சம்சாரம்
அது மின்சாரம் !! (continued)
இப்படியே மனித
வாழ்க்கையின் ஒவ்வொரு அங்கத்திலும் நடவடிக்கையிலும் மின்சாரம் என்பது எப்படி ஒரு இன்றியமையாத
இடத்தை இன்று வகிக்கிறது? மின்சாரமில்லையேல் சம்சாரிகள் சம்சாரம் நடத்தவே முடியாது
என்கிற நிலைமை வந்துவிட்டது.
சென்னை மாதிரி
பெரு நகரங்களில் இன்று பல்வேறு அடுக்குமாடி வளாகங்கள் பெருகிவிட்டன. 20 அல்லது 30
ஆண்டுகளுக்கு முன் மவுண்ட் ரோட்டில் உள்ள எல்.ஐ.சி மட்டும்தான் முதன்முதலான அடுக்குமாடி
வளாகமாக இருந்தது. பெருகிவரும் அடுக்குமாடிக் கலாசாரத்தில் அத்தனை கட்டிடங்களுக்கும்
(ஆபீஸாக இருக்கட்டும், வீடுகளாகட்டும்) மின்சார வசதியில்லாமல் நீரேற்றும் வழியில்லை.
அதுபோல அடுக்குமாடிகளில்
மேலே செல்ல லிப்ட் பயன்பாட்டிற்கும் மின்வசதி ஒரு அடிப்படைத்தேவை. இன்றைய யுகத்தில்
ச்சும்மா நினைத்துப் பாருங்கள் சிறியவர் முதல் முதியவர் வரை அடுக்குமாடிகளில் வசிப்போர்
மின் வசதியில்லையேல் எப்படி தங்கள் அன்றாட அலுவல்களைக் கவனிக்க இயலும்?
ஏற்கெனெவே நம்
சென்னை மாதிரி நகரங்களில் 2 அல்லது 3 மணி நேர மின் தடையையே நம்மால் தாங்கமுடிய்வில்லை.
நாளுக்கு நாள் சென்னைப் பெரு நகர வளர்ச்சிக் குழுமம் பற்பல தொழிற்பேட்டைகளுக்கும்,
அடுக்குமாடி வளாகங்களுக்கும் அனுமதி வழங்கி வருகிறது. கூடவே சென்னை மாநகர் விரிவாக்கத்தில்
கிட்டத்தட்ட 50 60 கி.மீ. க்கு அப்பால் கூட சென்னையின் விஸ்தீரணம் போகும் போலுள்ளது.
ஓர் ஊரிலிருந்து
மற்றோர் ஊருக்கோ கிராமத்திலிருந்து நகரங்களுக்கோ சென்னை மாதிரி மாநகரங்களில் மக்கள்
பயணம் மேற்கொள்ள பேருந்து அல்லது இரயில் பயணம் செய்யவும் மின்வசதி அத்தியாவசியமாகிறது.
மெட்ரோ ரயில், மோனோ ரயில் இத்யாதி வசதிகளுக்கும் தடையில்லா மின்சாரம் தேவை.
இவை எல்லாவற்றிலும்,
நாம் வாழ்வது ஒரு உஷ்ணமான பிரதேசம். ஆண்டுக்கு ஆண்டு சூரியனின் கிரணங்கள் வெளிப்படுத்தும்
சூட்டையும் உஷ்ணத்தையும் நாம் தாங்கிக்கொள்ளவும் ஏ.சி. மாதிரியான குளிர் சாதன வசதிகள்
வீடு, அலுவலகம், பேருந்து, இரயில், என்று அங்கிங்கெணாதபடி எங்கும் மின்சாரமில்லையேல்
வாழ்க்கையில்லை என்றாகிவிட்டது.
அத்தனை வீடுகளுக்கும்
அலுவலகங்களுக்கும் தடையில்லா மின்சாரம் வழங்கினால்தான் சென்னை மாதிரி நகரங்களுக்கு
சமூக வாழ்க்கை சுமூகமாக இருக்க முடியும். இது
மொத்தத் தமிழ் நாட்டுக்கே இந்த நிலை சூழல் பொருந்தும்.
இந்த நிலையில்
கூடங்குளம் மாதிரியான ப்ராஜக்ட்டுகள் தொழில் முனைவுகள் என்றோ வந்திருக்க வேண்டியது.
காலம் கடந்தாலும், இந்த மாதிரி ஏற்பாடுகள் மத்திய மானில அரசுகளால் கட்டாயமாய் தடையில்லாமல்
அமல்படுத்தப்பட வேண்டும்.
No comments:
Post a Comment