Sunday, March 4, 2012

சம்சாரம் அது மின்சாரம் !!

சம்சாரம் அது மின்சாரம் !!

இந்தத் தலைப்பைப்பற்றி யோசித்ததில் எனக்கு ஒரு வியப்பான எண்ணம் தோன்றியது.

மின்சாரம் இல்லையேல் சம்சாரம் இல்லை என்கிற அளவுக்கு இன்றைய சமூக, பொருளாதார சூழ்நிலை நம்மை ஆட்கொண்டுவிட்டது.

தற்கால சூழலையும் நமது பாட்டனார் அல்லது முப்பாட்டனார் காலத்தையும் சற்றே ஒப்பிட்டுப் பார்க்க விழைந்தேன்.

அக்காலத்தில் மின்சாரம் என்று ஒன்று இல்லை, எனவே பின் வரும் உபகரணங்கள், வசதிகள் இத்யாதி அந்தக்காலத்தில் இல்லவே இல்லை. இவை ஏதுமில்லாமலே அக் காலத்திலும் வாழ்க்கை சுமுகமாகத்தான் ஓடியது, சற்றே நினைத்துப்பாருங்கள், இந்த வசதிகள் அல்லது உபகரணங்கள் இல்லாமல் வாழும் வாழ்க்கையை (கூடவே இவற்றின் கடந்த கால மாற்று வசதிகள் அன்று கிட்டியவை குறிப்பிட்டுள்ளேன்).

1. ஒரு பேஸ் அல்லது மூன்று பேஸ் மின்சார வசதி, வீடுதோறும் (பெரிய மற்றும் சிறிய அகல் விளக்குகள், அரிக்கேன் விளக்குகள், சிம்னி
2. ஏர்கண்டிஷனர்கள்( நல்ல விஸ்தாரமான தாழ்வாரங்கள், கூடங்கள், மேற்கூரைகள், ஆங்காங்கே நல்ல காற்றோட்டம் தரும் ஜன்னல்கள் இத்யாதி)
3. மின்விசிறிகள் (காற்றாடிகள்), மிக்சர், கிரைண்டர்கள் (அம்மி, ஆட்டுக்கல்)
4. வை.பி. என்றழைக்கப்படும் கம்பியில்லா இன்டர்னெட் (இதற்கும் இன்று மின்சாரம் வேண்டும், அந்த மோடம் இயங்க!!) ‍[அந்தக்கால பயன்பாடு கிடையாது).
5. கம்பிவடத் தொலைபேசி (இந்தக்காலத்தில் லேன்ட் லைன் எனப்படும் இந்த தொலைபேசி இயங்க அக்காலத்தில் மின்வசதி அவசியப்படவில்லை. ஆனால் இன்றைய தொழில் நுட்பத்தில் 'கன்வர்ஜன்ஸ்' என்கிற பெயரில் மின்சார வசதி இருந்தால்தான் தொலைபேசவே முடியும், அது லேன்ட் லைனாக இருக்கட்டும், அல்லது அலைபேசியாக இருக்கட்டும் (அலைபேசி சார்ஜ் செய்ய மின்சாரம் தேவைப்படுகிறது).
6. இன்டர்னெட், தொலைக்காட்சி, பேஸ்புக், ட்விட்டர், மெயில் இத்யாதி தொலைத்தொடர்பு வசதிகள் இன்றைய நவீனங்கள். அன்று போஸ்ட் கார்ட், டெலிபோன், தந்தி, டெலக்ஸ் மூன்றும்தான்.
7. வீட்டில் இளம் தலைமுறையினர் வேறு ஊர், நகரம் அல்லது நாட்டில் பணிபுரிய நேர்ந்தால் பெற்றோருக்கும் குடும்பத்திற்கும் பணம் அனுப்ப இன்று வீட்டிலிருந்தபடியே இன்டர்னெட் மூலம் ஒரு நொடியில் குறுகிய காலத்தில் பணம் அனுப்பிவிட முடிகிறது. அன்று செக், டிராப்ட், மணி ஆர்டர் அல்லது தந்தி மணி ஆர்டர் (அவசரத் தேவைக்கு அனுப்ப) மற்றும் எம்.டி. என்றழைக்கப்பட்ட மணி ட்ரான்ஸ்பர் வசதிகள்தான் இருந்தன.



No comments:

Post a Comment