சம்சாரம்
அது மின்சாரம் !! (continued)
தொலைத்
தொடர்பு வசதிகள் இன்றுள்ள நவீனங்கள்
அனைத்திற்கும் அவற்றை நாம் பயன்ப்டுத்த
அல்லது அனுபவிக்க மின்சாரம் ஒரு அவசியத் தேவையாகிவிட்டது.
8. அன்று
வங்கிகளில் பெரும் க்யூ வரிசை
ஒவ்வொரு கவுண்டர்களிலும் இருக்கும்,பணம் போட, எடுக்க,
அனுப்ப என்று. இன்று ஏ.டி.எம். என்ற
வசதி முச்சந்திப்பிள்ளையார் கோயில் போல ' நீ
இல்லாத இடமே இல்லை' என்கிற
அளவுக்கு வசதிவாய்ப்புகள் வந்துள்ளதால், வங்கிகளில் கூட்டம் சற்றுக் குறைவுதான்.
இந்த ஏ.டி.எம் இயங்கவும் வங்கிப் பயன்பாடுகள் வங்கிக்குள்ளே நடக்கும் பரிவர்த்தனைகள்
உள்பட அனைத்திற்கும் மின்சார வசதி அவசியம்.
9. முன்பெல்லாம்
பணப்பரிவர்த்தனைகள் இன்ன பிற ஆவணப் பரிவர்த்தனைகளுக்குக் கூட கையெழுத்து அல்லது கைப்பெருவிரல்
ரேகைப் பதிவு செய்தோம், நம் அடையாளத்தை ஊர்ஜிதப்படுத்த. இன்று சில நேரங்களில் பி.ஓ.ஸ்.
என்றழைக்கப்படும் பாயிண்ட் ஆப் சேல் டிவைஸ் / உபகரணத்தில் நாம் நமது பிரத்தியேகக் குறியீட்டு
எண்ணையோ அல்லது நமது கையொப்பத்தையோ மின்வழிகாட்டியில் இடவேண்டியதுள்ளது, அதாவது இங்கும்
மின் பயன்பாடு தேவை.
10. முன்பெல்லாம்
நம் சொத்துக்கள் தொடர்பான ஆவணப் பதிவுக்காக ஒரு ஏட்டில்தான் அந்த சப் ரிஜிஸ்திரார்
அலுவலகத்தில் கையொப்பமோ கைவிரல் ரேகைப்பதிவோ செய்வோம். இப்போது அது கூட கணினிமயமாக்கி
விட்டதால், அங்கும் 'எலக்ட்ரானிக் சிக்னேச்சர்' என்னும் வசதி வந்துள்ளது, மின்வசதி
அவசியத் தேவை.
11. முன்பெல்லாம்
மின்கட்டணத்தைச் செலுத்த வரிசைகட்டி பிரதி மாதம் 14ம் தேதிக்குள் அந்த அலுவலகத்தில்
நடையாய் நடந்து காத்திருப்போம், இன்று அது கூட ஈ.சி.எஸ். என்னும் வசதியில் அல்லது வங்கிக்கணக்கு
மூலம் ஆன்லைனில் நேரடியாகச் செலுத்தும் வசதி வந்துவிட்டது (அது போல, வீட்டுவரி, தண்ணீர்
வரி, ட்ரெய்னேஜ் இத்யாதி வரிகள் கட்டவும் வசதி வந்துள்ளது). இவை செவ்வனே நிறைவேற்றவும்
மின்வசதி நமக்கு அவசியம்.
12. முன்பெல்லாம்
மருத்துவ வசதிகளுக்காக அதாவது சர்ஜரி முதலான பெரும்படி வைத்தியத்திற்கு சென்னை மாதிரியான
பெரு நகரங்களுக்கு செல்ல வேண்டியிருந்தது. இன்று ஒரு சிறு நகரத்திலும் சில பல கிராமங்களிலும்
கூட மின்வசதியினால் வந்த லாபம் பெரும்படியான மருத்துவத் தேவைகளுக்கும் நமக்கு மின்வசதி
அவசியமாகிறது.
13. முன்பெல்லாம்
கிணறு, ஏரி, குளம், வயல்வெளி என்று நம் குளியல், துணிமணிகளை வெளுக்கும் துவையல் வசதி
இருந்தது. பயிர்களின் பாசன வசதிகளுக்குக் கூட மின்சாரம் சாராத தண்ணீர்ப் பயன்பாடுகள்
இருந்தன. இன்று மின்சாரமில்லையேல் வீடுகளில் குறிப்பாக நகர்மயமாக்கலின் விளைவான ப்ளாட்
அடுக்குமாடிக் கலாசாரத்தில் மேலே உள்ள வாட்டர் டாங்க்குக்கு தண்ணீர் ஏற்றவும், வயல்வெளிப்பாசனத்திற்கும்
மின்சாரமில்லையேல் ஒரு மாற்று வழியில்லை என ஆகிவிட்டது.
No comments:
Post a Comment