ப்டாது'ன்னுட்டாள். தாயின் (என் இல்லாள்) ஆசைக்காக ஒரே ஒரு நெக்லஸோ செயினோ மட்டுமே பெற்றுக் கொண்டாள். திருமணச் செலவினம் உட்பட மகளின் சமர்த்து.
திவ்யாவின் கசின்கள் மூவர் ராஜேஷ், விக்னேஷ் மற்றும் ஆதித்யா மட்டுமே உறவினர் முறையில் ஆஜர்.
திவ்யாவின் நெருங்கிய தோழியர் இருவர் மதுரா விக்னேஷ் மற்றும் சாந்தினி ரோஷன் தம்பதியினர் தம் பெண் குழந்தை ஆன்யாவுடன் வந்திருந்தனர். மற்ற விருந்தினர்கள் பொது நண்பர்கள் மட்டுமே.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment