NAtional தேசிய முன்முயற்சி
Sunday, August 8, 2021
National தேசிய முன்முயற்சி
திவாலாகும் பாகிஸ்தான்!!!
திவாலாகும் பாகிஸ்தான்!!!
Creator, Creation, Created படைப்பாளர், உருவாக்கம், உருவாக்கப்பட்டது (படைப்பு)
Creator / Creation / Created
*MIRACLE WITNESSED*
*MIRACLE WITNESSED*
Wednesday, August 4, 2021
Facebook எனும் முக நூல் சலித்தால் என்னாகும்?
என்ன சொல்லி அழைத்தாலும் ஏது சொல்லி கொடுத்தாலும் திருந்தாத முகநூல் உலகமே நீ இல்லால் வாழ்க்கை இல்லை எனது நெஞ்சே நீ வாழும் எல்லை. (இது நண்பர்)
காலை எழுந்தவுடன்
பதிவு
பின்பு கனிவுடன் தருவது
விருப்பு
மாலைவரை நல்ல
'சாட்டு'
என வழக்கப்படுத்தி கொள்ளு
பாப்பா.... (இது அவரின் நண்பர்)
நாம்லாம் நல்ல நாள்லயே நாயகம், நாலுபேர் சீண்டினால் / எடுத்துக் கொடுத்தால் ச்சும்மா விடுவமா, ஆருக்கிட்ட?
சாட்டு சாட்டு என்று சாட்டுவோம்
சார்பட்டா பரம்பரையே வந்தாலும் சாட்டுவோம்
பகிர் பகிர் என பகிருவோம் பால் நிலா வரும்வரை பண்பாடுவோம்
லொள் லொள் என லொள்ளுவோம்
லோலாக்கு லால்டப்பிமா ஆடும்வரை ஆடுவோம்
கவுஜ கவுஜ எனக் கவிபாடுவோம்
கவுந்தடிச்சுப் படுத்தாலும்(தேனும்?) கலாய்ப்போம்
விருப்பு விருப்பு என விருந்தோம்பலிடுவோம்
விருப்பமில்லையேல் விரல் தேடி விரலி நாடுவோம்.
ப்ளஸ் டூவே தாண்டாக்கால் ப்ரஜாபதியைச் சீண்டினால்
பிச்சு ஒதறுவோம் பிச்சாண்டவரே, பீச்சுப் பக்கம் வாரும்!!
இப்பிடிப் பொலம்ப வுட்டுட்டியே 'மார்க்'கண்டேயா? இப்பவே கண்ணைக் கட்டுதே?
நோக்கு மட்டும் 16, எங்களுக்கு ஏன் 24 பத்தலியே? 4*24 கொடுத்தாலும் பத்தாது போலயே?
இன்னும் 20,30 பாக்கி இருக்காம், புச்சா ஒண்ணியும் கொண்டாரலியா மார்க்கண்டேயா?
வாட்ஸப் வசம்பாய் கசந்தது,
ஃபேஸ்புக் ஃபேஸ்தடிச்சுப் போச்சு,
முக நூல் முகமறியா மூச்சடைச்சுது,
இன்ஸ்டா நமக்கில்லை, நமக்கில்லை,
டெலிகிராம் ஆவுறதில்லே, டெல்லிகூட சீண்டாதே,
குக்கூ குக்கூ கூ கூவுறது ஆருக்குக் கேட்கும்?
சிக்னல் எப்பவுமே ரெட்ல கீதாம்
ட்விட்டர் நம்ம பேட்டையில்லே, நம்ம பேச்சை நாமே கேட்குறதில்லை, நாட்ல எவன் கேட்பான்?
புச்சா ஒண்ணு சுதேசி சந்தேஸ் வந்திருக்காம் சந்தேஸ் சங்கேத் சங்கீத் சரஸமாடுவோமா சார்பட்டாஸ்?
இப்பிடிப் பொலம்ப வுட்டுட்டியே 'மார்க்'கண்டேயா? இப்பவே கண்ணைக் கட்டுதே?
வூட்டம்மாக்கள்தான் பாவம் வுட்டுட்டா தெறிச்சு ஓடிடுமே இக்கூட்டம்
மேய்ப்பர் இல்லா மேசானிகள் ஓய்வறியா உழைப்பாளிகள்
வூட்டம்மை தண்ணி தெளிச்சு விட்டுட்டாலும் வூடுதாண்டா உடும்பாய் (மன) உல்லாசம் களமாடுதே!!
Sunday, August 1, 2021
42 45 or 48 ஒரு மண்டலம் (ஒரு பார்வை)
இது இப்படியாகத்தான் இருக்கணும் என்றில்லை, நம்ம கொனஷ்டை கோயிந்து பாணியில் யோசிச்சது. ஆக, ஆதாரம் சேதாரம்லாம் கேட்கப்பிடாது.
எந்தப் பிரார்த்தனையை எடுத்துண்டாலும் ஒரு மண்டலம் அனுஷ்டிக்கணும் என்பார்கள். அது அனேகமாய் 42 நாட்களைக் குறிக்கும் என நினைக்கிறேன், அதாவது 6 வாரம், வாரத்தில் 7 நாட்கள் ஆக 42. இன்னொரு கணக்கில் 48 எனக் கூட சொல்வதுண்டு, ஆனால், அது சரியல்ல என்பது என் புரிதல்.
இந்த 42 என்ன கணக்கு?
ஒரு லாஜிக்படி 27 நட்சத்திரங்கள், 15 திதிகள் சுற்றிச் சுற்றி வருவது ஒரு ரவுண்டு நமது பஞ்சாஙக நாட்குறிப்பின்படி. அதாவது 42 நாட்கள் மொத்தம் ஒரு சுழற்சியில். இன்று துவங்கிய ஒரு விஷயம் ஒரு மண்டலம் முடித்தால் பிரார்த்தனையின் வீச்சு பூர்த்தியாகும் என்பது நம்பிக்கை. இது சரியாக இருக்க வாய்ப்பு உண்டு.
ரெண்டாவது லாஜிக், கொனஷ்டை கோயிந்து உள்ளே வர்றார்.
பிதுர்க்கள் மூன்று தலைமுறைக்கு நார்மலாய் நாம் தர்ப்பணாதிகள் செய்கிறோம். தந்தைவழியில் 3, தாய்வழியில் 3 ஆக 6. 7*3*2=42. மொத்தம் 21*2=42 தலைமுறைக்கான கர்ம பலன்கள் நமக்குக் கிட்ட, ஷண்ணவதி தர்ப்பணாதிகள் 96ம் ஒருவர் ஒரு வருடத்தில் செய்தால் 21 தலைமுறைக்கு பாவ நிவர்த்தி என்று ஒரு கண்ணோட்டம் உண்டு. ஆன்றோர்கள் இது தொடர்பில் கூறியுள்ள குறிப்புக்களிலிருந்தே இதை மேற்கோள் காட்ட விழைகிறேன்.
இந்த 21 தந்தை வழி, 21 தாய் வழி ஆக மொத்தம் 42. 42 க்கு ஒரு மண்டலம், கணக்கு டேலியாகுதா?
p.s.: Just my own interpretation. அடிக்க வர்ப்டாத், எதுனாச்சும் தவிசு இருந்தால் பேசித் தீர்த்துக்கலாம்.
முருகன், காஞ்சி காமாட்சி இதர சில விரதங்கள் அல்லது பிரத்தியேக பூஜாக்ரமங்கள் 6 வாரங்கள் எனும் கணக்கிலேயே சொல்லப்பட்டிருக்கிறது, அதாவது 6*7=42.
இன்னும் சிலர் 45 , 48 நாட்கள் கொண்டது ஒரு மண்டலம் என்றும் சொல்லிக் கேள்வி.